Friday, March 1, 2024

நட்டுமை- முழுக்கதை

 

நட்டுமை

ஆர்.எம். நௌஸாத்

கிழக்கிலங்கையிலுள்ள பாரம்பரிய முஸ்லிம் கிராமமான சாய்ந்த மருதுவில்

பிறந்த இவர் கல்முனையில் தபால் துறையில் தலைமை அலுவலராகப்

பணிபுரிகிறார். இவரது சிறுகதைத் தொகுதியான ‘வல்லமை தாராயோ. . !’

(2000) கல்முனை புவகம் வெளியீட்டிலும், ‘பள்ளிமுனைக் கிராமத்தின்

கதை’ (2003) முஸ்லிம் குரல் வாரமலரிலும், ‘வானவில்லிலே ஒரு கவிதை

கேளு. . !’ (2005) ஈழநாதம் வாராந்தரியிலும், ‘ஒரு சிற்றெறும்புக்கும் நிழல்

இருக்கிறது’ (2009) - விடிவெள்ளி வார இதழிலும் தொடர்கதைகளாக வெளி

வந்துள்ளன.

இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகம் அகில இலங்கை ரீதியாக நடத்திய

சிறுகதைப் போட்டியில் மலர்வு 74, உதிர்வு 92 (1996) என்ற சிறுகதைக்கு

முதல் பரிசு பெற்றுள்ளார்.

பிரான்ஸ் தமிழ் வானொலியும் தினக்குரல் பத்திரிகையும் இணைந்து நடத்திய

அகில உலக வானொலி நாடகப் போட்டியில் ‘காகித உறவுகள்’ (1999)

நாடகத்திற்கு மூன்றாம் பரிசு, இலங்கை கலாசார அலுவல்கள் அமைச்சு

நடத்திய அரசு ஊழியருக்கான ஆக்கத்திறன் போட்டியில் ‘மே மாதம் முதற்

பூ’ (2007) முதற்பரிசு, ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை நடத்திய சிறுகதைப்

போட்டியில் ‘தாய்மொழி’ (2008) சிறுகதைக்கு முதல் பரிசு, தமிழ்நாடு ஆழி

பதிப்பகமும் எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய

அறிவியல் புனைகதைப் போட்டியில் ‘சாகும்தலம்’ (2008) கதைக்காகச் சிறப்பு

ஆறுதல் பரிசும் பெற்றுள்ளார்.

இவரது இந்நாவல், காலச்சுவடு நடத்திய அமரர் சுந்தர ராமசாமி 75 நாவல்

போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளது.

பெற்றோர்  : ராஸிக்காரியப்பர் - ஹாஜரா தம்பதிகள்.

மனைவி       : பாத்திமா றிபாயா

குழந்தைகள்: ரப்ஸன், பிரின்ஸ், தீப்ஸிகா

பிஷீனீமீ கிபீபீக்ஷீமீss:  ழிஷீ. ஷீ1. விணீவீஸீ stக்ஷீக்ஷீமீt

 

ஷிணீவீஸீtலீணீனீணீக்ஷீutலீu. 01.  ஷிக்ஷீவீறீணீஸீளீணீ.

 

ஜிமீறீமீஜீலீஷீஸீமீ :           067      2222593.

சிமீறீறீ          :           071      4457  593

ணினீணீவீறீ           :           னீணீளீணீக்ஷீவீணீஜீஜீமீக்ஷீ@ரீனீணீவீறீ.நீஷீனீ

 

நட்டுமை என்பது வரப்பினுள் பாதுகாப்பாகக் கட்டி

வைத்திருக்கும் தண்ணீர், வரம்புகளின் அடியால்

அல்லது பிளவுகளால் வேறுபக்கமாகக் களவாக

வடிந்து விடுவதைக் குறிக்கும். இச்சொல் கிழக்

கிலங்கையில் விவசாயக் கிராமங்களில் கள்ளழுக்

கத்தைச் சுட்டவும் பயன்படுகிறது.

நௌஸாத்

நட்டுமை

காலச்சுவடு பதிப்பகம்

 நட்டுமைω நாவல் ω ஆசிரியர்:நௌஸாத்ω ©ஆர். மொஹமத் நௌஸாத் ω முதல் பதிப்பு: டிசம்பர் 2009 ω வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001 ω தொலைபேசி: 91-4652 -278525 ω தொலை நகல்: 91-4652-402888 ω மின்னஞ்சல்: ளீணீறீணீநீலீuஸ்ணீபீu@ sணீஸீநீலீணீக்ஷீஸீமீt.வீஸீ ω அச்சுக்கோப்பு: சுதர்சன் புக் புராசசர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிப் யூட்டர்ஸ் ω உள்பக்க ஓவியங்கள்: றஷ்மி ω அட்டை அச்சாக்கம்: பிரிண்ட் ஸ்பெஷாலிட்டீஸ், சென்னை 600 014 ω அச்சாக்கம்: மணி ஆஃப

காலச்சுவடு பதிப்பக வெளியீடு: 291

ஸீணீஜிஜிuனீணீவீ ω ழிஷீஸ்மீறீ ω கிutலீஷீக்ஷீ: ஸீஷீஷ்sணீணீஜி ω © ஸி. விஷீலீணீனீமீபீ ழிணீஷ்sலீணீணீபீ ω

லிணீஸீரீuணீரீமீ: ஜிணீனீவீறீ ω திவீக்ஷீst ணிபீவீtவீஷீஸீ: ளிநீtஷீதீமீக்ஷீ 2009 ω ஷிவீக்ஷ்மீ: ஞிமீனீஹ் 1 ஜ் 8 ω றிணீஜீமீக்ஷீ:

18.6 ளீரீ னீணீஜீறீவீtலீஷீ ω றிணீரீமீs: 160 ω சிஷீஜீவீமீs: 550 + 50 ω றிuதீறீவீsலீமீபீ தீஹ் ரிணீறீணீநீலீuஸ்ணீபீu றிணீtலீவீஜீஜீணீரீணீனீ, 669 ரி.றி. ஸிஷீணீபீ, ழிணீரீமீக்ஷீநீஷீவீறீ 629 001, மிஸீபீவீணீ ω றிலீஷீஸீமீ: 91- 4652 -278525 ω திணீஜ்: 91- 4652 - 402888 ω மீ-னீணீவீறீ: ளீணீறீணீநீலீuஸ்ணீபீu@sணீஸீநீலீணீக்ஷீஸீமீt.வீஸீ ω ஜிஹ்ஜீமீsமீttவீஸீரீ: ஷிuபீணீக்ஷீsணீஸீ ஙிஷீஷீளீ றிக்ஷீஷீநீமீssஷீக்ஷீs ணீஸீபீ ஞிவீstக்ஷீவீதீutஷீக்ஷீs ω மிஸீsவீபீமீ ஞிக்ஷீணீஷ்வீஸீரீs: ஸிணீளீsலீனீவீ ω கீக்ஷீணீஜீஜீமீக்ஷீ றிக்ஷீவீஸீtமீபீ ணீt றிக்ஷீவீஸீt ஷிஜீமீநீவீணீறீவீtவீமீs, சிலீமீஸீஸீணீவீ 600 014 ω றிக்ஷீவீஸீtமீபீ ணீt விணீஸீவீ ளியீயீsமீt, சிலீமீஸீஸீணீவீ 600005.

மிஷிஙிழி:978-81-89945-02-2

10/2009/ஷி.ழிஷீ.291, ளீநீஜீ.467, 18.6 (1) 600

 

வானமான வாப்பாவுக்கும்

பூமியான உம்மாவுக்கும்

நன்றி

 

மட்டக்களப்பு மான்மியம்

மகுஷ¨க்கு’ மாலை

அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள்

ஆத்மாவின் அலைகள் (பாவலர் கவிதைகள்)

காரியப்பர்கள் வரலாறு

மெய்ஞ்ஞானவலங்கார ரத்தின கீர்த்தனம்

காலச்சுவடு

 

என்னுரை

அகிலக் கிராமம் என்ற கருத்துருவாக்கத்தின் பின்விளைவுகளாக ஏற்படும் சீரழிவுகளில் பிரதானமானது இனங்களுக்கிடையிலான கலாச்சார மோதல் ஆகும். இக்கலாச்சார மோதல்களின்போது உலக நாடுகளில் வாழும் பற்பல சமூகங்கள் தமது பண்பாட்டுக் கோலங் களின் தனித்துவத்தையும் தூய்மையையும் இழக்கின்றன. அல்லது சிதைவுகளுக்குட்படுகின்றன. எனினும் அந்தச் சமூகத்தின் அடிமனதில் எப்போதும் அந்த இழக்கப்பட்ட ‘தனித்துவமும் தூய்மையுமான’ சமூக அமைப்பு பற்றிய ஏக்கம் நிச்சயம் ஒளிந்திருக்கும். அது தன் ஆரம்பக் கிராமம் நோக்கியே நகரும் இயல்புடையது.

தானே பின்னிக்கொண்ட உலக வலைப்பின்னலில் தானே சிக்கிக்கொண்ட மனிதச் சிலந்திகளுக்கு, சில காலங்களின் பின்னர், இதனை விட்டும் விடுதலையாகித் தம் ஆரம்பம் நோக்கிய எத்தனம் அடிமன ஏக்கமாக உறைகிறது. அது, தொடர்ந்து விஸ்வரூபமெடுத்து, தொடரான, பின்னினைவாக மனதில் ஆக்கிரமிக்கின்றது.

இன்றைய மிலேனிய உலகில் பிறக்கும்போதே ‘மென்பொருள்’ தாயத்துடன் பிறந்து இயந்திரமாய் வாழும் இளைய தலைமுறையினருக்கு ஒரு சமயமாவது தம் மூதாதையின் கிராமத்திற்குத் திரும்பும் அவகாசம் ஏற்படும்போது, அந்தத் ‘தனித்துவமும் தூய்மையுமான’ கிராமத்தை அவர்கள் தொலைத்து வெகுகாலமாகிவிட் டிருக்கும். பதிலாக ‘அகிலக் கிராமம்’ என்ற புது ‘மின்னியல் பூமி உருண்டை’தான் அவர்களின் உள்ளங்கைகளில் எஞ்சியிருக்கும்.

1930களின் முற்பகுதிக் காலத்தில் கிழக்கிலங்கை யின் ஆரம்பக் கிராமம் ஒன்றின் வாழ்வியல் மீதான வாசிப்பு இது. அந்தப் பண்பாட்டுக் கோலங்களை உள்ளடக்கிய ‘நட்டுமை’ என்ற இந்நாவலை வாசிக்கப்போகிற, தலைமுறை களின் இடைவெளிகளில் வாழ்பவர்கள், இந்நூல் மாந்தர் களுடன் சில மணித்துளிகளைச் செலவு செய்த அனுபவத் தைச் சிறியளவிலாவது பெற்றுக்கொள்வீர்களாயின், அது பெரிது என்பேன். அதுபற்றிய உங்கள் அஞ்சல்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

இந்நூலுருவாக்கத்தின் பின்னணியில் உந்துசக்தியாக இருந்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

இலங்கை     ஆர்.எம். நௌஸாத்

2009.08.08

முன்னுரை

நட்டுமை’ என்பது பொது வழக்கில் இல்லாதஒரு விவசாயக் கலைச்சொல். கிழக்கிலங்கை அம்பாறை மாவட்ட முஸ்லிம் விவசாயிகள் மத்தியில் இச்சொல் வழக்கில் உண்டு. ஒரு வயலில் கட்டிவைத்த நீர் வரம்பு களில் உள்ள வெடிப்புகளால் அல்லது வேறு துளை களால் வயற்காரன் அறியாமல் அடுத்த வயலுக்குள் கசிந்து இறங்குவதை இது குறிக்கும். ‘நட்டுமை போயிருக்கு’ என்றால் வயல் நீர் களவாக அடுத்த வயலுக்குள் இறங்கியிருக்கிறது என்று பொருள். ஆண் பெண் இடையிலான கள்ள உறவைக் குறிப்பதற்கும் இச்சொல் உருவகமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

இச்சொல் வழக்கைப் பயன்படுத்தி, ‘நட்டுமை போகவில்லை’ என்ற தலைப்பில் காலஞ்சென்ற கவிஞர் நண்பர் பஸீல் காரியப்பர் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். போடியார் தன்னைப் பெண்டாள நினைப்பதை மனைவி தன் கணவனிடம் கோபத்துடன் முறையிடுவதாக அமைந்த கவிதை அது.

கொள்ளையாக் கதைச்சாங்கா அந்த ஆள்

கோபம் என்டா பத்திக்கு வந்திச்சு

பிள்ளை ஒன்டுக்கும் சுகமில்லையாம் - அவன்ர

பொண்டாட்டியும் அவட உம்மாட்ட போறாவாம்

வெள்ளிக் கிழமை அதுதான் நாளைக்கு மத்தியானம்

வீட்ட வரட்டாம் ஒரு வேலை இருக்காம்

கள்ளச் சிரிப்பும் அவன்ட கால்ல ஒரு சப்பாத்தும்

வெள்ளாமைக் காரன் பொண்டாட்டி எண்டா என்ன

வேசி எண்டா இந்த நாய் நெனச்சான்

என்று முடிகிறது அந்தக் கவிதை. மட்டக்களப்பு முஸ்லிம் களின் பேச்சுத் தமிழில் போடியாரின் ஆசைக்குப் பணியமறுக்கும் ஒரு பெண்ணின் குரலாக அமையும் இந்தக் கவிதைக்கு ‘நட்டுமை போகவில்லை’ என்று தலைப்பு வைத் திருக்கிறார் கவிஞர். மட்டக்களப்பு முஸ்லிம்களின் பேச்சு வழக்கு அறியாதவர்களுக்கு இந்தத் தலைப்பும் கவிதையும் புரிவது சிரமம்தான்.

தீரன் நௌஸாத்தின் ‘நட்டுமை’ குறுநாவலைப் படித்த போது பஸீல் காரியப்பரின் இந்தக் கவிதை ஞாபகம் வந்தது. இந்த நாவலும் நட்டுமையின் உருவக வழக்கில் சின்னப் போடியார் முகம்மது ஹனீபாவின் நட்டுமை நடத்தையைச் சுற்றி விரிகிறது.

இந்நாவலாசிரியர் தீரன் ஆர்.ஏம். நௌஸாத் கிழக் கிலங்கை அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கல்முனையில் தபால் அதிபராகக் கடமை புரிகிறார். கிழக்கிலங்கையின் முக்கியமான இளம் எழுத்தாளர்களுள் ஒருவரான இவர், 1980களிலிருந்து எழுதி வருகிறார். இதுவரை சுமார் இருபத்தைந்து சிறுகதைகளும் பல கவிதைகளும் எழுதியிருக்கிறார். போட்டிகளில் பரிசு பெற்ற இவரது எட்டுச் சிறுகதைகளின் தொகுப்பு ‘வல்லமை தாராயோ’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. இவரது ‘பள்ளிமுனைக் கிராமத்தின் கதை’ முஸ்லிம் குரல் என்ற பத்திரிகையில் 2003இல் தொடராக வெளிவந்தது. சுந்தர ராமசாமி நினைவுக் குறுநாவல் போட்டியில் முதல் பரிசுபெற்ற ‘நட்டுமை’ நூலுருப்பெறும் இவரது முதலாவது நாவல்.

சுமார் எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்திய கிழக் கிலங்கை முஸ்லிம் கிராமம் ஒன்றை களமாகக் கொண்டது இந்த நாவல். கிழக்கிலங்கை முஸ்லிம் கிராம வாழ்வின் ஒரு பக்கத்தை இந்நாவல் நமக்குக் காட்ட முயல்கின்றது.

கிழக்கிலங்கைக் கிராமங்கள் பெரும்பாலும் விவசாயக்கிராமங்கள்தான். நவீனமயப்பட்ட இன்றைய சூழலில்கூட

நிலஉடைமைச் சமூகத்தின் எச்சங்கள் பலவற்றை இங்குக     £ணலாம். இந்த நாவல் நவீனமயமாதலுக்கு முற்பட்ட சூழலைப் பின்புலமாகக் கொண்டது. அன்றையக் கிராமங்களில் போடிமார் முக்கியமான அதிகார மையங்களாக இருந்தனர். போடி என்ற சொல் நிலஉடைமையாளர்களைக் குறிக்கும். போடியார் என அவர்கள் மரியாதையாக அழைக்கப்பட்டனர். நிலத்தையும் பணத்தையும் மூலதனமாகக் கொண்டவர்கள் இவர்கள். உடலுழைப்புடன் நேரடியாகச் சம்பந்தப்படாதவர்கள். போடியாரின் நிலத்தில் பயிர்ச் செய்கைக்குப் பொறுப்பானவர் வயற்காரர் என அழைக்கப்பட்டார். இவர்கள் போடியாரின்

 பண மூலதனத்துடன் தமது உடலுழைப்பைச் செலுத்தி பயிர்ச் செய்கையில் ஈடுபடுவர். ஒவ்வொரு போடியாரும் குறைந்த பட்சம் ஒரு வயற்காரனைக் கொண்டிருப்பார். உற்பத்திசார்ந்த வயல் நிருவாகம் முழுவதையும் இவர்களே மேற்கொள்வர். போடிமாருக்கும் இவர்களுக்கும் இடையே உள்ள உறவு நில உடைமை உறவாகவே இருக்கும். வயற்காரனின் முழுக் குடும்பமும் போடியாரின் குடும்பத்துடன் நெருக்கமான ஊழிய உறவில் கட்டுண்டிருக்கும்.

விவசாயத்துடன் பிணைப்புண்ட பிறிதொரு பிரிவினர் கூலி விவசாயிகள். உழுதல், விதைத்தல், அறுவடை செய்தல், சூடடித்தல் முதலிய வேலைகளை இவர்களே செய்வர். இவர் களது கூலி நெல்லாகவோ பணமாகவோ கிடைக்கும்.

வயற்காரரைவிட போடியாரின் வயல்களை மேற்பார்வை செய்வோரும் இருந்தனர். இவர்கள் முல்லைக்காரர் என அழைக்கப்பட்டனர். பெரிய போடிமார் தமக்கென முல்லைக் காரர் ஒருவரை வைத்திருப்பர்.

பலருடைய வயல்களை உள்ளடக்கிய ஒரு வயற் பிரதேசம் கண்டம், வெளிவட்டை என பலவாறு அழைக்கப்பட்டது. அத்தகைய ஒவ்வொரு வயற் பிரதேசத்துக்கும் நீர்ப்பாய்ச்சல்,

         £துகாப்பு நிருவாகத்துக்குப் பொறுப்பாக ஒரு வட்டை விதானை நியமிக்கப்பட்டிருப்பார். பேச்சு வழக்கில் இவர் வட்டானை எனப்பட்டார். விதானை காலனித்துவ காலத்தில் இங்கு அறிமுகமான சொல். அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கிராம அதிகாரியே விதானை எனப்பட்டார். பிரித்தானிய ஆட்சி யாளர் சில விதானைமாருக்குப் பொலிஸ் அதிகாரமும் வழங்கி யிருந்தனர். இவர்கள் பொலிஸ் விதானை என அழைக்கப் பட்டனர். இது பேச்சுவழக்கில் பொலிசானை என்று மருவிற்று.

இந்த நாவல் உம்மாதுறை என்ற ஒரு முஸ்லிம் விவசாயக் கிராமத்தின் இந்த அதிகார மையங்களைப் பின்புலமாகக் கொண்டு வளர்கிறது. சுதந்திரத்துக்குச் சற்று முந்திய ஒரு முஸ்லிம் விவசாயக் கிராமத்தின் சமூக வாழ்வை, அதன் அசைவியக்கத்தை, அதன் சகல அம்சங்களுடனும் சித்திரிப்பது ஆசிரியரின் நோக்கமல்ல என்று தெரிகிறது.

1930கள் கிழக்கிலங்கையின் சமூக அரசியல் அசை வியக்கத்தில் முக்கியமான காலகட்டம் எனலாம். தென்னாசியா வில் இலங்கையில்தான் முதல்முதல் சர்வசன வாக்குரிமை அமுலுக்கு வந்தது. சர்வசன வாக்குரிமையின் அடிப்படையில் சட்டசபைக்கான முதலாவது பொதுத் தேர்தல் 1931இல் நடைபெற்றது. இந்த நாவலின் கிராமம் உள்ளடங்கும்

மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியில் கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம் பிரமுகரான மாக்கான் மாக்கார் போட்டியிட்டார். முஸ்லிம் பெண்களை வாக்களிக்கத் தூண்டுவதற்காகக் கொழும் பில் இருந்து உலமாக்களைக் கொண்டுவந்து பெண்கள் வீட்டை விட்டு வெளியேவந்து வாக்களிக்கச் செல்லலாம் என்று ஃபத்வா கொடுக்கச் செய்தார் என அவர் பற்றிய குறிப்பு ஒன்று உண்டு. இந்த நாவல் தொடங்கும் 1936இல் இரண்டாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. கிழக்கிலங்கை முஸ்லிம்கள் மத்தியில் இனத்துவ அடையாள அரசியல் அதிர்வுகள் ஏற்படத் தொடங்கிய காலகட்டம் இதுதான். தங்களுக்கும் கல்வி, தொழில் வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், அரசியல் அதிகாரம் என்பன வேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம்கள் மத்தியிலும் மேற்கிளம்பத் தொடங்கிய காலம் இது. 1936இல்                £ன் கல்முனையில் முதல்முதல் பெண்களுக்கான ஒரு பள்ளிக்கூடமும் ஆரம்பிக்கப்பட்டது. இத்தகைய சமூக அசை வியக்கத்தை, அரசியல் அதிர்வுகளைப் பதிவு செய்வது நாவ லாசிரியரின் நோக்கமாக இருக்கவில்லை. அவை இந்த நாவலின் தூரத்துச் செய்தியாகக்கூட இல்லை. உம்மாதுறை ஒரு விவசாயக் கிராமமாக இருந்தாலும் நீர்ப்பாய்ச்சல் தொடர் பான சிறு சச்சரவைத் தவிர விவசாயக் கிராமத்தின் உற்பத்தி உறவுகளோ, வர்க்க உறவுகளோ, விவசாயிகளின் வாழ்க்கை அனுபவங்களோ இந்நாவலின் மையமாக இல்லை.

அரசியல், சமூக அசைவியக்கங்களிலிருந்து விலகிய ஒரு ‘தூய’ முஸ்லிம் விவசாயக் கிராமத்தையும், அதன் பண்பாட்டுக் கூறுகள் சிலவற்றையும், அக்கிராமத்து மக்களின் தனிமனித நடத்தைக் கோலங்களையும் சித்திரமாக்குவதே இங்கு நாவலாசிரியரின் நோக்கமாகத் தெரிகிறது. இதுவரை தமிழ் வாசகர்கள் அறியாத ஒரு புதிய வாழ்க்கைப் புலத்தை இந்நாவல் கட்டமைக்கிறது. அந்தவகையில் இந்நாவல் நௌஸாத்தின் ஒரு வெற்றிப் படைப்பு என்றுதான் கூற வேண்டும். சுந்தர ராமசாமி நினைவுக் குறுநாவல் போட்டியில் இந்நாவல் முதல் பரிசு பெற்றமை ஆசிரியரின் வெற்றியை உறுதிப்படுத்துகிறது எனலாம்.

இந்த நாவலின் முக்கியமான பாத்திரம் பெரிய போடியார் அகமது லெவ்வை. இந்த நாவலை முழுமையாக அவர் ஆக்கிரமித்துக்கொள்ளாவிடினும் அவரது அதிகார மையத்தின் நிழல்களாகவே ஏனைய பாத்திரங்கள் இயங்குகின்றன. பெரிய போடியார் தனது மகன் சின்னப் போடியார் முகம்மது அனிபாவுக்கு 90 ஏக்கர் காணியை நன்கொடையாக எழுதி வைக்கும் நிகழ்வுடன் நாவல் தொடங்குகின்றது. தன் மகன்பிறிதொருவனின் மனைவியுடன் கள்ள உறவு கொண்டு அதன் க     £ரணமாகக் கொல்லப்பட்டபின், கள்ள உறவின் மூலம் அவனுக்குப் பிறந்த குழந்தையை தன் பேரக் குழந்தையாகவும் தன் குடும்ப உறுப்பினனாகவும் அவர் ஏற்றுக்கொள்வதுடன் நாவல் முடிகிறது. பெரிய போடியார் ஆளுமை மிக்க, அன்பும் கருணையும் கொண்ட ஒரு நாயகனாக இந்நாவலில் உரு வாக்கப்பட்டிருக்கிறார். போடிமார் பற்றிய ஒரு உடன்பாடான சித்திரம் இது.

 

ஆயினும் நாவலின் பிரதான கதைப்பின்னல் சின்னப் போடியார் முகம்மது அனீபாவின் காதல், காமம், சண்டித்தனம், அதன் விளைவான சண்டை, கொலை ஆகியவற்றைச் சுற்றியே நகர்கிறது.

முகம்மது அனீபாவுக்குப் பல பெண்களோடு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. என்றாலும் மீராவட்டானையின் மகள் செய்னம்பு மீது அவனுக்குக் காதல். அதேவேளை தன் எடுபிடியும் தோழனுமான மம்மலியின் (முகம்மது அலி என்பதன் கிராமியத் திரிபு) இளம் மனைவியும் செய்னம்புவின் தோழியுமான யம்னாவுடன் அவளது விருப்புக்கு மாறாகவே உறவு வைத்திருக்கிறான். அதன்மூலம் அவள் வயிற்றில் ஒரு குழந்தையும் வளர்கிறது. விபரம் புரியாத மம்மலி அதைத் தன் குழந்தை என்றே நினைக்கிறான். சின்னப் போடியாருக்குச் செய்னம்பு மீதுள்ள காதலுக்குத் துணைநின்று அவளை அவனுக்குத் திருமணம் செய்துவைக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறான்.

செய்னம்புவுக்கோ தன் மாமி மகன் - முறைமாப்பிள்ளை - உமறுலெவ்வைமீது விருப்பம் இருக்கிறது. இதன் காரணமாக சின்னப் போடியாருக்கும் உமறுலெவ்வைக்கும் இடையே முரண்பாடு வளர்ந்து அடிதடிவரை போகிறது. உமறுலெவ்வை கைதுசெய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்படுகிறான். அவனை விடுவிப்பதற்கு மீராவட்டானை பெரிய போடியாரின் உதவியை நாடுகிறார். மகன் சம்மதித்தால், தான் அதைச் செய்வதாக பெரிய போடியார் கூறுகிறார். தன் மகளை அவ னுக்குக் கலியாணம் செய்யச் சம்மதித்தால்தான் சின்னப் போடி அதற்கு இணங்குவான் என்பது அவருக்குத் தெரியவரு கிறது. தவிர்க்க முடியாமல் அவரும் அந்த முடிவுக்கு வருகிறார்.

ஆனால் சின்னப் போடியை செய்னம்புவுக்குக் கட்டி வைப்பதில் யம்னாவுக்கு உடன்பாடு இல்லை. அவள் தன் கணவன் மம்மலியிடம் சின்னப் போடி பற்றிய உண்மையைச் சொல்லிவிடுகிறாள். மம்மலி தன் எஜமான விசுவாசத்தை மறந்து, சந்தர்ப்பம் பார்த்து சின்னப் போடியைக் கொன்று பழிதீர்த்துகொள்கிறான். தானும் நச்சுக்காயைத் தின்று மருத்துவமனையில் இறந்துபோகிறான். யம்னா குழந்தை யைப் பெற்றெடுக்கிறாள். உமறுலெவ்வை செய்னம்பு திருமணம் நிறைவேறுகிறது. யம்னா பெரிய போடியாரிடம் உண்மையைச் சொல்லிவிட்டு தற்கொலைசெய்துகொள்கிறாள். போடியார் அது தன் பேரக்குழந்தைதான் என்பதை அதன் கைவிரல் அமைப்பைக்கொண்டு அடையாளம் காண்கிறார். மக்காவுக்குச் சென்று ஹாஜியாராகத் திரும்பிவந்து தன் பேரனைப் பொறுப் பேற்றுக்கொள்கிறார். இந்த நாவலின் கதைச் சட்டகம் அல்லது எலும்புக்கூடு இதுதான்.

இக்கதையில் தமிழ் சினிமாவின் நிழல் படிந்திருந்தாலும், ஆசிரியர் இதற்கு இரத்தமும் தசையும் சேர்த்து ஒரு அசல் கிராமத்தின் உயிரையும் உருவத்தையும் கொடுக்க முயன்றிருக் கிறார். நவீனத்துவத்தின் வாடைபடியாத கிராமத்து மனிதர்கள் சிலரைப் பாத்திரமாக்கியிருக்கிறார். பெரிய போடியார் அகமது லெவ்வை, மீரா வட்டானை, சின்னப் போடியார் முகம்மது அனீபா, உமறுலெவ்வை, மம்மலி ஆகிய ஆண் பாத்திரங் களும், யம்னா, செய்னம்பு ஆகிய பெண் பாத்திரங்களுமே இந்த நாவலை நகர்த்திச் செல்கின்றன. இடைக்கிடை வந்து போகும் முக்குலத்துக் கிழவிக்கும் இந்நாவலில் முக்கிய இடம் உண்டு. போடியார் வீட்டுப் பெண்கள் முகமற்றவர்களாகவே வந்துபோகின்றனர். சிறிது நேரம்தான் வந்துபோனாலும் அத்தர்பாவா நம் மனதில் இடம்பிடித்துவிடுகிறார். காட்டுப்பள்ளி கொடியேற்ற விழாவும், பொத்துவில் பீர் முகம்மது அண்ணா வியார் குழுவினரின் பொல்லடி நிகழ்ச்சியும் கிராமியப் பண் பாட்டுக் கூறுகளாக அறிமுகமாகின்றன.

இந்நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உரையாடல் மொழி விசேடமாகக் குறிப்பிடத்தக்கது. கிழக்கிலங்கை முஸ்லீம் களின் பேச்சுவழக்கைக் கையாள்வதில் ஆசிரியர் மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறார். நாவலுக்கு இந்த மொழி ஒரு புதிய வலுவைக் கொடுக்கிறது. சமூகக் கட்டமைப்பு பற்றிய ஒரு ஆழமான பார்வையை இந்நாவல் வெளிப்படுத்தாவிட்டா லும், ஒரு புதிய வாழ்க்கைப் புலத்தைத் தமிழ் நாவலுலகுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் தன் முக்கியத்துவத்தை நிலை நாட்டிக்கொள்கிறது எனலாம். நாவலாசிரியருக்கு என் பாராட்டுக்கள்.

எம். ஏ. நுஃமான்

 

 

போகம் 1

விதை

 

‘. . . இத்தால் சகலருமறிக. இன்று ஆயிரத்துத் தொள் ளாயிரத்து முப்பத்தியாறாம் வருடம் புரட்டாதி மாதம் ஐந்தாம் திகதி வியாழக்கிழமையன்று வாசிக்கும் நன்கொடை உறுதி. . . இதனடியிற் சம்மாந்துறை முதலாம் குறிச்சி ஆதம்பாவாப் போடியார் அகமதுலெவ்வைப் போடியார் ஆகிய நான் எனது ஒரே புத்திரனான ¬க்ஷகுறிச்சி அகமது லெவ்வை போடியார் முகம்மது அனீபா என்பவர் மீது இயல்பாகவே கொண்டுள்ள அன்பு பட்சமின்னு மென்னை ஏவும் பல முகாந்திரங் களே காரணமாக ரூபா ஆயிரத்தைந்நூறு விலை மதிப் புள்ள இதன் கீழ்க்கூறுமாதன இடாப்பில் விபரிக்குமாதனத் தைக் குறித்த அகமதுலெவ்வைப் போடியார் முகம்மதனிபா வுக்கு என்னால் மாற்றவல்ல தழிக்கமுடியாத அறுதி நன்கொடையாகக் கொடுத்துமொப்படைத்தும் விட்டேன். . .’

அகமதுலெவ்வை எனப்படும் பெரிய போடியாரின் பெரிய கல் வீட்டின் முன்கூடத்தில் நன்கொடை உறுதியை உரக்க வாசித்துக்கொண்டிருந்தார் ஞானமுத்து நொத் தாசியார். கூடத்தில் ஒரு சிறு சபை கூடியிருந்தது. தனது பெரும் குரலை நிறுத்திய நொத்தாசியார் தாம்பூல எச்சில் பீறிட்டுப் பாய இருந்ததைக் கட்டுப்படுத்திப் படிக்கம் தேடினார். சபை அமைதியாக இருந்தது. . . சபையில் பலர் இருந்தனர். நடுநாயகமாக இருந்த கயிற்றுக் கதிரையில் பெரிய போடியார் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.

சிவப்புப் பெரிய கண்டாங்கிச் சாறனுக்குள் பெரிய கைபெனியனை உள்விட்டு நாலங்குல அகலத்தில் மதராசுஇடைப்பட்டி அணிந்திருந்தார். அதில் பற்பல அளவுகளில் சாவிக் கொத்துகள், காதுக்குத்தி, சிறிய கத்தி, நகக்குறும்பி, நாசிக்குடைவு இவைகளுடன், விற்சுருள் சிறு கத்திகளும் தொங்கின. மழிக்கப்பட்ட தலை மீது அணிந்திருந்த துருக்கித் தொப்பியின் குஞ்சத்தில் தங்க முலாம் மணிகள் ஆடின. கால்களில் சூரியமாரா மரத்தாலான மிதியடிகள். நரை கலந்த மீசை பெரிதாக வாச நெய்யிட்டு இருபக்கமும் முறுக்கி விடப்பட்டிருந்தன. வாயில் பெரிய ஜேர்மன் சுருட்டு சொருகப் பட்டு இடைவிடாது புகைந்துகொண்டிருந்தது. வட்டைக்கடை ஆதம் பெரிய போடியாரின் சுருட்டுப் புகை மணத்தை அனுபவித்தபடியே கிளிப்பன் விசிறியால் போடியாருக்கு விசிறிக்கொண்டிருந்தான்.

பெரிய போடியாரைச் சுற்றிலும் அவரது வயற்காரர்கள், கீழே மிகப்பணிவாக மேலாடைகளின்றிக் குந்தியிருந்தனர். பற்பல நிறங்களில் சிறுவால் மட்டும் அணிந்திருந்தனர். போடி யாரின் முக்கிய உறவினர்களும், மாந்தறாகுடி மரைக்காரும் முத்தட்டுத் தோட்டுப்பாயில் வரிசையாக உட்கார்ந்திருந்தனர். பெரிய போடியாருக்குப் பக்கத்தில் போடப்பட்டிருந்த மர உரல் புட்டுவத்தில் பெரிய போடியாரின் ஏக புத்திரனான ‘சின்னப்போடியார்’ முகம்மதனிபா உட்கார்ந்திருந்தான். இளைய தலைமுறையினரின் ‘மந்திரிகுமாரன்’ சாறம் அணிந்து, கண்ணைப் பறிக்கும் மஞ்சட் கலரில் நைலான் சட்டை நீளமாக அணிந்திருந்தான். கிராமத்து வழக்கத்துக்கு மாற்றமாகத் தலைமுடி கொஞ்சமாக வளர்த்து ‘சிலுப்பா’ வைத்திருந்தான். கையில் பென்னம்பெரு ஜேர்மன் மணிக்கூடு கட்டியிருந்தான். (மணி பார்க்கத் தெரியாது.) இளவரசுப் புன்னகையுடன், சபையை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தான். தனக்குத் தந்தையார் ஆதனம் எழுதுவதை விடவும், செய்னம்புவின் இளமை நினைவு களில் மிதந்துகொண்டிருந்தான். அவனது காலடியில் அவனது ‘எடுபிடி’ அடிமை மம்மலி அதிசயமாக, சால்வையும் சாறமும் அணிந்து முகம்மதனிபாவின் ஜேர்மன் மணிக்கூட்டையே பார்த்துக் கொண்டிருந்தான். (அதற்குள் சுற்றிச்சுற்றி ஓடும் விமானம் எப்போது ஓயும் என வியந்துகொண்டிருந்தான்.)

உள்ளறையில் பெரிய போடியார் வீட்டுப் பெண்கள் கலகலத்தனர். எட்டி எட்டிப் பார்த்தனர். வயற்காரர்களின் மனைவியர் சுறுசுறுப்பாக எடுபிடி வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். மிதுஹாம்மா அவர்களை அதட்டி வேலை வாங்கிக்கொண்டிருந்தாள்.

ஞானமுத்து நொத்தாசியார், தனது வாயிலிருந்து செப்புப் படிகத்தினுள் நீர்பாய்ச்சி ஓய்ந்த பின் மறுபடி வட்டா கேட்டுப்பெற்று பாக்குச் சீவல்களில் ஒருபிடி அள்ளி மூன்று வெத்திலை களை எடுத்து, காம்பு கிள்ளி மிக நிதானமாகச் செஞ்சுண்ணாம்பு நீளமாகத் தடவி கலவையை உருட்டிக் கொடுப்புக்குள்ளடக்கி ஒதுக்கி மறுபடி இடிக்குரலில் ஆரம்பித்தார்.

‘ . . . ஆதலாலிதனையின்று கையேற்றியவரின் உரித்தாளர், உரிமைத் தத்துவக்காரர், சாட்டுதலெப்படைக்காரருந் தங்கள் சொந்த ஆதனமாக ஆண்டனுபவித்துத்துக் கொள்ளப் போதிய உரித்துண்டென்றும் இந்நன்கொடை கொடுக்குமெனக்கெந்த உரித்துமில்லையென்றும், இவ்வாதனம் யாதொரு பாரதீனத் திலுமமைந்திராம சுயாதீனமென்றும், எனக்குப் போதிய உரித்துத் தத்துத்துவமுண்டென்றும், இதிலேதும் தடை பிசகுகள் வரின் . . .’

ஞானமுத்து நொத்தாசி மறுபடி படிக்கத்தினுள் நீர்த்தாரை யாகப் பீய்ச்சிவிட்டு, சால்வையில் கடைவாய் துடைத்தார். சபை திறந்த வாய் மூடாது அவரையே பார்த்துக்கொண்டிருந்தது. மறுபடி ஆரம்பித்தார்.

‘ . . . ம்ம்ம் . . . தடை பிசகுகளேதும் வரின் . . . நிவர்த்திபண்ணி வைப்பேனென்றும் வாக்குறுதி பண்ணி வெளியரங்கப்படுத்தி இந்நன்கொடை சாதனமெழுதிக் கொடுத்தேன். . . ம், ஆதன இடாப்பு . . .’ என்று நிறுத்த, சபை கொஞ்சம் சளசளத்தது.

 

ஆதனத்தப் படிக்கப்போறாரு நொத்தாசியாரு . . .’

சத்தம் போடாதிங்க . . .’

புள்ளேய் . . . கேளுங்கோவ் . .’

கேளுகா லெக்கா. . .’

‘. . . ம்., ஆதன இடாப்பு . . . கீழ்மாகாணம் மட்டுக்களப்பு டிஸ்திரிக் சம்புவெளிப்பற்று, உம்மாந்துறை, பனையடி வெளிக்குச் சேர்ந்த 296ஆம் கண்டமான பெரியவெளியில் விவசாய நிலம் . . . கிழக்குப்புறப்பாங்கு, விசாலம் 92 ஏக்கர் பேட்சசு முப்பதுடன் ஆறிலைந்து எல்லை வடக்கு கலந்தர்லெவ்வைப் போடிக்கும் மறுபேருக்குமுரிய பூமியும், கிழக்கு பீர்முகம்மது மறுபேருக்குமுரிய பூமியும், மேற்கு கைவாய்க்கால், தெற்கு மூசா லொவ்வை போடிக்கும் மறுபேருக்குமுரிய பூமியும், இதன் பாய்ச்சல் வடிச்சல் சகலதும் . . . மேற்குறித்த ஆதனத்தை மேற்படி அகமதுலெவ்வைப் போடியார் முகம்மதனிபா ஆகிய நான் மிகுந்த சந்தோஸமா யேற்றுக் கொண்டேன் . . . பிரசித்த நொத்தாரிசு வைரமுத்து ஞானமுத்து ஆகிய நானிச்சாதனத்தை உம்மாந்துறையிலிருந்து 1936ஆம் ஆண்டு, புரட்டாதி மாதம், 5ஆம் திகதி ஒரே சமயத்தில்ஒப்பமிட்டவர்களின் முன்பாக உறுதிப்படுத்தி அத்தாட்சிப் படுத்துகின்றேன். அத்தாட்சிப்படுத்திய திகதி 1936ஆம் வருசம், மாசம் ஒன்பது, தேதி ஐந்து . . .’

நன்கொடை உறுதி வாசித்து முடிந்தது. ஞானமுத்து நொத்தாசி தானே கொணர்ந்திருந்த ‘உடனடி’ மேசை கதிரையில் அமர்ந்தார். படிக்கம் தேடினார். சபை கலகலத்தது. . . படிக்கத்துள் செங்கடல் நிரப்பிய நொத்தாசியார் சத்தமாக, ‘அளிச்சியும் படிக்கணுமா . .?’ என்று கேட்க, அனைவரும் பெரிய போடியாரைப் பார்த்தனர்.

பெரிய போடியார் பெருமிதமாகச் சுற்றிலும் பார்த்தார். ஜேர்மன் சுருட்டை அப்படியே வட்டைக் கடை ஆதத்திடம் கொடுத்துவிட்டு, வலது கையை உயர்த்தி, ‘தேவல்ல . . .’ என உத்தரவிட, நொத்தாசியார் அக மகிழ்ந்து தனது தொட்டெழுதும், நீண்ட பேனாக் கூர் எடுத்தார். ‘அப்பண்ணா எல்லாரும் கையெழுத்துப் போடுங்க . . .’ என்றார். ‘கிளியும் கிளியும் கிண்ணரம் . . .’ என ஆமோதித்துக் குரல் கொடுத்தார் மீரா வட்டானை.

முதலில் நொத்தாசியார் காட்டிய இடத்தில், பெரிய போடியாரின் பெரிய இடது கைவிரலில் ஊதா மையை ஆதம் தடவ, உறுதியில் சக்சக்கென்று மூன்று அடையாளம் வைத்தார். பின்னர் சின்னப் போடியார் முகம்மதனிபா நொத்தாசியாரின் பேனாக் கூர் பிடித்து, தாமதமாகவும், நிதான மாகவும், ஒழுங்கற்றும், அ.லெ.போ.மு. அனிபா என எழுதியதைப் பெரிய போடியார் இரசித்து நயத்தார். சபையையும் பெருமை யுடன் பார்த்தார்.

சாட்சிக்காரர்களில், முதற் சாட்சியான மாந்தறாகுடி மரைக்கார் மம்முறாகிம்பாவா, தானும் ஊதா மை வெட்கத் துடன் தடவி, ஆனால் பெருமையுடன் ஒப்பம் செய்தார். இரண்டாம் சாட்சியாக, பெரியவெளி மற்றும் மழுவன் கண்டங் களின் வட்டவிதானையாகிய மீராவட்டானை ஊதா மை பூசுதலைத் தவிர்த்து, தனது படிப்பு மற்றும் எழுத்தாற்றலைச் சபைக்கு வெளிப்படுத்தி, பெருமையுடன் பேனாக்கூர் பற்றி சபையில் காட்டி, உதறி, மிக நிதானமாக, மு.பொ.மு. மீரா முகையதீன் வ.வி. என மும்முறை பெரிய எழுத்தில் எழுதினார்.

பெரிய போடியார் சட்டெனத் திரும்பி, உள்ளறை நோக்கி, ‘புள்ளே . . . ய் . . .’ என்றார். மூன்று பணிப்பெண்கள் ஒரே நேரத்தில் ஓடி வந்தனர். ‘வந்திருக்கிற ஆக்களுக்கு என்னையும் . .?’ என்று சைகை காட்ட, சொல்லி வைத்தாற்போல், சபைக்கு விருந்தோம்பல் ஆரம்பமாயிற்று.

