Tuesday, July 14, 2015
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை
என்.செல்வராஜ்
சிறந்த நாவல்கள் பட்டியல் –1 ல் பல எழுத்தாளர்களின் பதிவுகளை பதிவு செய்ய முடியவில்லை. சிறந்த நாவல்கள் பட்டியலையும் 62 என்கிற அளவில் முடித்திருந்தேன். இப்போது முக்கிய எழுத்தாளர்களின் பதிவுகளையும், பட்டியலில் இடம் பிடிக்கும் மற்ற நாவல்களையும் பார்க்கலாம்.
பட்டியல் 1 ல் டாப் 10 இடங்களைப் பிடித்த 26 நாவல்களை தர வரிசைப் படுத்தி இருந்தேன். டாப் 10 பதிவில் 3 பரிந்துரைகளைப் பெற்ற நாவல்களை 11 வது இடத்துக்கு பரிந்துரை செய்திருந்தேன் . அந்த நாவல்கள் நாவல் பரிந்துரை பட்டியல்களில் பெற்ற பரிந்துரைகளின் அடிப்படையில் தர வரிசைப் படுத்தப்பட்டன.
அந்த வகையில் அடுத்த 22 இடங்களில் அந்த நாவல்களை தர வரிசைப் படுத்தி இருந்தேன். டாப் 10 பரிந்துரைகள், எனது தலை சிறந்த நாவல்கள் கட்டுரையில் உள்ளது. நாவல் பரிந்துரைப் பட்டியல், சிறந்த நாவல்கள் பட்டியல்-1 மற்றும் 2 ல் உள்ளவை. இவற்றையே பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் என குறிப்பிட்டு இருக்கிறேன். சிறந்த நாவல்களுக்கான பட்டியல் 2041 பதிவுகளைக்கொண்டது
.இந்த பரிந்துரைகளின் பட்டியலை நான் முழுவதும் கொடுக்க காரணம் வாசகர்கள் பயனடைவர் என்பதற்காகவே. சிலர் இந்த பட்டியலைப் படிக்கும்போது குறிப்பிட்ட எழுத்தாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட நாவல்களைப் படிக்க இயலும். மேலும் ஆதாரங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் தந்தால் வாசகர்கள்
பட்டியலின் முழு பரிமாணத்தைக் காண்பர்.முக்கிய சில எழுத்தாளர்களின் பதிவுகளை
முதலில் காணலாம்.
மதுரைவாசகன் (சுந்தர்) (வலைத்தளம்)
கடல்புரத்தில் 2. கம்பானதி 3. உப பாண்டவம் 4. உறுபசி 5. யாமம் 6. நெடுங்குருதி 7. துயில் 8. கொற்றவை 9. விஷ்ணுபுரம் 10. புயலிலே ஒரு தோணி 11. கடலுக்கு அப்பால் 12. பசித்த மானுடம் 13. குறிஞ்சி மலர் 14. ஒரு கடலோர கிராமத்தின் கதை 15.வாடிவாசல் 16. நாளை மற்றுமொரு நாளே 17. கோபல்ல கிராமம் 18. பார்த்திபன் கனவு 19. பொன்னியின் செல்வன் 20. ஆழி சூழ் உலகு 21. நிழல் முற்றம் 22. கல் மரம் 23. ஒரு புளிய மரத்தின் கதை 24. ஜே ஜே சில குறிப்புகள் 25. பொய்த்தேவு 26. கானல் நதி 27. அபிதா 28. வேள்வித்தீ 29. அலைவாய்க்கரையில் 30. நளபாகம் 31. தரையில் இறங்கும் விமானங்கள் 32. நட்டுமை 33. கள்ளிக் காட்டு இதிகாசம் 34. கன்னி மாடம் 35. காவல் கோட்டம்
No comments:
Post a Comment