முதலில், கோழிக்கால் அலங்காரப் பன் தட்டில், தேன் நிரம்பிய தேன்குழல், செக்கச்செவேலென்று தேன்மணத்துடன் வந்தது. அடுத்து, பொன்னெழுத்து வெள்ளித்தட்டில், கமகம எண்ணெய் மணத்துடன், பொன்னிறத்தில் பொரிக்கப்பட்ட மொறுமொறுப்பான ‘வாடா’ வந்தது. அதனைத் தொடர்ந்து, தாராக்கால் சவடத்தில், பயிற்றம் துவையலுருண்டைகள் பெரிது பெரிதாக மாப்பதத்துடன் வந்தன. தாராளமாகவும், ஏராளமாக வும் பரிமாறப்பட்டன. வயற்காரர்கள், தட்டுக்கள் சுமந்து பகிர்ந்தளித்தார்கள். சபையினர் மகிழ்ச்சிப் பெருக்கில் கலகலகப் பாகவும், சப்புக்கொட்டியும் சுவைத்தின்புற்றனர். பெரிய போடி யாரின் மீது அன்புற்றனர். கடைசியாக, பெரிய பெரிய வெள்ளிக் குவளைகளில் இலவங்க வாசனை கமக்க சூடான சாயத் தேநீரும், கருப்பட்டியும் வந்தன. அனைவரும் விருந்துபசாரத்தில் திளைத்திருக்க, நொத்தாசியாருக்கு வீட்டுக்குக் கொண்டு போகத் தனியாகவும், எல்லா வகையறாக்களிலும் பொதி செய்யப்பட்டன. சபை ஏகமும் கலகலப்பாயிற்று . . .

பெரிய போடியாரின் தொன்னுத்திரண்டு ஏக்கரை எழுதி வெச்சிட்டாரு மகனுக்கு . . . ’

உள்ளதும் ஒரே ஒரு ஆம்புளப்புள்ளல்லா . . ?’ ‘உள்ளதும் ஒரு கண்டு அதுவும் நாம்பன் கண்டுல்லா. . ?’ ‘பெரிய போடியார் ‘அச்சி’க்குப் போற சோடிப்பு.’ ‘எல்லாம் எழந்துதானே போகணும் . . .’ ‘கிளியும் கிளியும் கிண்ணரம் . . .’

பெரிய போடியார் மிகச் சந்தோஷத் தோரணையுடன், திடீரெனப் பெருங்குரலில்,

இந்த ஊருலு ஒரு பள்ளிக்கொடமும் கட்டி முடிச்சிட்டன் எண்டா, என்ட கணக்குச் செரி. நம்முட ஊருலயும், சனம் நாலெழுத்துப் படிக்கணும் . . நாளக்கி ஊருல படிச்ச புள்ளயள் வெரணும் . . . அதான் என்ட ஆஜத்து’ என்று சொல்ல சபை அத்தனையும் மகிழ்ந்து போய்,

ஓம் பெரிய போடியார் ஒங்குட ‘ஆஜத்து’ கட்டாயம் பலிக்கும் . . .’ என்று ஆமோதிக்க, ஞானமுத்து நொத்தாசி கூலிக்காகத் தேவையற்றுச் சிரித்துக்கொண்டிருக்க,

சின்னப் போடியார் முகம்மதனிபா மெதுவாகச் சபை யிலிருந்து எழுந்து, வெளியே வாசலுக்கு வந்தான். எடுபிடி மம்மலியும் உடன் வந்தான். வயற்காரர்களின் மனைவிகளும் மகள்களும் சின்னப் போடியார் முகம்மதனிபாவை ஆர்வமாகப் பார்த்தனர்.

மம்மலி, வில்லுக்கரத்தையக் கொண்டா . . .’

ஆணையிட்டான் சின்னப் போடியார். உடனே மம்மலி விரைந்தோடிப் போய், விற்கரத்தை பூட்டி இளங்காளை மாடு கோர்த்து, கிண்கிணி மணியலிக்க விரைவில் கொணர்ந்தான். முகம்மதனிபா ஒரே தாவலில் விற்கரத்தை மீதேற, எடுபிடி மம்மலியும் பாய்ந்தேற, ‘ஹைய்ய்ய்யா’ ஒரே சுண்டுதலில் இளங்காளை முழு வேகமாய் வாசலை விட்டும் வெளித்தாவி, பிரதான மணற்சாலையில் பறந்தது. இந்தக் கண்கொள்ளாக் காட்சியை அனைவரும் இரசித்துப் பார்க்க போடி வீட்டினுள் ளிருந்து எடுபிடி மம்மலியின் இளம் மனைவியான யம்னாவின் விழிகள் மட்டும் வேதனையுடன் நோக்கியதை அதே கணத்தில் கவனித்த சின்னப் போடியார் முகம்மதனிபா அதை அலட்சியம் செய்து, பறந்தான்.

எங்க பேறம் தெரியிமாடா மம்மலி?’

இந்நெரம் சின்னப் போடியார் பள்ளித்தெடல் ஒழுங்கைக்குப் போவாரு . . . தெரியாதா எனக்கி?’

ஏன் போறம் தெரியுமா மம்மலி?’

ஏன் தெரியாம? மீரா வட்டானைர மகள் செய்னம்புவ இண்டைக்கி எப்பிடியும் கண்டு சின்னப் போடியார் ரெண்டுல ஒண்ட கேக்கப்போறீங்க . . . விருப்பமா இல்லியா?’

அதான் . . . இந்நெரம் நிப்பாளாடா மம்மலி?’

நிண்டா சின்னப் போடியாருக்கு நெஞ்சி குளுரும் . . .

நிக்காட்டியும், நான் கரத்தய கடப்புக்கு எதுக்க நிப்பாட்டி, செய்னம்பு . . . லெக்கா செய்னம்பூவோவ் . . .’ எண்டு கூப்புடுவன்.

என்ட கொரலக் கேட்டா, அன்னா மம்மலிக் காக்கா கூப்புறா. . .

ரெண்டு புள்ள ஓடியரும் பாருங்க . . .’

என்ட நெலம அதுக்கு வெளங்குமாடா மம்மலி . .?’

ஏன் வெளங்காம? நானும் போற நேரமெல்லாம் சாடமாடயா சின்னப் போடியார் விருப்பத்த அதுக்கிட்டச் செல்லியிரிக்கன்தானே . . . வெளங்கும் வெளங்கும். ஆனா ‘வதுல்’தான் இல்ல . . . சும்மா ஒரு சிரிப்புச் சிரிக்கும். புள்ள. அம்பட்டுந்தான்.’

அப்ப ஏன் கரத்தச் சத்தம் கேட்டும் செய்னம்பு வேலிக்கு வாறல்ல . . ? எட்டியும் பாக்கிறல்ல . .?’

செய்னம்புக்குப் பயம் சின்னப் போடியார். . .’ ‘என்னடா பெரிய பயம் . . ?’

நீங்க பெரிய போடி வங்கிசம் . . . அது சும்மா ஒரு வட்டானைர மகள் . . .ஏணி வெச்சாலும் எட்டா . . .’

நான் நன்மைக்கி எடுப்பண்டா மம்மலி.’

விற்கரத்தை வேகம் குறைந்து, பள்ளித்திடல் வீதியில் திரும்பியது. சீரான தாள லயத்துடன், கிண்கிணி மணியலி யுடன் குதித்து நடந்தது. பெரிய வெளிப் பாதையிலிருந்து, புற்பன் பிடுங்கி, நீளநீளமாகக் கட்டிச் சுமந்து வந்துகொண்டிருந்த மூன்று பெண்கள், ஆத்து மீன் காவி வந்த மம்மாக்கான், ஊரின் தகவல் வங்கியான முக்குலத்துக் கிழவி, மரத்தடியில் ‘கல்லுச் சொட்டி’க் கொண்டிருந்த சிறுமிகள், பூமரக்கடை சின்ராசா எல்லோரும் சின்னப் போடியாரின், விற்கரத்தை விஜயத்தைக் கண்ணியப்படுத்தித் தலையசைத்து, விற்கரத்தை கடந்தபின் தூரத்தே செய்னம்புவின் வீட்டினையும் பார்த்துக் குறுஞ் சிரித்துக்கொண்டனர்,

இன்னா ஊடு வந்துட்டு . . . நிப்பாளாடா மம்மலி?’ ‘சின்னப் போடியார் அன்னா பாருங்க . . .’

ஒரு தற்செயல் கணத்தில் செய்னம்பு தென்பட்டாள். பச்சவடப் பாவாடையும், நீண்ட ஒரு சட்டையும், சிவப்புத் தாவணியால் தலை முழுவதும் போர்த்தியிருந்தாள். தன் வீட்டிலிருந்து பாதையைக் கடக்க வந்து, இவர்களின் விற்கரத் தையைக் கண்டதும், சட்டெனப் பின்வாங்கி, ஒரு பயத்துள்ள லுடன், தன் வீட்டுக்குள் புகுந்துவிட்டாள். ஓடும் போதே, முகம்மதனிபாவை ஒரு மின்வெட்டுப் போல் பார்த்துப்

φ          22  ε    நட்டுமை      நௌஸாத்   φ          23  ε

புன்னகைத்தாளா என்ன? முகம்மதனிபா முழுவதும் பரவசமாகி, சுதாரிப்பதற்குள், மறுபடி மம்மலி,

சின்னப் போடியார் . . . அன்னா பாருங்க!’

பாத்துட்டண்டா மம்மலி . . . ஓர்றாடா செய்னம்பு . . .வெக்கமாக்கும்.’

அதில்லே சின்னப் போடியார், அந்தா பாருங்க . . .’

மம்மலி காட்டிய திக்கில், பரந்து கிடந்த பெரியவெளி வயற்பரப்பின் மறுகரையில், அடர்ந்திருந்த நாணற் புதர்களின் அடர்த்தியை ஊடறுத்தியபடி சில உருவங்களின் அசைவாட்டங் கள் தென்பட்டன. ‘பயனியன்ட கட்டுல மறிச்சி களவாத் தண்ணி கொண்டு போக, ஆக்கள் போறாக போடியார்.’ மம்மலி பதறினான்.

என்ன . . . டா?’

முகம்மதனிபா திடீர் ஆவேசமுற்றான். சட்டெனச் சாறனைத் தார்ப்பாய்ச்சிக் கட்டினான். சர்ட்டையும் அவசர மாகக் கழற்றினான். மம்மலியிடம் எறிந்தான் . . . சட்டென விற்கரத்தையின் தொட்டிற் சாக்கில் கைவிட்டான். . . உருவி இழுத்தான். நாலடி நீள ‘வளை வாள்’ கையில் மினுக்கியது. உடன் விற்கரத்தையைச் சுண்டினான் . . .இளங்காளை பாய்ந்தது.

நிப்பாட்டுங்க சின்னப் போடியார்! போகாதீங்க . . .’

மம்மலி பதறிக் கத்தியபடியே விற்கரத்தையின் சவுக்குக் கொடியைப் பற்றி இழுத்தான்.

விட்றா மம்மலி . . .’

பொறுங்க போடியார் . . .’

மம்மலி எறங்குடா . . . பெரிய போடியாருட்ட வெசயத்தச் சொல்லி நம்முட ஆக்களக் கூட்டிட்டு வா . . . நான் முந்துறன் . . . எறங்குடா . . .’

இல்ல. . . இல்ல. . . நான் ஒங்கள உட்டுட்டுப் போக மாட்டன். . . நிப்பாட்டுங்க சின்னப் போடியார்.’

எறங்குடா வள்ளா . . .’

முகம்மதனிபா மம்மலியை எட்டி உதைத்தான். மம்மலி விற்கரத்தையிலிருந்து பத்தடி தூரத்தில் எகிறி விழுந்து தடுமாறி எழுந்து, பெருங்குரலில் கத்தினான். திடீரென ஆத்துமீன் மம்மாக்கானும், வயலுக்குள் நின்ற வீறான்கண்டும் ஓடி வந்தன.

என்னடா. . . மம்மலி என்னடா?’

பயனியன்ட கட்ட வெட்டி தண்ணி கொண்டு போக மழுவண்ட கண்டத்து ஆக்கள் போறானுகள். . . சின்னப் போடியார் வாளெடுத்துட்டு, அந்தா பறக்காரு. . . புடிங்கடா. . . புடிங்கடா. . . போடியாரப் புடிங்கடா. . .’

உடனே மம்மாக்கானும் வீறான்கண்டும் ‘சின்னப் போடியார். . . சின்னப் போடியார்’ என்று கத்தியபடியே விற்கரத்தையைத் தொடர்ந்து ஓட, மம்மலி சுதாரித்து, வந்த வழியே திரும்பி, பெரிய போடியாரின் வீட்டை நோக்கித் தலைதெறிக்க ஓடினான் . . .

ஓடியாங்கடோவ் . . . ஓடியாங்கடோ . . .’

φ          24  ε    நட்டுமை      நௌஸாத்   φ          25  ε

போகம் 2

பஞ்சுவாய்

இரண்டு பெரிய பெரிய கண்டத்து வயல் நிலங்களை ஊடறுத்துக் கட்டப்பட்டிருந்த பயனியன் அணைக் கட்டிலிருந்து வலது பக்கமாகவுள்ள பெரியவெளி வயற் கண்டத்துக்கும், இடது புறமாகவுள்ள மழுவன் கண்டத்து வயல் நிலத்துக்கும் இந்த அணைக்கட்டு ஒன்றே பிரதான நீர்ப்பாய்ச்சலாகவிருந்தது. பட்டிப்பளை ஆற்றிலிருந்து வரும் தண்ணீரை முதலில் எந்தப்பக்கம் பாய்ச்சிக் கொள்வது என்பதில், பரஸ்பரம் இருபக்கமும் விவசாயம் செய்யும் ஒரே கிராமத்து விவசாயிகளுக் கிடையில் ஒவ்வொரு போகத்திலும் பிணக்கு ஏற்படுவது சகஜமாகிவிட்டிருந்தது. இம்முறை அப்பிணக்கு, பருவ மழை பிந்தியமையால் உச்சக்கட்டத்திற்குப் போயிருந்தது. மழுவன் கண்டத்து விவசாயிகளுக்கு எப்போதும், நீதியான முறையில் நீர்ப்பாய்ச்சல் தரப்படுவதில்லை என்ற குற்றச் சாட்டு இம்முறை பூதாகாரமாக வெடிக்கக் காத்திருந்தது.

நெல்நாற்றுகளுக்கு முக்கியமாக நீர் தேவைப்படும் இச்சந்தர்ப்பத்தில். பெரியவெளிக்கு மட்டுமே பாய்ச்சத் தேவையான நீர் இருப்பதாகவும், அப்பக்கம் பாய்ச்சிய பின்னர், மீதமிருக்கும் நீரையே மழுவன் கண்டத்து நிலங்களுக்குப் பாய்ச்சலுக்குத் திறந்துவிட முடியுமென்றும் பரவிய வதந்தியில் கொந்தளித்துப் போன மழுவன் கண்டத்து விவசாயிகள், உமறுலெவ்வையின் தலைமையில் கூடி யோசித்தனர்.

ஆனாலும், எந்தத் தீர்மானமும் எடுப்பதற்கிடையில், சுமார் முப்பத்திரெண்டு ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் வாடித் துவளத் தொடங்கியிருந்தன. எனவே, மழுவன்

கண்டத்து விவசாயிகள் அணைக்கட்டைக் குறுக்காக மறித்து, திசை திருப்பித் தம் பக்கமாகப் பாய்ச்சுவதும், மறுபக்கத்து விவசாயிகள் அதை மறுபடி வெட்டித் தடுப்பதுமாக, தினமொரு சர்ச்சை பயங்கரமாக உருவாகிக்கொண்டிருந்தது.

நேற்றைய சம்பவத்தின் போது, சின்னப் போடியார் முகம்மதனிபாவின் கோஷ்டியினருக்கும், மழுவன் கண்டத்து ஆட்களுக்குமிடையில் நிகழவிருந்த ஒரு பெரும் கைகலப்பு பெரிய போடியாரின் உடனடி முயற்சியால் தடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அம்முறுகல் நிலை நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டுதானிருந்தது.

பெரியவெளிப் பக்கமாக, சின்னப் போடியார் முகம் மதனிபாவுக்குத் தொண்ணூற்றி இரண்டு ஏக்கர் வயல் நிலம் ஒரே வெளியாகச் சொந்தமாகவிருந்தது. மழுவன்கண்டத்துப் பக்கம் இருநூற்றிப்பத்து ஏக்கர் நிலமிருந்தபோதிலும், அவை பெரும்பாலும் ஐந்து, பத்து ஏக்கர்களாகப் பல சிறுசிறு போடி மாருக்கும், குத்தகைக்காரருக்கும் சொந்தமாயிருந்தன. சின்னப் போடியார் முகம்மதனிபாவுக்கும் அந்தப் பக்கமும் பத்தேக்கர் நிலம் இருந்தது.

பயனியன் அணைக்கட்டின், பாரிய தளத்தின் மேல் நின்றபடியே, இருபக்கமும் ஆழ்ந்த சிந்தனையுடன் பார்த்துக் கொணடிருந்தார் மீராவட்டானை. சர்ச்சைக்குரிய நீர்ப் பாய்ச்சலுக்குப் பொறுப்பாயிருக்கும் வட்டைவிதானையாகிய மீராவட்டானை, பெரிய வெளிக்கண்டத்துக்கும், மழுவன் கண்டத்துக்கும் ஒரேசமயத்தில் வட்டை விதானையாகக் கடமை

φ          26  ε    நட்டுமை      நௌஸாத்   φ          27  ε

புரிந்து வந்தார். நேற்றைய முறுகலுக்குப் பின்னர் அவரது நியமனம் கேள்விக்குள்ளாகிவிட்டிருந்தது. இப்பிரச்சினையைத் தீர்க்காவிட்டால், நிச்சயமாக இனி வட்டை விதானைப் பதவி தன்னை விட்டும் நழுவிவிடும் என்பதில் மிகக் கவலையாக விருந்தார். ஒருபக்கம் வலிமைமிக்க சின்னப் போடியார், மறுபக்கம் தனது தங்கை மகன் உமறுலெவ்வையின் தலைமையின் கீழ் அணி திரண்டிருக்கும் குத்தகைக்காரப் போடிமார்கள் . . .

நிலைமை கட்டுக்கடங்காமற் போவதற்கிடையில் ஏதாவது செய்தேயாக வேண்டும். . . பருவ மழை பொழிந்தால், இந்தப் பிரச்சினையே காணாமல் போய்விடும். ஆனால் வானம் பொய்த்துப் போனதற்கு அவரால் என்ன செய்ய முடியும்? மிகுந்த சிந்தனையுடன், அண்ணார்ந்து வானத்தைப் பார்த்தார்.

£னம் நிர்மலமாக இருந்தது. மழைக்கான அறிகுறியே இல்லை.

வல்ல பெரியவனே . . .’ என்று முணுமுணுத்துக் கொண்ட மீராவட்டானை, மறுபடி தொலைதூரத்தில் ஒரு புள்ளியாகத் தெரிந்த தன் வீட்டைப் பார்த்தார். . . ஏறுவெயில் எரிக்க ஆரம்பித்தது. ஒரே மகள் செய்னம்பு வீட்டில் தனியாகக் காத்திருப்பாள். வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

 

பயனியன் அணைக்கட்டிலிருந்து, இரு பக்கமும் ஆயிரக் கணக்கான ஏக்கர்களாக விரிந்து பரந்திருந்த பெரியவெளி நெற்காணிகளின் முடிவில், உடனடியாகத் தொடங்கும் குடியிருப்பு நிலத்திலிருந்து ஆரம்பித்து உம்மாந்துறைக்குள் செல்லும் பிரதான வண்டிப் பாதையில் வலப்புறம் அமைந்திருந்த பள்ளித் திடல் ஒழுங்கையில், பூஞ்சோலைகளின் பச்சைப்பசேல் இரகசியங்களின் அடர்த்தியின் கீழ் கூரையில் தகரம் வேய்ந்து, நீற்றுச் சுண்ணமும், களியும், தேனும் விட்டுக் கலந்து குழைத்துக் கட்டியிருந்த மீராவட்டானையின் வீட்டின் முற்றத்தில் செய்னம்பு நின்றுகொண்டு முருங்கையிலை பறித்துக் கொண்டிருந்தாள்.

வயற்பக்கம் சென்றிருந்த வாப்பா, சந்தைக்குச் சென்று, கறி ஏதும் வாங்கி வருவதற்கிடையில் முருங்கையிலைகள் பறித்து, துப்புரவு செய்து வைத்துக்கொண்டால் நல்லது என்ற நினைப்புடன், முருங்கைக் கிளைகளைத் தனது பதினாலு வயதுக்குரிய இளமைத் துள்ளலுடன், எட்டித் துள்ளித் துள்ளி அவள் இழுத்துச் சவட்டி முறிக்கையில், அவளது கணுக்காலில் கட்டியிருந்த தாமரைப்பூக் கொலிசம் ‘கிலீங் . . . கில்லீங்’கெனச் சிணுங்கின. சதாவும், செம்மருதாணியிட்டு ஓரமெல்லாம் சிவந்திருந்த அவளது பாதங்கள் வெளிறிச் சிவந்து, வர்ணம் காட்டின. வலது கையில் அணிந்திருந்த முகப்பணிக் காப்பும்,

இடக்கையில் பூட்டியிருந்த வெள்ளிக் கைக்கட்டும் பளீர் பளீரென மின்னின . . . வீட்டிலிருந்ததால், முக்காடு இல்லாத கூந்தலில், சேர்த்துக் கட்டியிருந்த கரு ஊதா நாக வள்ளிச் சிறு பூக்கள் ஒன்றிரண்டாய்க் கீழே உதிர்ந்தின.

குக்கிராமத்திற்கே உரித்தான உறுதியும் கட்டிறுக்கமுமான வாளிப்பான இளமையுடல், வில்லென வளைந்தும் நிமிர்ந்தும் ஒத்துழைக்க, இளம் வயதுக்கான கற்பனையில் இலயித்திருந்த பெரிய கனவு விழிகளில் இனம் புரியாத மருட்சி மின்னியது. நினைவெல்லாம் தன்னை நோக்கி எய்யப்படும் பலவந்த விருப்ப அம்புகளைத் தடுக்கமுடியாத நிலையில், குழப்பமான எண்ணங்களில் மூழ்கித் தத்தளித்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்னால் தாய்க்காரி கூழாவடிச் சந்தியில் உறையும் கரிவைரவன் பார்வைபட்டு, திடீர் சுகவீன முற்று காலஞ்சென்றுவிட்டதிலிருந்து, செய்னம்பு தாயில்லாப் பெண்ணானாள். தந்தை மீராவட்டானை மட்டுமிருந்து என்ன செய்ய? உம்மா இருந்திருந்தால், ஆலோசனை சொல்லி வழிகாட்டியிருப்பாள். ஆனால் . . . தனது அநாதரவான நிலை கவலையளித்தது.

தாய்க்குத் தாயாகத் தந்தைக்குத் தந்தையாகக் கவனித்து வரும் மீராவட்டானையும், உடன் பிறவாச் சகோதரியாகப் பழகி வரும் தாய்வழி உறவினளும் மம்மமலிக் காக்காவின் இளம் மனைவியுமான யம்னாலாத்தாவும், அவளது புருஷனான மம்மலிக் காக்காவும்தான் அவளுக்குப் பெரிய ஆறுதல். வாப்பாவிடம் இது பற்றி எப்படிப் பேச? சரி யம்னா லாத்தா வரட்டும். பிரச்சினையை அவளிடம் சொல்லிப் பார்க்கலாம். தலைக்குப் பேன் பார்க்க மாலையில் வருவதாகச் சொல்லி யிருந்தாள். செய்னம்புவின் கண்கள் எதேச்சையாக ஒழுங்கைப் பக்கம் பார்த்தன. இந்த ஒழுங்கையில் அடிக்கடி இடம்பெறும், சின்னப் போடியார் முகம்மதனிபாவின் விற்கரத்தை விஜயம் ஒரு வகையில் ஆச்சரியமில்லைத்தான். இவளை மனப்பூர்வமாக விரும்புகின்றான். ஏதாவது ஒரு சாக்கு வைத்து இந்த ஒழுங்கை யால் விற்கரத்தையிலும், சில வேளைகளில் நடந்தும், மம்மலி யுடன் வருகிறான். இவளைக் கண்டதும், ஏதோ சொல்ல முயல்கிறான். பெரிய போடியாரின் ஒரே மகன் . . . தோண்ணூற் றிரண்டு ஏக்கருக்குச் சொந்தக்காரன். அவனே தேடி யலைந்து வர அத்தனை அழகா நான்?

தனது சொந்த மாமியின் மகன் உமறுலெவ்வையின் ‘உரித்துக் காதல்’ வேறு சங்கடமாயிருந்தது. உமறுலெவ்வை மீராவட்டானையின் இறந்துபோன ஒரே தங்கையின் மகன். நாலாம் வகுப்பு படித்திருக்கிறான். வாத்தியார் வேலை கிட்டத்

φ          28  ε    நட்டுமை      நௌஸாத்   φ          29  ε

தில் கிடைக்குமாம். உமறுலெவ்வை வாசிப்பான். எழுதுவான். மணி பார்ப்பான். மூணுபங்கு வேளாண்மை வெகு துரிதத்தில் வெட்டுவான். தானே ஐந்து ஏக்கர் சொந்தமாகச் செய்கிறான். . .

காட்டவ்லியா கொடியேற்றத்தில் இவளுக்கு அத்துராசித் தாவணித் துணியும், சிவப்புமணிகள் பதித்த அல்லுக் குத்தும் வாங்கித் தந்தவன். உமறுலெவ்வையின் ‘உரிமை விருப்பமும்’, சின்னப் போடியாரின் ‘ஆசை விருப்பமும்’ செய்னம்புவைப் பயமுறுத்தின. தவிரவும், சின்னப் போடியாருக்கும், உமறுலெவ் வைக் கோஷ்டியினருக்கும் இடையிலான இந்தத் தண்ணீர்ப் பிணக்கு வேறு பயமுறுத்தியது. யாருக்கும் அவள் தீர்மானமாக முடிவு ஒன்றும் கொடுக்கவில்லை. தந்தை மீராவட்டானை எல்லாம் பார்த்துச் செய்வார்தான். ஆனாலும், ஒரே மகளான தால், இவள் விரும்புவதைத்தான் செய்வார்!

நா ஆஞ்சி தெரயா புள்ளே . . ?’

திடீரெனக் கேட்ட ஆண்குரலில் திடுக்கிட்டு, வீட்டினுள் ஓடப் பார்த்தாள். . . ஆனால், மம்மலிக் காக்காதான் உள்ளுக்கு அவ்வளவு உரிமையுடன் வந்தவன் என்று கண்டதும் சட்டென்று நின்றுவிட்டாள்.

புள்ளே, முருங்க எல நா ஆஞ்சி தெரயா?’

தேவல்ல காக்கா. . . நா ஆஞ்சிட்டன். . . அப்பிடி இரிங்க . . .

வாப்பாவும் இல்ல. . .’

செரி வெரட்டும் . . . எங்க முக்குலத்துக் கௌவி?’

அவவும், ஒங்கட பொஞ்சாதி மைமுனா லாத்தாவும், மம்மாக்காண்ட மகன்ட ‘ஸின்னத்து’ ஊட்ட போறாக . . .

இன்டைக்கித் தண்ணி வாக்கிறயாம். சீனாள்ம்மா கவி படிக்கிறயாம் . . .’

யம்முனாவத் தேடித்தான் நா வந்த . . . சீனாள்ம்மா நெல்லாக் கவி படிப்பாள்.’

யம்னா லாத்தா உங்கள்ட்ட செல்லல்லியா போற எடத்த? நேத்து என்ன காக்கா நடந்த?’

நா ஊட்ட இரிக்கல்லடா புள்ளே . . . போடி ஊட்டபோய், பொலிசானைட கந்தோருக்குப் போய் . . . இப்பான் வாறன். சின்னப் போடியார்ர ‘அடிபிடி’ வெஷயமாப் போன . . .

மழுவன்கண்டத்து ஆக்கள் இந்த மொற தண்ணிய அவகளுக்கு மொதல்ல உடச் செல்லி கேக்காக . . . ஒன்ட மச்சான்காரன் ஒமறுலேவதான் இதுல மின்னுக்கு நிண்டு மல்லுப் பளகுராரு. அதுக்கு, கள்ளத்தண்ணி வெட்ட வந்த ஆக்கள சின்னப் போடியாரு வாளெடுத்துட்டு வெரசின . . . நெல்ல காலம்ஓடித் தப்பிட்டாக... நாய்க்கௌ. நாங்க உட்றுவமா..? அதுசெரி. ..

நான் சென்னத்தப் பத்தி ஓசிச்சயா புள்ளே?’

மம்மலிகாக்கா சுற்றி வளைத்து விஷயத்துக்கு வந்து விட்டான். சின்னப் போடியாரிடம் எடுத்துச் செல்ல சம்மதம் கேட்கிறான். அவனது தூதுவனாக வந்திருக்கிறான். இவளுக்கு வெட்கமாக இருந்தது. மௌனமாக இருந்தாள். மம்மலி மேலும் ஓரம் குத்தி, உரம் போட்டான்.

பெரிய போடி வங்கிசம் . . . நூறேக்கர், காலைவளவு . . . எல்லாம் சின்னப் போடியாருக்குத்தான் . . . அவருக்கு வாள்ந்தி யெண்டால், எலிசவெத்து மஹாராணி மாரி இரிப்பாய்.’

‘...         ...’

இன்னஞ் செல ஆக்கள் இரிக்கானுகள் . . . பெரிய படிப் பாம். . . ஆனா வசதி ஒண்டும் இல்ல . . . ஆக்களும், குழப்படிக்குப் படி ஆக்கள். மாமிர மகன் எண்டத்துக்காக ஓம் பட்டால், மறுகா அழிஞ்சாய் . . . புள்ள நீ.’

மறுமொழி ஒன்றும் சொல்ல முடியவில்லை. அதற்காகச் சம்மதம் சொல்லவும் முடியவில்லை . . . வெகு நேரம் சும்மா யிருந்துவிட்டு. மம்மலியை நோக்கி ஒரு கேள்வி தயங்கியபடியே கேட்டாள். அதற்கு மம்மலி சத்தமிட்டுக் சிரித்து,

அப்பிடி எரிச்சல்காரனுகள் செல்றானுகள் . . . ஆனா எனக்கித் தெரியிம். நான் கூடத் திரியிறவன். செல்றன் . . . சின்னப் போடியார் அப்பிடியான ஆள் இல்ல . . .’

தேத்தண்ணி தெரயா காக்கா?’

சாயம் கொஞ்சம் தாடா புள்ள . . . என்னயோ நெல்லா யோசிச்சி கெதியாச¢செல்லு.. . நீ செல்ற முடிவத்தான் ஒங்கு வாப்பா செய்வாரு. ஒனக்குள்ளான் இரிக்கி எல்லாம், நெல்லா வாழ்றதும், அழிஞ்சி போறதும் . . .’

செய்னம்பு புன்னகையுடன் சட்டென வீட்டினுள் நுழைந்துவிட்டாள். தேநீருக்கு ஆயத்தப்படுத்தினாள். வாசலில் மம்மலியின் பாட்டுச் சத்தம் கேட்டது.

‘ . . . ம்ம்மாடும் வயசாளி

மாட்டுக்காரன் குமராளி . . .

நானும் சாச்சிப் பார்த்தன் நடக்குதில்ல போடியாரே . . .

ய்ய்ய்ய், போடியாரே . . .’

செய்னம்புவுக்குச் சட்டெனச் சிரிப்பு வந்துவிட்டது. நீரைக் கொதிக்க வைத்தாள். எலுமிச்சை இலைத் துளிர்களை அதற்குள்

φ          30  ε    நட்டுமை      நௌஸாத்   φ          31  ε

போட்டாள் . . . வாசம் கமகமத்தது. வெள்ளிக் கேத்தலில் நிறையச் சாயம் விட்டு ஊற்றினாள். கருப்பட்டிக் கட்டி ஒன்று எடுத்தாள். வெளியே கொணர, தூரத்தே வாப்பா மீராவட்டானை வருவதும் தெரிந்தது.

ஆரு மம்மலியா . . . கவிச் சத்தம் மூணு லோட்டுக்குக் கேக்குது . . .’ மீராவட்டானை உள்ளே வந்தார்.

ஓம் வட்டான மாமா . . . புள்ளே வாப்பாக்கும் தேத்தண்ணி கொண்டாடோவ்.’

எனக்கி வேணா மகள் . . . இப்பான் எளநி குடீச்ச.’

மீராவட்டானை கரும்பச்சைச் சால்வையை உதறி அவிழ்த்து, செய்னம்புவிடம் நீட்ட, அவள் அதை வாங்கிக் கொண்டு போய் உள்ளே மான்கொம்பில் தொங்கவிட்ட பின் சாயப் பாய் கொணர்ந்து, திண்ணையில் போட்டாள். மீராவட்டானை அதில் அமர்ந்தார்.

வட்டாவைக் கொண்டாடா மகள் . . . மறுகா மம்மலி என்ன பொலிசானைட்ட போனியாமே . .?’

நெல்ல காலம் காக்கா . . . சின்னப் போடியார அண்டு நான் புடிக்காட்டி நாலு பேரு வாள் வெட்டுல மாண்டிருப்பாக.’

சும்மா நொட்டாத . . . சின்னப் போடியார் உதச்ச உதயில நீ நாப்பதடி போய் உழுந்தாய். நீயா அவரப் புடிக்கிற?’

பயனியன்ட கட்ட வெட்ட வந்த ஆக்கள்ள ஓங்குட மருமகன் ஒமறுலேவயும் ஒரு ஆள் . . .’

ஒமறுலெவ்வ.. . ராக்கிளிஅலி, மழுவன் கண்ட அதிஹாரி. . .

அஞ்சலிர பேரன் இப்பிடிக் கொஞ்சப்பேரு . . .’

ஆனா காக்கா, ஒங்கட பொழயாலதான் இப்பிடி நடந் தண்டுதான் ஊருல கத.’

எந்த வழிசல் சென்ன?’

நீங்க பெரிய வெளிக்கும், மழுவன் கண்டத்துக்கும் ரெண்டுக்கும் வட்டான வேல பாக்கப்பொடாதாம். மழுவன் கண்டத்துக்கு வேற வட்டான வெக்கணுமாம். நீங்கதான் மழுவன் கண்டத்துக்கு வந்த தண்ணிய மறிச்சி பெரிய வெளிக்கு உட்ட எண்டு ஒங்கட மருமகன் ஒமறுலேவ கதச்சித் திரியிறான்.’

ஏன் உடாம? பெரியவெளிக்கி உட்டுட்டுத்தான் பொறகு அங்கால உடுவன். இதுதானே வளம?’

அது செரிதான் . . . பத்து நாளாயிம் உடல்லியாமே . .?’

அதுக்குத் தண்ணி வெரணுமே! மள பேஞ்சயா? பயனியண்ட கட்டுல மூத்திரம் பெஞ்சாப்பல கொஞ்சம் தண்ணி வெருது. பெரிய நீர்ப்பாய்ச்சல் எஞ்சினீரு தொரயச் சந்திக்க நானும் அதியாரியும் போக இரிக்கம். அதுக்குள்ள அவிசிரப்பட்டு, கள்ளத்தண்ணி வெட்ட வந்துட்டாக நாய்கௌயள் . . . தூவ்.’

சின்னப் போடியாரு லேசில வாள எடுக்கமாட்டாரு . . . எடுத்தா, வெட்டாம உடயும் மாட்டாரு. அதுவும், ஒங்கள ஆரும் பொழ கதைச்சா துண்டுதான் . . .’

செய்னம்புவுக்குத் திகீரென்றது. மம்மலிக் காக்கா தந்தை யிடம் உமருலெவ்வை மச்சான் மீதான வெறுப்பையும், சின்னப் போடி மீதான பற்றுதலையும் விதைக்கிறான். இதற்கு ஏமாறக் கூடாது. மேலும் கதை கேட்கும் ஆர்வத்தில், வெறும் திண்ணையில் உட்கார்ந்தாள் செய்னம்பு. எட்டித் தள்ளியிருந்த புற்பன் தட்டை இழுத்து, ஆய்ந்த முருங்கையிலை களைக் கந்தப் பார்க்கும் பாவனையில், இவர்களின் பேச்சைக் கவனமுடன் கேட்டுக்கொண்டிருந்தாள். திடீரென மீரா வட்டானை,

முக்குலத்து மூத்தம்மா எங்க புள்ளே? இன்னம் வெரல்லியா மகள்?’ என்று கேட்டார்.

இல்ல வாப்பா.’

எண்ட பொஞ்சாதி யம்னாவுந்தானே கூடப் போயிருக்கா . . . இனி வந்திருவாக.’

தண்ணி வெசயத்துல போன போகத்திலயும் சிக்கலும், அடிபிடியுந்தான். இந்தப் போகம் நெல்லபடியா முடிய காட்டவ்லியா அப்பாதான் காப்பாத்தணும், மெய்தான் காட்டுப் பள்ளிக் கொடியேத்தமும் வருதுடா மம்மலி . . .’

ஓங் காக்கோவ், வெதைப்பு முடிய வெரும் போல . . .’

தலக்கந்துரி மாதம் பொற பதிமூணுல வெரும்.’

இந்த மொற பள்ளிக்கி கொடி தைக்கிற ஓங்குட பொறுப்பு. ..

இல்லா . .?’

ஒன்டா மம்மலி . . . துணி எடுக்கணும் . . . சாமான் சக்கெட் டெல்லாம் ஆயத்தப்படுத்தணும் . . . புளியந்தீவுக்கு போகணும் . . .

இந்த மொற போத்துவில் பீர்முகம்மது அண்ணாவியாருக்குச் செல்லணும் . . .’

நான் ஒரு நாளும் புளியந்தீவுக்குப் போகல்ல காக்கா.’

φ          32  ε    நட்டுமை      நௌஸாத்   φ          33  ε

இந்த மொற என்னோட வா.’

கட்டாயம் வெருவன் . . . மறுகா காக்கா, புள்ளட வெசயம்?

என்னடா புள்ளட வெசயம்?’ என்ற மீராவட்டானை செய்னம்புவைத் திரும்பிப் பார்த்தார். தன்னைப் பற்றிய பேச்சு வந்ததும் செய்னம்பு எழுந்து உள்ளே சென்றுவிட்டாள். தனது அந்தரங்க ராச்சியிமான ஆலவீட்டுக்குள்ளிருந்து இதயம் படபடக்க இவர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்டாள்.

இல்ல காக்கா . . . செய்னம்புக்கு அவர எடுத்தா என்ன?’

எவர?’

அவரத்தான் . . . நம்மட சின்னப் போடியார?’

சீ . . . சின்னப் போடியாரயா?’ மீராவட்டானை வியப்பு தாளாமல் மம்மலியைப் பார்த்தார். உள்ளிருந்த செய்னம்பு அதிர்ச்சியடைந்துபோய் தந்தை என்ன மறுமொழி சொல்லப் போகிறார் எனக் கூர்ந்துகேட்டாள்.

போகம் 3

முளை

சின்னப் போடியார் முகம்மது அனிபாவை மாப் பிள்ளையாக எடுக்குமாறு மம்மலி சொன்ன கதையால், சற்றும் அதிர்ச்சி குறையாத மீராவட்டானை மம்மலி யைப் பார்த்தார். உள்ளுக்குள் ஓராயிரம் சந்தேகங்கள் எழுந்தன.

என்னடா மம்மலி . . . பேக்கத கதக்காய்?’ மறுபடி கேட்டார் மீராவட்டானை.

ஏன் காக்கா சின்னப் போடியாரு செய்னம்புவக் கேட்டா குடுக்கமாட்டீங்களா?’

சின்னப் போடியாரு கேக்கச் சொன்னாரா உனக்கிட்ட?’

இல்ல . . . ஆனா கேட்டா?’

கேட்டா பொறகு பாப்பம் . . . அவக பெரிய போடி வங்கிசம் . . . நாம எந்த மட்டுக்கு? அதுவுமில்லாம எண்ட மௌத்தான தங்கச்சிர ஒரே மகன் என்ட மருமகன் ஒமறுலெவ்வ இருக்கக்குள்ள . . . எப்பிர்ரா மம்மலி?’

ஒமறுலேவ எக்கடா புக்கடா ஆளு. சின்னப் போடியாருக்குக் கிட்ட நிக்க ஏலுமா அவனுக்கு?’

எக்கடா புக்கடா ஆளு’ என்று மம்மலி, உமறுலெவ் வையைப் பற்றிச் சொன்ன சொல் அவனது பிறப்பைக் குறித்து நிற்பதை உணர்ந்துகொண்டார் மீராவட்டானை. இருபது வருடங்களுக்கு முன்னர், கிராமத்தில் திடீர் கர்ப்பிணியாகி உமறுலெவ்வையைப் பெற்றெடுத்து இவரிடம் ஒப்படைத்துவிட்டு அலரிக்காய் சாப்பிட்டு

φ          34  ε    நட்டுமை      நௌஸாத்   φ          35  ε

உயிர் நீத்த தன் தங்கையின் மீது மறுபடியும் கோபம் வந்தது மீராவட்டானைக்கு.

செரி செரி கதய உடு. . . பொறகு யோசிப்பம்.’

அன்னா, முக்குலத்துக் கௌவியும், என்ட கண்டு மயிலாரும் வந்துட்டாக.’

மீராவட்டானையின் தாய்வழி உறவினளான முக்குலத்துக் கிழவியும், மம்மலியின் பெண்சாதியான யம்னாவும் ஏதோ சொல்லிச் சிரித்தபடியே உள்ளே வந்தனர். செய்னம்புவும் ஆல வீட்டினுள்ளிருந்து வாசலுக்கு வந்தாள்.

வந்துட்டீங்களா?’

ஓம் புள்ளே . . .’ என்ற முக்குலத்துக் கிழவி விருத்தசேதன வீட்டில், தான் கண்டும் கேட்டும் வந்த தகவல் பெட்டகத்தைத் திறந்து விநியோகிக்க வசதியாக மூலையில் சாய்ந்து உட்கார்ந் தாள். தனது பென்னம் பெரிய ஓட்டையாகி இழுபட்டுத் தொங்கிய காதுகளை ஆட்டினாள். வெற்றிலைப் படிக்கம் தேடினாள். உடன், மம்மலியின் மனைவி யம்னா மம்மலியைப் பார்த்தாள்.

நீங்க இஞ்சயா இரிக்கிறீங்க . . . சின்னப் போடியாரோடப் போகல்லியா?’

போய் வந்துட்டன். ஒன்னத் தேடித்தான் இஞ்ச வந்தன். . .

பசிக்கிதுகா புள்ளே.’

செரி வாங்க ஊட்ட போவம் . . . ராவைய சோறிரிக்கி.’

யம்னா லாத்தா இரிங்க . . . இஞ்ச திண்டுட்டுப் போங்க. நில்லுங்க . . . மம்மலிக் காக்கா . . . செல்லன் காக்கா . . .’

செய்னம்பு வற்புறுத்தி, யம்னாவின் கையைப் பிடித்து இழுத்தாள். யம்னா லாத்தாவை இன்று இங்கேயே நிற்க வைத்தால், அவளிடம் தன் பிரச்சினையைச் சொல்லி ஏதும் யோசனை கேட்கலாம். நல்லபுத்திக்காரி. தன்னில் பாசமுள்ள, தன்னைவிட மூன்றே வயது கூடிய லாத்தா திருமணமானவள். அனுபவப்பட்டவள். ஊருலகம் தெரிஞ்சவள் . . . சின்னப் போடியாரையும், உமறுலெவ்வை மச்சானையும் நன்றாகத் தெரிந்தவள்.

இல்ல கிளி செய்னம்பு . . . ஆறுதலா வாரன். இப்ப காலைக்க வேல கெடக்கு . . . எழும்புங்களன் போவம்.’

வட்டானக் காக்கோவ், நான் சென்னத்தப் பத்தி ஓசிச்சி வெய்ங்க. . . நான் போறன்’ மம்மலியும் எழுந்தான். ஆனால், செய்னம்பு விட்டாளில்லை.

இல்ல . . . இல்ல . . . லாத்தா . . . நீங்க நில்லுங்க . . . நில்லுங்க’

செய்னம்பு, யம்னாவை விடாப்பிடியாக இழுத்தாள். உடனே மீராவட்டானை,

டீயெ, யம்னா. . . புள்ள செல்றாள் நில்லு. நிண்டு போ. மம்மலி வா . . . நாம சந்தப் பக்கம் போய்ப் பாத்துட்டு வெருவம்.’

முடிவாகச் சொன்ன மீராவட்டானையும், கூடவே மம்மலி யும் புறப்பட எழுந்தபோது, ஒழுங்கைப் பக்கமிருந்து சில குழப்பமான குரல்கள் கேட்டன.

மம்மலி என்னடாது . . . ஆக்களும் . . . சத்தமும்?’ ‘வட்டானே . . . வட்டானே காக்கோ . . . வ்.’

யாரோ கோபமாக வேலிக்கப்பாலிருந்து கூப்பிட்டனர். மீராவட்டானையும், மம்மலியும் யோசனையுடன் படலைப் பக்கம் செல்ல, செய்னம்புவும் யம்னாவும் முன்னெச்சரிக்கையாக வாசலின் மறுபக்கத்தில் அடர்ந்திருந்த கமுகு மரங்களிடையே புகுந்து வேலியின் கிடுகுத் துவாரங்கள் வழியே வெளியே கூப்பிட்டுக்கொண்டு நின்றவர்களைப் பார்த்தனர். . . உடன் அதிர்ச்சியடைந்தனர். செய்னம்புவுக்குப் பகீரென்றது.

வெளியே மச்சான் உமறுலெவ்வையின் தலைமையில், நாலு வாலிபர்கள் நின்றுகொண்டிருந்தனர். ஒருத்தனின் கையில் சண்டைகளுக்குப் பயன்படுத்தும் மாட்டுக் கொம்பாலான ‘ராக்ளி’க் கருவி இருந்தது.

அவன் ராக்கிளிஅலி எனப்படுபவன். சண்டியன். இன்னொருத்தன் புல்லறுக்கும் அரிவாளை சிறுவாலுக்குள் விட்டு பாதிகாட்டி பாதி மறைத்திருந்தான். இவன் அஞ்சலிரப் பேரன். நெடிய உருவத்துடன் தலைப்பாகை கட்டியிருந்தவன் மழுவன்கண்ட அதிகாரி. இவர்களுக்குக் கூட, இன்னும் இரண்டு மழுவன் கண்டத்துக் குத்தகைப் போடிமார் தயக்கத்துடன் நின்றுகொண்டிருந்தனர். சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வந்த

         £திரி தெரியவில்லை. ஏதோ திட்டமிட்டுத்தான் வந்திருக்கிறார்கள் என்பது பார்த்த மாத்திரத்திலேயே அவர்களது தயார் நிலையிலேயே தெரிந்தது.

தலைமை தாங்கி வந்திருந்த உமறுலெவ்வை கைகளில் ஏதோ சில பத்திரங்கள் வைத்திருந்தான். அதை அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தான். தன் தாய்மாமன் வீட்டுக்கு அவருக்கெதிரான சாட்சியாக வந்திருக்கிறோம் என்பதில் ஏற்பட்ட குறுகுறுப்பான கூச்சத்துடன் நெளிந்துகொண்டிருந் தான். பத்து வருடங்களுக்கு முன்னர் இதே வீட்டிலேயே

φ          36  ε    நட்டுமை      நௌஸாத்   φ          37  ε

உண்டு, உறங்கி, சாப்பிட்டு, வளர்ந்து, செய்னம்பு மச்சியுடன் விளையாடிக் களித்து . . . பின்னர், சட்டென ஒரு நாள் செய்னம்பு வின், பருவமலர்தலின் பின்னர் இந்த வீட்டை விட்டும் பிரிக்கப் பட்டு, தனது சொந்த வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டான். சொந்தத் தாய்மாமன் மகள். மச்சியாகவிருந்த போதிலும், செய்னம்பு பெரியவளாகி பின்னர் இரண்டு மூன்று தடவை கள் மட்டும்தான் அவளைக் கண்டிருக்கிறான். அதிலும் ஒரே ஒரு தடவைதான் பேசக் கிடைத்தது. வளர்ந்த பிறகு, செய்னம்புதான் என்ன அழகு!

சென்ற காட்டுப்பள்ளிக் கொடியேற்ற விழாவின்போது தான் இறுதியாகக் கண்டு, வெகு காலத்திற்கப்புறம் இரண்டொரு வார்த்தை பேசக் கிடைத்திருந்தது. அச்சமயத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, தனது சொந்த உழைப்பிலிருந்து, அவளுக்குப் பச்சை நிற அத்துராசித் தாவணி ஒன்றும், சிவப்பு அல்லுக்குத்து ஒன்றும் வாங்கிக் கொடியேற்றப் பள்ளியில் வைத்தே, இரகஸியமாகக் கொடுத்திருந்தான். தனது உரிமையான விருப்பத்தையும் அதன் வாயிலாக வெளிப்படுத்தியிருந்தான். ஆனால், பதில் ஏதும் செய்னம்புவிடமிருந்து கிடைக்கவில்லை. அவனது அன்பளிப்பு, நிராகரிக்கப்படவில்லை. எனினும், செய்னம்புவின் வீட்டிலிருக்கும் நிரந்தர விருந்தாளியான முக்குலத்து மூத்தம்மா வாயிலாகச் சிற்சில தகவல்கள் அவ்வப் போது அறிந்துகொண்டிருந்தான். அவற்றிலிருந்து, முறைமச் சானான தன்னை செய்னம்பு ஓரளவு விரும்புவதாகவே தெரிந்தது.

ஆயினும், சமீப காலமாக அந்த விருப்பத்துக்குச் சின்னப் போடியார் என்ற முகம்மதனிபாவின் மூலமாக ஒரு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது. காரணம், தொண்ணூற்றி இரண்டு ஏக்கருக்குச் சொந்தக்காரனான முகம்மதனிபா பெரிய கல் வீட்டுப் பரம்பரையில் உள்ளவன். அவன் செய்னம்புவை விரும்பித் தூதுவிடுவதாக நம்பிக்கையான செய்திகள் உமறுலெவ் வைக்குக் கிடைத்திருந்தன. இது விடயத்தில், அவளது விருப்பம் என்னவென்று தெரியாத நிலையில், தனது பதினெட்டு வருட உரிமை விருப்பத்திற்கு ஏற்பட்ட இந்த இடைஞ்சல் உமறுலெவ் வையை உள்ளூர ஆத்திரமூட்டிக்கொண்டிருந்தது. அது சின்னப் போடியார் முகம்மதனிபாவின் மீது பெரிய ஒரு வஞ்சினமாக மனதுக்குள் கருக்கொண்டிருந்தது. என்னதான் பணக்காரனாக இருந்தாலும், செய்னம்பு அவனை விரும்பமாட்டாள் எனத் தனது மனத்தைச் சாந்தப்படுத்திக்கொண்டிருப்பதைவிட வேறு ஒருவழியும் அவனுக்கு இருக்கவில்லை. செய்னம்புவின் விருப்பம் தன் மீதா என்பதில் திட்டமாக ஒரு முடிவும் தெரியவுமில்லை.

செய்னம்பு அதைத் தெரிவிக்கவுமில்லை. பயந்தவள்; தந்தை மீராவட்டானையில் தங்கியிருப்பவள்; அவரது முடிவுக்குக் கட்டுப்பட்டே பழக்கப்பட்டவள்; இனியும் கட்டுப்படப் போகின்றவள்.

ஒரு கணத்தில் எழுந்தடங்கிய இவ்வளவு யோசனை களுடனும், உமறுலெவ்வை எப்படித் தனது தாய்மாமனுக் கெதிரான குற்றப்பத்திரிகையை அதுவும், அவரது வீட்டுப் படலையருகிலேயே படிக்கமுடியுமெனத் தயங்கியவாறே நின்று கொண்டிருந்தான்.

கிடுகு ஓட்டைகளுக்குள்ளிருந்து, இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த செய்னம்பு வெகுநாளைக்கப்புறம் தனது முறை மச்சானைக் கண்ட வியப்பு கலந்த பேரானந்தத்தில் இலயித்திருக்க, யம்னா இரகஸியமாக செய்னம்புவின் கால் களைச் சுரண்டி விட்டுவிட்டு,

மச்சான் நிக்காரு பாத்தியா புள்ள?’ என்று கிசுகிசுப் பாகச் சொல்ல, சட்டெனச் சிவந்து வெட்கப்பட்ட செய்னம்பு, கொஞ்சம் இடம்மாறி உமறுலெவ்வையை முழுமையாகப் பார்க்கும்படியாக ஒரு பெரிய ஓட்டை வழியாக வெளியே நன்றாக நோக்கினாள் . . . அவளது முக்காட்டின் மேற்பகுதி காற்றில் சற்று உயர்ந்து வேலிக்கு மேலாக ஆடித் தன்னைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருப்பதை அறியாத அவளது சுறுமாக் கருவிழிகள், உமறுலெவ்வை மச்சானின் மீது மட்டுமே மையமாக மொய்த்திருந்தன.

φ          38  ε    நட்டுமை      நௌஸாத்   φ          39  ε

மீராவட்டானையும் மம்மலியும் படலைக்கு வெளியே வந்ததும், வந்தவர்கள் பரபரப்பாகினர்.

ஆரு அதியாரியா?’ என்ற மீராவட்டானை சட்டெனத் தனது தங்கை மகன் உமறுலெவ்வையைக் கண்டார். சற்றே துணுக்குற்றார். ஆயினும் காட்டிக்கொள்ளாமல்,

என்ன உமறுலேவ . . . கடும் ஆக்களோட வந்திருக்காய்? கையில் என்ன காயிதம்? உள்ளுக்க வாவன் . . .’ என்றார் திராணியற்ற குரலில்.

உமறுலெவ்வை பதில் பேசவில்லை.

ஏனெனில் அவனது தற்செயல் பார்வையில், கிடுகு வேலிக்கு மேலால் தெரிந்த முக்காட்டுத் தாவணியும், கிடுகு ஓட்டைக்குள் ளிருந்து தன்னை ஆர்வமும், குறுகுறுப்புடனும் நோக்கிக் கொண்டிருக்கும் செய்னம்பு மச்சியின் சுறுமா வட்ட விழிகளும் பாதி தெரிந்ததைக் கண்ட உமறுலெவ்வை அவற்றின்பால் வேகமாக ஈர்க்கப்பட்டுப் பேச்சிழந்து நிற்க, இதை ஊகித் தறிந்துகொண்ட மம்மலி தனது எஜமான விசுவாசம் காரண மாகக் கோபமுற்று, திடீர்ப் பகையுணர்வு கொப்பளிக்க,

வந்த வெசயத்தச் செல்லாம வாய்க்க என்ன கொழுக் கட்டயா? என்ன மைரு வெசயம் செல்ற . . . தண்ணி வெசயந் தான். . . கள்ளத் தண்ணி வெட்ட ஏலா எண்டு வந்திரிக்காக. . .’ என்று சட்டெனத் தீவிரப்பட்டு தனது சாரனைச் சிறுவாலுக்கு மேலாகத் தார்ப்பாய்ச்சிக் கட்டினான். மீராவட்டானை கோபத்துடன் மம்மலியைப் பார்த்து,

சாரனை அவுட்டுரா பேயா. செரி நீங்க வந்த வெசயம்?’ என்றார் மையமாக.

ஆனால், உமறுலெவ்வை செய்னம்புவின் ஈர்ப்பு விழி களிலிருந்து மீளாததால், அவன் தயக்கத்தைப் புறந்தள்ளி உடன், மழுவன் கண்ட அதிகாரி கோபமாக,

நாங்க வட்டானைய சந்திக்கத்தான் வந்த . . . சின்னப் போடிர ‘வள்ளாவ’ச் சந்திக்க இல்ல’ என்றான்.

ஆர்ரா வள்ளா?’ என மறுபடி மம்மலி ஆவேசப்பட, எதிரே நின்ற ராக்கிளி அலியும் தன் சாரனை மடித்துக் கட்டியபடி,

டே. . . மம்மலி. . . நக்குத்தின்னி. . . நீ என்னடா குறுக்கால?’ என்று தயாரானான். செய்னம்புவுக்குள் பயம் உற்பவித்துப் பாய்ந்தது. யம்னா அச்சப்பட்டாள். நிலைமை தொடக்கத் திலேயே எல்லை மீறுவதைக் கண்டு சுதாரித்த உமறுலெவ்வை,

இஞ்ச மம்மலி, வாயப் பொத்து. வாய் முந்தாத . . . டே, ராக்கிளி நீயும் வாய மூடு. முதல்ல அதிகாரி செல்ல வந்தத்தச் செல்லட்டும், பொறகு பாப்பம் . . .’ என்றான். ஆனால்,

என்ன மைரப் பாக்கிற . . . என்னத்தக் கேக்கிற . . . கள்ளத் தண்ணி வெசயமாத்தான். . . தண்ணிப் பிச்சக் கேட்டுத்தான் வந்திருக்காக. சின்னப் போடிய கண்டு சுரிக்க பொதைஞ்சி ஓடின ஆக்கள் இல்லா?’ மம்மலி படபடத்தான். கணவன் மம்மலியின் கோபப் பேச்சு உள்ளிருந்த யம்னாவுக்குப் பயமாக விருந்தது. மம்மலி முன்பின் யோசிக்காமல் கை நீட்டிவிடக் கூடியவன். ஆனால், மீராவட்டானை நிதானமாக,

டேய் மம்மலி, சும்மாரி. . . தம்பி அதியாரி, தண்ணி உர்ற வெசயத்தப் பார்வ உட பெரிய நிர்ப்பாச்சல் தொர வெர இரிக்காரு. அதுக்கிடையால . . .’ என்றார்.

கதய நிப்பாட்டு வட்டான . . .’ சட்டென இடைவெட்டிய அதிகாரி, சட்டென உமறுலெவ்வையின் கையிலிருந்த பத்திரத் தைப் பிடுங்கி, மீராவட்டானையின் முகத்தினெதிரே விரலை நீட்டி,

செல்லன்டா ஒமறுலேவ, இஞ்ச பெரியவெளிக்கும், மழுவன் கண்டத்துக்கும், ரெண்டுக்கும் வட்ட விதானையா நீ இருக்கிறத் தாலதான் தண்ணி வெசயம் பெரிய கய்ட்டமாயிரிக்கி. இனி

நீ         எங்கட மழுவன் கண்டத்துக்கு வட்டானையா இரிக்கக் கூடா . . . இண்டையிலரிந்து நீ எங்களுக்கு வட்டான இல்ல. வேற ஆள் நாங்க வெச்சிட்டம். அதான் இந்தக் காய்தம். புடி’ என்றான்.

அவனது ஏக வசனத்தில் ஆத்திரமுற்ற மீராவட்டானை ஓரடி முன் வந்து சத்தமாக,

இஞ்ச பேயனுகள்ள கதைக்கி நானில்ல ஆளு. . . இதெல் லாம் முடிவு செய்ற குழுக் கூட்டத்துல. . . ரோட்டுல நிக்கிற அறாமியள் இல்ல’ என்றதும்,

திடீரென ராக்கிளிஅலி, ‘டே. . . ஆர்ரா அறாமியள்?’ என்று முன்னால் பாய்ந்து மீராவட்டானையின் நெஞ்சில், ராக்கிளி பூட்டிய வலது கையினால், யாரும் எதிர்பாராத விதமாக ஓங்கி இடித்துவிட்டான். திடீர் அடியால் அதிர்ச்சியுற்ற மீராவட்டானை பின்னால் தடுமாறிச் சாய்ந்ததும், சட்டென மம்மலி திரும்பி வீட்டினுள் ஓடி, மூலைக்குள் சாத்தியிருந்த இரும்புப் பூண் போட்ட உலக்கையைக் கைப்பற்றி எடுத்து ஓங்கியபடி ஆவேச வெறியுடன் ஓடிவர, செய்னம்புவும், யம்னாவும், முக்குலத்துக் கிழவியும் அதிர்ச்சியும், அலறலுமாகப்

φ          40  ε    நட்டுமை      நௌஸாத்   φ          41  ε

படலைக்கு ஓடிவர, மீராவட்டானை வேலியில் சாய்ந்து மூச்சிரைத்தார்.

டேய், நில்ரா. . . தப்புணி மக்களே!’

மம்மலி உலக்கையை ஓங்கி ஓடி வர, யம்னா மிகத் துணிவுடன் இடையிற் புகுந்தாள். மம்மலியைக் கட்டிப் பிடித்தாள். ‘உர்றி . . . உர்றி . . .’ மம்மலி திமிற, முக்குலத்துக் கிழவி ஏக கலவரத்துடன், திடீர் ஒப்பாரியிட்டு ஊரைக் கூட்டிக் கத்த, செய்னம்பு, ‘வாப்போவ் . . . வாப்போவ் . . .’ என அலறிப் பறந்தோடி வந்து மீராவட்டனையை முதுகுப் பக்கமாகத் தாங்கிய அதே விநாடியில், உமறுலெவ்வையை முதற்தடவையாக வெறுப்புடன் பார்த்தாள். அந்தப் பார்வை யைத் தாங்கிக்கொள்ள முடியாத, இந்தத் திடீர்க் கலவரத்தைச் சற்றும் எதிர்பார்க்காத உமறுலெவ்வை, திடீரென ராக்கிளிஅலி யை நோக்கிப் பாய்ந்து, செய்னம்புவின் எதிரிலேயே வைத்து, பளீரென அவனை அறைந்து தள்ள. . .

கூட்டத்துள் குழப்பமாகித் தள்ளுப்பட்டுக் குழம்பி, ஒழுங்கை யின் இருபக்கமாகப் பிரிந்து யாரோவெல்லாம் ஓட, யம்னாவின் பிடியிலிருந்து உதறி விடுபட்ட மம்மலி, ஒழுங்கையால் ஓடிய ராக்கிளிஅலியை நோக்கி, ஆவேசமாக வீசியெறிந்த இரும்பு உலக்கை, எதிர்பராத விதமாகக் குறி தவறி, உமறுலெவ்வையின் தோள் மீது பலமாகக் குத்தி விழுந்தது. அதிர்ச்சியுடன், குப்புற விழுந்த உமறுலெவ்வையைக் கண்ட ராக்கிளிஅலி சட்டெனக் குனிந்து, அவனைத் தூக்கி சைக்கிளில் வைத்து வேகமாகப் பாய்ந்தேறி மிதித்துத் திருப்பத்தில் மறைய, மற்றவர்களும் ஓடினர். திடீர்க் கலவரத்திலும், முக்குலத்துக் கிழவியியின் வீரிட்டலறலிலும், பள்ளித்திடல், பிரதான வீதியில் நின்று கொண்டிருந்த சனங்கள் ஓடி வந்தனர். விஷயமறிந்தனர். சில வாலிபர்கள் ஓடியவர்களைத் துரத்திக் கொண்டோடினர். . .

கலவரச் சூழல் பெரிதாகி, துரத்தி ஓடியவர்களைப் பெண்கள் அலறியடித்துக்கொண்டு, தொடர்ந்தோடினர்.

பேச்சுமூச்சற்று செய்னம்புவின் கைகளில் சாய்ந்திருந்த மீராவட்டானை முனகினார். மம்மலி சட்டென வீதிக்கு ஓடிவரவும், ஒழுங்கையின் முனையில் வெகுவேகமாக சின்னப் போடியார் முகம்மதனிபாவின் விற்கரத்தை பாய்ந்து வரவும் சரியாகவிருந்தது.

சின்னப் போடியார். . . சின்னப் போடியார். . .’

சனங்கள் உத்வேகம் கொண்டு கத்த, விரைந்து இறங்கிய சின்னப் போடியார் முகம்மதனிபா, மம்மலியை நோக்கி,

என்னடா மம்மலி? என்று சீறினான். ஆனால், அவனது விஷமக் கண்களின் பார்வை செய்னம்புவின் மீதிருந்தது.

அவன் ஒமறுலேவ மாமாக்கு, தாய்மாமனெண்டும் பாக்காம அடிச்சிப்போட்டு ஓர்றான். . . எல்லாம் செல்றன். . .

மொதல்ல வட்டானைய கொண்டுபோங்க சின்னப் போடியார்.’ என்றான்.

உடன், சின்னப் போடியாரின் விற்கரத்தையில் மீராவட் டானை ஏற்றப்பட்டு, கூடவே கரத்தைக்காரனும் ஏறி முறிவு வைத்தியரிடம் பறந்த அதே கணத்தில், சின்னப் போடியார் தன் வளைவாளை உருவியடி, ஏற்கனவே ஓடியவர்கள் சென்ற வழியால் ஓட, மம்மலியும், ‘சின்னப் போடியார். . . சின்னப் போடியார். . .’ எனக் கத்திக் கூப்பிட்டபடியே தொடர்ந்து ஓடினான்.

எண்டல்லோவ். . . எண்டல்லோவ். . .’ என்றலறிய செய்னம்பு யம்னாவின் தோள்களில் மூர்ச்சித்துச் சாய்ந்தாள்.

φ          42  ε    நட்டுமை      நௌஸாத்   φ          43  ε

போகம் 4

ஊசிப்பயிர்

 

பள்ளித்திடலின் வடக்குத் தெருவையும், பெரிய வெளி வயல் நிலத்தில் இடதுகரை நிலங்களையும் பிரித் தோடும் பெரிய பட்டிப்பாளைக் கால்வாயின் கரையோரக் குடியிருப்புகளை ஒட்டியபடி பெரிய போடிச் சந்ததி களுக்குரித்தான நாலு ஏக்கர் பரப்பளவில் விரிந்திருந்த தென்னந்தோப்பின் ஒரு மூலையில்தான் மம்மலி, யம்னா தம்பதியினரின் குடிசை அமைந்திருந்தது.

ஆனைக் கிடுகுகளினால் வளைத்து அடைத்து, இலுக்குப் புல் கூரைக்கு வேய்ந்து, தளப்பத்து மட்டை களால் பலப்படுத்தி, பளபள களிமண்ணினால் செப்ப மிட்ட தளத்துடன், இரண்டே அறைகள்கொண்ட தனது ‘மாளிகை’க்குள்ளிருந்து அதி விடியலில் வெளியே வந்தாள் யம்னா. இளவெயிற் கிரணங்கள் செந்நிறமாய் தென்னந் தோப்புகளூடே ஊடுருவித் தகதகத்தன. பத்தொன்பது வயதின் இளமை மதர்த்த உடல், வேலைப் பயிற்சிகளால் உறுதியான கட்டுடன் ஆரோக்கியம் வெளிக்காட்டியது. ஆயினும், வயிறு சற்றே முன் தள்ள ஆரம்பித்திருந்தது. யம்னா இரண்டு மாதக் கர்ப்பிணி. மம்மலியின் வாரிசு வளர்கிறது.

சற்றுத் தள்ளியிருந்த பூவலை நோக்கி நடந்தாள். தாழ்க்கொடிக் கயிற்றில், உறுதியுடன் கட்டப்பட்டிருந்த மரப்பட்டையைப் பூவலினுள் விட்டாள். தண்ணீர் இழுத்து நிமிர்ந்த போது காலைப் பறவைகள் பொறாமைப்பட்டன. தென்னந்தோப்பு முழுவதும் விதவிதமான பறவையினங் களின் விநாடிக்கொரு புதுப்புது சங்கீத உற்பத்திகள்.

 சுற்றிச் சுழித்தோடும் பட்டிப்பளைக் கால்வாயின் தளும். . .

தளும். . . பும். . . தாள லயம். கால்வாயில், ஓடிவந்து வேடிக்கை £ட்டும் விரால், வாளை, கொக்கிசான், பனையான், குறட்டை, சுங்கான், கயல், செத்தல், பொட்டியான், கிழக்கன், செங்கண்ணன், மணலை சள்ளல், மாங்காய்ச் சள்ளல், கொய் முதலான பல்வகை மீன்கள் நிலமெங்கும் அடர்ந்து, நெடிதுயர்ந்திருந்த நானூற்றைம்பது தென்னை மரங்களிலும் பட்சி ஜீவிகள். அடர் மரங்களில், இடையிடையே கருவிளா, தேக்கு, மஞ்சோனா, பாலை விருட்சங்கள். வாழை, தோடை, எலுமிச்சை கனிதரு தருக்கள். பூவலைச் சுற்றிலும் அவரைக் கொடி. நீர் தெறிக்குமிடமெல்லாம் அமுக்குறா. கற்றாளைச் செடிகள். ஓரத்தில் கும்பமான கும்மென்ற மல்லிகைக் கொத்து மலர் மரம். சிறுசிறு பற்றைகளாய் துளசி, நானாற்று, செவ்வாளை. தரையில் படர்ந்து முன்னேறும் கற்பூரவள்ளி, நாகதாளி, படர்தக்காளி. இனம்புரியா அடர்புதருக்குள் இரகஸியமாகச் சில கஞ்சாச் செடிகள். முற்றத்தில் முடக்கொத் தான் படர்ந்து ஆக்கிரமித்திருக்க, கீழ்க்காய் நெல்லி, தேங்காய் பூவுரு, மூத்திரச் செடி. தளைக் கஞ்சான், வட்டப் பாகை, வட்டுவதுளைகளுடன் ஓரமெல்லாம் நீண்டு நின்ற கமுகு மரங்களில் விரைந்தேறிச் செல்லும் மலை மற்றும் நீர் வெற்றிலைக் கொடிகள், துளிர்களில் இள வெயிலின் தங்கப் பளபளப்புகள்.

 

சின்னப் போடியார் முகம்மதனிபாவுக்குச் சொந்தமான தென்னந்தோப்பு. பெரிய போடியாரின் மனப்பூர்வமான, ‘மாற்றவல்லதழிக்க முடியாத’ அன்பளிப்பு. மம்மலிதான் இதன் ‘காலைக்காரன்’ எனப்படும் காவல்காரன். மம்மலியை நினைக்க கவலையாகவிருந்தது. மம்மலி இரவு வீடு திரும்ப வில்லை. சின்னப் போடியாருடன் பெரிய நீலவாணைக்கு முறிவு வைத்தியரிடம் சென்றிருந்தான். மீராவட்டானையைப் பார்க்கப் போயிருந்தார்கள். இனி வந்துவிடக்கூடும். சின்னப் போடியாரை நினைத்ததும், யம்னாவுக்கு வயிறு பகீரென்றது. சின்னப் போடியாரின் சமீபகால ‘அத்துமீறல்கள்’ பயங்கர மானவையாக இருந்தன. உடனே திடுக்கிட்டு மார்புகளை மறைத்தாள். ஏதோ அச்சமாக உணர்ந்தாள். மம்மலியிடம் சாடைமாடையாகச் சொல்லியிருக்கிறாள். அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அத்துணை எஜமான விசுவாசம் மம்மலியின் பழைய சாறனை உயர்த்திக் கட்டினாள். மளமள வெனப் பட்டையால், பூவலுக்குள் விட்டுவிட்டு அள்ளி அள்ளி நிமிர்ந்தபோது அவளே ஒரு அழகான ‘பத்திக்கை’யாகத் தெரிந்தாள்.

வெள்ளையன், புள்ளியன், வெள்ளம்மா, உசிக்குட்டியன் என்ற அவளது நான்கு முயற்குட்டிகளும் அதிகாலைத் துள்ளலுடன், யம்னாவைத் தேடிக் குதித்து வந்து சேர்ந்தன. அரைவிழி மூடி, அரை மீற்றர் தூரத்தில் காவலில் கண்ணாயிருந்தது மம்மலியின் கறுப்பன். விடியல் தந்த உற்சாகத்தில், புற்றரைப் பரப்பெங்கும் பாய்ச்சல் காட்டித் துள்ளித் துவம்சம் செய்தது நாம்பன். நீளமாகக் கத்தி, தாயையும், யம்னாவையும் அழைத்து மகிழ்ந்தது. பால்கறக்க வேண்டும். தேங்காய் சேகரிக்க வேண்டும்; உரிக்க வேண்டும்; உரி மட்டை குவிக்க வேண்டும்; ஓலை இளகப்பட போடவேண்டும்; கிடுகு பின்னி அடுக்க வேண்டும். ஆனால், இன்றைக்கு ஒரு வேலையும் செய்வதற்கில்லை. பரிகாரி வீட்டுக்குப் போகவேண்டும். செய்னம்பு வீட்டுக்குச் செல்லவேண்டும். பாவம் மீராவட்டானை மாமாவுக்கு எப்படியோ? செய்னம்பு தனித்துத் தவித்திருப்பாள்.

யம்னா விரைவில் குளித்து முடித்தாள். குடிசைக்குத் திரும்பினாள். பெரிய போடி வேண்டித் தந்த அன்பளிப்பான மருதப்படிச் சோமனை உதறி உடுத்தினாள். மம்மலியின் துண்டுக் கண்ணாடியில் முகம் பார்த்து மாட்டுக் கொம்புச் சீப்பால் முடி இழுத்து முடிந்தபோது, வெளியே தூரத்தில் விற்கரத்தை வரும் சத்தம் கேட்டது. விரைந்து வெளியே வந்தாள். சின்னப் போடியார்தான். மம்மலி வாற்பக்கமிருந்து குதித்தான். இருவரும் மிகச் சத்தமாக ஏதோ பேசியபடி பெரிய மரவடிக்கு வந்தனர். மம்மலி தயக்கமாகத் தன் மனைவியிடம் சொன்னான்.

 லெக்கோவ் . . . யம்முனா . . . எழும்பிட்டியா நீயி? செரி . . .

போடியாருக்கு எளநி வெட்டிக் கொண்டாகா.’

சின்னப் போடியார் முகம்மதனிபா யம்னாவைப் பார்த்து,

எளநி வேணா . . . சூடாத் தேத்தண்ணி உத்துவியா?’ என்று தனது விஷமக் கண்களால் சிரித்தான்.

யம்னா சிரிக்காமல், கணவனைப் பார்த்து,

இஞ்சேய் . . . அவரு வட்டான மாமாக்கு இப்ப எப்பிடி இரிக்கி? காயம் லேசா?’ என்று கேட்டாள்.

நெஞ்செலும்பு வெடிச்சிருக்காம். ‘பத்துப்’ போட்டிரிக்கி. அங்க ரெண்டு நாள் இரிக்கணுமாம். சும்மாவா? மாட்டுக் கொம்புல செஞ்ச ராக்கிளியால அடிச்சல்லா? அப்பசெரி . . .

நீ         பரிசாரிட்டப் போறண்டு சொன்னியே. . . போகலியாகா புள்ளே?’

சொந்த தாய் மாமன் எண்டும் பாக்காம ஒமறுலெவ்வை அடிச்சிப்போட்டான்’ என்றான் சின்னப் போடியார் குதர்க்க மாக. ஆனால்,

ஒமறுலெவ்வை அடிக்கல்ல. . . அடிச்ச ராக்கிளி அலி.’ சட்டெனச் சொன்னாள் யம்னா. ஆனால், சின்னப் போடியார் தன் விஷமக் கண்களுடன் யம்னாவைப் பார்த்து,

ஒமறுலெவ்வைதான் வாட்டானைக்கி அடிச்ச. . . அப்பிடித் தான் பொலிசானைட்டச் செல்லியிரிக்கி. எல்லாரும் அப்பிடித் தான் செல்லணும்.’

ஓம் . . . சின்னப் போடியார். அதான் செரி. புள்ளேய் யம்னா நீயும் அப்பிடித்தான் செல்லணும்.’

அறிஞ்சிட்டும் பொய் சொன்னா அந்த லோகத்துல விரிபொடையன் கொத்தும்.’

வெடுக்கென்று சொன்ன யம்னா சட்டென்று திண்ணைக் கட்டுக்குள் வந்துவிட்டாள். அடுப்பை ஆயத்தப்படுத்தினாள். ஆனால், தேயிலைத் தூளுமில்லை, அடுப்புக்குள் நெருப்பு மில்லை. கொஞ்சம் யோசித்தாள். தேநீரைக் கைவிட்டு இளநீருக்கு ஆயத்தப்படுத்தினாள். வெளியே அவர்களிருவரும் பேசிக்கொண்டிருந்தது கேட்டது.

மம்மலி . . . பொலிசானைட்ட அவன் ஒமறுலெவ்வதான் வட்டானைக்கி அடிச்சண்டு மொறப்பாடு குடுத்தாச்சி. நீ மாறாம அப்பிடியே செல்லணும். பொலிசானை வெசாரிச்சி அவன் ஒமறுலெவ்வையப் புடிச்சி புளியந்தீவுக்கு ஏத்தினாரெண் டால் செரிதானே . . . மழுவண்ட கண்ட தண்ணிப் பெரச்சினயும் முடிஞ்சிரும். மத்தது, செய்னம்பும் அவன வெறுத்திடுவாள் தானே.’

ஓம் . . . போடியார். சின்னப் போடியார்ர மூள கடும் மூள.’ மம்மலி வியந்தான். யம்னா திடுக்கிட்டாள்.

அதுமட்டுமில்ல மம்மலி . . . நீ உலக்கையால அவனுக்கு எறிஞ்சல்லா? அதச் செல்லாம அவன் வேலிக்கம்புல உழுந்துட் டான் எண்டும் செல்லிரிக்கி. நீயும் அப்பிடியே சென்னா, நீயும் தப்பிரலாம்.’

கிளியும் கிளியும் கிண்ணரம்.’ பூரண சம்மதத்துடன் ஆமோதித்தான் மம்மலி.

சோடிக்கப்பட்ட கதைகளைக் கேட்டுத் துணுக்குற்றுப் போன மனத்துடன் யம்னா, வெள்ளிக் கோப்பைகளில் இள நீருடன் இளநிப் பருக்கைகளும் போட்டு, எலும்மிச்சம் புளி விட்டு, சர்க்கரைக் கட்டியுடன் எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். சின்னப் போடியார் முகம்மதனிபா குறுகுறு விழிகளுடன் யம்னாவைப் பார்த்தான். யம்னா அதைக் கவனியாது, மம்மலியிடம் திரும்பி வெறுப்புடன்,

இஞ்சேய். . . நான் பரிசாரியார்ட்டப் போகணும். பாலைக் கறந்துட்டு மட்டையெல்லாம் உரிச்சி வெய்ங்க, சும்மா கனா குடிச்சிட்டுப் படுக்காம. . . செரியா? நான் போறன்’ என்றாள்.

பரிசாரிட்டயா? ஏன்?’ என்றான் சின்னப் போடி ஆச்சரியத்துடன்

யம்னா புள்ளத்தாச்சி. . .’ சொல்லிவிட்டு வெட்கமாய்ச் சிரித்தான் மம்மலி. சின்னப் போடியார் ஆயிரம் அர்த்தங்களுடன் யம்னாவைப் பார்த்துத் திகிலடைந்தான். சட்டெனத் திகிலை மறைத்துவிட்டு, மம்மலியைப் பார்த்து,

 ஏ மம்மலி! என்ட வில்கரத்தையில் கூட்டிட்டுப் போவன்டா . . . பாவம் புள்ளத்தாச்சி எப்பிடி நடப்பாள்?’

தேவல்ல சின்னப் போடியார் . . .’ சட்டென மறுத்த யம்னா, ‘இஞ்சேய் .. . நான் போகட்டா? இவடத்த இருக்காதங்க. ..

கொஞ்ச நாளா இவடத்த கரும்பொடையன் ஒண்டு சுத்தித் திரியிது’ என்று வெடுக்கெனச் சொல்லிவிட்டு, உள்ளே நடந்தாள்.

ஆரொடகா போறாய்?’ மம்மலி கூப்பாடினான்.

முக்குலத்து மூத்தம்மாவோட.’

லொக்கோவ் . . . யம்முனா . . . மின்ன செய்னம்புட்டப் போயி பாத்துட்டு பொறகு பரிசாரிட்டப் போ. திரும்பி வெரக்க அப்பிடியே பெரிய போடியார் ஊட்ட வா. செரியா?’

ஏன் . . . இஞ்சயும் ஆயிரம் வேல இரிக்கி . . . செய்னம்புவும் தனிய இரிப்பாள்.’

இல்லகா . . . பின்னரம் போடி ஊட்டுல மழுவன் கண்ட ஆக்கள் வாறாக. கூட்டம் போட்டிரிக்கி. பறயன் பொரசித்தம் அடிச்சிருக்கி.’

செய்னம்பு தனிய இரிந்தா யம்னா வெரத்தேவல்ல . . . செய்னம்போட இரிக்கட்டும்’ என்றான் சின்னப் போடியார் அவசரமாக.

யம்னா பதிலளிக்காமல், சட்டென ஒற்றையடிப் பாதை வழியே இறங்கி விரைந்து நடந்தாள். பட்டிப்பளை கிளைக் கால்வாயைக் கடக்கும்போது சற்றே திரும்பிப் பார்த்தாள். சின்னப் போடியார் தனது இடுப்புக்குள் கைவிட்டு, மாட்டுக் கொம்பிட்ட விற்சுருள் கத்தி ஒன்றை எடுத்து, ஏதோ சொல்லிய படி மம்மலியிடம் நீட்ட, அவன் அதனை ஆர்வமாக வாங்கி சின்னப் போடிக்கு எதிரே விசுக்விசுக்கி கற்பனை எதிரியிடம் போரிட்டுக் காண்பிக்க, சின்னப் போடியார் சிரித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. யம்னா கவலையுடன் கால்வாயைக் கடந்து நடந்தாள்.

யம்னா முதலில் செய்னம்புவின் வீட்டுக்குச் சென்று மம்மலி சொன்ன மீராவட்டானை பற்றிய விசயங்களைச் சொல்லிவிட்டு, அங்கேயே இருந்த முக்குலத்துக் கிழவியுடன் பரிகாரியின் வீட்டுக்குச் சென்று அவர் அளித்த காயகல்பங்கள், எண்ணெயுடன் திரும்பி மறுபடி செய்னம்பு வீட்டுக்கு வந்து, அவளுக்குத் துணையாக இருந்து சாப்பிட்டு விட்டு மம்மலி சொன்னபடி பின்னேரம் நிழல் சாய்ந்ததும் பெரிய போடியாரின் கல்வீட்டுக்குச் செல்லத் தனியாகப் புறப்பட்டாள்.

மயிர்க்கொட்டிப் புழுக்கள் பட்டை பட்டையாக அப்பிக் கொண்டும், நீள நீள நூலில் தொங்கிக்கொண்டுமிருந்த முள் முருங்கை மரங்கள் அடர்ந்திருந்த இருப்புக்கடை ஒழுங்கையில் திரும்பிய யம்னா வேகமாக நடந்து பிரதான பள்ளிவாசல் சாலையில் ஏறித் திரும்ப, உடன் ‘பெரிய கல்வீடு.’ விசாலமான முற்றத்தில் பல ஆண்கள் கூடி நிற்க, யம்னா தயங்கி, பின்கட்டு வழியாகச் சட்டென உள்நுழைந்து கோடி வாசலால் ஆல வீட்டறைப் பக்கம் வந்தாள். ஆலவறைக்குள் நுழைந்தாள். அறைக்குள் பெண்கள் ஒருவரையும் காணவில்லை.

சற்றே இருட்டாக இருந்தது. ஆலஅறை முழுவதும் பெட்டி கள். அடுக்குத் தட்டுகள். பிரமாண்டமான மரப்பெட்டகம்.

φ          48  ε    நட்டுமை      நௌஸாத்   φ          49  ε

அதற்கும் மேலே அசவுகள் கட்டி அடுக்கப்பட்டிருந்த தோட்டுப் பாய்கள். . . சபைப் பாய்கள் . . . மெத்தைப் பாய்கள். அல்லாவே . . .

எம்பட்டுப் பாய்கள்! கீழே தரை முழுவதும் பலதரப்பட்ட விளக்குகள்... குத்துவிளக்குகள்... மயில் விளக்கு... தூக்குவிளக்கு, கந்துவிளக்கு, ரெட்டைத்தட்டு விளக்குகள் . . . பளபளக்கத் துலக்கப்பட்டு இருளிலும் மின்னின. மறுபக்கத்தே அலங் கரிக்கப்பட்ட சேவரக்கால் இரண்டு தயார் நிலையிலிருந்தன. ஒரு பெரிய வட்டிலின் மீது இரட்டை ஆரத்தி விளக்கு ஒன்று நாலடி உயரத்திற்கு வெகு அலங்காரப் பூக்களுடன் கண்ணைப் பறித்தது. வலப் பக்கமாக பலதரப்பட்ட படிக்கங்கள் படித்தரங்களாகப் பிரித்தடுக்கப்பட்டிருந்தன.

தன்னை மறந்து விடுப்புப் பார்த்தபடி நின்று கொண்டிருந்த யம்னாவின் காதுகளில் தனக்குப் பின்னால் யாரோ வந்து நின்றுகொண்டிருப்பதாய் உணர்ந்து, திடுக்கிட்டுத் திரும்ப, யம்னாவின் தோளில் திடீரெனக் கைவைத்தபடி சிரித்தான் சின்னப் போடியார் முகம்மதனிபா.

அல்லாவே . . எ . . . என்ன .. . து?’ உதறி எட்டித் துள்ளினாள் யம்னா. சின்னப் போடியார் அவசரமாக,

இஞ்ச ஒத்தருமில்ல . . . ஒத்தருமில்ல . . . பயப்புடாத . . .’ என்று கிசுகிசுப்பாகச் சொல்லியபடி துரிதமாக மேலும் யம்னா வை வளைத்துப் பிடிக்க, யம்னா சட்டென சின்னப் போடி யாரின் கைகளில் வெடுக்கெனக் கடித்துவிட்டு, திடீரென உதறி விடுபட்டுப் பாய்ந்தாள். ஆரத்திப் படிக்கங்கள் அவளது கால்பட்டு கலகலவெலனச் சத்தமிட்டுச் சரிந்தன. பெரும் ஒலியெழுப்பியபடி உருண்டோடின. உடனே சின்னப் போடியார் அவசரமாக வெளியேறிவிட்டான்.

என்னடி சத்தம் அது?’ யாரோ உள்ளே வந்தனர். சின்னப் போடியாரின் சாச்சி மூமினும்மா.

த . . . ஆரது?’

நாந்தான் சாச்சி . . . யம்முனா.’

யம்முனாவா . . . என்னடி சத்தம்?’

ஓ . . . ஒண்டுமில்ல. படிக்கத்துல கால் எடறிட்டு சாச்சி.’

செரி . . . அடுக்கி வெச்சிட்டு கெதியா வா . . . வாசல்ல கூட்டம் நடக்குது.’

போய்விட்டாள். யம்னாவுக்குப் படபடப்பு அடங்கவில்லை. சின்னப் போடியாரின் அத்துமீறலை எண்ணி அழுகையும்ஆத்திரமுமாக வந்தது. தோளில் சின்னப் போடி யாரின் பவுடர் மணம் கமகமத்தது. அவமானமாகவிருந்தது. மம்மலி மீது ஆத்திரமாக வந்தது. சரிந்த ஆரத்தி அடுக்குகளை மறுபடி அடுக்கிவைத்தாள். கைகள் நடுங்கின. அடுக்கி முடித்து, அழுத்தி முகம் துடைத்து, பவுடர் மணம் போக்கித் துடைத்து, சாப்பு அறை வழியாக முன்கூடத்துக்கு வந்தபோது, பெரிய போடி வீட்டுப் பெண்கள் எல்லோரும் கூடி மறைந்து நின்று கொண்டு, முற்றத்தில் நடப்பவற்றை ஆவலுடன் கவனித்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். யம்னாவும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு, வாசலை நோக்கினாள்.

வாசலிலிருந்த பெரிய வைக்கோல் அட்டுவத்தின் பக்கத்தே, கயிற்றுக் கட்டில் போடப்பட்டு அதில் பெரிய போடியார் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். சுற்றிலும் வயற்காரர்கள் . . .

முல்லைக்காரன் . . . எடுபிடிகள். . . வண்டிக்காரன். வலது பக்கத்தில் மம்மலி, மம்மலியருகே சின்னப் போடியார் மிகவும் சாதுவாக உட்கார்ந்திருந்தான்.

எதிர்ப்பக்கத்தில், மழுவன் கண்டத்து உதவி வட்டானை, அதிகாரி, கண்டத்து விவசாயிகள் சிலர். குத்தகைப் போடி மார்கள் மற்றும் ராக்கிளிஅலி, உமறுலெவ்வை. அனைவரும் குழப்பமான குரல்களில் பேசிக்கொண்டிருந்தனர். பேச்சுக்களில் பரஸ்பரம் குற்றச் சாட்டுக்கள் . . . கேலித்தனமான நையாண்டிகள் . . . ஆத்திரப் பொருமல்கள். எல்லாவற்றையும் பெரிய போடியார் பொறுமையாகக் கேட்டு முடித்தார். பின்னர் மழுவன் கண்ட வட்டவிதானையையும், அதிகாரியையும் கண்களால் அழைத்து ஏதோ ரகசியம் பேசுகிறார். பின்னர் மறுபக்கத்தில், மழுவன் கண்ட அதிகாரியையும் சின்னப் போடியாரையும் அழைத்து அவர்களிடமும் இரகசியம் கிசுகிசுத் தார். மம்மலி கொளுத்தி நீட்டிய ஜேர்மன் சுருட்டை ஒரு இழுப்பு இழுத்தார். குபுகுபுவென மேக மூட்டமாய் புகை விட்டுக் கலைய, பின்னர் கம்பீரமாக எழுந்து நின்றார். முடிவாகச் சொன்னார்:

எல்லோரும் நெல்லாக் கேட்டுக்கங்க . . . தண்ணி வெசயத்துல ரெண்டு சாராரும் இப்பிடி எணங்கியிரிக்காக. ஒண்டு, மீராவட்டானையை மழுவன் கண்டத்து வட்டவிதானை வேலையிலிருந்து நீக்கி புது ஆள் வெய்க்கிற. ரெண்டாவது, வழமபோல பெரியவெளிக்கித்தான் மொதல்ல நீர்ப்பாய்ச்சல் செய்யிற. செரியா?’

செரி போடியார் . . .’ என்று பற்பல குரல்கள் ஆமோதித்தன.

மறுகா . . . மீராவட்டானைக்கி அநியாயமா அடிச்சத்துக்கு பொலிசானைட்ட பெராது குடுக்காம தடுக்கிற வழியில மழுவன்கண்ட அதிகாரியான ராக்கிளிஅலி மீராவட்டான குடும்பத்துக்கு இந்தப் போகத்துல ஒரு புசல் நெல்லும், உப்பு அர்ராத்தலும் அபராதமாகக் குடுத்துட வேண்டியது. செரியா?’

அதான் செரி போடியார் . . .’

பொறகு என்னடாண்டால், ரெண்டு சாராரும் சமாதானப் பட்டு இந்த மொற நடக்கப்போற காட்டுப்பள்ளிக் கொடியேத் தத்துல ஒத்துமையா கந்தூரி குடுக்கிற. கந்தூரிக்கான அரிசி புளி செலவுகள் மழுவன்கண்ட ஆக்கள் பொறுப்பெடுக்கிற.’

செரியான கத . . . கிளியும் கிளியும் கிண்ணரம் . . .’ ஆமோதித்தன பல குரல்கள்.

இஞ்சேய் . . . ஒமறுலேவ நான் சென்னத்தையெல்லாம் எழுதிக்க. ரெண்டு பக்கத்திலயும் கையெழுத்தையும் வாங்கிக்க.’

பெரிய போடியாரின் ஆணையை அடுத்துக் உமறுலெவ்வை எழுதினான். உலக்கை அடியினால், தோளில் ஏற்பட்ட ஊனக் காயத்துக்குக் கட்டுப்போடப்பட்டிருந்தது. எழுதும்போது மம்மலியையும், சின்னப் போடியாரையும் வன்மமாகப் பார்த்ததும், பக்கத்திலிருந்த ராக்கிளிஅலியிடம் ஏதோ சமிக்ஞை செய்ததும் யம்னாவுக்குத் தெரிந்தது. மம்மலியும், உமறுலெவ்வை யை நோக்கி ஒரு ஏளனப் புன்னகை செய்துவிட்டு சின்னப் போடியாரைப் பார்க்க, சின்னப் போடியார் விஷமமாகப் புன்னகைத்தபடி மம்மலியிடம் கண்காட்டிவிட்டு, இருவரும் எழுந்து வெளி வளவுக்குள் புறப்பட்டுச் சென்றதையும் யம்னா கவனித்தாள். பயமாக இருந்தது.

சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தாகி கூட்டம் முடிந்தபோது, மஹரிப் தொழுகைக்கான பாங்கோசை கேட்டது. சளசளவென்று பேசிக்கொண்டு, சபையினர் நிம்மதியாகக் கலைந்தனர்.

யம்னா அவசரமாக மம்மலியைத் தேடிக்கொண்டு வெளி வாசலுக்கு வந்தாள். மம்மலியும் சின்னப் போடியாரும் ஏதோ குசுகுசுத்தபடி வைக்கோல் அட்டுவம் மறைவில் நிற்பதைக் கண்டாள். யம்னா, கருக்கிருட்டில் சந்தேகமெழாதபடி, மெதுவாக அவர்களை மறுபுறமாக நெருங்கிச் சென்று, அட்டுவத் தின் அடியில் குந்தியிருந்து அவர்கள் பேசுவதைக் கேட்டாள். மம்மலி சொல்லிக்கொண்டிருந்தான்.

இல்ல சின்னப் போடியார் . . . இரும்புக்கடை ஒழுங்கை யாலதான் போவான்.’

அப்ப செரி . . . அது எங்க?’

இடுப்புல இரிக்கி.’

கவனம். புடி பட்றாத . . . நீ மஞ்சோனாவடியில நில்லு.’ ‘செரி . . . செரி சின்னப் போடியார் . . .’

போகம் 5

நாற்று

 

யம்னா திடுக்கிட்டாள். சின்னப் போடியார் மறுபடி

£ருக்கோ குறி வைக்கிறான். மம்மலி மூலமாக. ஆத்திரமும் பயமும் வந்தன. மெதுவாகத் தவழ்ந்தபடி மறுபக்க வேலியோரமாக, சத்தமிடாமல் நடந்து, திண்ணைக் கட்டுக்கு வந்துவிட்டாள். சின்னப் போடி யார், மம்மலி தரப்பினருக்கும், உமறுலெவ்வை, ராக்கிளி அலி தரப்பினருக்குமிடையில் உருவாகிவிட்ட விரோதம் எதில்போய் முடியப்போகிறதோ? இப்பகையைத் தடுத்து நிறுத்தும் வல்லமை பெரிய போடியாருக்கு மட்டுமே உண்டு. பெரிய போடியாரிடம் சொல்லிவிடலாமா? போடியாரைத் தேடி முன்கூடத்துக்கு வந்தாள்.

டியெய் . . . யம்னா . . . எங்கடி ஒன்னக் காணல்ல? தேத்தண்ணி குடிச்சியா?’

இல்ல மாமி.’

செரி வா.’

யம்னா தேத்தண்ணி குடிக்க பாயில் அமர்ந்தபோது, திடீரென மம்மலியும் சின்னப் போடியாரும் உள்ளே வந்தனர். சின்னப் போடியார் அப்பாவித்தனத்துடன் உள்ளே போக, மம்மலி யம்னாவைப் பார்த்து,

யம்முனா . . . கன்னரமா வந்த நீயி?’ என்று மகிழ்ந்து கேட்டான்.

இஞ்சேய் வாங்க கெதியா ஊட்ட போவம்.’ வெடுக்கெனச் சொன்னாள் யமுனா.

நீ போ, நான் சொணங்கி வாரன்.’

இஞ்சேய் செல்றத்தக் கேளுங்க.’

யம்னாவின் சொல்லைக் காதில் போட்டுக் கொள்ளாத மம்மலி சின்னப் போடியாரைத் தொடர்ந்து வெளிவாசற் பக்கமாகச் சென்று மறைந்தான். யம்னா செய்வதறியாமல், போடி வீட்டுப் பெண்களிடம் விடைபெற்று தன் வீடு செல்ல வீதியில் இறங்கினாள். ஆனால், சிறிது தயங்கினாள். பெரிய போடியாரிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடலாமா? சின்னப் போடியாரின் அத்துமீறலையும், கத்தி வைத்துக்கொண்டு அலைவதையும், மம்மலியை அநியாயமாய்ப் பயன்படுத்து வதையும் . . . எல்லாவற்றையும் சொல்லிவிடலாம். சற்றே தயக்கமாக பெரிய போடியார் இருக்கும் முன்திண்ணைக் கட்டு நோக்கி நடந்தாள். எதிர்பார்த்தது போலவே பெரிய போடியார் பள்ளி செல்லத் தயாராகிக்கொண்டிருந்தார். இவளைக் கண்டதும்,

ஆரு . . . மம்மலிர பொஞ்சாதிய . . . என்னகா?’ கேள்விக் குறியுடன் அவளைப் பார்த்தார். அச்சமயம், கூக்குரலிட்ட படியே யாரோ திடுதிடுவென வேகமாக ஓடிவந்தனர்.

போடியா. . .ர் . . . போடியா . . .ர்’ கத்திக் கூப்பிட்டனர்.

ஆர்ரா. . .து?’ பெரிய போடியார் கர்ச்சித்தபடியே திரும்பினார்.

போடியா . . .ர், ஓடியாங்க . . . ஓடியாங்க . . .’

என்னடா நாயே?’

மம்மலி கிறிசிக் கத்தி எடுத்துட்டு, ராக்கிளி அலியத் தெரத்திட்டு ஓடுறான் போடியாரோவ் . . .’யம்னா திடுக்கிட்டு பயத்தில் நெஞ்சு காய்ந்தாள். திடீரென வீறிட்டலறினாள். போடி வீட்டுப் பெண்கள் பதற்றப்பட்டு அலறினர். திடீரென சின்னப் போடியார் உள்ளிருந்து பாய்ந்து வெளியேறினான்.

டேய் . . . வாடா  என்னோட . . . போய்ப் பாப்பம்.’

சின்னப் போடியார் மிக வேகமாக விற்கரத்தையில் பாய்ந்து ஏறிப் பறந்தான். பெரிய போடியார் திடுக்கிட்டு, ஏதும் சொல்ல முன்னரே கரத்தை பறந்துவிட்டது. யம்னா தலை சுற்றிச் சாய்ந் தமர்ந்து விட்டாள். போடி வீட்டுப் பெண்கள் பயத்தினால் அலறியபடி பெரிய போடியாரைச் சூழ்ந்தரற்றினர். சட்டெனப் போடியாரின் முல்லைக்காரனும் மற்றும் சில எடுபிடிகளும், பெரியபோடியாரின் துரித கட்டளைக்கிணங்கி சின்னப் போடியாரைத் தொடர்ந்து வீதியில் இறங்கிப் பறந்தனர். பயங்கரமாக இருள் கவிந்தது.

காட்டுப்பள்ளிக் கொடியேற்று விழா! ஊரே புதிதாகப் பிறந்திருந்தது. புது உற்சாகமாகப் பூரித்து புத்தாடை அணிந்தது. காட்டுப்பள்ளி வாயில் முற்றமெங்கும் வெண்ணிறச் சேலைப் பந்தலிட்டு, சோடனைகளாகத் தென்னைக் குருத்தோலைகள் வழி நெடுக இழுக்கப்பட்டிருந்தன. வலது பக்கத்தில் நடப் பட்டிருந்த நாற்பத்தெட்டடி உயர மினாரக் கம்பத்தில் ஏற்றப் பட்டிருந்த நீளக் கொடி வேகக்காற்றில் படபடத்து ஆடியது. பளபளத்து இலாவகம் காட்டியது. பனிரெண்டடி நீளமும், நாலடி அகலமுமாகக் கரும்பச்சை, இளம்பச்சை வர்ணங்களில், பலவர்ண மணிகளும் குஞ்சங்களும் கோர்க்கப்பட்டு, கீ வடிவத்தில் பிளந்திருந்த வால்களில் பட்டுக் குஞ்சங்கள் கொத் தாகக் கட்டப்பட்டு ஆடின. கொடி நெடுகிலும், மதினாப் பள்ளிக் கூம்பு வடிவத்தில் பனிரெண்டு சிறுசிறு யன்னல்கள் பிளக்கப்பட்டு, காற்றின் உயரத்தில் மேல்நோக்கிப் பிளந்து மூடி. பிளந்து மூடி சூரிய ஒளியுட் புகவிட்டு, வர்ணம் காட்டிப் பளபளத்தன. வெற்றிட ஜாலம் காட்டின.

காட்டுப்பள்ளி அமைந்திருந்த மூன்று ஏக்கர் பரப்புத் திடலெங்கும் புதுப்புதுத் திடீர்க் கடைகள் முளைத்திருந்தன. சனக்கூட்டம் திமுதிமுத்தது. பெண்களுக்கு ஒதுக்கிய பிரத்தியேக இடம் காணாமற்போய், ஆண்கள், சிறுவர், பெண்கள், வாலிபர் என எல்லாம் கலந்துபோய், சனங்கள் வேடிக்கை பார்ப்பதில் முண்டியடித்தனர்.

உமறுலெவ்வை காட்டுப்பள்ளியிலிருந்து, கூட்டம் குறை வான இடமாகப் பார்த்து, சற்றுத் தள்ளி வெற்றுத் தரையில் உட்கார்ந்திருந்தான். இடுப்பில் சிங்கத்தலை கூர்க்கத்தி மறைந் திருந்தது. தோளில் காயம் ஆறியிருந்தது. பக்கத்தில் ராக்கிளி அலி, மாட்டுக்கொம்பு ராக்கிளி சொருகி இருள் பரவுமட்டும் காத்திருந்தனர்.

 

டே அலி, போய் ஒருக்காக் கிறுகி வாரியா?’

உமறுலெவ்வை சொன்னதும், ராக்கிளி அலி எழுந்தான். சனக்கூட்டத்தினிடையே புகுந்து மறைந்தான். அன்றைய சம்பவத்திற்குப் பழி தீர்க்க வன்மனதுடன் காத்திருந்தான். சனக்கூட்டத்தைப் பார்த்திருந்தான். செய்னம்பு வந்திருக் கிறாளோ தெரியாது. மீராவட்டானை மாமா சனக்கூட்டத்தின் நடுநடுவே சிலபோதுகளில் கண்டபோது சரியாக முகம் கொடுக் காமல் திரும்பிக்கொண்டிருந்ததை எண்ணிக் குமைந்தான் உமறுலெவ்வை.

எல்லாம் இந்தப் பேயன் ராக்கிளி அலியால் வந்தது. அவசரப்பட்டுக் கை நீட்டி தனக்கு எதிரிலேயே மாமாவுக்கு அடித்துவிட்டான். பாவம், செய்னம்பு துடிதுடித்துப் போயிருப் பாள். இவன் மீது கடும் கோபமுற்றே இருப்பாள். எப்படித் தன் நிலையை அவளிடம் சொல்ல? முக்குலத்துக் கிழவியிடம் இரகஸ்யமாய்ச் சொல்லியனுப்பிய ‘தன்னிலை விளக்கம்’ செய்னம்புவைப் போய்ச் சேர்ந்ததோ என்னவோ? ஓட்டைக் காதுக் கிழவி என்ன சொன்னாளோ? மம்மலி வேறு தூபமிட்டு அவளது கோபத்தை, தன்மீதான வெறுப்பாக மாற்ற ஊசியேற்றிக் கொண்டிருப்பான். ஆத்திரமாக இருந்தது. இன்றைக்கு மம்மலிக்கு மறக்க முடியாதபடி ‘பரிசு’ கொடுக்க வேண்டும். ஆனால், அவனது மனைவியான யம்னா லாத்தாவை நினைத்து தனது வஞ்சினத்தை விழுங்கினான் உமறுலெவ்வை. அது முழுவதையும் சின்னப் போடியாரின் மீது இரட்டிப்பாகத் தீர்த்துவிடக் கங்கணம் கட்டினான். அவர்களைத் தேடியே ராக்கிளி அலியை அனுப்பியிருந்தான். அவனது பார்வையில் சின்னப் போடியாரும், மம்மலியும் தப்பமுடியாது. இங்கு தான் எங்கேனும் சுற்றிக்கொண்டிருப்பார்கள். செய்னம்புவும் வந்திருப்பாளோ?

இம்முறையும் சின்னப் போடியாரின் ஏற்பாட்டில், கிராமத்தில் மூன்றாவது தடவையாகவும் ஒலிபெருக்கி வந்து, உயரத் தென்னை மரத்தில் கட்டப்பட்டிருந்தது. மரத்தினடியில்,அதை இயக்குபவன், பெருமையுடன் அமர்ந்திருந்தான். அவனைச் சுற்றிலும் சிறுவர் பட்டாளம் மொய்த்துக் கொண் டிருந்தது. ஒலிபெருக்கியின் சத்தம் ஊர்முழுக்கக் கேட்டுக் கொண்டிருந்தது.

‘ . . .ஞே . . .ச் சிங்கார மொத்த ஜயமே . . .

தந்தருளுமையா . . .ஆ . . .ஆ . . .ஆ’

மண்டலம் தன்குண பிறந்து நடந்து சென்று

அந்தர் ஓரகம் கடந்தே

வெண்ணாறு சுறுக்காடும் பூ சேறும்

இறையோடு நபி இறசூல் கண்ட

இறையினை யஞ்சம் குற்றமறுந் தொழுகை

யுற்றனத் தெரிவுறும் முகம்மதுவாம் துதிபர

முகமதரே உம்மைச் சிங்காரமொத்த ஜயமே . . . ஏ . . . ஏ’

காட்டுப்பள்ளி முற்றவெளியின் வலதுபக்கமாக அமைக்கப் பட்டிருந்த கடைகளில், வளையல் குழாய்கள் நீளநீளமாக கலர்கலராக தாவத்து, முகப்பணிக்காப்பு, சரிகாப்பு, விடுகாப்பு, பூட்டுக்காப்புகள் மின்னின. வெள்ளியிலான அல்லுக்குத்து, குறட்டை, காதுப்பூ, மின்னி, வாழி வகையறாக்கள் பளபளத்தன. சிங்கள நாட்டு வியாபாரி வெள்ளையும், சொள்ளையும் தொந்தி வயிறுமாகத் தனது மார்புகள் பெருத்த ‘நோனா’வுடன் இம் முறையும் வந்து ஆபரணக் கடை பரப்பியிருந்தார். கொண்டை மூடி, கொண்டைக் குத்திகள், வெள்ளி அட்டியல்கள், தங்க முலாமிட்ட சரடு, மாலை, கழுத்துக் கொடிகளுடன், பிளாஸ்டிக் வைர மாலைகள். கன்னிப் பெண்களும் இளம் மனைவிகளும் அங்கேயே வாங்கி, அணிந்து அழகு பார்த்தனர்.

பக்கத்தில் மருதமுனையிலிருந்து ஆடைவகைகளுடன் பாடியிறங்கியிருந்தார் மௌலானா முதலாளி. சந்திரபடி, மோஹினிப்பட்டு, அரமணமூட்டு, அசில்பட்டு, குட்டாப்பட்டுச் சாறம்களும், கைத்தறிச் சாறம்களும் பற்பல வர்ணங்களில் அடுக்கியிருந்தார். சதா சிரித்துக்கொண்டிந்தார்.

காத்தன்குடி காஸிம் முதலாளி வழமைபோல இம்முறையும் தினுசு தினுசாகப் புடவைகள் கொணர்ந்து பரப்பி வைத்து கவர்ச்சியாக்கி, காட்சிப்படுத்தி, அதைக் காணவரும் பெண் களைக் கவர்ந்துகொண்டிருந்தார். பால்சோமன், கடுகுவண்ணச் சோமன், மருதமூட்டுச் சோமன், சந்திரபடி, பட்டுச் சோமன் என்று எடுத்தெடுத்துக் காண்பித்துக்கொண்டிருந்தார். பெண்கள் கூட்டம் அம்மியது.

கண்டியிலிருந்து, வண்டியில் தாவளம் கட்டி வந்த கிதுரு நானாவும், அவரது இல்லாள் பீவி பாத்திமாவும் நவீன வெளி நாட்டுப் புடவைக்கடை பரப்பியிருந்தனர். மாடாவண்ணச்சோமன், எள்ளுப்பட்டு, முக்கடுக்குச் சோமன், வெண்பட்டு, தோம்புப் புடவை, சுங்கொடி, மூங்கில்பட்டு, கல்குத்தா ஜவுளிகள், வத்தாவி நூற்சேலைகள், அத்துராசி அடுக்குகள் என வகைவகையாக, சீர்சீராக அடுக்கியும், சிலதைத் தொங்க விட்டும் விளம்பரித்திருந்ததில் பெண்கள் கூட்டம் மனம் கிறங்கியும், பீவி பாத்திமாவின் வெள்ளையழகில் பொறாமை யுற்றும் இரஸனை விமர்சனங்களில் இறங்கியும் நெருக்கியடித் தனர். மேலும், தலைக்கு மேலாகக் கயிறு இழுத்து, அதில் பூட்டுவார், மரினாப்பட்டி, தோல்பட்டி, கம்பளிப்பட்டி என்று விதவித இடுப்புப் பட்டிகளும் தொங்கவிட்டிருந்தார். இளைஞர் பட்டாளம் பட்டிகளை விலைகேளாமல் வாங்கினர்.

கல்முனைக்குடி உதுமான் கண்டு தின்பண்டக் கடையில் உட்கார்ந்து கொசு விரட்டியபடி கர்ணகடூரமாகக் கத்திக்கத்திக் கூப்பிட்டார். ‘தேன். . . தேன். . . வாங்க. . . வாங்க. . .’ என்றார். உதவிப்பையன் ‘தேன் . . . வாங்க . . . திங்க வாங்க . . .’ என்று தன்பாட்டுக்குக் கூவிக்கொண்டே கன்னியர் பக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். பெரிய பெரிய பொன்முலாமிட்ட அலுமினியப் பாத்திரங்களில் கமகமத்த எண்ணெய்ச் சீனிப்பாகு மணத்துடன் தம்பாப் பலகாரம், பொன்னிறத்தில் மஸ்கட், எள்ளுத் தூவிய துதல் கட்டிகள், சோகி, அச்சுப் பணிகாரம், தேன்குழல், முறுக்கு, பதினாலு வகை மிட்டாய்கள், காப்பு மிட்டாய், முள்ளு மிட்டாய், சவ்வு மிட்டாய், பாம்பு மிட்டாய், கண்ணாடி மிட்டாய், என்று வர்ணமயமாக அடுக்கி பெரிய பெரிய காகிதச் சுருள்கள் சுருட்டி சுறுசுறுப்பாக வியாபாரம்செய்தார் தராசின் அடிப்பாகத்தில், இரகஸியமாக ஒரு மஸ்கட் துண்டை ஒட்டி மறைத்திருந்தார்.

இடது பக்க வரிசைக் கடைகளில், தொழுவது எப்படி? மௌஸ§க்கு மாலை, ஞானரத்தின வலங்கார கீர்த்தனம், பீர் சாகிபு அப்பா பதப்பாடல் திரட்டு, குணங்குடி மஸ்தான் ஸாஹிபு பாடல்கள் பாகம் ஒன்று, முஸ்லிம் அன்பர்களே, ஹஜ்கடமை . . , புத்தக அடுக்குகள் வாங்குவாரற்றுக் காட்சி யளித்தன. சற்றுத் தள்ளி உருத்திராட்ச மாலைகள், தஸ்பீஹ¨ மணிகள், அத்தர் சீசாக்கள், திறம் சந்தனக் குச்சிகள், காதுக் குறும்பிகள், பெரிய சிறிய உறுதியான ‘ரேகாழி’ப் பலகைகள், மைக்கூடுகள், தொப்பிகளில், துருக்கித் தொப்பி, சூறத்துத் தொப்பி, கம்பளித் தொப்பி, மடிப்புத் தொப்பி, கவர்ச்சியான மாப்பிள்ளைத் தொப்பி, நீளமான ஜின்னாத் தொப்பி போன்ற இஸ்லாமிய மயப்படுத்திய கடை பரப்பியிருந்த அக்கரைப் பற்று அப்துஸ்ஸலாம் ஒரு அத்தர் சிசாவைத் திறந்து தன்னிடம் விலைகேட்க வருவோருக்கெல்லாம் முற்றிலும் இலவசமாக அத்தர் சொட்டுத் தொட்டுக்கொண்டு மணக்க மணக்க வியாபாரம் செய்தார்.

மறுபடியும், நூற்றிநாலாவது தடவையாக ஒலிபெருக்கியில், ‘சிங்காரமொத்த ஜயமே . . . தந்தருளுமையா . . .’ என அரற்றிக் கொண்டிருக்க, ராக்கிளி அலி சனக்கூட்டத்தினரிடையே மம்மலியையும் சின்னப் போடியாரையும் வன்மத்துடன் கண் களால் தேடியபடி ஊடறுத்து நடந்தான். கடைவரிசைகளின் முடிவில், சனக்கூட்டம் சற்றுக் குறைந்திருந்த இடத்தில், சட்டெனச் செய்னம்புவையும் யம்னாவையும் கண்டான.  £க்கிளி அலி. ஓ, உமறுலெவ்வையிடம் சொன்னால் சந்தோஷப்படுவான்.

ஆயினும், அவர்களின் பார்வையில் பட்டுவிடாதபடி பக்கவாட்டில் திரும்பி பள்ளி மினாரா இருந்த திசையில் புகுந்து நடந்தான். அந்தப் பக்கம் ஒலுவில், மம்முறாயின் நானாவின் சர்பத் கடை இருந்தது. பளபள பெரிய கண்ணாடிப் போத்தல்களின் உள்ளே கற்கண்டுகள் விளைந்திருந்து அதிசயிக்க வைத்தன. அன்னாசியும், கலர்த் தண்ணீரும் கலந்து தம்ளருக்குத் தம்ளர் பாய்ச்சிக் கொண்டிருந் தார். தாகம் தீர்த்துக் காசு வாங்கினார். ராக்கிளி அலி ஒரு கிளாஸ் சர்பத் குடித்துவிட்டுக் காசு கொடுத்துவிட்டு, சின்னப் போடி, மம்மலி தரப்பினரைக் கண்களால் தேடியபடி சர்வ முன்னெச்சரிக்கையாக நடந்தான். செய்னம்பு வந்திருப்ப தால், நிச்சயம் சின்னப் போடி இங்கு எங்கோதான் உலவிக் கொண்டிருப்பான். திமுதிமுத்த சனங்களை ஊடறுத்து, கண்களால் தேடியபடி, இடதுபக்க வரிசையில் திரும்பினான்.

 அந்த வரிசையில், சாய்ந்த மருது சுல்தான் காக்கா தானே சொந்தமாக உள்ளூரில் உற்பத்தி செய்த ஊதி வகைகள், களிமண் கொக்குகள், பனைமட்டைப் பயில்வான் பாய்ச்சல், உமிப்பந்து, படச்சுருள், காகித முதலை, பன்னோலைக் பாம்பு நீளல், என்று அசத்தியதில், சிறுவர் கூட்டம் அம்மி நெருக்கியதில் மூச்சுத் திணறினார். ‘வாங்கிய சாமான் கண்டிப்பாகத் திருப்பி பாரம் எடுக்கப்படமாட்டாது’ எனத் தன் கைவினைப் பொருட் களின் பலவீனம் அறிந்து, அடிக்கடி அறிவிப்பு செய்துகொண்டே வியாபாரம் செய்தார். மிக இரகஸியமாக ‘ஸ்ரீவள்ளி’ திரைப் பாட்டுப் புத்தகமும், ஒரு தினுசான இனிப்பு லேகியமும் கேட்டவர்களுக்கு ஒளித்து வைத்து இரட்டிப்பு விலைக்குக் கொடுத்தார்.

சனக்கூட்டத்தின் நடுவே கண்கவர் ‘சுவீப்’ இழுப்பு அட்டைகள், உடனடி அதிர்ஷ்டம் பார்க்க உலவின. தலைக்கு மேலே பலூன் மலர்களுடனும், வர்ணப் பம்பரங்களுடனும் ஒரு ஆள் சிறுவர் படை பின்தொடர உலவினான். காட்டுப் பள்ளி ஜமாஅத்தினர் பெரிய போடியாரின் ஏவலின்படி நாளைய கந்தூரிக்கு, அன்னதானத்துக்கு வேண்டிய ஏற்பாடு களில் ஓடியாடிக் கொண்டிருந்தனர். பள்ளிவாயில் ஒதுக்குப் புறத்தில் நாளைய அன்னதானத்திற்காகப் பெரிய பெரிய அண்டாக்கள் வந்திறங்கியிருந்தன. முண்டுக்கல் அடுப்புகள் பாரிய விறகுக் கட்டைகளுடன் எரியக் காத்திருந்தன. நாளைய மரணத்தை எதிர்பார்க்காத மூன்று குளுமாடுகள் சாஸ்வதமாகப் புல் மேய்ந்துகொண்டிருந்தன. பள்ளி நிர்வாக சபையினர் பெண்களை வேலை வாங்கிக்கொண்டிருந்தனர். காட்டுப் பள்ளி மேடையருகில், தனது நெஞ்சுக் காயத்தை மறைத்தபடி மீராவட்டானை அன்றைய பள்ளிக் காணிக்கைக் காசுகளை இரு சாட்சிகள் முன்னிலையில் பெருமையுடன் எண்ணிக் கணக்கெடுத்துக்கொண்டிருந்தார்.

அவரிடம் சொல்லியிட்டு, செய்னம்பு, யம்னாவுடன் காப்புக்கடைப் பக்கமாக வந்திருந்தாள். அலைக்கழித்துக் கொண்டிருந்த மனதுக்கு கொடியேற்றப் பள்ளியின் காட்சி களும், சனக்கூட்டமும் மகிழ்ச்சியாயிருந்தன. ஆயினும், சென்ற வருடம்போல் இம்முறை அவளுக்கு நிறைவாயில்லை. காரணம், சென்ற தடவை உமறுலெவ்வை மச்சானை வெகு அருகாமையில் பார்க்கவும், அவனிடம் இருந்து அன்பளிப்பு பெறவும், சந்தடி சாக்கில் மின்வெட்டுப்போல், இவளது கையில் ஒரு கிள்ளுப் பெறவும் முடிந்தது. கிள்ளிய உமறுலெவ்வையின் அந்தக் கிள்ளுக்குப் பதில் கிள்ளு ஒருவருடத்தின் பின்னர் இம்முறை தான் கொடுக்கத் தீர்மானித்திருந்தாள். உமறுலெவ்வை மச்சான்வந்திருப்பாரா? என்னைத் தேடுவாரா? சுறுமாத் தீட்டிய அவளது பட்டாம்பூச்சி விழிகள் சனக் காடுகளிடையே தனக்குப் பிடித்த உமறுலெவ்வை என்ற அந்த ஒரே மலரை மட்டுமே சிறகடித்துத் தேடிக்கொண்டிருந்தன.

ஆனால், இன்னொரு காட்சியைக் கண்டன அவளது விழிகள். யம்னாவின் கணவன் மம்மலிக் காக்காவும், சின்னப் போடியாரும் விஷேட பிரதிநிதியான பொத்துவில் பீர்முகம்மது அண்ணாவியாருடன் வரவேற்றுப் பேசிவிட்டு, இவர்களைத் தேடி வந்துகொண்டிருந்தனர்.

பொத்துவிலிலிருந்து பீர்முகம்மது அண்ணாவியாரின் தலைமையில், பொல்லடிக் குழு வந்து இறங்கியிருந்தது. கொடி இறக்கும் தினத்தன்று இரவு நிகழவுள்ள மாபெரும் பொல்லடி நிகழ்வுக்கு விஷேட அழைப்பின் பேரில், தமது பொல்லடி மல்லர்களுடன் வந்திருந்தார். பெரிய போடியாரின் மற்றொரு விஷேட ஏற்பாட்டின் கீழ், மல்கான் பிட்டி குறுநில மன்னரின் தலைமை வீரர்கள் சிலர், பாரிய மர ஊஞ்சல் ஆடும் ‘ரெட்டாலை’ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். பெரிய ஊஞ்சலும், தொட்டி ஊஞ்சலும் பாரிய மர உச்சிகளில் கட்டப்பட்டு மயிர்ச்கூச் செறியும் வேகத்தில், உச்சிவான் தொட்டுத் தலைகீழாக மீறு வதும், மறுபடி மேலெழுவதுமான ஆட்டத்திற்காகத் தயாராகின. திகில் விரும்பிய வாலிபர்கள் தினவு கொண்ட தோளினராய், தம் இரகசிய மச்சிமார் முன்னிலையில் வீரப்பிரதாபமாய் ஆடிக்காட்டக் காத்திருந்தனர்.

சூரியன் மறைவதற்கு முன்னரே மூலைக்கு மூலை பெரிய தூக்கு விளக்குகள் எரிந்தன. கடைகளில் முற்றிலும் நவீன ‘பெற்றோமாக்ஸ்’ விளக்குகள் ஸ்ஸ்ஸ்ஸீறி ஒளிபரப்பின. இரவானதும், வருடாந்தம் நடைபெறும் இருள் வானத்தை வர்ணப் பூக்களால் அலங்கரிக்கும் வாணவேடிக்கை போட்டி நிகழ்ச்சிக்காக மாந்தறாகுடி மரைக்கார் மம்முறாகீம்பாவாக் குழுவும், மழுவன்கண்ட வட்டைக்கடை ஆதமலியின் குழுவும் தத்தமது ஆதரவாளர்களுடன் போட்டி வாணம் ஏற்றி வெற்றி பெறத் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்தனர். பெரிய மாட்டுக் கூட்டு வண்டிகளில் பட்டாசுகள் ஏற்றப்பட்டு இர வானதும் வர்ணஜாலம் காட்டக் காத்திருந்தன. உமறுலெவ்வை குழுவினரும் தம் தீவிரத்தைக் காட்டக் காத்திருந்தனர்.

 

போகம் 6

செம்மல்

சாயுங்காலத் தொழுகைக்கான பாங்கொலி அதிசய மாக ஒலிபெருக்கியில் ஒலிக்கப் போகும் அதிசயப் பே ரொலி கேட்பதற்காக ‘சிங்காரமொத்த ஜயமே’ நிறுத்தப் பட்டது. திடீர் அமைதி பிறந்தது. இதுவரையும் உமறு லெவ்வையுடன் பேசிக்கொண்டிருந்த பள்ளி மோதினார் அவனிடம் விடைபெற்று ஒலிவாங்கியருகே செல்லத் தயாரானர். திடீரென, உமறுலெவ்வையின் கண்களில் சனங்களை விலத்தியபடி ராக்கிளி அலி திரும்பி வருவது தெரிந்தது. கூடவே, மற்றொரு தோழன் அஞ்சலிர பேரனும் வந்துகொண்டிருந்தான். உமறுலெவ்வை பரபரப்புடன் எழுந்தான். இடுப்பினுள் மறைத்து வைத்திருக்கும் மான் கொம்பு ராக்கிளியின் கூர்முனை அழுத்தி வலித்தது.

ஙா . . . அஞ்சலி வந்திட்டியா? செரி, என்னடா ராக்கிளிஅலி? ஆக்கள்?

எல்லாரும் வந்திரிக்காக . . . சின்னப் போடியும், மம்மலியும் சாப்புக் கடைக்கி கிட்ட அண்ணாவியா ரோடக் கதச்சிட்டு நிக்காக. அதுக்குக் கிட்ட . . .’

சின்னப் போடிக்கு இண்டைக்கி ஒரு பல்லக் கழட்டணும் . . . மம்மலிக்கும் ஒரு குடு குடுக்கணும்.’

அண்டைக்கித் தப்பினாப் போல இண்டைக்கி உடக்கூடா . . . செல்லிட்டன். . . ஓவ்!’

அது மட்டுமில்ல. காப்புக் கடையில ஒண்ட மச்சி செய்னம்புவும், யம்னா லாத்தாவும் நிக்காக.’

φ          62  ε    நட்டுமை      நௌஸாத்   φ          63  ε

என்ன . . . மெய்யாடா?’ இன்ப அதிர்ச்சியடைந் தான் உமறுலெவ்வை.

சின்னப் போடியும், மம்மலியும் அவடத்ததான் சுத்திக்கிட்டு நிக்கானுகள். சின்னப் போடி ஒன்ட மச்சிக்குக் காப்புக் கீப்பு, இல்லாட்டி சாமான் சக்கட்டு வாங்கிக் குடுப்பான்போல. கூட்டிக் குடுத்தான் மம்மலியும், அவண்ட பொண்டாட்டி யம்முனாவும்தானே கூட நிக்காக.’

என்னது?’ ஆத்திரமுற்றுப் பார்த்தான் உமறுலெவ்வை.

ஒமறுலேவ சனத்துக்க அங்கவெச்சி ஒண்டும் செஞ்சி போட்ராத . . . பள்ளி ரோட்டாலதான் வெருவாக. அவிசிரப் படாத. பொறு. கல்லூட்டுப் போடிர வங்கிசத்துல கை வெய்க்கிற வெசயம் . . . அடிக்கிற பெரிய வேலல்ல . . . சாக்கி இல்லாம தப்புறான் கய்ட்டம். பொலிசானட்டப் புடிபட்டா தீவாந்தரம் தப்பா . . . நெனப்புல வச்சிக்க.’

செரி வா.’

உமறுலெவ்வை உள்ளூரப் பொங்கிய ஆத்திரத்துடன் ராக்கிளி அலியுடனும், அஞ்சலியுடனும் சனத்திரளிடையே புகுந்தான். அவர்களைத் தேடினான். காப்புக்கடை வரிசைகட்கு வந்தான். எச்சரிக்கையாக சனத்திரளில் மறைந்து நின்று கொண்டு பார்த்தான். காணவில்லை. பள்ளி முற்றத்திற்கு வந்தபோது, மினாரா உண்டியலருகே சட்டென யம்னா லாத்தா தென்பட்டாள். அவளின் தோளின் பின்னே ஒளிந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த செய்னம்புவும் உமறுலெவ் வையை முதலில் கண்டுவிட்டாள். விழிகள் நம்பமுடியாமற் படபடத்தன. ஒரு கீற்று மின்னலைப் போல நாணமுற்று யம்னாவுக்குள் சட்டென ஒளிந்தாள். உமறுலெவ்வைக்குள் பரவசம் பொங்கிச் சீறியது. மனதிலிருந்த வஞ்சினங்கள் அனைத்தும் பனியாகிப் போயழிய, எண்ணம் முழுவதும் செய்னம்புவின் எண்ணங்களால் நிறைந்தது. சட்டென ராக்கிளி அலியிடம் திரும்பி,

 டே அலி . . . அன்னா செய்னம்பு மச்சி நிக்கா. நான் போய் கதச்சிட்டு வாரன். நீ வெராத. ஏனண்டா நீ அவள்ள வாப்பா மீராவட்டானைக்கி அடிச்சண்டு ஒன்னுல கோபம் அவளுக்கு . . . நா மட்டும் போய் வாரன். நீ, இப்பிடி அஞ்சலி யோட நில்லு. என்னயும்டால், விசில் அடி செரியா?

விரைந்து சொல்லிவிட்டு சனக்கூட்டத்துக்குள் புகுந்து இவர்களை நெருங்கி வந்தான். வருடத்துக்கொரு தடவையே இப்படித் தனியாக, முழுதாகப் பார்க்கின்ற அபூர்வ சம்பவம். யம்னாவை நெருங்கி, பரபரப்பாக, ஆனால் புன்னகையுடன், ‘யம்னா லாத்தா . . . வ்’ என்றான். யம்னா திரும்பினாள்.

அட, ஒமறுலேவ . . . டியே செய்னம்பு . . . மச்சாண்டி!’

செய்னம்பு, மிக அருகாமையில் உமறுலெவ்வையின் திடீர் தரிசனம் கண்டு பரவசம் மீக்குற்று, செய்வதறியாது யம்னாவின் முதுகைக் கிள்ளி நாணக்கோபம் காட்ட,

சும்மா கிள்ளாதகா செய்னம்பு. மச்சானக் கிள்ளன். பாருகா செய்னம்பு மச்சான்ட செப்பத்த ... இப்ப படிப்பெல்லாம் உட்டுட்டு காவாலிமாரோட திரியிறாரு. பாரன்கா . . . மச்சான’ என்றாள் யம்னா.

ஒளிச்சிட்டு இருக்கிற ‘ஆக்கள்’ எங்களப் போல ஏளயளப் பாப்பாகளா? பெரிய போடிமாரு எண்டால் பாப்பாக’ என்றான் உமறுலெவ்வை ஆற்றாமையும் ஏக்கமுமாக.

அப்பிடில்ல ஒமறுலெவ்வ. நீ காவாலிகளக் கூட்டி வந்து மாமாக்கு அடிச்சண்டு கோவம் செய்னம்புவுக்கு. வேறொண்டு மில்ல. என்ட புரிசனுக்கும் இடிக்க கறுவிச்சிரிக் கிறியாம். . . மெய்யா?’

இந்தக் காட்டுப் பள்ளியறிய யம்னா லாத்தா . . . நான் அடிக்க வெரயும் இல்ல. நெனைக்கயும் இல்ல. சொந்த மாமாக்கு அடிப்பனா? இல்ல மம்மலி மச்சான்ல கை வெப்பனா? சும்மா கூட்டாளிமாரு ஒப்பந்தம் எழுதக் கூப்பிர்ரான்எண்டுதான் நான் வந்த . . . திடீரெண்டு அடிப்பானு கள் எண்டு கனவுலயும் நெனைக்கல்லகா நான். எண்டாலும், மாமாக்கு அடிச்சவனுக்கு செரியான சாப்பாடு நான் குடுத் திட்டன்தானே. யம்னா லாத்தா எனக்கி மம்மலி மச்சான் மேலயும் ஒரு கோவமுமில்லகா. சின்னப் போடிலதான் கொஞ்சம் கறள் இரிக்கி . . . இது வெளங்காம செல ‘ஆக்கள்’ என்ட சொத்தயயும் பாக்காக இல்ல, பெரிய போடிமா ரெண்டாப் பாப்பாக போல.’

 அப்பிடிப் பாக்கிற ‘ஆக்கள்’ நாங்கல்ல. . .’ வெடுக்கென்று யம்னாவின் முதுகுப் பக்கமிருந்து குரல் வந்தது. உமறுலெவ்வை யின் காதுகளில் தேன் பாய்ந்தது. ஆயினும் பொய்க் கோபமாக,

மொற தவறினா மொதலுக்கு மோசம் . . . இது வெளங் கிறல்ல செல ஆக்களுக்கு’ என்றான்.

மொற தவர்ற ‘ஆக்கள்’ நாங்கல்ல’ மறுபடி முதுகு பேசியது. யம்னா இந்த ஊடலுரையாடலை இரஸித்தபடி, ஆனால், தன்னைத் தேடிக்கொண்டு மம்மலியோ அல்லது செய்னம்புவைத் தேடிக்கொண்டு சின்னப் போடியாரோ இவ்விடத்திற்கு மறுபடியும் வரக்கூடும் என்ற பயத்தில் தவித் தாள். ஆனால், உமறுலெவ்வை விட்டானில்லை.

யம்னா லாத்தா . . . அப்பிடியெண்டால் இப்பிடிக் கதைக்கிற ‘ஆக்கள்’, இந்தக் காட்டுப்பள்ளியில சத்தியம் பண்ணுவாகளா?’ என்று அவசரமாகக் கேட்டான்.

நம்பிக்க இல்லாத ‘ஆக்களு’க்குத்தான் சத்தியம்’ என்றது முதுகு சிரிப்புடன்.

அது செரி’ என்றாள் யம்னா. உமறுலெவ்வை திடீரென, பக்கத்திலிருந்த கடையில் விரைவாக ஒரு அல்லுக்குத்துச் சோடியும், தங்க முலாமிட்ட சரிகாப்புகளும், ஒரு ரூபாய்த்தாள் நீட்டி வாங்கி யம்னாவிடம் கொடுத்தான்.

இதுகள விருப்பத்தோட வாங்கினா ‘ஆக்களுக்கு’ விருப்பம்.. .இல்லாட்டி இனி, இல்ல.’ என்றான்.

செய்னம்பு, சட்டென ஒரு அசாத்திய துணிவில் முதுகி லிருந்து வெளிப்பட்டு, உமறுலெவ்வையின் கையிலிருந்தவற்றை ‘வெடுக்’கெனச் சொட்டிப் பறித்துக் கொண்டு, அதே விநாடியில் அவனது கையில் தன் கூர்மையான மருதோன்றிச் சிவப்பு நகத்தால் ஊன்றிக் கிள்ளியும் விட்டாள். தன் ஒருவருடப் பழிவாங்கலையும், தன் சம்மதத்தையும் தெரிவித்தாள். மறு கணமே, மறுபடி யம்னாவின் முதுகில் மறைந்தாள்.

ஷ் . . .ஷாப்பா . . .ஹ்’ அலறினான் உமறுலெவ்வை. கிள்ளிய இடம் எரிச்சலுடன் இனித்தது. கிளுக்கெனச் சிரித்த செய்னம்பு யம்னாவின் முதுகில் பிடித்து இழுத்தாள்.

அதான் . . . அதான். சாக்கி . . . செரியா? ‘ஆக்களுக்கு’ நோகுதா? யம்னாத்தா வாக்கா போவம்.’

என்டப்போவ் . . . எரத்தம் வெருது. யம்னாத்தா பாரு, இதுக்கு நெல்ல பதுல் தருவன் . . . கிட்டடியில.’

உமறுலெவ்வையின் வசனத்தின் பொருள் புரிந்து ‘அஸ் ஸிலே. . . ய்’ என நாணச் சினுங்கல் கேட்டது. மறுபடி, செய்னம்பு தனது கையிலிருந்த நீலக்கல் மோதிரத்தை விரைவாகக் கழற்றி யம்னாவுக்கே தெரியாமல், உமறுலெவ்வையிடம் எறிந்துவிட்டு, யம்னாவை இழுத்துக்கொண்டு, பெண்கள் கூட்டத்தில் புகுந்து சென்று மறைந்தாள்.

உமறுலெவ்வை இன்ப அதிர்ச்சியில் இலயித்துத் தன்னை மறந்து, அவ்விடத்திலேயே நின்றபோது, ராக்கிளி அலி திடீரென வந்து,

ஒமறுலேவ அன்னாபாரு . . .’ என்று உலுக்கினான். அவன் காட்டிய திசையில் சின்னப் போடியாரும், மம்மலியும் சனக் கூட்டத்தினரிடையே யாரையோ தேடியபடி விரைவாக வந்து கொண்டிருந்தனர். ‘இந்தப் பக்கமாக வா . . . இப்ப அவனுகள்ள கண்ணுல சந்திக்காத . . . வா.’

உமறுலெவ்வையும், ராக்கிளி அலியும், சனக்கூட்டத்தில் புகுந்து, பள்ளிப்பக்கமாக நகர்ந்தனர். ஆனால், மம்மலியின் கூரிய கண்களில் அகப்பட்டனர். உடனே மம்மலி இவர்களின் பக்கம் சுட்டிக்காட்டி, சின்னப் போடியாரிடம் ஏதோ சொல்வது தெரிந்தது. ஆயினும், விரைவாக சனத்திரளிலிருந்து வெளியே வந்த உமறுலெவ்வை ராக்கிளி அலியுடனும், அஞ்சலியுடனும் இடது கைப்பக்கமாகப் பழைய சந்தை வழியாக நடந்தான். கொடியேற்ற விழா இரைச்சல்கள் சற்றுக் குறைந்து கேட்டன. மறுபடி ‘சிங்காரமொத்த ஜயமே . . .’ தூரத்தில் கேட்க ஆரம்பித் தது. உமறுலெவ்வை இரும்புக் கடை சந்தியில் ஆலமரமும், அடியில் நாணற்புற்களுமாக இருந்த அடர்த்தியில் மறைந்து நின்றான். வழியின் முகப்பில் அஞ்சலியும், மீன்சந்தை சிற் றொழுங்கையில் மழுவன் கண்டத்து அதிகாரியும், ஒளிந்து கொண்டனர்.

அலி . . . நீ வில்லுக்கரத்தயக் கண்ட ஒடன முண்டுக்கல்லு. தெரியிம்தானே . . . என்ன?’

செரி . . . நான் மம்மலிய மறிப்பன். நீ ஓடியாந்து சின்னப் போடிய மட்டும் கவனிச்சிக்க. . . செரியா?

செரி . . . போ. மம்மலிக்கி ஓரமா அடிச்சிப் போட்ராத. பாவம் யம்னா லாத்தா.’

டே, அஞ்சலி . . . நீ கரத்த நின்ட ஒடனே இந்தக் கொச்சிக்காத் தூள . . . என்ன தெரியிம் தானே?. . . செரியா?’

செரி . . .ஒமறுலேவ அன்னா பாரு.’

தூரத்துச் சந்தியில், கொடியேற்ற விழாவிலிருந்து பல பெண்கள் திரும்பிக்கொண்டிருந்தனர். கைகளில் அண்டாக்கள், வெள்ளிப் பாத்திரங்கள், ஆரத்திகள், கொள்வனவுப் பொருட்கள், நேர்ச்சைப் பொருட்கள், கலகலப்புகள். பெண்களின் பின்னால் யம்னா லாத்தாவும் . . . அட, செய்னம்புவும்!

 

உமறுலெவ்வை சட்டென ராக்கிளி அலியையும், அஞ்சலி யையும் எச்சரித்து மறையச் செய்துவிட்டுத் தான் மட்டும் தனித்து மறைவிலிருந்து வெளிப்பட்டு வீதியோரமாக நின்றான். பெண்கள் கூட்டம் கடக்கும்போது சற்றே இருமிக் கனைக்க, ஒரு தற்செயல் திரும்பலில் செய்னம்பு உமறு லெவ்வையைக் கண்டுவிட்டாள். அகமகிழ்ந்து நாணப்பட்டு, ஆனால், அச்சத் துடன், புன்னகைத்தாள். உமறுலெவ்வை அன்பளித்த சரிகாப் பை அணிந்திருந்தாள். அதனைச் சாடையாக அவனிடம் இரகஸ்யமாகக் கைகளைத் தூக்கிக் காண்பித்தாள். உமறுலெவ் வை மிகப் பரவசப்பட்டு புன்னகைத்தபடி தான் அணிந்திருந்த அவளது நீலக்கல் மோதிரத்தைக் காட்டினான். அதுகண்டு மகிழ்ந்து செய்னம்பு பெண்களுக்குள் புகுந்து மறைந்து நடந்து விட்டாள். இவ்வளவும் ஒரே விநாடியில் நடந்து முடிந்தன.

பெண்கள் கூட்டம் சுமார் பத்து யார்தூரம் போய்விட்டிருப் பார்கள், அப்போது, திடீரெனப் பெரிதான சீழ்க்கை ஒலி கேட்டது. மறுகணம் சூழல் மாறியது. தூரத்தில், தடதடவென விற்கரத்தை விரைந்து வந்தது. நெருங்கியதும், மங்கலான இருட் டில், பென்னம் பெரிய ஒரு முண்டுக்கல், விற்கரத்தைச் சக்கரத்தில் திடீரென வேகமாக வந்து தடாலென மோதிவிழுந்தது, விற்கரத் தை ஒரு பக்கமாகக் கிளம்பி மறுபடி நிலைக்கு வந்து சடுதியில் நின்றது. உடனே நாணற் புதருக்குள்ளிருந்து சடுதியில் வெளிப் பட்ட உமறு லெவ்வை விற்கரத்தையை நோக்கி ஓடிவர, ராக்கிளி அலியின் பின்புறப் பாய்ச்சலில் வாயிற் பக்கமிருந்த மம்மலி அதிர்ச்சியுற்று,

சின்ப்... ப்டி... ர்... அடிக்க்க்...’ குரல் ஓயுமுன்னர் மம்மலி இழுக்கப்பட்டுக் கீழேவிழுந்தான். மேலும் சில நிழலுருவங்கள் சூழ்ந்தன.

 புடிரா . . . அடிரா . . . குட்ரா . . .’ என்றன கலவரக் குரல்கள். திடீரென சின்னப் போடியார் முகம்மதனிபா பாய்ந்து இறங்கி னான். தொட்டிற் சாக்கில் கைவிட்டான். உருவி வாளை எடுக்க, திடீரென உமறுலெவ்வையின் வேகமான ராக்கிளி வீச்சில் தலைபிளந்து வீழ்ந்தான்.

என்ட . . . ம்மோ . . . வ் . . .’ எனக் கத்தினான். ஆயினும் சுதாரித்து, சட்டென எழுந்து, எதுவும் விளங்காத இருட்டில், மங்கலாகத் தெரிந்த உருவங்களோடு மல்லுக்கட்டி பளீர்பளீரென அடித்தான். கிடைத்த ஒரு விநாடி இடைவெளியில் தொட்டிற் சாக்கிலிருந்து வளைவாளை அடைந்து உருவி எடுக்க, யாரோ சட்டென மிளகாய்த்தூளைக் கண்ணில் ஊதி அடித்தனர்.

என் . .. டல்லோ .. . வ் ...’ அலறி, வளைவாளைக் கைவிட்டுக் கண்களைப் பொத்திய சின்னப் போடியாரின் மீது சராமாரியாக அடிகள் இறங்கின. தொடர்ந்து இழுபறி தள்ளுபறியாக யார் யாரெல்லாமோ தள்ளுப்பட, யாரோ ஓடினர், யாரோ துரத்தினர். கொடியேற்றத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்த ஆண்களும் பெண்களும் இந்தத் திடீர் கலவரத்தால் களேபரப் பட்டு, சிதறியோட, மம்மலி மூர்ச்சித்துப்போய் கரத்தையின் அடியிற் கிடக்க, யாரோ வீறிட்டலறினர்:

சின்னப் போடியாருக்கு ஆரோ அடிக்கானுகள்ளோ . . .

ய்... ஓடியாங்க... டோ... ய்...’

திடீரென இன்னொரு வக்கிக் கரத்தையும், ஒற்றைக் கூட்டு வண்டியும் விரைந்து வந்தன.

ஆர்ரா அடிபுடிப் பர்ர . . . டே . . . ய்?’

எங்கடா சின்னப் போடியாரு . .?’

மம்மலி..! டே..! மம்மலி...’

என்டம்மோவ்! அளத்துது கொச்சிக்காத்தூள் . . .’

சனக்கூட்டம் அனைவரையும் சூழ, யாரோ சனக்கூட்டத் தை ஊடுருவி மீன்சந்தை ஒழுங்கயால் ஓடினர் . . .

ஓர்ராண்டோ . . . வ் . .! ஓர்ரா£ண் . . . டோ . . . வ்!’ ‘வெரசிப்புடி! புடி.’

உமறுலெவ்வையும் ராக்கிளி அலியும் மீன்சந்தைக்குள் புகுந்து பூஞ்சன மர இருளுக்குள் இடுக்கினுள் நுழைந்து மறைந்து விரைந்தோடி, மெத்தை ஒழுங்கையில் பதுங்கி இருளிலேயே சற்றுத்தூரம் நடந்தனர். துரத்தி வந்தவர்களைத் திசைமாற வைத்துவிட்டு மறுபடி சுற்று வழியாகக் காட்டுப்பள்ளிக் கொடியேற்றத்துக்கு முன்னெச்சரிக்கையுடன் வந்து சேர்ந்தபோது, வெளிச்சத்தில், உமறுலெவ்வையின் தலையிலும், உதடுகளிலும் இரத்தக் காயங்கள் தெரிந்தன. வலித்தன. ராக்கிளி அலி காலை உதறி உதறி வந்து கொண்டிருந்தான். சனங்கள் அவர்களைக் கவனியாது அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தனர்.

ஓர்ரோ . . . வ்! . . ஓர்ரோ . . . வ் . . , அல்லாவே!

என்னடா என்னடா?’

ஆரே சின்னப் போடியார வெட்டிட்டு ஓடிட்டாகளாம்.’

மம்மலிக்குத் தல பொளந்து கெடக்காம்.’

பொளைக்கிற சாக்குத்தான் . . .’

சனங்களின் பதற்றமான பேச்சுக்களில் முதல் தடவையாக உமறுலெவ்வைக்கு மனம் பயத்தால் விறைத்தது.

டே ஒமறுலேவ. .. ஒன்ட சொத்ததையில எரத்தம் இரிக்கி . . .

நெல்லாத் தொறச்சிரு.’

ஒனக்கும் கால்ல என்னடா அலி?’

ஓடியரக்க கால்ல கல்லுப் பொளந்துட்டு . . . நெகம் பிஞ்சிற்று.’

செரி. . . இப்பிடி இருட்டால வா! எங்க வேன் அஞ்சலியும் மத்தவனும்?’

அங்கான் . . . நெடியாள்ர தெடலுக்கு ஓடிப் போயிருப்ப £னுகள் .’ ‘செரி வா!’

ஆனால், கிராமத்தில் பயங்கரமான ஒரு நிலைமை உருவாகியிருந்தது.

போகம் 7

முட்டு

பெரிய போடியாரின் கல்வீட்டுத் திண்ணையில் முக்கியமான சிலர் கூடியிருந்தனர். பெரிய போடியார் ஆத்திரமும் பதற்றமுமாகக் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து ஜர்மன் சுருட்டுப் புகைத்தார். வெகு தூரத்திலிருந்தாலும், காட்டுப் பள்ளியிலிருந்து, சன்ன ஒலியில் ‘சிங்காரமொத்த ஜயமே . . .’ கேட்டுக் கொண்டிருந்தது. சில வயற்காரர்கள் பணிவுடன் கீழே குந்தியிருந்தனர். சின்னப் போடியார், தலையில் பச்சிலைக் கட்டுடன் தூணில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான். ஆத்திரத்தில் தலை கடுமையாக வலித்தது. அடிபட்ட மம்மலியைப் பெரிய நீலவணை முறிவு வைத்தியரிடம் அனுப்பியிருந்தார்கள்.

மீராவட்ட£னையும், மாந்தறாகுடி மரைக்காயரும், பள்ளி அதிகாரியும், கறுத்த மௌலானாவும் தோட்டுப் பாயில் அமர்ந்திருந்தனர். மீராவட்டானை பயக் கவலையுற்று தலைகுனிந்திருந்தார். போடி வீட்டுப் பெண்கள் உள் ளிருந்து அழுதுகொண்டிருந்த சத்தம் மெலிதாகக் கேட்டுக்கொண்டிருந்தது.

பொலிசானையக் கூட்டப் போனவன் எங்கடா?’

இந்தா வந்துட்டான் போடியார்.’

இந்தா பொலிசானையும் வந்துட்டாக போடியார்.’

சாய்ந்தமருதிலிருந்து, வில் வண்டியில் வந்திறங்கிய உடையார்ப் பொலிசானை மிகக் கம்பீரமும் உயரமுமாக இருந்தார். உத்தியோகப்பூர்வமான கோட்டும் சாறமும் அணிந்திருந்தார். கோட்டில், பதவி இலச்சினையும், இராணி முடியும் சூடியிருந்தார். இடுப்பில், ‘சவுக்குப்பட்டி’ உருவி அடிக்க வசதியாகச் சொருகப்பட்டிருந்தது. பெரிய மீசையும், மொட்டைத் தலைக்கு மேல் சூறத்து தொப்பி யும் பூண்டிருந்தார். கண்களில் எப்போதும் கோபம் குடி கொண்டிருந்தது. கூடவே ஓடி வந்திருந்த இரண்டு ஊர்காவற் சேவகர்கள் கைகளில் குண்டாந் தடியுடன் முறுக்கு மீசையும், பெனியனும் அணிந்து விறைப்புப் பார்வையுடன் காணப் பட்டனர்.

உட்கார்ந்திருந்த அனைவரும், மரியாதைப் பயத்துடன் தேவையற்ற புன்னகையுடன் எழுந்து நின்றனர். அவசரமாக உள்ளிருந்து புட்டுவம் கொணர்ந்து போடப்பட்டு, அதன் மீது வெள்ளை விரிக்கப்பட, உடையார்ப் பொலிசானை அதில் அமர்ந்தார். அனைவரையும் மத்திமமாகப் பார்த்தார். பின் பெரிய போடியாரிடம் திரும்பினார்.

போடியார், நடக்கக் கூடாதது நடந்துட்டுதாமே . . . எல்லாம் வழியிலேயே கேள்விப்பட்டன் . . . எங்க சின்னப் போடியாரு?’

செரி . . . நடந்துட்டு. இப்ப என்ன செய்யப்போறீங்க பொலிசான.? பிராதும் தந்தாச்சு . . . நீங்க நடவடிக்கை எடுக்கிறண் டால் எடுங்க. . . இல்லாட்டி எனக்கித் தெரியும் இதுக்கு என்ன செய்றண்டு.’ பெரிய போடியார் கண்களில் தீச்சுவாலை.

சபுர் பண்ணுங்க போடியார் . . . எல்லாம் வெசாரிச்சி முடிச்சிட்டன். சின்னப் போடியாருட்ட ஒரு வாக்குமூலம் கேட்டுப் பதிஞ்சிட்டு, ஆக்களப் புடிச்சி நெல்ல சாப்பாடு குடுத்து புளியந்தீவுக்கு அனுப்பிர்ரன். நீங்களாக ஒண்டுஞ் செஞ்சி போட்டறாதிங்க மடத்தனமா . . .’

பொலிசான . . . ஒங்கட மொகத்துக்காகத்தான் பாக்கன். இல்லாட்டி என்ட மகனுல கை வெச்ச தொலிப்பிரிர மக்கள்ள கைய அடியோட துண்டாக்கி அரிஞ்சி போட்ரிப்பன் . . .ம், என்ன தகிரியண்டா . . .’

சபுறு . . . சுபுறு. எல்லாம் நான் பாத்துக்குவன்.’

தன் உருட்டு விழிகளால் அனைவரையும் மீண்டும் ஒரு தடவை பார்த்த உடையார்ப் பொலிசானை சவுக்கை உருவிக் கொண்டு எழுந்தார். சின்னப் போடியாரை அழைத்துக் கொண்டு தனியாகப் பிரிந்து சென்றார். வெகு மும்முரமாக அவனுடன் மெல்லிய குரலில் கிசுகிசுத்தார். பல கேள்விகள் கேட்பது போலிருந்தது. பின் திரும்பி சபைக்கு வந்தார்.

செரி . . . போடியார் . . . அசருக்கிடையில் ஆக்களப் புடிச்சிக் கொண்டாறன்.’

இல்லாட்டி மகரிபுக்கிடையில நான் செய்றத்தச் செஞ்சிருவன்.’

இல்ல போடியார் . . . பொறுங்க . . . பொறுங்க. டே . . . ய், மூப்பண்ணா, நெடியாள்ர திடல்ப்பக்கம் போவம் . . . திருப்பிக் கட்ரா வண்டில.’

அடுத்த கணம், இரு ஊர்ச் சேவகர்களும் பின்னோட, நெடியாள் திடல் பக்கமாகப் புழுதி கிளப்பிப் பறந்தது வில்வண்டி.

பொலிசானை நெடியாள்ர தெடலுக்குத்தான் போறாக . . .

இனித் தப்பேலா.’

இக்கிணம் புடிச்சிக்கருவாரு பாரு.’

பொலிசான அடிக்கிற அடியில எரத்தம் கக்கும் மூனு பேருக்கும்.’

மீராவட்டானைக்குப் பயத்தில் நெஞ்சு படபடத்தது. பெரிய போடியார் தனது முகத்தைச் சால்வையால் துடைத்தபடி, திரும்பி மீராவட்டானையைப் பார்த்தார்.

எங்க மீராவட்டான?’

ம் . . . இன்னாயிரிக்கன் போடியார்.’

பாத்திங்களா வட்டான . . . அவன், ஒங்குட அக்காச்சாட மகன் ஒமறுலேவ, ராக்கிளிஅலி, அஞ்சலிர பேரன், மத்தவன் மழுவன் கண்டத்து அதியாரி. இம்மபட்டுப் பேருந்தான் இதுல சம்பந்தப்பட்ட ஆக்கள்.’

ம்... ம்...’

அண்டைக்கித்தான் ஒங்களுக்கு அடிச்சானுகள் . . . அதுல அம்புட்டு பொலிசானட்ட போகாம நான் காப்பாத்தி உட்ட. இப்ப என்ட மகனுல கைய வெச்சிட்டாக . . . நக்கு நாய்கள்.’

ம்.’

நாலாம் வகுப்பு படிச்சிருக்காராம் ஒமறுலேவ . . . படிச்ச கெப்பர என்ட மகனுட்டயா காட்ற. அறாமுல பொறந் தாலும். நம்முட புள்ளண்டு நாலெழுத்துப் படிக்க வெச்சி, வாத்தி வேலைக்கிம் பெரிய பறங்கித் தொரைக்கிட்ட சிவாரிசுக் கடிதமும் வாங்கிக் குடுத்த ஆரு?’

நீங்கதான் போடியார்.’

நண்டி இரிக்கா அவனுக்கு? என்ட மகனுல அப்பிடி என்ன வெஞ்சம் அந்ந ‘தனியனு’க்கு?’

‘... ... ...’

உமறுலெவ்வை முறையான தந்தையில்லாமற் பிறந்ததைப் பெரியபோடியார் சபையிற் குத்திக்காட்ட, மீராவட்டானைக்கு இருபது வருடங்களுக்கு முன் இறந்துபோன தன் தங்கையின் மீது மறுபடியும் கோபம் வந்தது. மறுமொழி ஏதும் சொல்ல முடியவில்லை. தன் மகள் செய்னம்புதான் இப்பகையுணர்வின் அடிப்படை என்பதை எப்படி பெரிய போடியிடம் எடுத்துச் சொல்ல? பகை முற்றிய பிறகு எப்பிடி முடித்து வைக்க? பதில் ஏதும் பேசாமலிருந்தார். பெரிய போடியார் ஆத்திரமாக,

என்ன மீராவட்டான ஒண்டும் செல்றீங்கல்ல? வாயில என்ன புள்ள கொழுக்கட்டயா?’ என்று கோபத்துடன் சிரித்த£ர். பின், சின்னப் போடியார் முகம்மதனிபாவைப் பார்த்தார்.

டே . . . மம்மனிவா . . . நீ செல்றா ஒன்னோட அவனுக்கு என்னடா வேளவு வெஞ்சம்? நீ அவனுக்கு என்ன செஞ்ச? வெட்டால செல்லன்டா மகன்?’

பெரிய போடியாரின் கேள்விக்குப் பதில் சொல்ல முடி யாமலும், கேள்வியைப் புறக்கணிக்க முடியாமலும் திணறி னான் சின்னப் போடியார். காரணம் அறிய சபையும், போடி வீட்டுப் பெண்களும் ஆவலுடன் காத்திருந்தனர். அவனது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

செல்லண்டா . . .’

ஒ . . . ஒ . . . ஒண்டுமில்ல வாப்பா . . . ஒமறுலெவ்வைக்கி அவன் மம்மலியோடதான் கோவம். மம்மலி, முன்ன மீரா வட்டான மாமாட ஊட்ட வெச்சி அடிபுடிப்படக்குள்ள ஒலக்கையால எறிஞ்ச கோவமாக்கும்.’ பாதி உண்மையைச் சொன்னான்.

அதுக்கு ஒனக்கேண்டா அடிக்கான்?’

மம்மலிய நாந்தான் குத்திக்குத்தி உர்ரன் எண்டு நெனக் கான் போல.’

செரி . . . அவன் அடிக்கக்குள்ள நீ என்ன மைரப் புடுங்கின? தல ஒடஞ்சி வந்திரிக்கியே . . . ரோசமில்லாம.’

கண்ணுக்க கொச்சிக்காத்தூள அப்பிட்டான் வாப்பா . . . இல்லாட்டி என்ட வக்கிவாளால மூனு பேரையும் வெட்டி அரிஞ்சிரிப்பன்.’

பெரிய போடியார் ஓரளவு சமாதானமடைந்தார். பின்னர் உள்ளறைப் பக்கம் திரும்பி சத்தமாக,

எங்க புள்ள . . . மம்மலிர பெஞ்சாதி யம்முனா இரிக்காளா புள்ள?’ என்று கேட்டார்.

வெசளம் உட்ட கன்நேரம். இப்ப வந்துருவாள்.’

, அந்தா வாறா அவள்தானே?’

ஓம் போடியார் . . . முக்குலத்தோட வாறாள்.’

யம்னா வந்து சேர்ந்தாள். தலையெல்லாம் கலைந்திருந் தாள். அழுதழுது முகம் வீங்கியிருந்தாள். மூக்குச் சீறிச்சீறி முந்தானையால் துடைத்தாள்.

டியெ . . . யம்முனா . . . என்டி கொளர்ராய் . . . கொளராத.

மம்மலிய பத்திப் பயப்படாத . . . பெரிய காயம் ஒண்ணுமில்ல.

பெரிய ஆஸ்பத்திரியில கவனிக்கச் சொல்லியிருக்கன் . . . செலவுக்கு காசு வேணுமெண்டால் உள்ளுக்க வாங்கிக்க. மம்மலிய பழயபடி லேசாக்கித்தார என்ட பொறுப்பு. நாளக்கி வந்துருவான். அவன் வெர மட்டுக்கு நீ இஞ்சயே இரி . . .செரியா?’

இங்கே இருப்பதா? யம்னா தயங்கினாள். சின்னப் போடியாரின் விஷமக் கண்களைச் சந்திக்கப் பயந்தாள். வேற வழியில்லாமல் மையமாகத் தலையாட்டினாள். சட்டெனப் பெண்கள் பக்கம் புகுந்துவிட்டாள். போடி வீட்டுப் பெண்கள் தம் சோகத்தைச் சற்று ஒத்திப்போட்டு, யம்னாவின் துயரத்தைப் பாரமெடுக்க அவளைச் சூழ்ந்தனர்.

செரி . . . எல்லாம் கொடியேத்தம் முடிஞ்சாப் பெறகு பாப்பம். இப்ப, கந்தூரிக்கி வேண்டிய வேலயளப் பாப்பம் . . . எல்லாரும் கேளுங்க.’

காட்டுப்பள்ளி கொடியேற்று விழா இறுதித் தினத்தன்று நிகழவுள்ள அன்னதானம் சம்பந்தமாக, பலருக்கும் பல கட்டளை களைப் பிறப்பித்துவிட்டு பெரிய போடியார் எழுந்தார். சபை எழுந்தது. மீராவட்டானை மட்டும் அப்படியே அசை யாதிருந்தார். உடையார்ப் பொலிசானை நெடியாள் திடலுக்குப் போகிறார். கட்டாயம் உமறுலெவ்வை பிடிபடுவான். மறியல் தீர்ந்தால், இனி உபாத்தியாயர் வேலையும் கிடையாது. செரி எக்கேடாவது கெட்டுப் போகட்டும் நாய் . . . சின்னப் போடியாருக்கும், மம்மலிக்கும் அடிச்சவன், பெரிய போடியின் பகையைச் சம்பாதித்தவன், இனி நமக்கு முறை மருமகனு மில்லை முறைக்கு மருமகனுமில்லை. திடீர் முடிவெடுத்தார். எழுந்தார். வீட்டில், செய்னம்பு தனியாகக் காத்திருப்பாள். எப்படி அவளிடம் இதையெல்லாம் சொல்ல? மிகுந்த யோசனையுடன், வீதியில் இறங்கி நடந்தார். பூமரச் சந்தியில் திரும்பியபோது, தோளில் யாரோ சுரண்டுவது போலிருந்தது. திரும்பினார். சின்னப் போடியார்!

வட்டான  மாமா!’  என்றான்  மரியாதையுடன். சிரித்தான்.

சி . . . சின்னப் போடியாரா . . . என்னம்பி?’

ஒண்டுமில்ல. நீங்க வாப்பாக்கிட்ட என்னப்பத்திச் செல்லிக் குடுக்கயில்ல.’

நான் என்னத்தச் செல்ற சின்னப் போடியார்? எனக் கிட்டதான் ரெண்டு மகள் இல்லியே. உள்ளதும் ஒரே மகள் . . .

நா என்ன செய்யிற? வெறுவாய்க்கில்லாத ஒரு பொட்டைக் காக கொலையே உளப் பாக்குது . . . இத்துன பெரச்சினயும் அவளாலதான் வெருது.’

வட்டான மாமா! கோவிச்சிக்காதீங்க. என்னுல கோவமா ஒங்களுக்கு? நான் ஒண்டுல சோட்டப்பர்ரது பொழையா? அதுக்காக வழி மறிச்சி அடிக்கலாமா எனக்கி?’

ஒங்கள்ள பொழல்ல சின்னப் போடியார்., நீங்க சோட்டப் பர்ரதும் பொழல்ல . . . ஆனா, இன்னொருத்தன்ட உரித்துல சோட்டப்பர்ரதுதான் சிக்கல்.’

உரித்து எண்டால், ஒமறுலெவ்வக்கி வாக்கு குடுத்திட்டீங் களா மாமா?’

அப்பிடில்ல சின்னப் போடியார்! அவன் அப்பிடி நெனச்சிரிக்கான் . . . அதச் சென்னன். எனக்கென்ன, நீங்களும் ஒண்டுதான் அவனும் ஒண்டுதான் ரெண்டுபேருல ஒரு ஆளத்தானே நான் எடுக்கலாம்.’

என்ன வட்டான மாமா செல்றீங்க?’

ஒண்டு நீங்க இல்லாட்டி அவன்.’

அது செரி வட்டான மாமா . . . நீங்க போங்க.’

சின்னப் போடியார் மரியாதையாக வழிவிட்டு ஒதுங்கின£ன். மீராவட்டானையின் பேச்சு நம்பிக்கை தந்தது. என்னது . . . நான் இல்லாட்டி உமறுலெவ்வை. உமறுலெவ்வை இல்லாட்டி நானா? சின்னப் போடியாரின் மனதில் திடீரென ஒரு குரூர எண்ணம் தோன்றி மறைந்தது. இதையறியாத மீராவட்டானை விரைவாக நடந்தார். ஏதோ நெஞ்செல்லாம் பரவி வலித்தது. மூச்சிரைத்தது. மத்தியானம் சாயும் வேளை. வெய்யில் சுள்ளென எரிக்க ஆரம்பித்தாலும், தூரத்தே இடி முழக்கம் கேட்டது . . . விரைவாக மழை வரலாம். அடர்ந்திருந்த பூஞ்சண மர நிழல்களினூடாக வந்து பள்ளிச் சந்தியில் ஏறினார். உடனேயே அதிர்ச்சியடைந்தார்.

 

பள்ளிச் சந்தியில், உடையார் பொலிசானையின் வில்வண்டி நின்றுகொண்டிருக்க பொலிசானை கம்பீரமாகச் சவுக்கைச் சுழற்றியபடி, ஒருத்தனை விளாசிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு அடிக்கும் வாய்விட்டலறிச் சுருண்டுகொண்டிருந்த அவன் அஞ்சலிர பேரன்! அவனை ஊர்காவற் சேவகர்கள் இருவரும் ஆளுக்கொரு பக்கம் பிடித்துக்கொண்டிருந்தனர். சனங்கள் இந்தப் பகிரங்க வதையைப் பார்த்துப் பதைபதைத்துப் போயிருந்தனர். மீராவட்டானை பரபரப்புடன் அவர்களை நெருங்கினார்.

உடையார் பொலிசான! பொலிசானே!’

ஙா . . . மீராவட்டானையாரா? பாருங்க! இவன் தானே அஞ்சலிர பேரன் என்கிறவன்?’

ஓம் . . . பொலிசானை!’

இவன்தானே ஒமறுலெவ்வ ஆக்களோட வந்து ஒங்களுக்கு ராக்கிளியால அடிச்சவன்?’

இல்ல பொலிசான! அவன் ராக்கிளி அலி. அதுக்கு பெராது குடுக்கயில்ல.’

செல்லண்டா நாயே! எங்கடா மத்தாக்கள்?’ பொலி சானையின் சவுக்கு உயரே காற்றில் எழும்ப விஷ்ஷ்ஷ்க்கென்றது. சவுக்கு தாழ்ந்தபோது, அஞ்சலிர பேரன் அலறி ஒடுங்கினான்.

செல்றன்! செல்றன்! உடுங்க காக்கா! அடிக்காதங்க காக்கா! என்டம்மோவ் . . .’

சவுக்கு பாம்புபோல் நெளிந்து சுருண்டது.

செல்றா . . . நாயே!’

நா . . . நா . . . கொச்சிக்காத்தூள் மட்டும்தான் காக்கா, எறிஞ்ச! ஒமறுலேவயும், அவன் ராக்கிளி அலியும்தா அடிச்ச . . .

இப்ப ரெண்டுபேரும் நெடியாள்ர தெடலுக்குப் போயி சொக்கனாப் போடிர காலைக்க ஒளிச்சிருக்காக காக்கா! என்ன உட்றுங்க காக்கோவ்! நான் வருத்தக்காரன்’

உடனே பொலிசானை வில்வண்டியில் ஏற, ஊர்காவற் சேவகர்கள் அஞ்சலிர பேரனை இழுத்து வில்வண்டியில் தள்ளித் தாமும் ஏறினர். ஊர்ச்சனங்கள் திகிலுடன் பார்த்துக் கொண்டிருக்க நெடியாள் திடல் பக்கம் பாய்ந்து விரைந்து சென்றது வில்வண்டி.

இனித் தப்பேலா ஒமறுலேவயும் ராக்கிளி அலியும்.’

புடிச்ச ஒடனே புளியந்தீவுக்கு அனுப்பிருவாரு பொலிசான.’

தீவாந்தரம் போய் திரும்ப இனி எப்பயோ?’

அது மட்டுமா . . . பொலிசானட அடியில எரத்தம் கக்கும்.’

வலித்துத் துடித்த இதயத்தைப் பொத்திக்கொண்டே மீராவட்டானை வீடு நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தார்.

போகம் 8

குடலை

 

அந்தா வாப்பா வந்துட்டாரு.’

செய்னம்புவின் பரபரப்பான குரல் கேட்டதும்தான் தன் வீடு வந்துவிட்ட உணர்வு பெற்றார். நிமிர்ந்து செய்னம்புவின் முகத்தை ஏறிட்டு நோக்கினார். எப்படி இவளிடம் சொல்ல? தாங்குவாளா? செய்னம்பு பரபரப் புடன் உள்ளோடிச் சில்லென்று தண்ணீரும், வெற்றிலைப் படிக்கமும் கொணர்ந்தாள். மீராவட்டானை தன் சால்வையை அவளிடம் கொடுத்து விட்டுத் திண்ணையில் செயலற்று உட்கார்ந்தார். அவரது வருகையை அறிந்து முக்குலத்து மூத்தம்மாவும் சக அயல் பெண்களும் பரபரப்பும் ஆர்வமுமாக முற்றத்தில் குழுமினர்.

என்னயாம்டா தம்பி . . . பொலிசான வந்தயாம்?’ காதிலிட்ட பென்னம்பெரிய அல்லுக்குத்துகளின் பாரத்தி னாலும், ஊர்ப் புதினங்கள் அளவுக்கு மீறிக் கேட்ட தாலும் காது ஓட்டைகளிரண்டும் இழுபட்டுத் தொங்கிக் கொண்டிருந்த முக்குலத்துக் கிழவியின் கேள்வி எரிச்ச லூட்டியது.

நடக்கறதெல்லாம் ஒனக்குப் புதினமாரியிரிக்காடி பசளக் கௌவி?’

இல்லம்பி! அஞ்சலிர பேரனப் புடிச்சயாம் . . .

ஒமறுலேவயும், ராக்கிளியும் புடிபடலியாம்.’

எல்லாம் தெரிஞ்சி வெச்சிட்டு மறுகா என்னடி கேள்வி கேக்காய்?’

ஒமறுலேவ புடிபடுவானாம்பி . .?’

கத கேக்காம உடமாட்டாள் ஓட்டக் கௌவி! பாரன். . . காதுகள்ள ஓட்டைக்க ரெண்டு குளுமாட்டக் கட்டிப் போட லாம்! அவனப் புடிக்கத்தாங்கா பொலிசான நெடியாள்ர தெடலுக்குப் போயிருக்காரு . . . இந்நேரம் புடிச்சிருப்பாரு.’

என்னது?’

வேறன்னகா செய்ற? நாய்க்கௌ ஊருல பெரிய சன்டியனா வேக? போடி வங்கிசத்தில கை வெச்சா உடுவாகளா? பெரிய போடியாரு நெல்லவருதான் எரங்குவாருதான் ஆனா சொந்த மகனுல கை வெச்சா, மம்மலிர தலயப் பொழந்தா உட்ருவாரா? நாய்க்கி இனி வாத்தியாரு வேலயும் கெடைக்க மாட்டா. தீவாந்திரம் போனவனுக்கு வாத்தி வேல குடுப்பாகளா? இனி என்ன செய்ற . . . மண்ணத் திண்டு மழத் தண்ணியக் குடிக்கிறான்.’

தந்தையின் பேச்சைக் கேட்டுக்கொண்டே கெழக்கன் மீன் அரிந்துகொண்டிருந்த செய்னம்புவுக்கு இப்போதுதான் உமறுலெவ்வை மச்சான் செய்த வேலையின் பாரதூரம் புரிந்தது. உமறுலெவ்வை மாட்டுப்படுவது சர்வ நிச்சயமாகத் தெரிந்தது. நிலைமை தன்னை மீறிப் போய்விட்டது சந்தேகமறத் தெரிந்தது. உமறுலெவ்வைக்கும் சின்னப் போடியாருக்கு மிடையிலான இந்தப் பகையுணர்ச்சிக்கு, நீர்ப் பிரச்சினை தவிர, தான்தான் முக்கியமான ஒரு காரணம் என்று புரிந்து கொண்டபோது, முகம் ஒரு கணத்தில் கூம்பி வாடியது. மீராவட்டானை மகளின் முக மாறுதலைச் சாடைமாடையாகக் கவனித்தார் . . . அவருக்கே முகம் இருண்டுவிட்டது. ஆயின், என்ன செய்ய?

அப்பிடிண்டா, ரெண்டு பேரையும் புடிச்சிப் புளியந்தீவுக்கு ஏத்திருவாக போல . . .’

நீயான் புடிச்சி ஏத்தி உடண்டி பசளக் கௌவி!’

கோவியாதம்பி! எளந்தாரித் தனத்துல சண்டித்தனம் காட்ட தொடங்கினா இதானே கெதி.’ என்று முக்குலத்துக் கிழவி சுயதீர்ப்புச் சொல்லிய அதே கணத்தில் வீதிப்பக்கமாக ஒரு பெண்ணின் அலறல் ஒப்பாரிச் சத்தம் கேட்டது. யாரது . . . யம்னாவா?’

வட்டான மாமோவ்! வட்டான மாமோவ்!’

எ . . . யம்முனா! என்னடி இது கோலம்? ஏன்டி கத்துறாய்?’ மீராவட்டானை விசுக்கென எழுந்தார். செய்னம்பு பரபரப்புடன் வேலிக்கு மேலால் துள்ளிப் பார்க்க, யம்னா லாத்தா ஓடிவருவது தெரிந்தது.

 மாஆமாவ்! அன்னா ஒமறுலேவயயும், ராக்கிளியயும் புடிச்சிட்டுப் போறாக காக்கோவ் . . .’

சட்டென மீராவட்டானை மிதியடி, சால்வையும் மறந்து பரபரப்புடன் வீதியில் விரைந்திறங்கி சந்தைப் பக்கமாகத் தொங்கோட்டமாக ஓடிச்சென்றார். செய்னம்பு திடுக்கிட்டுப் போய் . . . மூர்சித்துப் போய் யம்னாவின் தோள்களில் சரிந்த£ள். இதைக் கவனியாத முக்குலத்துக் கிழவி புதினம் பார்க்கவும், புதிய தகவல் சேர்க்கவும், மீராவட்டானையின் பின்னால், தேவையற்ற ஒப்பாரிச் சத்தத்துடன் ஓடிவந்தாள்.

சந்திக்கு வந்த போது, சனங்கள் கூட்டம் கூட்டமாக நின்று பரபரப்புடன் பேசிக்கொண்டிருந்தனர். சந்தியில் நின்று சம்பவத்தை விபரித்துக்கொண்டிருந்த கொட்டுமீராய்வு மீராவட்டானையைக் கண்டதும்,

ஙா . . . மீராவட்டானே! வேல செரி! ஆக்கள் புடிபட்டுட் டாக. . .அந்தா பொலிசான கொண்டு போறாரு.’

ஆத்தக் கடந்துபோயிட்டாகளா கொட்டு மீராய்வு?’

கன்நேரம் போன! இந்நேரம் பாத கடந்திருப்பாக. இல்லா?’

செரி . . . உடு!’

பொத்திப் பொத்தி வளத்த என்ட கண்டே. . . பொந்துக்க வெச்சி தீத்தின குஞ்சே . . .’ முக்குலத்துக் கிழவி ஓலமிட்டரற்றி னாள்.

பொத்துரி வாய . . . பசளப் பண்டமே!’

மீராவட்டானை இறுக்கமான முகத்துடன், செய்வதறியாது திகைத்துப் போய் நின்றார். என்ன செய்ய? மயங்கி விழுந்த மகள் செய்னம்புவைப் பார்ப்பதா அல்லது புளியந்தீவுக்குக் கொண்டு செல்லுமுன்பே உமறுலெவ்வையைக் காப்பாற்று வதா? யாரால் காப்பாற்ற முடியும்? ஒரே வழி பெரிய போடியாரின் கால்களில் விழுவதுதான் செய்னம்புவை அவசர அவசரமாகப் பக்கத்து வீட்டுப் பசிந்தும்மாவிடம் ஒப்படைத்து விட்டு, பெரிய போடியாரின் வீட்டுக்கு விரைந்து நடந்தார். வாசலிலேயே, பெரிய போடியாரும் சின்னப் போடியாரும் நின்றுகொண்டிருக்க சுற்றிலும், வயற்காரர்கள். எடுபிடிகள். சனங்கள். பரபரப்புடன் சளசளத்துக் கொண்டிருந்தனர். பெரிய போடியார் வட்டானையைக் கண்டதும்,

ஙா . . . வட்டான! வாங்க!’ என்றார்.

மீராவட்டானை கறுத்துப்போன முகத்துடன் உயிரற்றுச் சிரித்தப்படியே,

அ . . . ஆ . . .க்கள் பொலிசான கொண்டு போறாரு போல . . .போடியார்!’ என்றார்.

ஓம் வட்டான! கொண்டு போகக்க இஞ்ச கொண்டாந்து காட்டிட்டுத்தான் போறாரு.’

வ் ... பொ . .. போடியார்!’ மீராவட்டானை சொல்வதறியாது தயங்கினார்.

என்ன வட்டானே?’

ஹிஹ்க்கி . .! ஒ . . . ஒண்டுமில்ல . . . ந்த . . .’ சுற்றியிருந்தவர் களைக்கண்டு பேச்சுவரவில்லை. ஆனால், இவரது தயக்கத்தைப் புரிந்துகொண்டார் பெரிய போடியார்.

வ . . . வட்டானே! இப்பிடிக் கொஞ்சம் வாங்க.’

மீராவட்டானையைத் தனியாக அழைத்துக்கொண்டு, முன்சாப்பு வழியாகப் பெட்டக அறை பக்கமாக வந்தார். பெண்கள் ஒதுங்கி வழிவிட்டனர். பெரிய போடியாரின் பெட்டக அறை அவரது பிரத்தியேக அறை. அதற்குள் யாரும் நுழைவதற்கு அனுமதியில்லை. அபூர்வமாக மீராவட்டானை இரண்டொரு தடவைகள் வாசலில் நின்று பேசியிருக்கிறார். பெரிய போடியார் இம்முறையும் அறைக்குள் கூட்டிப்போகாமல், அறையை ஒட்டியுள்ள ஒதுக்குப்புறத் தாழ்வாரத்தில் கிடந்த பெரிய மரப் புட்டுவத்தில் அமர்ந்துகொண்டு மீராவட் டானையைப் பார்த்தார்.

எ . . . என்ன வட்டான? இப்ப செல்லுங்க.’

சட்டென சின்னப் போடியார் விரைந்து சத்தமெழுப்பாது வந்து, பெட்டக அறையின் பெரிய கதவுக்குள் இவர்கள் பேசுவதைக் கேட்குமாப் போல், பதுங்கி நின்றான்.

 

என்ன வட்டான?’ என்று திடீரென்று மறுபடியும் கேட்டார் பெரியபோடியார்.

போடியார் . .!’ மீராவட்டானை வார்த்தை சிக்கி, வாய் திக்கி பயத்துடன் தயங்கினார்.

செல்லுங்க. எதுண்டாலும் வெளக்கமாச் செல்லுங்க . . .

என்ன?’

போ. . . போடியார்! அ. . . அவன் செஞ்ச வேல பச்சப் பொளதான் . . . அதுக்கு ரெண்டு தட்டுத்தட்டி உட்டுட்டா நெல்லது போடியார் . . . பொலிசானட்ட குடுத்தா புளியந்தீவுக்கு ஏத்தி உட்றுவாரு. வாத்திவேலயும் எடுக்க ஏலாமப் போகும் . . . ஹிஹ்க்கி . . . போடியாருக்குத் தெரியிந்தானே?’

அதுக்கு?’

அதுக்கு அல்லாட மொகத்துக்காக, இந்தக் காட்டுப்பள்ளி அவ்லியாட வறக்கத்துக்காக, நீங்கதான் அவன . . . அவனப் படிப்பிச்ச . . . ஒங்குட வாப்பாட பேரால கட்ற பள்ளிக் குடத்துக்கு, அவனத்தானே வாத்தியாரா போட இரிக்கிறத்தால,   . . .த . . .தகப்பனத் தின்னிய நீங்கதான் பொள பொறுத்து புளியந்தீவுக்கு ஏத்தாம ஆக்கனும் . . .ம்க்ஹ் . . .’

பெரிய போடியாரால் பேச முடியவில்லை. சட்டென மீராவட்டானை எதிர்பாராத விதமாகப் பெரிய போடியாரின் முழங்கால்களைக் குனிந்து பிடித்தார்.

போடியார் . .! எண்ட அளகு சீமானே! அந்த அறாமியக் காப்பாத்துங்க போடியார் ... இனிச் சாகுற மட்டுக்கும் ஒங்களுக்கு அடுமயா இரிந்து சேவகம் செய்யிறன்.’

வட்டான! வவ்வட்டான! என்னது . . . எழும்புங்க . . .

எழும்புங்க !’

பெரிய போடியார் திகைத்துப்போனாலும், வெளியே காட்டிக் கொள்ளாமல் கற்சிலைபோல அமர்ந்திருந்தார். மறைவில் நின்றுகொண்டிருந்த சின்னப் போடியாரோ மீரா வட்டானையின் நடத்தையில் வெலவெலத்துப் போனான். மீராவட்டானையின் கெஞ்சுதல், பெரிய போடியாரின் மனதை இளகச் செய்துவிடும் என உணர்ந்தான்.

சற்று நேரம் ஒன்றும் பேசாமல் கடுமையான யோசனை யுடன் இருந்த பெரிய போடியார், பின்னர் தன்னைச் சுதாரித்துக் கொண்டு, மீராவட்டானையின் கண்ணீர் முகத்தைப் பார்த்துச் சொன்னார்.

வட்டான . .! கொஞ்சம் சபுறு பண்ணுங்க! அவன் வாப்பால்லாத அநாதிண்டு சென்னீங்க. செரி, அதுக்காக இல்லாட்டியும், ஒங்களுக்காக . . . நான் என்ட மகன் மம்மனி வாட்ட கதச்சிப் பாக்கன். அவன் செரிண்டால், எனக்கிம் செரி . . . அவன் ஏலாண்டால், நா ஒண்டுஞ் செய்யேலா . . . என்ன செரியா?’

இம்பட்டும் போதும். அல்லா பெரியவன்! போடியாரு . . .

அல்லா ஒங்கட வங்கிசத்த வாழ வெப்பான்.’

செரி. வட்டான நீங்களும் அவன் மம்மனிபாட்ட ஒருக்காக் கதச்சிப் பாருங்க . . .’

இப்ப கதைப்பன் பெரிய போடியார்!’

புடிபட்ட ஆக்கள ரெண்டு நாளக்கி சாய்ந்தமருதுல பொலிசானட கந்தோருல வெச்சிருப்பாக. பொறகுதான் புளியந்தீவுக்கு ஏத்துவாக . . . அதுக்கெடையில என்னயுஞ் செய்யிறத்தச் செய்யலாம் . . . பாப்பம்.’

ஓ . . . ம் . . . போடியார் . .! இந்த ஒதவிய என்ட வகுத்துவார் உள்ளமட்டுலும் மறக்கமாட்டன் போடியா . . . ர்.’

செரி, நீங்க போங்க! மம்மனிவாட்டக் கதைங்க! நான் தொழப் போறன் . . .’

சின்னப் போடியார் திடுக்கிட்டுப் போனான். ‘என்னது . .? என்னிடம் பாரத்தை ஒப்பளித்துவிட்டாரா வாப்பா? இப்ப மீராவட்டான வந்து, காலில் விழுந்தால்? எப்படி அவரிடம் மறுத்துரைப்பது? மறுத்தால், செய்னம்புவைத் தரச் சம்மதிக்க மாட்டார். மறுக்காவிட்டால், உமறுலெவ்வை காப்பாற்றப் பட்டு விடுவான் . . . என்ன செய்ய? என்ன செய்ய? சட்டென சின்னப் போடியார் தானிருந்த இடத்தை விட்டும் துரிதமாக வெளியேறிவிட்டான். மீராவட்டானை வெளியே வந்தார். எப்படியாவது சின்னப் போடியாரையும் சரிக்கட்டினால்? மீராவட்டானை நம்பிக்கையுடன் வாசலுக்கு வந்தார். சின்னப் போடியாரைக் காணவில்லை. எங்கே போயிருப்பான்? பெரிய போடியாரின் இளைய மகள் மிதுஹாம்மா நின்று கொண் டிருந்தாள்.

புள்ளேய்! எங்ககா. . . சின்னப் போடியாரக் காணயில்ல.?’

இப்பதான் வில்லுக்கரத்தையில ஏறிட்டுப் போறாரு காக்கா! எங்கண்டு தெரியா . . .’

செரி வெரட்டும்! நான் எதுக்கும் ஊட்ட போய் வரன்.’

திடீரெனச் சிலீரென்ற குளிர்காற்று வீசியது. வானம் இருண்டு கதறியது. பெரிய மழைக்கான ஏற்பாடுகளில் வானம் மும்முரமாயிருந்தது! சின்னப் போடியார் இந்நேரம் எங்கே போயிருப்பான்? தாமதம் கூடாது . . . தாமதிக்கத் தாமதிக்க உமறுலெவ்வைக்கு ஆபத்து.

வட்டான மாமா’ மள வெரப்போகுது. நிண்டு போங்க’ என்றாள் மிதுஹாம்மா.

இல்ல புள்ளேய். .! ஊட்ட செய்னம்பு, இந்தப் பெரச் சினையால கொஞ்சம் அசந்து போய் உளுந்துட்டாள். . . நான் டக்கெண்டு போகணும் புள்ளே. . .ய்! நான் போறன். . . மள நெல்லாப் பேயட்டும். . . பயனியன்ட கட்டுல தண்ணி வெரட்டும். . . காட்டவ்லியாப்பாட துஆ வறக்கத்து எல்லாம்.’

பாதி நிம்மதியுடன் வீதியிலிறங்கினார். சின்னப் போடி யாரை எப்படி சம்மதிக்க வைப்பது? அவ்வளவு இலகுவாகப் பகையுணர்ச்சியை மறப்பவனல்ல சின்னப் போடியார். வானம் திடுதிடுத்தது. ‘சட்டட்ட்டீர்ர்’ என முகத்திலடித்தாற் போல் வெட்டிய மின்னல், பெரும் வெளிச்சக் கோடிழுத்து மேற்கு வான் மூலைக்கு ஓடியது. . . தொடர்ந்து வானம் கமறியது. விசிறியடித்தது காற்று. கிராமத்தின் எல்லா மரங்களையும், வேகத்துடன் ஊடுருவி ‘வ்வ்வூய் . . . வ்வ்வ்வூய்ய் . . .’ என்று ஓலமிட்டது. கறுத்துக் கிடந்த மேகச்சீலை கிராமத்தை மூடியது. இனம் புரியாப் பயங்கரம் மனதில் உறைந்தது. சொட்டுத் துளிகள் விழத்தொடங்கின . . .

முதலில் பாரிய துளிகள் ஒன்றிரண்டாக விழ ஆரம்பித்த போதே யம்னா தனது தோப்புக்குத் திரும்பிவிட்டாள். மூர்ச்சை யாகி விழுந்த செய்னம்புவை ஆசுவாசப்படுத்தி, முக்குலத்துக் கிழவியிடம் ஒப்படைத்துவிட்டு, தனது மாற்றுப் புடவையையும், பரிகாரியின் காயகல்பக் குளிகைகளையும் எடுத்துக்கொண்டு, மறுபடி செய்னம்புவின் வீட்டுக்குத் திரும்பும் எண்ணத்தோடு வந்திருந்தாள். மம்மலியின் நிலையை எண்ணிக் கோபத்திலும் பரிதாபத்திலும் குமைந்தது மனது. திடீரென வலது வயிற்றில் மெல்லிதான ஒரு துடிப்பை உணர்ந்தாள் . . . வாரிசு! பயத்தில் மனது விறைத்தது. மம்மலி இல்லாமல் இங்கே படுக்க முடியாது. பெரிய போடி வீட்டில் கூப்பிட்டாலும் படுக்கவே கூடாது . . . மம்மலி திரும்ப மட்டும் இனி செய்னம்புவின் வீடு ஒன்றுதான் பாதுகாப்பான தங்குமிடம்.

காற்று தோப்பின் மரங்களை வில்லாக்கி, நேராக்கி விளையாடியது. பழுத்த தேங்காய்களும், காய்ந்த ஓலைகளும் வேகமாக விசிறப்பட்டன. தோப்பின் கூளன்களும், தூசுகளும், புழுதிப்படலமாகிக் கண்களை மறைத்தன. திடீரென மின்னல் உச்சி வானைக் கிழித்து, விண்வெளியில் படீரெனப் பேரொலி யாய் வெடித்தது. பெரியவெளி வயற் பரப்புகளுக்கப்பாலிருந்து பெரும் மழை துரத்தி வரும் பேரோசை கேட்டது. வேகமாகத் தனது உடைமைகளைச் சேகரித்தாள். போகத் திரும்பினாள் . . .

ஆனால், மழை வந்தேவிட்டது. குடிசையின் சின்ன வாயிலி னூடே சிலீரிட்டு அடித்த சாரலுடன் ஒரே சமயத்தில், கூரை மீது பலத்த சத்தமாய்ப் படர்ந்து பிடித்தது மழை.படலையூடே பார்த்தபோது, எதுவும் தெரியவில்லை. அடர்த்தியான நீர்த்தாரைகளினூடே எல்லாம் புகை மயம். பேயாப் பெருமழை பிடித்தே விட்டது. என்றாலும், போயே ஆக வேண்டும். மழையில், வெளியில் இறங்கவே பயமாக விருந்தது . . . கொஞ்சநேரம் சும்மா பேய் மழையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னர் மேற்பரணில், சொருகப்பட்டிருந்த தளப்பத்து மடலை இழுத்தெடுத்தாள். விரித்துப் பிடித்துப் பார்த்தாள். இனிப் போகலாம் . . . பேரிடியும், முழக்கமும் கொஞ்சம் நிற்கட்டும் எனக் காத்திருந்தாள்.

தாற்புற்களும், வைக்கோலும், குறுக்கும் நெடுக்குமாக இறுக்கமாகப் பின்னப்பட்டு, வேயப்பட்டிருந்த குடிசையின் உள்ளே ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இறங்கவில்லை. அப்படியே வெறும் தரையில் உட்கார்ந்தாள். படலைப் பக்கம் தலைவைத்துச் சாய்ந்து படுத்தாள். பற்பல நினைவுகளில் மனம் அல்லாடிக் கொண்டிருந்தபோது படலையருகே, யாரோ செருமிக் கனைக்கும் சத்தம் போல ஏதோ கேட்டது. திடுக்கிட்டு உற்றுக் கேட்டாள். சட்டென எழுந்து உட்கார்ந்தாள். யாரும் வருகிறார்களா . . . அல்லது. .?

திடீரென, பச்சவடச் சிறுவால் வெளித்தெரியும் வண்ணம் உயர்த்திக் கட்டிய சாரனும், தொப்பலாக நனைந்த கைபெனியன் சட்டையுடனும், மழைத் துளிகள் சொட்டச் சொட்டியபடி யிருந்த பனைமடல் மட்டையை விரித்துப் பிடித்தபடி, வழியின் குறுக்காக ஆறடி உயரத்தில் நின்றுகொண்டிருந்தான் சின்னப் போடியார். அவனது விஷமக் கண்கள் யம்னாவைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தன. வாரிச்சுருட்டிக் கொண்டெழுந்தாள் யம்னா. ஆனால்,

யம்முனா . . . இண்டைக்கித்தான் கடைசித் தரம் . . .’ என்று சொன்ன சின்னப் போடியார் முகம்மதனிபா உள்ளே அடியெடுத்து வைத்தான். தூரத்தே அண்டம் குலுங்குமாப் போல், ஒரு பேரிடி வெடித்து முழங்கியது. அதீத வேகமிக்கச் சாரலுடன் பேய் மழை அகிலத்தைப் பேரிரைச்சலுடன் மூடியது.

போகம் 9

பாலேறு

இள வெய்யில் இதமாக இருந்தது. இரவெல்லாம் அடித்த பேய்மழை முற்றிலும் ஓய்ந்துவிட்டது. வறண்டு கிடந்த பூமியாதலால், மழை வெள்ள நீரைச் சற்றும் இல்லாது பூமி உறிஞ்சிவிட்டது. எப்படியோ, காட்டுப் பள்ளி கொடியேற்றத்தின் இறுதித் தினமான இன்று மழை இல்லாதது வசதியாகிப் போய்விட்டது. கிராமத்தின் சனங்கள் புத்துணர்ச்சியுடன் காட்டுப்பள்ளி முற்றத்தில் திரண்டனர். இறுதி அன்னதானத்திற்கான ஏற்பாடுகள் வெகு துரிதமாக நடந்தேறின. அதிகாலையிலிருந்தே, பக்கீர் பாவாக்களின் ‘தீன்’ ‘ராத்திப்பு’ உச்சாடனங்களும், ‘பைத்து’களும் ஒலிபெருக்கியில் முழு இடம்பிடித்திருந்த படியால், தற்காலிகமாக ‘சிங்காரமொத்த ஜயமே . . .’ நிறுத்தப்பட்டிருந்தது.

பெண்கள் பள்ளி முற்றத்தில் சமையல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். பெரிய பெரிய தாச்சி அண்டாக்களில், சின்னச் சீநெட்டி அரிசி இட்டு வெந்து பதமாக வரும்போது, அதனுள் தேங்காய்ப்பால், மஞ்சள், ஏலம், கறுவா, இறம்பை, முந்திரிப்பருப்பு, பசுநெய், சிறிதளவு பன்னீர் என்பன விட்டுப் புளுங்கியபோது, ஊர் முழுக்க வாசனை கமகமத்துப் பரவியது. காட்டுப் பள்ளி அவ்லியா அப்பாவின் கிருபை கடாட்சம் வேண்டி, முறைப்படியான மார்க்க அனுஷ்டானங்கள் முடிவடைந்த பின்னர் அன்னதானம் பெரிய போடியாரின் தலைமை யில் பகிர்ந்தளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

பெரிய போடியாரின், வழமையான வருடாந்த ஏற்பாட்டில் மகிழ்ந்த சனங்கள், அவரை வாழ்த்திப் புகழ்ந்து சாப்பிட்டுச் சென்றனர். பக்கத்துக் கிராமங்களி லிருந்தும் அதிகளவான சனங்கள் ‘நார்சா’ சோற்றுக்காக வந்து வாங்கிச் சென்றனர்.

அன்னதான நிகழ்விடத்தின் வலப்புறமாகக் கொடியேற்ற முடிவு தினத்தின் உச்சக்கட்ட விநோத இரவு நிகழ்வாக இடம்பெறவுள்ள ‘பொல்லடி’க் கோலாட்ட நிகழ்ச்சிக்காக, விசாலமான முற்றம் சுற்றிவரக் கயிறு கட்டி பிரத்தியேகமாக்கப்பட்டிருந்தது. மீராவட்டானை யின் ஏற்பாட்டின் பேரில் வந்திருந்த பொத்துவில் பீர்முகம்மது அண்ணாவியார் விசிறிக்கட்டுத் தலைப்பாகையும் வெள்ளைக் கைபெனியனும் சிறுவால், சாறம், சால்வை, கையில் சிறு கைக்குட்டை சகிதம் கைகளில் தாவத்தும் கழுத்தில் மணிக் கொடியும், போடிமார் அணியும் செம்பாணி மிதிவடிக்கட்டை யும் பூண்டு தனிப்பெரும் கதாநாயகனாகிப் பெருமையுடனும் தனது பெருத்த பின்புறங்களுடன் அத்திடலில் தன் சிஷ்யர் களுடன் சின்னச் சின்ன ஒத்திகைகள் பார்த்துக்கொண்டிருந்த£ர்.

ஏகப்பட்ட சனங்கள் அவ்விடத்தில் குழுமியதை வட்டைக்கடை அலி விரட்டிக்கொண்டிருந்தான்.

மீராவட்டானை ஒரு பெரிய தாழைமடலில் தன் வீட்டுக்கு நார்சா சோறு அனுப்பியிருந்தார். செய்னம்புவும், யம்னாவும் கொஞ்சம் சாப்பிட்டனர். செய்னம்பு உமறுலெவ்வையின் கவலையிலும், யம்னா விவரிக்க முடியாத கலவர உணர்ச்சி யுடன் மம்மலியின் கவலையிலும், சொல்லமுடியாத வியாகூலத் துடனும் இருந்ததால் மணச்சோறும் அவ்வளவாக உருசியின்றி ஏதோ சாப்பிட்டு முடித்தபோது, திடீரென வாசலில் மம்மலியின் சத்தம் கேட்டது.

யம்முன! லெக்கோ. . . வ்! யம்முனா . .?’ பதிலில்லை!

ஙா . .! யம்னா லாத்தா, அன்னா! மம்மலிக் காக்கா வந்துட்டாரு.’

வெரட்டும் எக்கடாசு கெட்ட பொறப்பு!’ யம்னா வெறுப்பாகக் கூறியபோது மம்மலி உள்ளே வந்துவிட்டான். கைகளை வீசிவீசிக் காட்டினான் . . . சிரித்தான்.

பாத்தியா . . . யம்முனா! கை லேசாகிட்டு!’

கை துண்டு துண்டா முறிஞ்சி கழுத்தோட கட்டினாலும் ஒனக்குப் புத்தி வெராது. இஞ்சேய் நாரிசா இரிக்கி சாப்பிடுங்க!’ என்றாள் யம்னா கோபமாக.

நான் போடி வீட்டுல சாப்புட்டுட்டன் . . . ராவைக்கிப் பொல்லடி வேலைகளைப் பாக்கணும். அது முடிய பந்தல்பிரிக்கணும். . . சின்னப் போடியாரு தேடுவாரு. நான் போகட்டா புள்ளேய் . . . நீ இஞ்சயா ரெண்டு நாளும் படுத்த . . . ஏங்கா?’

எங்க ஆரோடப் படுத்தாத்தன் ஒனக்கென்ன? நீ போய் அங்கான் சின்னப் போடிட்ட போய்ப்படு.’

ஏங்கா கோவிக்காய்?’

நான் செத்துப் போனாத்தான் நீ திருந்துவாய் . . . இல்லா?’

என்னகா யம்முனா பேக்கத கதக்காய்?’

கத இரிக்கி ஒரு கொள்ளயா! இப்ப என்னோட காலைக்க போக வாங்க மொதல்ல.’

செரி வா! புள்ள செய்னம்போவ்! போய் வாறம் புள்ளே . . .ய்.’

பொல்லடி பாக்க ராவைக்கி வாறயா யம்னா லாத்தா?’

பாப்பம் . . . வெருவன். அன்னா வட்டான மாமாவும் வாறாரு. புள்ளேய் . .? வாப்பா!’

உள்ளே வந்த மீராவட்டானை மம்மலியைப் பார்த்து அதிசயமாக,

ஙா . . . மம்மலி! வந்துட்டியா? கை எப்பிடி . . . சொகமா?’ என்றார்.

ஓம் காக்கா! கை முறியல்ல . . . சின்ன உளுக்குத்தான். அண்டு கண்ணுக்க கொச்சிக்காத்தூள எறிஞ்சிட்டான். இல்லாட்டித் தெரிஞ்சிருக்கும் வேல . . .’

 செரிதான் . . .எல்லாரும் பொலிசானட்ட மாட்டுப் பட்டுடாகளே . . .தெரியிமா?’

தெரியும் . . . போடி ஊட்டுல சென்னாக . . . இனி தீவாந்தரந் தான்...’

ரெண்டு பேரையும் உத்தரவாதம் குடுத்து எடுக்க போடியாரு ஓம்பட்டுட்டாரு . . .அதுவும் தெரியிமா?’

என்னது . .? மெய்யா . . . அப்பிடி லேசில எணங்க மாட்டாரே பெரிய போடியார்?’

எணங்கிட்டாரு! சின்னப் போடியாரு ஓம்பட்டாச் செரி எண்டு செல்லிட்டாரு.’

அதானே பாத்தன் . . . சின்னப் போடியார் ஒருநாளும் ஓம்பட மாட்டாரு . . .’

நான் சின்னப் போடியாருட்டயும் கதச்சிட்டன் மம்மலி.’ மீராவட்டானையின் குரல் பயங்கர அமைதியுடன் வெளி வந்தது. செய்னம்புவும் திகைத்துப் போய் கூர்ந்து கேட்டாள்.

மெ . . . மெய்யா . . . சின்னப் போடியாரும் எணங்கிட் டாரா?’ மம்மலி ஆச்சரியமும் அவநம்பிக்கையுமாகக் கேட் டான். செய்னம்புவும் யம்னாவும் இந்த உரையாடல்களைக் கவனமுடன் செவிமடுத்துக் கொண்டிருந்தனர். செய்னம்பு வுக்குள் ஒரு சிறிய நம்பிக்கை ஒளிக்கீற்று உதயமாவதை அவளது சற்றே மலர்ந்த முகம் காட்டியது. மீராவட்டானை சற்று நேரம் பேசாமலிருந்தார். தன் வல்லுபத்தைப் பிரித்துக் கொஞ்சம் பாக்குத் தூளை அள்ளி வாயில் போட்டார். மம்மலியைக் கூர்மையாகப் பார்த்தார். செய்னம்புவைக் கடைக்கண்ணால் நோக்கினார்.

என்ன வட்டான காக்கா! சின்னப் போடியார் கடசிமட்டும் எணங்க மாட்டாரே!’

எணங்குவாரு! மகள் செய்னம்புவ சின்னப் போடி யாருக்குப் பண்ணிக் குடுக்க நான் எணங்கினா அவரு அதுக்கு எணங்குவாராம். எண்டு செல்லிட்டாரு . . .’

என்ன?’

அதிர்ச்சியில் உறைந்து போயினர் மற்ற மூவரும். செய்னம்பு வையா? சின்னப் போடியாருக்கா? வட்டானையும் சம்மதம் சொல்லிட்டாரா? ஆவலும், ஆர்வமும் பொங்கியெழுந்தன. மம்மலி அவசரமாகக் கேட்டான்.

காக்கா! நீங்க என்ன சென்னீங்க? ஓம் எண்டு செல்லிட்டீங் களா?’

அது . . . நானும் ஓம்பட்ட மாதிரித்தான்.’

 ‘எ... என்ன...து?’

அதிர்ந்து போய் நின்றனர் செய்னம்புவும் யம்னாவும். மம்மலி மகிழ்ச்சியில் திளைத்தான். ‘செரியான முடிவு காக்கா!’ என்றும் பாராட்டினான்.

மீராவட்டானை மகளின் முகத்தைப் பார்க்கத் தைரிய மற்று யம்னாவைப் பார்த்தார். உமறுலெவ்வையைப் புளியந் தீவுச் சிறைக்கு அனுப்பாமல் தவிர்ப்பதற்காக, சின்னப் போடியார் முன்வைத்த நிபந்தனையைத் தான் ஏற்றுக் கொள்ள நேர்ந்த கதையை மீராவட்டானை தயக்கத்துடன் விபரித்தார் .

உமறுலெவ்வை புளியந்தீவுச் சிறைக்கு அனுப்பப்பட்டால், அவனுக்குக் கிடைக்கவுள்ள உபாத்தியாயர் வேலை கிடையாமற் போய்விடும் என்பதையும், அதே சமயம் சிறைத் தண்டனை என்பது சுமார் இரண்டரை வருடங்கள் தீர்க்கப்படும் என்றும், சிறையில் வைத்தே உமறுலெவ்வையை அடித்து அங்ககீன மாக்கும் ஒரு குரூரத் திட்டமும் சிலருக்கு இருக்கவும் கூடும் என்பதையும், இவற்றினால் உமறுலெவ்வை இனி ஊர் திரும்பி னாலும் இல்லற வாழ்வுக்கு உதவாதவனாகவே காலம் கழிக்க வேண்டிவரும் என்றும், ஏற்கனவே முறை தவறிப் பிறந்த பழியுடன் வாழும் அவன் இத்தனையும் அனுபவித்த பின்னர் எப்படி வாழ்தல் கூடும் என்பதையும் மீராவட்டானை விபரித்த போது. அதிர்ச்சியில் திகைத்துப்போய் நின்றனர் மூவரும்.

இதுக்கெல்லாம் ஒரே ஒரு வழிதான் இரிக்கி. செய்னம்புவ சின்னப் போடியாருக்குக் குடுத்தா, ஒமறுலேவ வெளிய வந்துரு வான். வாத்தியாரு வேலையும் கெடக்கிம் . . . செயனம்புவுக்கும் நெல்ல போடிவீட்டு வாள்க்க அமையிம். எனக்கிம் என்ட தங்கச்சிர மஹனுக்கு மகளக் குடுக்க ஏலாட்டியிம் ஒரு நெல்ல உத்தியோக வாழ்க்கயாச்சும் அவனுக்குக் குடுக்கத்தானே வேணும் நான் . . .என்ட நெலப்பாடு வெளங்கிச்சாடா மம்மலி?’

மீராவட்டானை மம்மலியிடம் கேட்பது போல சாடை யாகத் தன் மகளிடம்தான் கேட்டார். பதில் பேசத் திராணியற்று நின்றாள் செய்னம்பு. கட்டியிருந்த கற்பனைக் கோட்டைகள் அனைத்தும் பொலபொலவென்று உதிர்ந்து சரிந்து கொண் டிருந்தன. தன்னிலை மறந்து, மெதுவாக நழுவி தன் ஆலழ வீட்டறைக்குள் சென்றுவிட்டாள். ஆனால், மம்மலி வெகு உற்சாகமாக,

கிளியும் கிளியும் கிண்ணரம் காக்கா . .! செய்னம்புவ சின்னப் போடியாருக்குக் குடுத்துட்டா ஒரு பெரச்சினயும்இல்ல! அது மட்டுமில்ல . . . நானும் என்ட பழி வாங்குற வெஞ்சத்தயும் மறந்து மன்னிச்சு உட்றுவன். சின்னப் போடி யாருக்கு செய்னம்புதான் செரியான சோடி. நூறேக்கருக்கு பணக்காரியாவாள் புள்ள . . . நாமளும், நம்பி வாளலாம். போடி வங்கிசம்! என்னகா செல்றாய் யம்முனா?’ என்று தன் மனைவியிடம் கேட்டபடியே செய்னம்புவை உள்ளறைக்குள் கடைக்கண்ணெறிந்து பார்த்தான். ஆனால், யம்னா ஆத்திரமாக,

வாருவக்கட்டுக்கு பட்டுக்குஞ்சத்த கட்டினாப் போல இரிக்கிம்!’ வெடுக்கென்று சொன்னாள்.

நீ வாயப் பொத்துகா! நூறேக்கர் காணிக்காரனுக்கு வாள ஆருக்கு கெடைக்கிம்? வேள் புள்ள செய்னம்பு ஒரத்த லக்குக்காரி . . . சின்னப் போடியாரே விரும்பிக் கேக்கிறத்தால நெல்லா வெச்சிருப்பாரு . . .’

ஓம் வெச்சிருப்பாரு! இப்பிடி எத்தினியோ வெச்சிரிக் காரு . . .’ என்றாள் யம்னா கசப்பாக.

நீ வாயப் பொத்துகா! வட்டானக் காக்கோவ்! நான் இப்பவே போய் சின்னப் போடியாருட்டச் சொல்லட்டா . . . சம்மதம் எண்டு?’

இல்ல . . . அவிசிரப்படாத ! எங்க செய்னம்பு? அவள்ட்ட யும் ஒருவார்த்த கேக்காம எப்பிடி . . . வாளப்போறவள் அவள் தானே . .?’ என்றார் மீராவட்டானை.

கேக்கத் தேவல்ல மாமா! அவளுக்கு விருப்பமில்ல.’ வெடுக்கென்று சொன்னாள் யம்னா.

ஏய் லூசிக்காரி . .! நீ என்னடி எடையில? வாயப் பொத்திட்டு இரியண்டி.’

எதுக்கும் நாளைக்கி செய்னம்புட்ட ஒருவார்த்த கேட்டுட்டு முடிவு செல்றன் எண்டு சின்னப் போடியாரிட்டச் செல் லிட்டன். இதுக்கு செய்னம்பு எணங்காட்டி அவன் இனிச் செறையிலதான் கெடப்பான் . . . நான் என்ன செய்ற? இப்ப எனக்கி தல மேல வேல இரிக்கி. ராவைய பொல்லடிக்கு வேண்டிய வேலயளப் பாக்கனும் . . . மம்மலி, நீ அவிசிரப்பட்டு கதய வெட்டால உடாத. நாளக்கி காலத்தால இஞ்ச வா. கதச்சித் தீமானங் கட்டுவம் செரியா . .?’

உள்ளிருந்தபடியே அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த செய்னம்புவுக்குத் தலைவலித்தது. முகம் கறுத்துப் போயிருந்தது. பயத்தில், நெஞ்சுக்குழிக்குள் நீர் வறண்டு காய்ந்து போய்விட்டது. உமறுலெவ்வை மச்சானின் விடுதலை சுற்று மாற்றாகத் தன்

தலைமீது வந்திறங்கியிருப்பதை நினைத்து மருண்டாள். வெளியே மம்மலிக் காக்காவும், யம்னா லாத்தாவும் ஏதோ காரசாரமாக வாக்குவாதப்பட்டுக்கொண்டே வெளிச்சென்றனர். அச்சமயம் உள்ளே வந்த முக்குலத்துக் கிழவி அவ்விவாதத்தைக் கேட்டுக் கொண்டே ஒழுங்கையில் சற்றுத் தூரம்வரை கூடவே சென்று கிரகித்துக்கொண்டு மறுபடி செய்னம்புவிடம் திரும்பி வந்தாள்.

புள்ள செய்னம்பு . . . யம்முனா மம்மலிக்கி ஏசிட்டே போறாள் . . . என்னய வெளங்குதில்ல. புள்ளேய் . . . எனக்கிம் வாப்பாக்கும் குடிக்க என்னயும் தாடியோவ் . . .’ என்றவாறு திண்ணையில் அமர்ந்துவிட்டாள்.

ஆனால், செய்னம்புவின் காதுகளில் எதுவும் விழவில்லை. உமறுலெவ்வையின் விடுதலைக்காக சின்னப் போடியாரிடம் தான் சிறைப்படுவதா? சிறைவாசம் யாருக்கு . .? எனக்கா . . .

உமறுலெவ்வை மச்சானுக்கா? கண்களில் குப்பெனப் பொங்கித் திரண்டு உருண்டன விழிநீர் மணிகள்.

புள்ளேய் . . . சாப்பிட்டியா?’

‘... ...’

புள்ளே டேய்.! சாப்பிட்டியாடா . .? எங்ககா கௌவி? செய்னம்பு! டே, செய்னம்பு . .?’

‘... ...’

செய்னம்பூ . .! ஏய் . .! வாப்பா கூப்புர்ராருகோவ்! அன்னா ஆல ஊட்டுக்க படுக்காள் போல . . .’

மகள்! எழும்பி தேத்தண்ணி ஊத்தங்கா . . . ஒண்டுக்கும் ஓரமா ஓசிக்காத . . . நாளக்கிப் பாப்பம் . . . இப்ப எழும்பு.’

என்னத்த அவள ஓசிக்கச் செல்லறாய்ம்பி? கல்யாணங் காச்சியா . .?’

நீ தேத்தண்ணியக் குடிச்சிட்டு நடையக் கட்டன்டி பசளப் பொணமே!’

செர்ராப்பா . . . கோவியாத . .!’

செய்னம்பு கொடுத்த தேனீரைக் குடித்துவிட்டு, மீரா வட்டானை எழுந்தார்.

ஏ . . . கௌவி, நான் பள்ளிப்பக்கம் போய் வாரன். புள்ளயோட கொஞ்ச நேரம் இருந்துக்க . . . செரியா? அங்க ஒண்ட பழைய கள்ளன் பொத்துவில் அண்ணாவியாரப் பாக்க ஓடிராதே . . . செரியா?’

முக்குலத்துக் கிழவி காலம் கடந்த நாணத்துடன்,

வந்திரிக்காராம் . . . செரி. செரி . . . நீ போய் வாடாம்பி?’ என்று விடை கொடுத்துவிட்டு, ஆறுதலாக வெத்திலை புதுப்பித்து வாய்க்குள்ளிட்டுச் சுவைத்தபடியே பொத்துவில் பீர்முகம்மது அண்ணாவியாருடனான தனது இளமைக் காலத்து அன்பு நினைவுகளில் மூழ்கிப் போனாள். செய்னம்புவும் மறுபடி உள்ளறைக்குள் புகுந்து பாயை விரித்து தன் படுக்கையிற் சாய்ந்து ஏதும் செய்யத் திராணியற்றுக் கிடந்தாள். எண்ணங் களும் ஏழாயிரம் கற்பனைகளும் அவளை அலைக்கழித்தன. வெளியே, பக்கீர் பாவாக்களின் ‘திகிறு’ ஒலிகளும் ‘ரபான்’ ஓசைகளும் பலமாகக் கேட்டுக்கொண்டிருந்தன. எதுவும் மனதில் பதியவில்லை.

 இந்தப் பேப் பொட்டைக்கிட்ட குடிக்கப் பச்சத்தண்ணி கேட்டு எம்பட்டு நேரமாகுது . . . தெர மாட்டாள். போல . . .படுத்துட்டாளா . .? டியே . .! பண்டி. .! பட்டப்பகலயில படுக்காதேரி யேய்! நான் ஊட்ட போய் வாரன் . . . நெல்லா எணக்கிட்டு, சோடிச்சிட்டு இரி . . . பொல்லடி பாக்கப் போவம் . . .

செரியா?’ என்று சொல்லிக்கொண்டே முக்குலத்துக் கிழவி போனதும் கனவு போலத்தான் கேட்டது செய்னம்புக்கு. உமறுலெவ்வை மச்சானா . . . சின்னப் போடியா? மனதில் ஊன்றிய யோசனைவித்து, ஒரே விநாடியில் வேர்விட்டு கிளர்ந்தெழுந்து, கிளைகள் பரப்பி வியாபித்து, விருட்சமாகிப் படர. . . எவ்வளவு நேரமாகப் படுக்கையில் கிடந்தாளோ தெரியாது . . . வேகமாக மாலை மங்கிக்கொண்டுவந்தது.

புள்ளேய்! போவமா . .?’

எங்க செய்னம்பு . .? புள்ளேய் . . . ஏய்! செய்னம்பூ வோ . . .வ்? எழும்புகா பொல்லடி பாக்கப் போக!’

யம்னாவின் குரல் கேட்டதும் வாரிச் சுருட்டிக்கொண் டெழுந்தாள் செய்னம்பு.

போகம் 10

காய்

காட்டுப்பள்ளி முற்றத்தின் நான்கு பக்கமும் உயரக் கம்பங்கள் கட்டப்பட்டு, பெரிய ‘தீனா’க்கள் எரிந்தன. வெளிச்சம் பரப்பின. நவீன ‘பெற்றோமாக்ஸ்’ விளக்குகள் இரண்டு பொல்லடித் திடலில் தெளிவான வெளிச்சத் தைக் கொடுத்தன. கிராமத்தின் மொத்தச் சனத்தொகையும் கூடியிருந்தது. வெளியூர்ச் சனங்களும் கணிசமாகத் திரண் டிருந்தனர். பெரிய போடியாருக்கு விசேடமான இடத்தில் கயிற்றுக்கட்டில் போடப்பட்டு, அதில் கம்பீரமாக அமர்ந்து, ஜெர்மன் சுருட்டுப் புகைத்துக்கொண்டு ஆவலாயிருந்தார். அருகில் நின்றுகொண்டிருந்த மீராவட்டானையுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

போடியாரின் வீட்டுப் பெண்கள், விசேட ஒதுக் கிடத்தில் வசதியாக அமர்ந்திருந்தனர். பெரிய போடி யாரின் பின்னால் சின்னப் போடியார் முகம்மதனிபாவும் மம்மலியும் நின்று கொண்டிருந்தனர். சின்னப் போடியா ரின் விஷமக் கண்கள் பெண்கள் பக்கத்தில் யாரையோ தேடிக்கொண்டிருந்தன. செய்னம்புவும், யம்னாவும், முக்குலத்துக் கிழவியும் பெண்கள் கூட்டத்தின் முன்வரிசை யில் அமர்ந்திருந்தனர். செய்னம்பு பொல்லடியில் ஆர்வ மின்றி எண்ணக் கவலைகளில் மூழ்கியிருந்தாள். யம்னாவும் இனம் புரியாத ஒரு திகிலுடன் வந்திருப்பதாகவே தோன்றியது. ஆனால், முக்குலத்துக் கிழவி மட்டும் தனது முன்னாள் காதலரும் இந்நாள் கதாநாயகருமான பீர்முகம்மது அண்ணாவியாரை வைத்த கண் வாங்காது பார்த்துக்கொண்டிருந்தாள். நூற்றுக்கணக்கில் சனம் உட்கார்ந்திருக்க, இன்னுமொரு நூற்றுக்கணக்கில் சனங்கள் சுற்றித் திரண்டிருந்தனர்.

 பொத்துவில் பீர்முகம்மது அண்ணாவியார் தனது பெருத்த பின்புறங்களை ஆட்டியபடி தயார் நிலையானார். விசேட ஆடை அணிந்திருந்தார். வெள்ளைக்காரப் பறங்கித்துரை கொடுத்த அழுக்குக் ‘கோட்’டைப் பட்டுப் பீதாம்பரமாகக் கருதி அணிந்து மடிப்புக்கட்டுத் தலைப்பாகையில் குஞ்சம் விட்டு, விரல் நிறைய வெள்ளி மோதிரமாக அணிந்திருந்தார் அண்ணாவியார். தம் கோஷ்டியினரைக் கடைசித் தடவையாகச் சரிபார்த்து முடித்தார்.

பொல்லடிக் குழுவினர் பதினெட்டுப் பேரும் உள் வளையத்தில் ஒன்பது பேர், புறவளையத்தில் ஒன்பது பேராக வட்டமாக நின்றனர். சிறுவாலுக்கு மேல் சாரனைத் தார்ப் பாய்ச்சி மடித்துக்கட்டி கலர் சாயமிட்ட கைபெனியன் சகிதம் தம் சீருடையில் நின்றனர். அடிக்கடி பெண்கள் பக்கம் பார்வைகள் எறிந்து நமுட்டுச் சிரிப்புடன் ‘கண்மொழி’ பேசியும், தேவையற்றுச் சிரித்தும் முழு உற்சாகத்துடன் தயார் நிலையாயினர். உரத்து ஓசை எழுப்பக் கூடியதும், இலேசாக உடையாததும், வளையாததுமான விப்பனை மரத்தின் எட்டங்குல நீளத்தடிகளை உறுதியுடன் பற்றியிருந்தனர். அடிப்புறத்தில் கட்டப்பட்டிருந்த வெண்டயங்கள் சங்கீதமாய்க் கிலுங்கின. தடிகள் கண்கவர் வர்ணங்கள் பூசப்பட்டு உண்மையில், கண் கவர்ந்தன. பீர்முகம்மது அண்ணாவியார் முதல் தடவை யாக ஒலிவாங்கியருகே பெருமையுடன் நின்றுகொண்டு,

போடியார். . . மொதல்ல ‘கீச்சன்போர்’ அடிக்கவா . . . இல்ல ‘தேன்கூடா’ . .?’ என்று தன்னிரு கைகளிலும், கற்பனைத் தடிகள் பிடித்துக் காற்றில் அடித்துக் காட்டியபடி கேட்டார். பெரிய போடியார், சற்றும் தாமதமின்றி,

எங்கட நாட்டுல வளக்கமா மொதல்ல ‘ஒத்தமல்லி’தான்’ என்றார். கூடியிருந்த சனங்கள் அகமகிழ்ந்து, ‘ஒத்தமல்லி . . .ஒத்தமல்லி’ என்றனர். ‘கிளியும் கிளியும் கிண்ணரம்.’ என்றனர். உடன், பீர்முகம்மது அண்ணாவியார் ஒற்றைமல்லி ஆட்டத்திற்கு ஏற்றாற்போல் குழுவைத் தயார் செய்தார். பின் மறுபடி ஒலிவாங்கியருகே வந்தார், திடுமென, ‘காப்பு’ என்றார். உடனே எங்கும் நிசப்தமானது. அண்ணாவியாரின் கம்பீரக் குரல் ஒலிவாங்கியில், காப்பு எடுத்தது.

தான் தானாய்த் தனித்தவனாய் தன்மயமாய்த் தற்குருவாய்த் தான் தானாய்த் தனி நினைவாய்த் தானானனாய் . . . நீதானே சல்லல்லாவான நபி சாதாத் தவரொளியிற்

குல்லும் படைத் தனித்தனையே . . . கூர்ந்தூ உ உ ஊ ஊவ்

உடனே குழுவினர் ஆட்சேபணையேதுமின்றி ஒருமித்த குரலில், ‘ஏ . . .ஏ . . . ஏ . . .ஓவ்!’ என்றனர். சட்டெனத் தொகை யறாவுக்குத் தாவிய அண்ணாவியார்,

செல்வம் பெருகிடும் உம்மாந்துறைப் பற்றின் செல்வம் விளங்கிடும் போடி வங்கிசமே . . . எ . . .ஏ . . .’

ஏ... ஏ... ஏ... ஓம்!’

சொல்லு,

தந்தனத் தானானே தனதன தானதித் தானானே தந்தனத் தானானே தனதன தானதித்தானானே . . .’

என்று பல்லவியுடன் பெரிய போடியாரை ஒரேயடியாக மகிழ்ச்சியில் மூழ்கடித்துவிட்டு, திடீரெனத் ‘தரு’வுக்குத் தாவி,

போடு . . . போடு

அஞ்செழுத்தான உடலுக்குள்ளே ஒரு அன்னமிருக்குது . . .’

இசையுடன் ஆலாபித்தார்.

நல்ல அன்னமிருக்குது . . .’

குழுவினர் உடன்பட்டனர்.

மின்னொளிபோல் . . . பஞ்சவர்ணக்கிளிபோல் . . .

பரமத்திரு நடுமத்தியிலெரியுஞ் சுடரொளியானது’

நல்ல சுடரொளியானது . . .’

பஞ்ச பூதமெனுஞ் செஞ்சுடராம் அது நெஞ்சில் விளக்கொளியானதுவாம் . . .’

நல்ல விளக்கொளியானதுவாம் . . .’

எடுத்த எடுப்பிலேயே வசனக்கட்டு உச்சத்துக்குத் தாவ உற்சாகம் மீறிய பொல்லடி இளைஞர்கள், உச்ச வேகத்தில் சுழன்றடித்தனர் . . . பார்வையாளரின் நரம்புகள் முறுக்கேறித் துடித்தன. . . ‘டக்குடக். . . டக்குடக். . . கில்லீங்கிலீர். . . க்குடக்கு. . .

க்குடக்கு. . . கிலீர். . . கில்லீங். . . டக்குடக்’கென்று ஒற்றை மல்லிக்கான தாளலயம் சிறிதும் பிசகாத கோலாட்ட வேகத்தில், சனங்கள் மெய்மறந்தனர். பொல்லடி இளைஞர் ஒவ்வொரு வரிசையிலும், இடமும், வலமும், பக்கவாட்டிலும் மாறிமாறிப் புகுந்தும், வெளிப்பட்டும், குந்தியெழும்பியும், குனிந்து நிமிர்ந்தும் வேகத்துடன் அடித்தாடுகையில் கூடச் சுற்று வரிசை சற்றும் சறுக்காத சாமர்த்தியத்துடன் ஆடிக் கொண்டே அடித்த பொல்லுகளின் ஒருமித்த தாளச்சத்தம் கிராமத்தின் அந்தம்வரை கேட்டது . . .

பொல்லடி உச்சவேகம் பிடித்து, தாளக்கட்டுகள் தப்பாது ஒலிக்க அண்ணாவியாரின் கனத்த குரல் சிறிதும் தொய்வின்றி ஒலித்து, ஒலிவாங்கியின் அதிர்வெண்ணைக் கூட்ட உச்ச திருப்பத்தில்,

ஒற்றை மல்லி மெட்டுப் போட்டுப்

பாட்டில் காட்டும் பாரீர் . . .

ஜல்... தில்... ஜக்... அம்’

என்று சட்டென முடிக்க அத்தனை விப்பனைத் தடிகளும், மிகச் சரியாக அதே கணத்தில் ‘டக் . . . டக் டகா டக் . . .கில்லிங் கிலீர்’ரென்று ஒலித்து பட்டென்று நிசப்தித்தன. ஆட்டம் நின்றது. உறைந்து போயிருந்த சனங்கள், ஒரு நிமிடம் தாமதித்து இரசனை உற்சாக மிகுந்து சிரித்தனர் . . . ஒரே சமயத்தில் சப்புக் கொட்டிப் புகழ்ந்தனர். கலகலத்தனர். உச்ச இரஸிப்பில், ‘கூ . . .ய் . . .கூ . . .ய்ய் . . .’ என்று தமதபிமானத்தை வெளிப்படுத்தினர். முக்குலத்துக் கிழவி தன் கனவுலகிலிருந்து மீண்டு வெட்கப்பட்டாள். பீர்முகம்மது அண்ணாவியார் பெருமையுடன் சபையினரையும், பெரிய போடியாரையும் பார்த்தார். பெரிய போடியார் சட்டெனக் கையைத் தூக்கி,

ச்சச்சா . .! பொல்லடிக்கி பொத்துவில் பீர்முகம்மது அண்ணாவியாருதான் . . .’ என்று பாராட்ட, சட்டெனக் கர்வம் மீக்குற்ற பீர்முகம்மது அண்ணாவியார்,

அடுத்து, ‘தண்ணால்’ அடிக்கவா போடியார்?’ என்று கேட்டார்.

ஓம். அடிக்கலாம் . . . செரி, இப்ப கோப்பி கொஞ்சம் குடிங்க . . . புள்ளயள் எளப்பாறட்டும் . . . வெத்திலகித்திலயப் போடுங்க.’

அதுவுஞ் செரிதாங்!’

கூடியிருந்த சனங்களும் ஆறுதலாகி கோப்பி அருந்தினர் . . . சாப்பிட்டனர் . . . தாய்மார்கள் கிடைத்த அவகாசத்தில் குழந்தை களுக்குப் பாலூட்டினர். பொல்லடிக் குழு இடியப்பமும் பாணிப்பாகுவும் மானிறைச்சிக் கறியும் சாப்பிட்டு, வெத்திலை போட்டுக் களைப்பாறினர். தத்தமது கவலைகளைச் சற்று மறந்து ஆட்டத்தில் இலயித்துப்போயிருந்த செய்னம்புவும் யம்னாவும் அமைதி கலைந்து சற்றே சுய நிலைக்கு மீண்டனர். செய்னம்பு கொணர்ந்திருந்த சீனிமாவைச் சாப்பிட்டனர். ஆட்டத்தில் ஒரு கண்ணும் தன் ஆதர்ஷக் கதாநாயகனில் ஒரு கண்ணுமாக, சாப்பிடவும் தோன்றாது தன்னை முற்றாக மறந்திருந்த முக்குலத்துக் கிழவி இன்னமும் வாய் பிளந்திருந்தாள்.

தூரத்திலிருந்து சின்னப் போடியாரின் விஷமக் கண்கள் இப்போது பெண்கள் கூட்டத்தினுள் நுழைந்து அலைந்துதேடி செய்னம்புவைக் கண்டுபிடித்தன. கவனம் கலைந்து ஆண்கள் பக்கமாகத் தற்செயலாகப் பார்த்தாள் செய்னம்பு.

அச்சமயம் சின்னப் போடியார் தனது இளைய தங்கை மிதுஹாம்மாவிடம், செய்னம்புவைச் சுட்டிக்காட்டி ஏதோ சொல்லிச் சிரிப்பதும் மிதுஹாம்மா ஆர்வத்துடன் செய்னம்புவைத் தன் பெரிய வட்டக் கண்களை உருட்டிப் பார்ப்பதும், புன்னகைப்பதும் தெரிந்தன. செய்னம்பு திடுக்கிட்டு இதைக் கவனியாதவள் போல் வெடுக்கென யம்னாவின் பக்கம் திரும்பி விட்டாள். ஆனால், சற்று நேரத்தில், தாமரை இலையில் சுற்றிய நான்கு தேன்குழல்களுடனும் காகிதச் சுருள்களில் நிரப்பிய மிட்டாய் வகைகளுடனும் மம்மலி பெண்கள் கூட்டத்துள் நுழைந்து வந்தான்.

இந்தா புள்ளேய் . .! ரெண்டுபேரும் சாப்பிடுங்க . . .’ மம்மலியின் குரல் ஏனோ உற்சாகமிழந்திருந்தது.

ஏது . .? ஆரு வாங்கித் தந்த காக்கா?’ சந்தேகத்துடன் வினவினாள் செய்னம்பு.

அவன்தான் . . . சின்னப் போடி!’ அதிசயமாக, மரியாதைக் குறைவாகச் சொன்னான் மம்மலி.

வாணா! வாணா . . !’ உடனடியாக மறுத்தாள் செய்னம்பு. யம்னாவும் கோபத்துடன் மெல்லிய குரலில்,

இஞ்சேய் . .! அத அவன்ட சொத்தையில எறிஞ்சிட்டு £! என்றாள். மம்மலி கோபமாகி, தின்பண்டங்களை யாரும் காணாதபடிக்கு அவ்விடத்திலேயே மண்ணில் போட்டு மிதித்துவிட்டு,

இண்டைக்கி ரெண்டுல ஒண்டுபாக்காம உடமாட்டன்!’ என்று புறுபுறுத்தப்படியே கூட்டத்துள் நுழைந்து மறைந்தான். யம்னாவுக்குப் பகீரென்றது . .. செய்னம்புவுக்கு அது புரியவில்லை.

மம்மலிக் காக்கா கோவிச்சிட்டுப் போறாரு போல!’ என்ற செய்னம்பு சற்று முன்னால் வந்து, போடிவீட்டுப் பெண்கள் இருந்த பக்கமாகப் பார்த்தாள். அப்போது, சின்னப் போடியாரின் இளைய தங்கை மிதுஹாம்மா தன் வட்டக் கண்களுடன் உடனே இவளோடு அன்பாகச் சிரித்தாள். தான் சாப்பிட்ட தேன்குழலைத் தூக்கி இவளிடம் காண்பித் தாள். போடிவீட்டுப் பெண்களும் புன்னகைத்து செய்னம்புவை ஆர்வத்துடன் பார்த்தனர் . . .

சரிதான் . . . தான் சம்மதிக்காமலேயே தனது சம்மதம் அனைவருக்கும் சொல்லப்பட்டாகிவிட்டதெனச் சந்தேகமறத் தெரிந்துகொண்டாள் செய்னம்பு. திடுக்கிட்டுப் போனாள். ஆயினும், பதிலுக்கு மிதுஹாம்மாவுடன் மட்டும் மரியாதைக்காகப் புன்னகைத்துவிட்டுச் சட்டென முக்குலத்துக் கிழவியின் பின்னால் மறைந்து கொண்டாள். மறைந்திருந்தபடியே மறுபடியும் அந்தப் பக்கம் பார்த்தாள். தந்தை மீராவட்டானையும், பெரிய போடியாரும், ‘சம்பந்தம் கலக்கும்’ பாணியில் மிக ஈடுபாட்டுடன் கலகலகத்துக் கதைப்பதையும் கண்டாள். கோப மாக வந்தது. அச்சமயத்தில் மம்மலி சின்னப் போடியாரை நெருங்கி ஏதோ சொல்வதும், சின்னப் போடியார் பரபரப்பாகி ஏதோ தலையசைத்துக் கேட்பதும் பின் செய்னம்பு நின்றஇடத்தைப் பார்த்துவிட்டு இரகஸியமாக ஏதோ சைகை செய்து கேட்பதும், பின் இருவருமாகக் கூட்டத்தை விட்டும் விலகி எங்கோ செல்வதும் தெரிந்தது. யம்னா அர்த்தபூர்வமாக செய்னம்புவைப் பார்த்தாள்.

அரை மணி நேர இடைவெளியின் பின் மறுபடி தண்ணால் ஆட்டத்திற்காகக் குழுமுறை மாறியது. இம்முறை பனிரெண்டு பேர் ஒரு நிரையிலும், எட்டுப்பேர் மறுநிரையிலும் நின்றனர். ஒரு நிரையில் குறைவாகவுள்ள மீதி நான்கு பேரின் இடைவெளி யை நிவர்த்திக்கும் முகமான பாய்ச்சல் முறை வேகமும் தப்பாத தாள அடியும் காணச் சனங்கள் தயாராகினர். நேரம் நடுநிசியைத் தொட்டுக் கொண்டிருந்தபோது அண்ணாவியார் மறுபடி ஆரம்பித்தார்.

சங்கைமிகந்த உம்மாந் துறையிலே . . .’

ஏ...ஏ...ஏ...’

தங்கமயிலார் காட்டுப்பள்ளியிலே . . .’

ஏ...ஏ...ஏ...’

என்று ஆரம்பித்து ஆலாபனை செய்து மெருகூட்டி ‘தரு’ முடித்து, வித்தியாசமான இசையுடனான வசனக்கட்டுடனான சரணங்களுக்குத் தாவினார்.

வட்டிப் பணமது குட்டியைப் போடுது . . .

குட்டியைப் போடுது.

வட்டியெடுத்தவன் வயிறு பெருக்குது . . .

வயிறு பெருக்குது

குட்டிப் பொன் தங்கமும் பெட்டியில் கூடுது . . .

பெட்டியில் கூடுது

காலனின் தூதுகையோலை வருகுது . . .

ஓலைவருகுது

எட்டு நாலங்குலம் எட்டாமற் பாயுது . . .

எட்டாமற் பாயுது

எட்டிய காலனுங் கிட்டவிருக்குது . . .

கிட்டவிருக்குது

சட்டியிலொட்டுங் கறியாயிருக்குது . . .

கறியாயிருக்குது

சதிமுட்டாய் வந்தவர் றூகைப் பிடிக்குது . . .

றூகைப் பிடிக்குது.’

இம்முறை அத்தனை விப்பனைத் தடிகளும், ‘பட்டப் . . . பட்டீர் . . .கில்ஙீர்ர்’ ‘பட்டக் . . .பட்டீர் . . .கில்ஙீர்’ என்று தாளம் மாற்றித் தொடங்கின. அடிப்புகளின் தாளக்கட்டில் சனங்கள் ஒன்றிக்க ‘தண்ணால்’ ஆட்டம் வேகம் பிடித்தது. முக்குலத்துக் கிழவி அண்ணாவியாருடன் வானில் பறந்தாள். யம்னா ஏதோ உணர்வில் சட்டெனத் திடுக்கிட்டுப் போய் சனத்திரளில் கண்களால் மம்மலியைத் தேடினாள். சின்னப் போடியாரும் மம்மலியும் காணப்படவில்லை. செய்னம்பு மறுபடி ஆட்டத்தில் இலயிக்க ஆரம்பித்திருந்தாள்.

நிசப்த இரவின் மௌனத்தை மறுபடி சந்தக் கட்டுத் தாள அடிகள் கிழிக்க, வேர்வையில் குளித்த பொல்லடி இளைஞர் குழு களைப்பேதுமின்றிக் குதித்தாடினர். ஒரு சனமும் கண்மூடவில்லை. திறந்த வாய் மூடவில்லை. ஒருத்தர்கூடக் கலைந்து செல்லவில்லை. சின்னப் போடியாரையும் மம்மலி யையும் தவிர. பாடலின் பொருள் நயத்திலும் தாளத்தின் சீரோசையிலும் இலயித்துக் கட்டுண்டு கிடந்தனர்.

தண்ணால் அடிக்கும்போதே அப்படியே ‘கீச்சான் போரு’க்கு மாற்றியடிக்கும் வல்லமையும் பீர்முகம்மது அண்ணாவியார் குழுவுக்கு இருந்ததால், அந்த ஆச்சரிய நிபுணத்துவத்தைக் காணும் பாக்கியம் பெற்றமைக்காக சனங்கள்பெருமை கொண்டு அசையாது நின்றனர். நேரம் நடுநசி தாண்டி வேகமாக ஓடிக்கொண்டிருந்தாலும், பெரிய போடியார் இன்னமும் சற்றும் களைப்பேதுமின்றிக் கம்பீரமாக அமர்ந்திருந் தார். போடிவீட்டுப் பெண்களும் ஏராளமான தின்பண்டங் களைக் கொறித்தபடியே ஆட்டத்தில் இலயித்தும் செய்னம்பு இருந்த பக்கமாகப் பார்த்துக் கிசுகிசுப்பதுமாகத் தூக்கத்தை மறந்திருந்தனர். ஆனால், கூட்டத்தில் சின்னப் போடியாரும் மம்மலியும் இல்லையென்பதை யம்னாவைத் தவிர எவரும் கவனிக்கவுமில்லை . . . கவலைப்படவும் இல்லை.

தண்ணால், கீச்சான் போர் ஆட்டங்கள் முடிந்து மறுபடியும் ‘தரித்தடித்தல்’ ஆரம்பித்தபோதும், சின்னப் போடியாரும் மம்மலியும் அவ்விடத்தில் இல்லை. பெரிய போடியார் விசாரித்தபோது யாரோ தூரத்தில் மம்மலியுடன் கண்டதாகக் கூற அதுபற்றிக் கவலைப்பட யாரும் இருக்க வில்லை. தரித்தடித்தலின் போது, ஒரே இடத்திலிருந்து போடி யாரின் புகழ்ப்பாட்டுக்கு மெல்லடி அடித்த பின் மிகவும் இரசனை மிக்கதும், இறுதியானதுமான ‘தேன்கூடு’க்கான பல்லவியை அண்ணாவியார்,

என்றும் புகழ்ந்திடும் யா இறஸ§ல் நபியே . . .

ஓம்...ஓம்... நபியே...’

என ஆரம்பித்தபோது திடீரென, அத்தனை சத்தத்தையும் மீறி, ஒருமகா கலவரமான குரல் அலறிக் கத்தியது.

என்டல் . . .லோ . . .வ் . . . என்ட . . .ல்லோவ் . . .வ்.’

அனைவரும் அமைதி குலைந்து திரும்ப, பெரியவெளிப் பக்கமிருந்து இருளை ஊடுருவியபடி தலையிலடித்து கத்திய படி ஓடி வந்துகொண்டிருந்தான் ஒருத்தன்.

ஆர் . . .ராது . . . டேய் . . ?’ பெரிய போடியார் கோபத்துடன் எழுந்து திரும்பிப் பார்த்தார். ஓடி வந்தவன் நேரிடையாக ஓடிவந்து, அலறிக் கத்தியபடி பெரிய போடியாரின் காலடி யில் தொப்பென்று விழுந்தான். மூச்சிரைத்து, விழிகள் பிதுங்கிக் கத்தினான்.

 . . . ஆர்ராது. நீயா . .? வட்டகட அலியா?. . .என்னடாது?’

என்டல்லோவ் . . .வ் . .! போ . . .போ . . .டி . . . யாரோ . . .வ் . .! க்கம்ம் . .!’ திக்கித் திணறினான்.

என்னடா நாயே . .! கத்தாமச் செல்லண்டா . .!’ என்று பெரிய போடியார் அவனைத் தூக்கி வேகமாகக் கன்னத்தில் அறைந்தார்.

என்டல்லோவ் . .! போ . . . போடியார் . .! அன்னா கூழாவடிச் சந்தியில் சி . . .சின் . . .னப்போடியாரு, குத்துப் பட்டுக் கெடக்காரு . . . சீவன் போயிட்டு போடியாரே . . .ய்.! என்டம்மோ . . .வ் . .!’

அதிர்ச்சியில் உறைந்து போயினர் அனைவரும். திடீரென எல்லாம் நின்று போயிற்று. பெரிய போடியார், ஆவேசப் பதற்றமாக,

என்னடா செல்றாய்.?. பற நாய் . . .யே . .?’ என்று மறுபடி கேட்க,

ஆரோ . . . சின்னப் போடியாரக் . . . குத்திப்போட்டிருக்காக போடியாரே.! என்டம்மோவ். .!

அவன் . . . எங்கடா மம்மலி . .?’

ரெண்டு பேரும்தான் போ . . .டி . . .யாரே . .!’

என்டல்லா . .! என்ட மகனே . .!’

பெரிய போடியாரின் அலறலில், கிராமமே நடுங்கி, மயிர்க் கூச்செறிந்து, இரத்தம் உறைந்தாற்போல் திடுக்கிட்டுறைந்து போயிற்று. ஒரு பயங்கரமான மௌன அந்தகாரம் அப்பிக் கொண்டது.

 

போகம் 11

கதிர்

அந்த அதிவிடியலில் ஊர் மொத்தமும் திகிலில் உறைந்திருக்க கூழாவடிச் சந்தியில் சனம் கருக்கிருட்டில் திமுதிமுத்தது. வெளிச்சம் மெதுவாகப் பரவ ஆரம்பித் திருந்தது. கூழாவடிச் சந்தியிலிருந்த பெரிய கூழா மரத்தினடியில் சின்னப் போடியார் முகம்மதனிபாவின் உயிரற்ற உடல் பக்கவாட்டில் திரும்பி கைகள் மடங்கி, அகலத் திறந்திருந்த விஷமக் கண்களுடன் கிடந்தது. திறந்திருந்த வாயில் கொசுக்கள் மொய்த்து. உள்ளே புகுந்து வந்துகொண்டிருந்தன. அதற்குப் பத்தடி தூரத்தில் மம்மலியின் குற்றுயிரான உடல் மல்லாக்கக் கிடந்தது. மம்மலியின் வாயில் நுரைதள்ளி நூலேட்டமாக மூச்சு இருந்ததால் அவசரமாக வக்கி வண்டியிலேற்றி விரைந் தனர். யம்னா கதறிக் குழறிக்கொண்டே மம்மலியின் தலையைத்தூக்கித் தன் மடியில் வைத்துக்கொண்டே கூடச்சென்றிருந்தாள்.

ஓடிவந்திருந்த அத்தனை பெண்களினதும் ஒப்பாரி ஊரைக் கலங்கடித்தது. உடல்களைக் கண்ட அதிர்ச்சியில் பெரிய போடியார் அலறி மூர்ச்சித்துச் சாய்ந்ததால், வண்டியில் கிடத்தப்பட்டு வீடு கொண்டு செல்லப் பட்டார். சின்னப் போடியாரின் திறந்திருந்த கண்களை மீராவட்டானை கசக்கி மூடி விட்டு திறந்திருந்த வாயை யும் ஒரு வெள்ளைச் சீலை கிழித்துக் கட்டி விட்டார். பின்னர், நீண்ட வெள்ளைச் சீலையால் சின்னப் போடி யாரின் உடலை மூடிவிட்டார்.

பல்லாயிரம் வதந்திகள், பரபரப்புகள், திகிலூட்டும் தகவல்கள் எல்லாம் கலந்து கிராமத்தையே கலங்கடித்துக்கொண்டிருந்தபோது, அதிகாலையிலேயே சாய்ந்தமருதிலிருந்து உடையார் பொலிசானை வந்துவிட்டார். கூட வந்திருந்த ஐந்து ஊர்காவற் சேவகர்களிடமும் பற்பல உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டிருந்தார். சூரியக் கதிர்கள் மர அடர்த்தி களூடே ஊடறுக்க ஆரம்பித்தபோதே, தூரத்து நகரத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரியான திரு. வைற்மன் ஸ்ரீபன் வந்து விட்டார். தனது மஞ்சள் நிற எலுமிச்சை மூக்கை லேஞ்சியினால் பொத்தியபடி கொலையுண்ட இடத்தில் தடயங்கள் சேகரித்தார். உடையார் பொலிசானையின் உதவியுடன் வாக்குமூலங்கள் பெற்றார். புகை கக்கும் கருவியினால் புகைப்படம் பிடித்தார்.

திகில் கலந்த ஆர்வத்தோடு ஊரார் சுற்றிப் பார்த்திருக்க, பக்கத்துக் கிராமங்களிலிருந்தும் சனம் வந்து குவிந்து கொண் டிருந்தது. புளியந்தீவிலிருந்து கல்முனை நகரத்தில் வந்திறங்கி யிருந்த வெள்ளைக்காரப் பெரிய நீதாவனையும், பறங்கித்துரை வைத்திய அதிகாரியையும் கூட்டி வர வண்டிகள் போயிருந்தன. உடனடி உத்தரவின் பேரில் காக்கிக் களிசான் பொலிசார் இருவர் வந்து சின்னப் போடியாரின் உடலைப் பாரமெடுத்துக் காவல் புரிந்தனர். தலையிலடித்துக் குளறிக் கொண்டிருந்த வயற்காரர்களிலும், வேலைக்காரப் பெண்களின் ஒப்பாரியிலும், சின்னப் போடியாரின் ஆதிக்க ஆளுமை புரிந்தது.

திரு. வைற்மன் ஸ்ரீபனின் கட்டளையின் பேரில் உடையார் பொலிசானை விபர அறிக்கைகள் தயார் செய்து ஒப்படைத் தார். விசேடமாக ஆயத்தப்படுத்திய கூட்டு வண்டியில் சின்னப் போடியாரின் உடல் மெதுவாக ஏற்றப்பட்டது. ஊர்கடந்து, குறுக்கிட்ட பயனியன் ஆற்றை வண்டியுடன் கடந்து, நகர வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுவிட்டது. கூடவே, மீராவட்டானை, வட்டைக்கடை அலி, பெரிய போடியாரின் இரண்டு மைத்துனர்கள் மற்றும் ஐந்து வயற்காரர்களும் சென்றிருந்தனர்.

பெரிய போடியாரின் கல்வீட்டிலிருந்து சந்தனப் பன்னீர் மற்றும் ஊதுபத்தி வாசனை வெகுதூரம்வரை பரவிப் பயத்தை அதிகப்படுத்தியது. பறையர் குல மூப்பனார், பெரிய தவிலுடனும் கொட்டு மேளத்துடனும் பயங்கரமாகக் கொட்டிக்கொட்டித் தம் பங்குக்கு மரண அச்சம் விளைவித்துக்கொண்டிருந்தார். அங்கிருந்த பெண்களின் ஒப்பாரிகளும் அழுகையலிகளும் வெகுதூரம்வரை, வெகுநேரம்வரை கேட்டுக்கொண்டிருந்தன. பெரிய போடியார், செயலற்ற நிலையில் மரக்கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். ‘என்ட . . . மகனே! என்ட தங்க மகனே!’ என்று சதா ஈனஸ்வரக்குரலில் முனகி அழுதபடியிருந்தார். பள்ளிவாசல் தர்மகர்த்தாக்கள், வெளியூர், உள்ளூர்ப்பிரமுகர்கள், விவசாய அதிகாரிகள், வட்டை விதானைமார்கள், முல்லைக்காரர் மற்றும் உறவினர்களும் சுற்றியிருந்து ஆறுதலும் தேறுதலும் கூறிக்கொண்டிருந்தனர். பாமர வயற்காரர்கள் சின்னப் போடியாரின் உடலைப் பெரிய ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லக் கூடாதென்றும் உடன் அடக்கம் செய்யத் தரும்படியும் கேட்டு, வந்துபோகும் அதிகாரிகளிடமும் பொலிசானையிடமும் வாக்குவாதப்பட்டுக் கொண்டிருந்தனர்.

கபுறுப் புதைக்குழி தோண்ட, குளிப்பாட்ட, மச்சுப்பலகை செய்ய, பன்னீர், அத்தர், ஊதுபத்தி, சுறுமா, வெண்ணிறக் கபன்துணி வாங்க, சந்தூக்கு ஆயத்தப்படுத்த, அனைவருக்கும் தேனீர், சாப்பாடு உபசரிக்க அனைத்துக்கும் மாந்தரா குடி மரைக்கார் மம்முறாகிம் பாவா அதிரடி ஆணைகள் பிறப்பித்து சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டும், ஓய்வான போதில் அழுது கொண்டும் இருந்தார். இடுப்பிலிருந்த மரினாப் பட்டியிலிருந்து தேவைக்கேற்றபடி ஐந்து சதம், பத்துச் சதம், நாலுபணம், எட்டுப்பணம், ஒரு ரூபாய் என எடுத்தெடுத்துச் செலவழித்துக் கொண்டிருந்தார். சந்திக்கும் மனிதரிடத்திலெல்லாம், ‘மம்மலிக் கித் தெரிஞ்சிருக்கும் ... குத்தினவன் ஆர்ண்டு.. . அவன் பொளச்சி வந்தா தெரியிம் . . .’ என்று, பல்லாயிரம் தடவைகள் பேசும் வசனங்களின் நடுவிலும் கடைசியிலும் சேர்த்துச் சேர்த்துச் சொல்லிக்கொண்டிருந்தார். மம்மலியின் உயிர் பிழைப்பிற்காக வும், அவனது வாக்குமூலத்துக்காகவும், ஊரே உச்ச எதிர் பார்ப்பில் காத்துக்கொண்டிருந்தது. புளியந்தீவிலிருந்து பொலிஸ் நாய் வந்து கொலைகாரனின் கழுத்தைக் கவ்வி பிடித்துக் கொடுக்குமென வேறு பயமுறுத்திக்கொண்டிந்தார்.

பெரிய போடியாரின் வீட்டுக்கு வந்தோரும் போனோரும் புதிது புதிதாக ஒப்பாரி ஆரம்பித்துக் கொண்டிருந்தனர். கொலைகாரன் யார் . . . கொலைக்கான காரணம் . . . கொலை நடந்த விதம் . . . பற்றியெல்லாம் கிளம்பிய வதந்திகள் ஊரைக் கலங்கடித்துக்கொண்டிருந்தன. சின்னப் போடியாருடன் பகை யுள்ள எவரும் ஊரிலில்லை. பிரச்சினைப்பட்ட உமறுலெவ் வையும், ராக்கிளி அலியும் கூட மீராவட்டானையின் சமரசத் தீர்வுக்கு முன்பே புளியந்தீவு பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றப் பட்டுத் தடுப்புக் காவலிலிருந்தனர். அவ்வாறாயின் சின்னப் போடியாரையும் மம்மலியையும் இந்தக் கதிக்கு உள்ளாக்கியவர் கள் யார் . .? ஊரில் எந்த வீட்டிலும் யாரும் சமைக்கவில்லை . . .

இதே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். கூழாவடி மர உச்சியில் வழமையாக நின்றாடும் ‘கரிபைரவன்’ அறைந்து கொன்றுவிட்டு உடல் பிளந்து உயிர் குடித்ததற்கு யார் என்ன செய்ய முடியும்? அதற்கு ‘தண்ணால்’ பொல்லடிப் பாடலின் விருத்தம் பிடிக்காது

 என்ற கிராமத்து முதுச உண்மையைப் பலரும் ஏற்றுக்கொண்டு பீர்முகம்மது அண்ணாவியாரைத் தேட அவர் தன் குழுவின ருடன் சொல்லாமற் கொள்ளாமல் நழுவி வெகுநேரமாகி விட்டிருந்தது.

எல்லாக் களேபரங்களுக்கு மத்தியிலும் சின்னப் போடி யாரின் உடல் மாலைத் தொழுகையின் பின் துரிதமாகக் கொணரப்பட்டு காட்டுப்பள்ளி மையவாடியில் கிராமத்து மொத்தச் சனமும் திரண்டு ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்க, பக்கத்துக் கிராமத்துச் சனங்களும் திகிலுடன் பார்த்துக் கொண்டிருக்க, முறையான சமயச் சடங்குகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுவிட்டது. மம்மலிக்கு உணர்வு திரும்பாத நிலை யில் கல்முனையிலிருந்து புளியந்தீவு பெரியாஸ்பத்திரிக்கு யம்னாவுடன் கொண்டு செல்லப்பட்டிருந்தான்.

கிராமத்தில் சூரிய ஒளி மங்கியதும், எவரும் வெளியே தலைகாட்டப் பயந்து வீடுகளுக்குள் முடங்கி விட்டனர். கூழாவடிக் கரிபைரவன் அடுத்த பலிக்காக அலைந்துகொண் டிருப்பதாகக் கிளம்பிய கதையில் வாசலுக்கே வெளியிறங்காமல் சுருண்டு கொண்டனர். அதிபயங்கரமாக இருள் கவியத் தொடங்கியது.

சின்னப் போடியார் கொலையுண்டு ஒரு மாத காலம் ஓடிவிட்டது. கிராமத்துச் சனங்கள் தம்மைப் பீடித்திருந்த திகிலுணர்விலிருந்து படிப்படியாக மீண்டுகொண்டிருந்தனர். ஆனால், கொலைக்கான மர்மம் இன்னும் துலக்கப்படவில்லை. மம்மலி இன்னமும் உணர்விழந்த நிலையில்தான் புளியந்தீவு பெரியாஸ்பத்திரியில் படுத்திருந்தான். யம்னாவும் ஊர் திரும்பவில்லை. பெரிய போடியாரின் கல்வீடு மரண அழுத்தத்தி லிருந்து மீளாமலிருந்தது. பெரிய போடியார், ஓரளவு தேறியிருந் தாலும் மனரீதியாகப் பெரிதும் தளர்ந்து போயிருந்தார். உடையார் பொலிசானையும் சில வெள்ளைக்கார அதிகாரி களும் எவ்வளவு முயன்றும் சந்தேக நபர்களாக எவரையும் கைது செய்யவோ ஏதும் துப்புத் துலக்கவோ முடியவில்லை.

உமறுலெவ்வையும் ராக்கிளி அலியும் அஞ்சலியும் புளியந் தீவுச் சிறையிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். மீரா வட்டானை இடையில் ஒரு தடவை புளியந்தீவுக்குப் போய் பெரியாஸ்பத்திரியில் மம்மலி, யம்னாவையும், தடுப்புக்காவலில் உமறுலெவ்வை, ராக்கிளி அலியையும் பார்த்துத் திரும்பியிருந் தார். அவரது செய்திகளுக்குப் பின்பு செய்னம்பு ஓரளவு தைரியமுற்றிருந்தாலும் சதா விரக்திப் பார்வையுடன் வேண்டாவெறுப்பாக ஏதோ வாழ்ந்துகொண்டிருந்தாள். அவளது நிலைமை மீராவட்டானையைக் கவலைப்பட வைத்தது. நடைபெற்ற சம்பவங்களால் பெருமளவில் மனரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்த தாகத் தோன்றியது . . . இரண்டு மூன்று தடவைகள் காத்தான் பரிகாரியும் கறுத்த மௌலானாவும் ஓதி ஊதிப் பார்த்தும் ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை. உமறுலெவ்வையின் விடுதலை ஒன்றுதான் செய்னம்புவைப் பழைய நிலைமைக்கு மீட்டுவரும் என்பது மீராவட்டானைக்குப் புரிந்ததுதான். ஆயினும் என்ன செய்ய. பெரிய போடியார் இப்போதுள்ள நிலையில் அவரை எப்படிக் கேட்பது?

எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரு முடிவு கேட்க முக் குலத்துக் கிழவி இம்முறை உருப்படியான ஒரு யோசனைசொன்னாள்.

மீராவட்டானைக்கும் அதில் மிகுந்த நம்பிக்கை யிருந்ததாலும் அதிசயமாக செய்னம்புவே உடன்பட்டதாலும் பக்கத்துக் கிராமமான சாய்ந்தமருதில் பலவருட காலமாகத் தனித்து தியானத்திலிருக்கும், மகான் ‘அத்தர்பாவா’ என அழைக்கப்படும் மஹா தீர்க்கதரிசியவர்களைப் போய்ச் சந்திக்க முக்குலத்துக் கிழவியுடன் செய்னம்புவை அனுப்பி வைக்கச் சம்மதித்தார். அதன்படி, தனது கூட்டுவண்டியில் நம்பிக்கைக் குரிய ஒரு வண்டியோட்டியின் உதவியுடன் முக்குலத்துக் கிழவியையும் செய்னம்புவையும் சாய்ந்தமருதுக்கு அனுப்பி வைத்தார்.

 சாய்ந்தமருதூரின் ஒதுக்குப்புறமாக சன நடமாட்ட மில்லாத பகுதியில், கடற்கரையை ஒட்டியவாறு விரிந்திருந்த வெள்ளை மணற் பரப்பின் முடிவில், அடர் பிராமணன் மீசைப் புதர்களுக்கு மத்தியில் செதுக்கப்பட்டிருந்த முற்றத்தின் ஓரத்தில் ஒரு சிறு குடிசை. ஆனைக் கிடுகுகளால் அடைக்கப் பட்டு காய்ந்த பிராமணன் மீசைப்புற்கள் வேயப்பட்டிருந்த கூரையின் உச்சியில் இரு சிறிய பச்சை வர்ணக்கொடிகள் புள்ளடி வடிவில் கட்டப்பட்டிருந்தன. இங்குதான், மஹான் அத்தர்பாவா நூற்றியேழு வருடங்களாகத் தனித்துத் தியானத்தி லிருந்து வந்தார். அந்த இடத்தை அடைந்ததுமே செய்னம்பு வுக்குள் ஒரு இனம் புரியாத நிம்மதி உண்டாயிற்று. மனதுக்குள் ஒரு புது உற்சாகம் ஊற்றெடுப்பது போலிருந்தது. அவர்கள் போன சமயத்தில் அங்கு பொதுசனங்கள் எவருமிலர். யார் வருவதையும் அவர் விரும்புவதுமில்லை; பொருட்படுத்துவது மில்லை. சந்திக்க வந்தால் தரிசனம் தரத் தவறுவதுமில்லை.

கடலலைகளின் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த அந்த இடத்தில் நிலவிய அமைதியில் மனதும் உடம்பும் புத்துணர்ச்சி பெற்றன. செய்னம்பு கொஞ்சம் பயம் நீங்கித் தெளிவடைந்தாள். இருவரும் பயபக்தியோடு மஹான் அத்தர்பாவா தவமிருக்கும் குடிசையை நெருங்கினார்கள். இதமான இனம் புரியாத ஒரு சுகந்த வாசம் பரவி நாசியை வந்தடைந்தது. குடிசைக்குள் நுழையும் ஒரு சிறிய கதவு. கதவில் அரபியில் சில வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. செய்னம்புவும் முக்குலத்துக் கிழவியும் குடிசைக்குள் நுழைய முன்பு பக்திச் சிரத்தையுடன் அங்கு தோண்டப்பட்டிருந்த ஊரணியில் முகம் கைகால் கழுவிக் கொண்டனர். பின்னர், தயக்கத்துடனும், மரியாதையுடனும் அந்தக் கதவுக்குள் குனிந்து நுழைந்து உட்சென்றனர். உடன் அச்சமாக இருந்தது.

உள்ளே, கீழே வெற்றுத்தரை மீது விரிக்கப்பட்டிருந்த ஒரு மான் தோலின் மீது மஹான் அத்தர்பாவாவின் உருவம் மிகமிக அமைதியுடன் அமர்ந்திருந்தது. கண்கள் மூடியிருந் தன. இவர்களின் வருகை ஒரு சிறு சலனத்தைக்கூட அவரில் தோற்றுவிக்கவில்லை. ஒரு நீண்ட பச்சைச் சீலையை உடுத்தி அதனையே மேல்நோக்கி இழுத்து மேல் மூடியிருந்தார். தலை மயிர் ஜடாமுடியாக வளர்ந்து நரையும் கறுப்பும் செம்பட்டையும     £கத் தாறுமாறாக நீண்டு தொங்கிக்கொண்டிருந்தன. தாடியும் மீசையும் ஒருபோதும் மழிக்கப்படாமல் இரண்டறக் கலந்து பின்னி ஒழுங்கற்றுத் தொங்கின.ப  £வாவின் உடலில் ஒரு அசைவாட்டம் இல்லை. அந்த மத்தியான வேளையிலும், ஆழ் தியானத்திலிருந்தார்.

 எனினும், அவரது உதடுகள் மட்டும் ஏதோ முணுமுணுப்பது போலிருந்தது. ஒரு கறுத்தப் பூனைக்குட்டி அவரின் அருகே உட்கார்ந்துகொண்டு அவரையே பார்த்துக்கொண்டிருந்தது. பாவாவின் பின்னால் ஒரு பெரிய பச்சைத் திரைச்சீலை தொங்கியது. பக்கத்தில் கமண்டலம், வாசனைப் புகை. பெரிய ரேகாழிப் பலகைகள். தஸ்பீஹ் மணிமாலைகள் . . .உருத்திராட்ச மணிமாலைகள் . . . செம்பவளக் கொடி . . . ஸம்ஸம் எனப்படும் புனித நீர் . . . புனித திருக்குர்ஆன் . . . வாசனை ஊதுபத்திகள். . . மூலிகை டப்பா . . . புகைச்சான் கருவி . . .கத்தையான மயிலிறகு . . . மான்தோல் விரிப்பு . . . இனம் புரியாத அரபு எழுத்துப் பட்டுச் சீலைகள் . . . மூலையில் செப்புக்குடத்தில், மஞ்சள் நிற அரளிப் பூக்கள் . . .

செய்னம்புவும் முக்குலத்துக் கிழவியும் அங்கு ஓரத்தில் விரிக்கப்பட்டிருந்த ஒரே ஒரு பாயில் பணிவுடன் அமைதியாக அமர்ந்தனர். இருவருக்கும் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது . . . ஆனால் பய உணர்ச்சி வரவில்லை. எனினும் ஒரு ஆத்மீக ரீதியிலான வியப்புணர்வுதான் ஏற் பட்டது. இவர்களை ஏறெடுத்தும் பார்க்காத பாவா நெடு நேரமாக அசையவுமில்லை, கண்களைத் திறக்கவுமில்லை. இவர்களும் அமைதியைக் குழப்பாமல் அமர்ந்திருந்தனர். அமைதி . . . அமைதி . . . பூரண அமைதி. எங்கும் இதமான நறுமணம் கமழ்ந்துகொண்டிருந்தது. சிற்சில பறவைகளின் மெல்லிய ஓசைகள் . . . சற்றுத் தூரத்தில் கடலலைகள் வீசும் ஓசைகள் மட்டுமே.

பாவாவின் மூடிய விழிகள் மூடியபடியே இருக்க சட்டென உதடுகள் விடுபட்டுத் தெளிவான சத்தமாகச் சில வசனங்கள் கேட்டன.

ஏட்டில் கிடக்கும் ஏழுகோடி மந்திரங்களையெல்லாம் படித்து, யேறு கடைசாகில், ஆகாமல் நாட்டி, கலிமாப்பொருள் மூட்டி, மூலக்குகையின் வீட்டிலிராத சித்தைக் காட்டி, மறைத்தெனக்கு, கற்பித்தாரென் குருவே . . . பொருளே . . .’ என்றார்.

இதுகேட்ட முக்குலத்துக் கிழவி பயத்தில் வெலவெலத்துப் போய் ஒன்றும் புரியாமல் ‘வாப்பாவே. . . வாப்பாவே. . .’ என அலறிக் குறுகி ஒடுங்கினாள். கிழவிக்கு மூத்திரம் வரப் பார்த்தது. செய்னம்புவோ துடிதுடித்த இதயத்துடன் கிழவிக்குள் புகுந்து ஒடுங்கினாள்.

திடீரென பாவாவின் கண்கள் திறந்தன; நேராக இருவரையும் பார்த்தன. பால் போன்ற வெண்ணிற விழிகளின் கறுப்புக் கருமணிகளில் கருணையும் சாந்தமும் நிறைந்திருந்தன. அவற்றிலிருந்து ஏதோ ஒரு அசாத்திய ஒளி வீசுவதுபோலிருந்தது. அவர் இவர்களிடம் எதுவும் கேட்கவில்லை. மிக மெல்லிய தாகப் புன்னகைத்தார். சற்றுத் தைரியமடைந்த முக்குலத்துக் கிழவி பாவாவைப் பார்த்து,

என்ட தங்க வாப்பாவே, இந்தக் கொமர்ப் பொட்டைக்கி நெல்லது தீயது பார்த்துச் செல்லணும் ராசாவே . . .’ என இறைஞ்சினாள். அவ்வளவுதான் பாவாவின் விழிகள் மறுபடியும், பழையபடி மூடிக்கொண்டன. உதடுகள் சத்தமின்றி முணுமுணுத்துக்கொண்டிருந்தன. சில நிமிடங்களின் பின், மெலிதாகச் சத்தம் வர ஆரம்பித்து, உற்றுக் கேட்டனர்.

அறிந்து கொள்ளச் சொல்லுகின்றேன். ஆறாம் விதிப் பலனாம், தெரிந்து கொள்ளுவீரிதன் குணந்தான் . . . தெளிந்த உள்ளச்சமுறுதி தெரிந்திடும், நல் வணக்கமெல்லாம், செய் வதுடன் முடுகுதலும், செம்மையுடன் மருகுதலும் செய்யும் குணமிதிலே . . .’

முக்குலத்துக் கிழவி ஒன்றும் புரியாமல் ஆனால், ‘ஓம் வாப்பா . . . ஓம் வாப்பா . . .’ என்றாள் படபடப்புடன். தொடர்ந்து பாவாவின் குரல் தெளிவாக உரைத்தது.

அருமையுள்ள பெண்ணிவளுக்கு சுருக்கும் துன்ப வினையி தாம் கொடுக்கும் கொலை பாதகங்கள் . . . ஆயுள் தரிபடும் காராக்கிருகம் . . . சூடாக மேனியிலே, ஒன்றிரண்டாய் உதிரும் . . .நிசியினில் ஏறும் . . . இணையாகத் திரிந்தவனே பகையுறவே, மற்றன்புடையோன், ஈர் மாதத்தில் கைப்பற்றப் பலனுண்டு.’

ஓம், வாப்பா . . . செரி வாப்பா . . . இந்த நாசமத்த பொட்டட மச்சான்காரன் வெருவானா வாப்பா?’

ஆறு கடந்து வந்து ஏழு பொழுதாயிற்று.’

இந்த கறுமக்காரப் பொட்ட அவனோட வாளுவாளா வாப்பா?’

தத்துடன் வாழ்வாள் . . . புத்திரம் அறுவாள்.’

எ . . .எங்குட சின்னப் போடியாரக் கொண்டு குவிச்சது ஆரு வாப்பா?’

இணையாகத் திரிந்தவனே இழிபகையுற்றான்.’

எங்கட மம்மலி பொளைச்சி வெருவானா வாப்பா . .?’

சித்தமிழந்தவன் இருள்நிலைக் கருக்கிரகத்தில் போயழி வான்.’

ஓம் வாப்பா . . . எங்குட நாசமத்த யம்முனாப் பொட்டைக்கி . . .’

இனியன்றுமில்லை உரைத்திட, வல்லவன் தனைத் தொழுதழுது, வாகுடன் கரமேந்திப் பிரார்த்தித்து, செய் கருமமனைத்தும் நன்கு செய்துவரின் நலமுறும் இறையருள் பொலிவுறும் கேட்டுணர்வீர்.’

சட்டென பாவாவின் உதடுகள் மூடிக்கொண்டன. இனி அது திறப்பதற்கில்லை. ஏதோ ஒரு மனப் பாரம் குறைந்து சட்டென மனம் இலேசாகிவிட்டது போலிருந்தது. முக்குலத்துக் கிழவியும், செய்னம்புவும் அதீத அமைதியுடன் எழுந்து பாவாவை நோக்கிப் பணிவுடன் தலை தாழ்த்தி மரியாதை செய்துவிட்டு பின்புறமாக எட்டு வைத்து நடந்து குடிசைக்கு வெளியே வந்தனர். செய்னம்பு உமறுலெவ்வைக் காக நேர்த்தி செய்து நாலுபணம் துணிமுடிச்சியிலிட்டு முடிந்து கொடிக்கம்பத்தில் கட்டினாள். முக்குலத்துக் கிழவி தான் கேட்டு அரைகுறையாக விளங்கிக்கொண்டதை மீட்டி விளங் காத மீதியைத் தன் சொந்தக் கற்பனைகளால் நிரப்பி ஊரில் ஒப்புவிக்க ஒத்திகை பார்த்தபடி இருவரும் வெளியேறி கூட்டு வண்டி நிறுத்தப்பட்டிருந்த இடத்தை வந்தடைந்தனர்.

கூட்டுவண்டி ஊர் நெருங்கியதும், மாந்தறாகுடி மரைக் காரின் காலை வயல் ஒற்றைப்பாதை வழியாக குறுக்கொழுங் கையில் ஏறி நேராக உமறுலெவ்வையின் குடிசையிருந்த சிற்றொழுங்கையால் சுற்றி வரச் செய்த முக்குலத்துக் கிழவி வண்டியின் திரையைச் சற்று நீக்கி, ‘பாத்தியா செய்னம்பு . . . லெக்கோவ் . . . பாரங்கா ஒண்ட மாமிர ஊட்டப் பாரன் . . .

ஒருத்தருமில்லாம புல்லு மொளைச்சிக் கெடக்கு . . .’ என்றாள். உடனே செய்னம்பு கூட்டுவண்டியின் திரைச்சீலையைச் சற்று அகலத்திறந்து மாமியின் வீட்டை ஏக்கத்தோடும் பரிதாபத் தோடும் பார்த்தாள்.

மாமிர ஊட்டுல ஒத்தருமில்ல . . . பாவம்.’ என்றாள் உண்மையான துயரத்தோடு.

என்னய்யிற . .? உம்மால்ல . . . வாப்பால்ல . . . அவனும் இல்ல . . .’ என்றாள் முக்குலத்துக்குக் கிழவி.

எப்பகா வெருவாருண்டு அவரு பாவா சென்ன? ஏங்கா மூத்தம்மா . .?’

வெருவான் . . . வெருவான் . . .’

கூட்டுவண்டியின் திரைச்சீலையை இழுத்துவிடச் செய்னம்பு மேலே கைகளை உயர்த்தி இழுத்த போது திடீரென

கையில் ஒரு கல்லெறி விழுந்தது. சட்டெனப் பயந்துபோன செய்னம்பு திரைச்சீலையைக் கொஞ்சம் நன்றாக விலக்கி வெளியே பயத்துடன் எட்டிப் பார்த்தாள். உடன் அதிர்ந்து போனாள். கண்கள் தம்மை நம்பாமல் படபடவென அடித்துக் கொண்டன. அதிர்ச்சியில் உடல் வேர்த்து விழிகள் விரிந்து, காணக் கிடைக்காத அதிசயத்தைக் கண்டாள். கனவா இது நனவா எனத் தடுமாறி மறுபடியும் பார்த்தாள். இன்னொரு சின்னக் கல்லை ஓங்கியபடி கூட்டுவண்டியை நோக்கிச் சிரித்தபடியே நடந்து வந்துகொண்டிருந்தான் உமறுலெவ்வை.

போகம் 12

உப்பட்டி

வெளித்திண்ணையில், மீராவட்டானை வியப்புடன் மரத்தூணில் சாய்ந்துகொண்டிருந்தார். எதிரே, உமறுலெவ்வை உட்கார்ந்திருந்தான். உள்ளே ஆலவீட்டறைக்குள்ளிருந்து செய்னம்பு அதிமகிழ்ச்சியுடன் கதவிடுக்கு வழியே உமறுலெவ்வையையே பார்த்துக்கொண்டிருந் தாள். முக்குலத்துக் கிழவி தன் ஓட்டைச் செவிகளை ஒருங்கு சேர ஆட்டியபடி காதுகளை விற்றுக் கதைவாங்கிக் கொண்டிருந்தாள். உமலுலெவ்வை தன் விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருந்தான். மீராவட்டானை கேட்டார்:

அப்பிடியெண்டா, நீ இந்த சின்னப் போடிர கொலை வெசயத்த நான் வந்து செல்லித்தானே கேள்விப்பட்டாய்?’

இல்ல மாமா, நேரத்தோட ஓடையார்ப் பொலிசான செல்லிட்டாரு. நான் ‘லக்கப்புல’ல இருக்கக்குள்ள . . .’ என்று சொன்ன உமறுலெவ்வை உள்ளிருந்து ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருக்கும் செய்னம்புவுக்காகத் தனது விசயங்களை மறுபடி கூறினான். தானும், ராக்கிளி அலியும், சின்னப் போடிக்கு அடித்துவிட்டு, அன்றிரவே நெடியாள்ர திடலுக்குத் தப்பிச் சென்றதையும், அஞ்சலிர பேரன் அகப்பட்டதால், தாங்கள் பொலிசானையிடம் மிக இலகுவில் பிடிபட்டதையும், தன்னை நேரடியாக, உடனடியாக, உடையார் பொலிசானை புளியந்தீவுக்குக் கரிவண்டியில் ஏற்றி அனுப்பி பறங்கிப் பொலிசிடம் கையளிக்கப்பட்டு, தடுப்புக் காவலில் போடப்பட்டதையும் சொன்னான்.

செய்னம்பு, உமறுலெவ்வை மச்சானின் வீரப் பிராதாபதங்களில் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தாள். ராக்கிளி அலியின் சிநேகிதத்தை வெட்டிவிடச் சொல்ல வேண்டுமென மனதில் சொல்லிக்கொண்டாள். முக்குலத்துக் கிழவி கேட்டாள்.

சின்னப் போடியார்ர வெசயம் எப்படாம்பி தெரியிம் . .?’

பறங்கிப் பொலிசிக்கி ஒடன ஒடையார் பொலிசான ‘கொழாய்ச் செய்தி’ அனுப்பினகா . . . எனக்கி அண்டு பகல்ல பொலிசி செல்லிட்டான். வெறச்சிப் போனேங்கா மூத்தம்மா . . .’ என்று சொன்ன உமறுலெவ்வை மேலும்,

தடுப்புக் காவலில் அடைபட்டிருந்தபோது, சின்னப் போடி யின் கொலைச் செய்தி கேள்வியுற்று அடைந்த அதிர்ச்சியையும், நம்மையும்விடப் பகைவன் அவனுக்கு வேறு யார் என்ற ஆராய்ச்சியிலேயே காலத்தை ஓட்டியதாகவும், களி திங்கத் தந்ததாகவும், பீ மூத்திரத்துக்கு ஒரு அறைதான் என்பதையும், சின்னப் போடியையும், மம்மலியையும், கூழா வடி கரிபைரவன் கொன்றதாக ராக்கிளி அலி சொன்னதையும், திடீரென ஒருநாள் சற்றும் எதிர்பாராத விதமாக பறங்கிப் பொலிசு வந்து, சின்னப் போடியார் கொலையுண்ட சமயத்தில் தான் தடுப்புக் காவலில் இருந்ததால் கொலைக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்பத னாலும், தம்மீது தொடரப்படவிருந்த வழக்கைத் தொடர ஒருவரும் முன்வராததாலும், பெரிய போடியார் இதனைக் கைவிட்டு விடுவிக்கவும் சொல்லிவிட்டாரென்றும் கூறித் தம்மை விடுவித்ததையும், விடுவித்த உடனேயே பெரிய ஆஸ்பத்திரிக்குச் சென்று யம்னா லாத்தாவையும் மம்மலியையும் பார்த்துவிட்டு நேற்றுப் புறப்பட்டு சாய்ந்தமருது வந்துசேர்ந்த தாகவும், இன்று காலைதான் ஊருக்கு வந்ததாகவும், வந்தவுடன் பெரிய போடியாரின் கல்வீட்டுக்கு முதலில் சென்று அழுது மன்னிப்புக்கேட்டு ஸலாம் செய்துவிட்டு, அப்படியே சின்னப் போடியாரின் அடக்கஸ்தலத்திற்கும் சென்று மன்னிப்புக்கேட்டு, தானும் மன்னித்து, பிரார்த்தனையும் செய்துவிட்டுத் திரும்பி வரும் வழியில்தான் கூட்டுவண்டியில் வந்த ‘ஆட்களைக்’ கண்டதையும் கூறி முடித்தான்.

ஆட்களை’ என்று தன்னைத்தான் உமறுலெவ்வை மச்சான் குறிப்பிடுகிறான் என்பதை விளங்கி வெட்கப்பட்ட செய்னம்பு விடம் முக்குலத்துக் கிழவி எட்டிப் பார்த்து,

டீயெ புள்ளே . . . மச்சானுக்கு என்னயும் கொண்டா வண்டி. தொண்ட காஞ்சு . . . வாப்பாவும் கன்நேரமா ஒண்டும் குடிக்கல்ல . . . கத கேட்டுட்டு இரிக்காள்ளோ . . .வ் . . .’ என்று திடீரெனக் காட்டிக் கொடுத்தாள். மீராவட்டானையும் உமறுலெவ்வையும் புன்னகைத்துச் சிரிக்க, வெட்கப்பட்டெழுந்த செய்னம்பு விரைவாக மூன்று வெள்ளித் தம்ளர்களில் தேசிக் காய் பிழிந்து இளநீர்ச் சிதறல்கள் தூவி, கருப்பட்டிக் கட்டியுடன் ஒரு செப்பு வட்டாத் தட்டில் வைத்து ஆலவீட்டறைக்குள்ளிருந்த படியே வலதுகை மட்டும் தெரிய நீட்டினாள்.

வாப்பா . . . தண்ணி!’ என்றாள்.

வெட்டால வந்து குடண்டி புள்ள! மொற மச்சான் தானே?’ என்றாள் நக்கலாக முக்குலத்துக் கிழவி.

அசி . . . லே . . . ய் . .!’ என்று வெட்கப்பட்ட செய்னம்பு சற்று எட்டி நீட்டியபோது அவளது கூந்தலின் ஒரு பகுதியும் ஒரே ஒரு கண்ணும் பக்கவாட்டில் உமறுலெவ்வைக்கு ஒரே விநாடி தெரிந்தன. இவன் பார்க்கையில் திடீரென அதுவும் மறைந்தது. ஆனால், அந்த ஒரே விநாடியில் அந்தக் கண்களில் நூறு குறும்புகள் தெரிந்தன; ஆயிரம்கதைகள் சொல்லி மறைந்தன. உமறுலெவ்வை இளநீரைக் குடிக்கும் போது ஆலவீட்டுக்குள் ளிருந்து,

யம்னா லாத்தா எப்பிடி இரிக்கா எண்டு கேளு வாப்பா . .!’ வந்தது.

மம்மலி இன்னம் மூச்சிப் பேச்சில்லாம படுத்த படுக்கையா இரிக்கான் . . . யம்னா லாத்தா கூடத்தான் இரிக்கா. தூக்குற சாத்துற வேல . . . பாவம், புள்ளத்தாய்ச்சி வேற. நெல்லாச் சவ்த்துட்டா . . . மம்மலிர ஒடம்புல கடும் நஞ்சி கலந்திரிக்காம். மருந்தொண்டும் பலிக்கிதில்லியாம். இனி ஆள் கொஞ்சம் பொளைக்கிற கய்ட்டம் எண்டு பெரிய லாக்குத்தரு எனக்கிட்ட மட்டும் தனியச் சென்னாரு . . .’ என்றான் உமறுலெவ்வை.

என்ட ரஹ§மானே.!’ என்று அதிர்ந்து போயினர் மற்ற மூவரும்.

நஞ்சா . .?’ அவநம்பிக்கையாகக் கேட்டார் மீராவட்டானை.

கரிபைரவன் வாய்வெச்சா நஞ்சில்லாம வேறன்ன . .?

         . . . ங்ஙனம் . . . வேன் ஒமறுலெவ்வட வாப்பாவையும், கரி பைரவந்தானே கழுத்த முறிச்சி . . .’ என்ற முக்குலத்துக் கிழவியை இடையில் புகுந்து,

வாயப் பொத்து, பசளக் கௌவி . .! ஓட்டக் காத ஆட்டத் தொடங்கினாள் எண்டா உட மாட்டாள் . . . கௌவிப் பொண் டம் . . .’ என்றார் மீராவட்டானை எரிச்சலாக.

உமறுலெவ்வை சிரிக்க ஆலவீட்டுக்குள்ளிருந்தும் ‘கிளுக்’ கெனச் சிரிப்புச்சத்தம் கேட்டது. அதேசமயம் வீட்டுப் படலையருகே வக்கிக் கரத்தை ஒன்று வேகமாக வந்து நின்றது.

மாந்தறாகுடி மரைக்கார் மம்முறாகிம்பாவா அவசரமாக இறங்கி ஓடி வந்தார்.

இஞ்சயா இரிக்கீங்க . .? வட்டானே . . . ஒமறுலேவேய் . . .

அன்னா பொலிசானைக்கி ‘கொழாய்ச் செய்தி’ வந்திரிக்காம்.  புளியந்தீவு பெரியாஸ்பத்திரியில, மம்மலி மவுத்தானயாம் . . .வந்து மையித்தப் பாரமெடுக்கட்டாம்.’

என்னது . .?’

திடீரென அறிவித்த பயங்கரச் செய்தியால் அதிர்ந்து போயினர். ஒருவிநாடி தாமதத்தில் முக்குலத்துக் கிழவி, ‘என்டல் . . . லோவ் . .! என்ட மம்மலியோ . . . வ்!’ என்று பெருங்குரலில் ஒப்பாரியை ஆரம்பித்து, அநாவசிய பயத்துடன் உள்ளறைக்குள்ளோடி செய்னம்புவைக் கட்டிப் பிடித்தாள்.

 

என்டம் . . . மோ . . . வ் .!!’ என்று வீறிட்டழுத செய்னம்பு வின் குரலில் நெஞ்சம் பதைபதைத்தெழுந்தனர் மீராவட்டானை யும் உமறுலெவ்வையும்.

ரெண்டு பேரையும் பெரிய போடியார் வெரட்டாம்!’

என்ட...மம்லிக் கா...க்...கோ...வ்! யம்முனா... த்...தோ . . . வ்!’ செய்னம்புவின் அலறல் கிறீச்சிட்டது.

மம்மலியின் உடல் காட்டுப்பள்ளி மையவாடியில், சின்னப் போடியாரின் அடக்கஸ்தலத்திற்குச் சற்றுத் தள்ளி நல்லடக்கம் செய்யப்பட்டு ஒரு வாரம் கழிந்துவிட்டது. ஏழாம் நாட் கருமங்களும் முடிவடைந்துவிட்டன. அடுத்தடுத்த மரணங் களும், படுபயங்கரமான வதந்திகளும் பரவி ஊரை மீண்டும் கலங்கடித்துக்கொண்டிருக்க அது போதாதென்று சின்னப் போடியார் அதி விடிசாமத்தில் விற்கரத்தையில் விரைந்து போனதைக் கண்டதாக முக்குலத்துக் கிழவி தன் பாட்டுக்கு அளந்துகொண்டிருந்த கதையினால் ஊரே ஆடிப்போய்விட்டது. தவிரவும் மம்மலி சில நாட்களாக பட்டப்பகலில் சின்னப் போடியாரின் தென்னங்காலையில், தேங்காய் உரித்துக் கொண்டிருப்பதை வட்டைக்கடை அலி சத்தியம் செய்து சொன்ன கதையால் சனங்கள் பகலிலும் நடமாட அஞ்சி தத்தம் இல்லங்களிலேயே பெரும்பாலும் முடங்கிக் கிடந்தனர். கூழாவடிச் சந்தியில் ஒரு ஈ காக்காய் நடமாடவில்லை.

நாளரு வதந்தியும் பொழுதொரு புனைகதையுமாகக் கிராமத்தின் பரபரப்பான நாட்கள் கழிந்துகொண்டிருந்தன. பெரியவெளி வயற்பரப்பெங்கும் நெற்கதிர்கள் குலை தள்ளிசெம்மஞ்சள் மணிக்கொத்துக்களாகத் தலைகுனிந்து ஆடின. அறுவடைக்கான காலம் கனிந்துகொண்டிருந்தது. ஆயினும், நடுப்பகலில் கிளிக் காவலுக்கும் இரவு பன்றிக் காவலுக்கும் யாரும் போனதாகத் தெரியவில்லை. காவற் பரணிலிருந்து வழமையாக இந்தக் காலத்தில் கேட்கும் கவிக்கானங்கள் கேட்கவில்லை. கிளி விரட்டும் ‘கூ. . . ய். . . குக்கூ. . . ய்’ ஓசை கேட்கவில்லை. ஒரு திகிலான உள்ளுணர்வின் சத்தமே ஊரெங்கும் கேட்டுக்கொண்டிருந்தது.

மம்மலியின் மனைவி யம்னா மீராவட்டானையின் வீட்டில் தான் ‘இத்தா’ அனுஷ்டித்தாள். அவளது வயிறும் பெரிதாகி ஒரு பிரசவத்தை அண்மித்துக் கொண்டிருந்தது. பிரசவமானால் சட்டப்படி அவளது இத்தாக் காலம் முடிந்து விடும். மம்மலி யின் வாரிசு வெளிவர இருந்தது. அந்த வாரிசைக் காணாத ஈறல் அடங்காத மம்மலி தினமும் மீராவட்டானையின் பள்ளித்திடல் ஒழுங்கையில் காணப்படுவதாக முக்குலத்துக் கிழவி கிளப்பிவிட்ட மற்றொரு அதிரடிச் செய்தியால் மீரா வட்டானையே ஆடிப்போய்விட்டார். அந்த ஒழுங்கைப் பக்கமே வருவதைப் பலரும் தவிர்த்துக்கொண்டனர்.

அத்துடன் நில்லாது யம்னாவுக்கும் வீட்டிலுள்ளோருக்கும் ‘காவல்’ செய்து தர - சாய்ந்தமருது அத்தர்பாவா மஹான் மறுத்துவிட்டதால் - முக்குலத்துக் கிழவி நேராக வீறாக ‘நாக பூஸணிக்’ கோயில் வண்ணக்கரைத் தேடி எட்டு மைல்கள் நடந்து சென்று கொணர்ந்த வேப்பிலை, பாதிவெட்டப்பட்ட இளநீர், மஞ்சள் துண்டுகள், மலர்மாலை, சூடம், குங்குமச் சீலை, கரும்பூனை பிழுக்கு, கன்னிக்கோழி முட்டை, கருஞ் சேவல் உயிர்ப்பலிப் பொருள், கன்னிப் பெண்ணின் மாத அசுத்தச் சீலை, மலை வெற்றிலை, பாக்கு, சாராயம் என்று, மீராவட்டானையின் வளவில் மூலைக்கு மூலை குவித்த மரணப் பயப் பொருட்களுக்கு அஞ்சி, செய்னம்புவும்கூட தனது ஆலவீட்டறைக்குள்ளிருந்து வெளியேறாது பதுங்கியிருந் தாள். யம்னாவுடனேயே இருந்தாள். கூடப் படுத்தாள்.

யம்னா இவ்வளவு நாளும் செய்னம்புவுடன் அதிகமாகப் பேசிக்கொள்ளவில்லை. எந்நேரமும் வெறித்த பார்வையும் யோசனையும் இரண்டொரு சொற்கள் பேசுவதுமாக இருந்தாள். அவளது கட்டுடல் வெகுவாகத் தளர்ந்து போய் கொஞ்ச நாளிலேயே கிழடு தட்டிப் போயிருந்தாள். யம்னா வை நடுவில் வைத்து செய்னம்புவும் முக்குலத்துக் கிழவியும், இரவில் படுத்தனர். படுக்கும்போதுகூட முக்குலத்துக் கிழவி எடுத்துவிடும் கொள்ளிப்பிசாசு கரிபைரவன், கருவாயன்போன்ற திகில் கதைகள் தமது சொந்தக் கவலைகளை விடவும் பயங்கரமாகவிருந்தன.

மீராவட்டானையும் உமறுலெவ்வையும் எப்போதாவது வாசலில் ஊர்ப்புதினங்களைப் பேசிக்கொண்டிருந்தனர். மற்ற அல்அசல் பெண்கள் இந்தப் பக்கம் வருவதையே நாற்பது கழியுமட்டும் நிறுத்தியிருந்தனர்.

காலங்களின் நகர்வில் ஊராரின் வேண்டுகோளின் பேரில் பெரிய போடியாரே ஓரளவு தேறி எழுந்து வந்து தனது வெளியில் அறுவடையை ஆரம்பித்து வைத்து காட்டுப்பள்ளி அவ்லியா பேரில் காவல் பாத்திஹாவும் ஓதி ‘நார்சா’ கொடுத் ததில் ஊர்ச் சனங்கள் தெம்புற்றனர். சுறுசுறுப்புற்றனர். மெது மெதுவாக ஊர் இயங்க ஆரம்பித்தது. கொட்டு, பட்டறைகள், அட்டுவங்கள் தயாரிக்கப்பட்டன. கணக்கன்கள் துலக்கப் பட்டன. தோல்வாயன்கள் பொத்திழைக்கப்பட்டன. வாரிக் காலன்களுக்கு புஷ்டியான இலைகுழைகள் அழித்து பிணையல் களுடன் சூடு மிதிக்க ஆரம்பித்தன. மரைக்கால், புசல், வேலைக் காரன் கம்பு, சாக்கு, வாரிக்கம்பு, அவரிகள், காப்பரண்கள், தட்டுப்பரண்கள், தீனாச்சட்டிகள், கட்டுக்கம்புகள், இடிக்கம்பு கள், வைக்கோற்புரிகள் எல்லாம் தயாராகின. பெரியவெளி வயல் நிலங்களில் மெதுவாக அறுவடை ஆரம்பித்தது. வயல் களில் உழைப்பாளிகளின் குரல்கள் கேட்க ஆரம்பித்தன. சனங்கள் வயல்வெளிகளில் நடமாட ஆரம்பித்தனர். நெற்கதிர் கள் துரிதமாக வெட்டப்பட்டன. சூடுகள் குவிக்கப்பட்டன. இம்முறை விதைக்கப்பட்டிருந்த சீநெட்டி, பெரியகறுப்பன் நெல்லினங்கள் வஞ்சனை செய்யாது நன்றாக விளைந்திருந்தன.

தினந்தோறும் சூடு மிதிக்கும் எருமைகளின் ‘ம்ம்ம்பா ஆ         ஆ ’க்களும், சாய்த்து நடக்கும் விவசாயிகளின் ‘ஹோ . . .ஓ . . . ஹோ’க்களும், கதிரடிப்போரின் வசைகவி, இசைகவி, வாதுகவிகளும் கேட்க ஆரம்பித்தன. உள்ளூர ஓரளவு திகிலும், அச்சமுமிருந்த போதிலும், கிராமம் தன்னையறியாமலேயே பழைய நிலைக்கு மீண்டு வந்துகொண்டிருந்தது. மீராவட்டானை தனது வட்டைவிதானைக் கடமைகளில் மூழ்கிப் போனார். உமறுலெவ்வை தனது மழுவன் கண்ட ‘வெட்டுக்குத்தில்’ மிகவும் வேலையாயிருந்தான். உபாத்தியாயர் வேலைக்காகப் புளியந்தீவில் பெரிய போடியாரின் சிபார்சுக் கடிதம் கொடுத்துத் திரும்பியிருந்தான். முக்குலத்துக் கிழவி சகல கவலைகளையும் தற்காலிகமாக மறந்து, வயல்வெளிகளில் உதிர்ந்த கதிர் பொறுக்கி இலகுவாகச் சம்பாதித்துக் கொண்டிருந்தாள்.

யம்னா இப்போதெல்லாம் ஓரளவு தெம்புடன் காணப் பட்டாள். செய்னம்புவுடன் பழையபடி பேச ஆரம்பித்தாள்.

ஆனாலும், பழைய புன்னகை அவளிடத்தில் இல்லை. செய்னம்புவிடம் தான் சம்பந்தப்பட்ட சில விஷயங்களை மேலோட்டமாகச் சொன்னாள். திடீரெனக் கலங்கி அழு தாள். பின் ஏதோ தீர்மானித்ததுபோல் தெளிவாக இருந்தாள். செய்னம்புவுக்குச் சமையலில் உதவினாள். பாயிழைத்தாள், அரிசி புடைத்தாள். குறுணல் கொழித்தாள். வயிற்றில் முழு நிறைவடைந்த குழந்தையின் உதைப்பில் சிலீரிட்டுப் பயந்தாள். மிகச் சற்றே மகிழ்ந்தாள். மம்மலியின் வெற்றிடமான நினைவு களில் குமைந்தாள்.

எந்த முன்னெச்சரிக்கையுமின்றித் திடீரென ஒரு அதி காலையில் வயிறு நோக்காடு கண்டு யம்னா துடிதுடிக்கையில் முக்குலத்துக் கிழவி கூட்டிவரப் போன மருத்துவிச்சி ஒய்த்தாச்சி வருமுன்னரே உரலில் சாய்ந்திருந்த யம்னா தனது ஆண் குழந்தையைப் பிரசவித்தாள். அத்துடன் அவளது இத்தாக் காலமும் முடிவுக்கு வந்துவிட்டது. மீராவட்டானையின் வீட்டில் எத்தனையோ வருடங்களுக்குப் பின் ஒரு மழலையின் அழுகுரல் கேட்டது. செய்னம்பு நடுங்கும் கரங்களில் அந்தப் பச்சிளம் குழந்தையை ஏந்தினாள். மீராவட்டானை வானத்தை நோக்கிக் கையேந்தினார்.

செய்னம்புவுக்கு இப்போதெல்லாம் யம்னாவின் குழந்தை யைப் பராமரிப்பதொன்றே பிரதான வேலையாயிற்று. பால் கொடுப்பதைத் தவிர யம்னா தனது குழந்தையை அதிகமாகக் கவனிக்கவுமில்லை. குழந்தையின் முகத்தைக் கூட அவ்வளவு இரஸித்ததாகவும் சொல்ல முடியாது. மாறாக, குழந்தை பிறந்த பின்பு முன்னரை விடவும் அதிர்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டாள். பால்கொடுக்கும் நேரம் தவிர குழந்தையைத் தொடவே அஞ்சினாள். முதற் குழந்தை பிரசவித்த ஒரு இளந் தாயின் எந்த ஆர்வமும் இல்லாதிருந்தாள். இத்தனைக்கும் குழந்தை யம்னாவின் முகச்சாயலுடன் அழகாக இருந்தது. செய்னம்புதான் முழுநேர வளர்ப்புத் தாதி வேலையை ஆர்வ முடன் ஏற்றிருந்தாள். பதிலாக யம்னா செய்னம்புவின் வீட்டு வேலைகளைப் பாரமெடுத்திருந்தாள்.

ஒருநாள், முற்றத்தில் செய்னம்பு குழந்தையுடன் உலவிக் கொண்டிருந்தபோது சடுதியாக உமறுலெவ்வை வந்துவிட்டான். அவன் வளவுக்குள் வந்ததைச் செய்னம்பு கவனிக்கவேயில்லை. திடீரென ‘மாமா. எங்க?’ என்ற உமறுலெவ்வையின் குரல் வெகு அருகில் கேட்டதில் மிரண்டுபோன செய்னம்பு சட்டென உள்ளோடு முன்பே உமறுலெவ்வை அவளை மறித்து, குழந்தையைப் பறித்துக்கொண்டு சிரித்தான். செய்னம்பு கோபமாக அவனைப் பார்த்தாள். உமறுலெவ்வை புன்னகைத்தபடியே குழந்தையை அவளிடம் நீட்டியபடியே செய்னம்புவின் சுறுமாக் கருவிழிகளை உற்றுப் பார்த்துக் குறும்பு கொப்பளிக்க,

என்ன, புள்ளயத் தெரயா?’ என்றான்.

அவனது கேள்வியின் மறைமுக வஸீகரக் கருத்தை விளங்கி வெட்கித்துப்போன செய்னம்பு,

அ . . . சிலே . . . ய் . . .’ என நாணப்பட்டுச் சட்டெனக் குழந்தையை வாங்காமலேயே உள்ளோடி விட்டாள். திரும்ப அவள் வெளியே வரவேயில்லை. யம்னாதான் வந்து குழந்தை யை வாங்க வேண்டியதாயிற்று.

யம்னா லாத்தா, மாமா எங்ககா?’

களவெட்டிக்கதான் போயிருப்பாரு தம்பி.’

செரி நான் போறன். . . புள்ளக்கி பேரு வெச்சிட்டீங்களா லாத்தா?’

அதெல்லாம் எனக்கித் தெரியாம்பி.’

இல்ல லாத்தா! கட்டாயம் பதிவு வெய்க்கணும். நான் நாளக்கிப் போய் பதிவ வெய்க்கன். என்ன பேரு வெச்சிரிக் கிறீங்க?’

பேரொண்டும் இன்னம் வெய்க்கல்லடா தம்பி.’

அட . . . அப்ப, ஆல ஊட்டுக்குள்ள ஒழிச்சிட்டு இருக்கிற ‘ஆக்கள்’ பேரு ஒண்டும் வெய்க்காம எப்பிடிக் கூப்புடுராக?’

உள்ளிருந்து கலீரென்று சிரிப்பொலியும், பின் குறும்புடன் ‘கிளி . . . கிளி எண்டு கூப்புடுர.’ என்று பதிலும் வந்தது. உமறு லெவ்வை சிரித்து,

அப்ப கிளி. . . கிளி எண்டு பேரு பதிவு வெய்க்கட்டா லாத்தா?’

என்னண்டான வெய்ரா தம்பி! வாப்பாவத் தின்னக்கி என்ன பேரு வெச்சாத்தான் என்ன?’

கிளி நெல்ல பேரா எண்டு புள்ள வளக்கிற ஆக்கள் ஒண்டும் செல்லல்லையே.’

கிளியும், கிளியும் கிண்ணரம். . .’ என்று உடன் பதில் நக்கல் வந்தது.

செரி லாத்தா நான் போய் வாறன் . . . மாமா வந்தா அஞ்சேக்கரும், முப்பதவணம் கண்ட எண்டு செல்லுங்க. களவெட்டிக்க இரிந்து வாறன். சவ்ப்பா இரிக்கி. நான் போய் வரட்டா . . . ம்க்க்கும் . . . போய் வரட்டா . . . என்ன? ஊட்டுக்கார ஆக்கள்ள சத்தத்தையே காணல்ல?’

வந்த ‘ஆக்கள’ தேத்தண்ணி குடிச்சிட்டுப் போகச் செல்லங்கா யம்னா லாத்தா.’

வேணா . . . வட்டக்கடையில குடிச்சிட்டன்.’

உமறுலெவ்வை திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே சென்ற பின் ஆலவீட்டினுள்ளிருந்து வெளியே வந்த செய்னம்பு அவன் சென்ற வழியை ஆர்வத்துடன், இரகசியமாகப் பார்த்துக் கொண்டே, யம்னாவிடமிருந்து மறுபடி குழந்தையை வாங்கிக் கொண்டாள்.

ϖ

போகம் 13

கட்டு

 

தாளமுடியாத நாணமும் ஆர்வமுமாக உமறுலெவ் வை சென்ற வழியையே செய்னம்பு கடைக்கண்ணால் பார்ப்பதைக் கண்ட யம்னா,

செய்னம்பு இனி ஒனக்குப் பெரச்சினல்ல . . . நீ ஒமறுலெவ்வைக்கி வாளலாந்தானே.’ என்றாள். உடன், அதிகமாகச் சிவந்து போன செய்னம்பு,

அதெல்லாம் வாப்பா பாத்துச் செய்வாருதானே யம்னா லாத்தா’ என்றாள்.

நான் வாப்பாக்கிட்டச் செல்லயா?’

இல்ல . . . ல்ல!’

களவெட்டியெல்லாம் ஒழிஞ்சிட்டு . . . வெளச்சலும் பொளல்ல. இனி கலியாண மாசந்தானே. நீ ஒமறு லெவ்வக்கி வாள்ந்திட்டு இந்தப் புள்ளயயும் பாரமெடு.’

பைத்தியமா லாத்தா? புள்ள ஒங்குடல்லா?’

எண்டாலும் அது ஒங்குட புள்ளதான்! நீதானே வளக்காய். அவன் பதிவு வெய்க்கப்போறான், அப்ப நீங்க ரெண்டு பேரும்தான் அதுக்கு வாப்பா! ம்மா!’ யம்னாவின் குரலில் தீவிரம் இருந்தது.

சும்மா இரிகா லாத்தா . . . பேக்கத கதக்காம!’

இது பேக்கத இல்லகா செய்னம்பு! தற்செயலா என்ட சீவன் போனாலும் இத . . . நாஞ் சென்னத்த என்ட ஒசியத்தா வெச்சிக்க! செரியா?’

ச்சீ, சும்மா இரிகா யம்னா லாத்தா!’ செய்னம்பு பதற்றமானாள்.

புள்ளய இப்பிடிக் கொண்டா செய்னம்பு!’ என்ற யம்னா குழந்தையை வாங்கி சிறிதுநேரம் பாலூட்டினாள். பின் எழுந்து சென்று உள்ளே சீலைத் தொட்டிலில் குழந்தையைப் போட்டு ஆட்டித் தூங்க வைத்துவிட்டு. மறுபடி முற்றத்துக்கு வந்தாள். மிகத் தீவிரமாக செய்னம்புவைப் பார்த்தாள்.

செய்னம்பு! இப்பிடி வா. தலையைப் பாப்பம்.’

செய்னம்பு வந்து வெறுந் தரையில் உட்கார யம்னா மாட்டுக் கொம்புச் சீப்பு, தேங்காய் எண்ணெய் சகிதம் வந்து அவளுக்குப் பின்னால் உட்கார்ந்தாள். செய்னம்பு தனது கூந்தலை அவிழ்த்து பின்னால் தள்ளி விட்டாள். கறுப்புக் கடல் அலை போல் அடர்த்தியும் கற்றையானதுமான அவளது நீண்ட கூந்தல் முதுகில் பரவியது. கூந்தலைப் பிரித்துப் பிரித்துப் பேன் பார்த்து பகுதி பகுதியாகச் சிக்குப் பிரித்து மாட்டுக் கொம்புச் சீப்பால், பட்டுப்போல வார்ந்து சிறுசிறு கற்றைகளாகப் பின்னிப்பின்னி மறுபடி பின்னல்களை ஒருங்கு சேர்த்துக் கட்டியபடியே யம்னா, மம்மலியுடனான தனது புளியந்தீவு பெரியாஸ்பத்திரி அனுபவங்களில் சொல்ல மறைத்து வைத்த சிலவற்றைக் சொல்ல ஆரம்பித்தாள். செய்னம்பு விசித்திரமான ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிந்தாள்.

செய்னம்பு, முக்குலத்து மூத்தம்மா வாறதுக்கிடையில ஒனக்கு செல வெசயங்களச் செல்றன். ஒன்ட மனசிக்க வெச்சிக்க. வெளியில உட்ராதே. ஒமறுலெவ்வைட்டயும் செல்லிராதே . . . செரியா?’

செரி லாத்தா! அல்லா அறியச் செல்ல மாட்டன்.’

செய்னம்பு ஒனக்கு என்ட புரிசன் மம்மலி பெரிய ஒதவி செஞ்சிரிக்காரு தெரியிமா? அதுர நண்டிக்காகத்தான் நீ இந்தப் புள்ளயப் பாரமெடுக்கணும் எண்டு நான் செல்றன். அவரு ஒனக்குச் செஞ்சது எம்பட்டுப் பெரிய ஒதவி!’

அப்பிடி என்ன ஒதவிகா லாத்தா?’

ஒன்ன சின்னப் போடி என்ற குப்பாடிப் பொண்பு டியனுக்கு வாக்கப்படாம காப்பாத்தியிரிக்காரு.’

அவருதானே அவனுக்கு வாளனும் எண்டு ஒத்தக் கால் நிண்டாரு?’

அது முன்ன . . .பொறகு ஒடன மாறிட்டாரு.’

மெய்தானா லாத்தா . . . எப்பிடி வாக்கப்படாம செஞ்சாரு?’

சின்னப் போடிய தனியாக் கூட்டிட்டுப் போய், அவன்ட ஈரப் பளுவுல கத்தியால குத்திக் கொடல உருவி சாக வெச்சிட்டாரு என்ட புரிசன் . . . தெரியிமா ஒனக்கு?’

எ . . . எண்டல் . . . லோ . .! ல . . .லாத்தா . .! நீ என்னகா செல்றாய்? ப . . . பைத்தியமா ஒனக்கு?’

செய்னம்பு அளவு கடந்த அதிர்ச்சியுடனும், பயத்துடனும் திரும்பி யம்னாவைப் பார்த்தாள்.

இல்ல! பைத்தியமுமில்ல ஒண்டுமில்ல. செய்னம்பு! வெசயத்த வெளியால உட்ராதே . . . மவ்த்து மட்டும் ஒமறுலெவ்வட்டச் செல்லாத! ஒத்தருட்டயும் செல்லாத. ஈறல் . .! ஈறல் . .! சத்தியம் பண்ணு. கியாமத்து நாளில மறிச்சிக் கேப்பன் இதுகள ஆருட்டயும் சென்னியெண்டால் பாம்பு கொத்தும் . . .கைய நீட்டு.’

உ . . . உசிரு பேனாலும் செல்ல மாட்டன்கா லாத்தா நானு சத்தியமா.’

இந்தப் புள்ளட தலயில சத்தியம் பண்ணு!’

சத்தியங்கா லாத்தா!’ தனது மருதாணிச் சிவப்பு உள்ளங் கைகளை, யம்னாவின் எண்ணெய்க் கைகளோடு கோர்த்துப் பொத்தியபடி சத்தியம் செய்தாள் செய்னம்பு. இதனால் திருப்தியுற்ற யம்னா செய்னம்புவை இன்னும் நெருக்கமாக அணுகி அவளது கூந்தலைக் கோதியபடியே மிகத் தீர்மானமாகச் சொல்ல ஆரம்பித்தாள். சொல்லும் போதே விழிகள் ஊற் றெடுத்துப் பொழிந்தன. முந்தானையால் துடைத்துத் துடைத்து எங்கோ பார்த்தபடி சொன்னாள்.

செய்னம்பு! எனக்கி விரிபொடையன் பாம்பு வெசம் வச்சிட்டுது புள்ளேய் . . .மெய்தான்.’

 

பாம்பா . . .வெசமா . . .என்னகா லாத்தா செல்றாய்?’

ஓம்டி செய்னம்பு! சின்னப் போடி என்கிற வெசப் பாம்பு என்னக் கொத்திப்போட்டுகா புள்ள.’

எ . . .என்னகா . . .எண்டல்லோ . . .வ்!’

என்னத்தடி செய்ற நான்? ஏள! லாயக்கத்த அநாதி! வக்கத்த புரிசன்! என்ட புரிசன்ட விசுவாசத்த சின்னப் போடி வெச்சி என்னோட நாலஞ்சி தெரம் ஒறவு வெச்சிட் டான்.’

சட்டென செய்னம்பு யம்னாவை விட்டு அருவெறுப் புடன் விலகி உட்கார்ந்தாள். ஒரு அசூயை மிக்க பொருளாக யம்னாவைப் பார்த்தாள். கோபம் தலைக்கேறியது. இப்படி ஒரு மோசமான கள்ளியா யம்னா லாத்தா? யம்னா அவளது செய்கையைக் கவனித்து மிகக் குற்றவுணர்வுடன் குறுகிப் போனாள். பின்னர் தனது விரக்தி விழிகளை வானத்தில் நாட்டினாள். செய்னம்புவின் கண்களைச் சந்திக்கப் பயந்தாள். அவளது அந்தரங்க ரகஸியம் முதற்தடவையாக செய்னம்புவிடம் பகிரப்பட்டதில் ஏற்பட்ட சங்கட உணர்வில் குமைந்து போ னாள். அழுக்கு வெள்ளை முந்தானையால் தன் முகத்தை அழுந்தத் துடைத்தபடியே மறுபடி யம்னா செய்னம்புவைத் தயக்கமாகப் பார்த்தாள். செய்னம்பு ஆத்திரம் மீறி அழுது கொண்டிருந்தாள். யம்னா செய்னம்புவின் முகத்தைத் தொட்டு நிமிர்த்தி, மிகக் கெஞ்சுதலுடன்,

செய்னம்பு! புள்ளேய் . . . ய்! அல்லாவுக்காக என்னப் பாரன்கா!’ என்றாள். சட்டெனச் செய்னம்பு கோபப்பட்டு, யம்னாவின் கைகளைத் தட்டிவிட்டு, அவளை விசித்திரமாகப் பார்த்து,

இத நீ ஏன் மம்மலிக் காக்காட்ட அப்பவே செல்லல்ல?’ என்றாள்.

அப்பயே செல்லியிருந்தா அவரு இப்ப செஞ்சத்த அப்ப செஞ்சிரிப்பாரு.’

விரக்தியில் சிரித்தாள் யம்னா.

அப்பிடிண்டால், பொறகு ஏன் சென்னியாம்?’

ஏனெண்டால், சின்னப் போடி ஒன்னக் கேட்டு மல்லுக் கட்டினான். என்ட புரிசனும் கூட சேந்துட்டாரு. ஒங்கு வாப்பாவும் எணங்கிட்டாரு. இத நிப்பாட்ற எப்பிடி? நீ மட்டும் ஏன்டி தடுக்காய் எண்டு அவரு எனக்கிட்டக் கேட்டு சண்ட புடிச்சாரு. வெசயத்த அவருட்டச் செல்லிட்டுப் பயனியன்ட கட்டுல இரிந்து குதிச்சி சாகுற எண்டு மனசில முடிவெடுத்தன்.’

என்ட அல்லாவே . . . ய்! மறுகா . . . எப்ப நீ இத மம்மலிக் காக்காட்டச் சென்ன?’

அவரு அடிபட்டு, கை உளுக்கி பெரிய நீலாவணயில கெடந்து வந்தாருல்லா . . . அண்டு, காலைக்க வெச்சி, கைய வீசிவீசிக் காட்டி பாருகா யம்னா . . . என்ட கையெல்லாம் சொகமாயிட்டுது. நானும் சின்னப் போடியாரும் கடும் திட்டம் ஒண்டு போட்டிரிக்கம். இனி ஒமறுலெவ்வயும், ராக்கிளிஅலியும் ஒருநாளும் ஊருக்கு திரும்பி வெர மாட்டாக. தீவாந்தரம் அனுப்பி, அங்க வெச்சே ரெண்டுபேர்ர கதை யையும் முடிக்க சின்னப் போடியாரு எல்லா எப்பாடும் பண்ணிட்டாரு. நாளைக்கி உட்டு, அடுத்தண்டு. செய்னம்புக்கும், சின்னப் போடியாருக்கும் கலியாணம் பண்ண பெரிய போடியாரும் சம்மதம் குடுத்துட்டாரு . . . மீராவட்டானையும் ஒத்துக்கிட்டாரு.’

என்டல்லா . . . வேய்.’

ஓங்கா. . . இப்பிடிச் செல்லிட்டு, சிரிச்சாரு. இத நீ செய்னம்புட்டச் செல்லிராத. எண்டு சென்னாரு. பொறகு சிரிச்சிட்டு என்ன குடிசைக்க வளத்தாட்டி. . . அன்நேரம் பாத்து, நான் செல்லிட்டன்.’

மறுகா?’

துடிச்சிப் போய் எழும்பிட்டாரு புள்ளே. . . ய்! என்ன ஒரு பார்வ பார்த்தாரு. . . நான் அவர்ர கால்ல உழுந்து கட்டிப் புடிச்சி கத்தினன்கா! கொளறினன்கா! கெஞ் சினன்கா! புள்ளே. . . ய்.’

‘... ... ...’

அவரு ஒரு பேச்சிம் பேசல்ல. கனநேரமாப் பேசாம இரிந்தாரு. . . பொறகு ஒரு கேள்விதான் கேட்டாரு.’

என்ன கேட்டாரு?’

இது நடந்த எப்ப எண்டு கேட்டாரு. நான் பயத்துல ஒரு பொய் செல்லிட்டன்கா. நீங்க பெரியநீலாவணைக்கிப் போன அண்டுதான் . . . ஒரு தரந்தான் எண்டு செல்லிட்டன்.’

செல்லயும்?’

அவரு ஒண்டும் பேசல்ல. . . நான் கொளறிக் கொளறி இரிந்தன். பொறகு சென்னாரு. யம்முனா. . . சும்மா இரி . . .

கொளராத! கொளராத! ராவைக்கி செய்னம்புவோட பொல்லடிக்கி நீ போ. மிச்சத்த நான் பாத்துக்குவன் எண்டாரு.’

மறுகா?’

நான் பயந்து போய், மச்சான்! அவிசிரப்பட்டு அவன ஒண்டுஞ் செஞ்சி போட்டுராதீங்க எண்டு அவர்ர கால்ல உளுந்து கெஞ்சினன். அவரு கொஞ்சம் ஓசிச்சிச் சென்னாரு. அதுக்குக் கவையில்ல யம்முனா. நம்முட சின்னப் போடியாரு தானே. வெளையாட்டுத்தனத்துல செஞ்சிப் போட்டாரு. நாம அவர்ர அடுமயள்தானே. கவையில்ல உடு. நான் ஒண்டுஞ்செய்ய மாட்டன். இனியாச்சிம் நெல்லா இரிண்டு சென்னாரு. அந்நேரம் வட்டக்கட அலி ஒடியாந்து, பெரிய போடியாரு மம்மலிய வெரட்டாம் எண்டு கையோட கூட்டிட்டுப் போயிட்டான். நான் தவிச்சிப் போய், சும்மா பயத்தோட கொளறிக் கொளறி இரிந்தன். அவரு சென்னத்த என்னால நம்பேலாம இரிந்திச்சி. அந்தச் சக்கோட பெரிய போடியார்ர ஊட்ட போனன். அங்க அவரு இல்ல. கேட்டன். சின்னப் போடியாரோட போன எண்டு சென்னாக. அங்க இஞ்ச எல்லாம் தேடினன். ஆளக் காணல்ல. பொறகு நான் வந்து ஒன்னோட பொல்லடி பாக்க வந்துட்டன். பொறகு என்ன நடந்த எண்டு ஒனக்குத் தெரியிம்தானே?’

பொல்லடி நடக்கக்குள்ள தேன்கொளல் முட்டாய் வாங்கிட்டு வந்தாருல்லா மம்மலிக் காக்கா?’

ஓங்கா . . . ம்க்க். அந்நேரம், இண்டைக்கி ரெண்டுல ஒண்டு பாப்பன் எண்டு திடிருண்டு எனக்கிட்டச் செல்லிட்டுப் போனாரு. ஒனக்குக் கேக்கல்லையா? எனக்கி என்ட புரிசன் பொடவ வாங்கித் தெரல்லதான் . . . நக ஒண்டும் வாங்கித் தெரல்லதான். ஆனா என்ட கண்ணுல ஒர தூசி உளுந்தாலும் பொறுக்க மாட்டாரு அவரு.’

இதயம் வெடித்து அழுதாள் யம்னா. செய்னம்புவின் மடித்திருந்த கால்களில் விழுந்தாள். பெருகிய கண்ணீர் செய்னம்புவின் தொடைகளை நனைத்தது. . . தாள முடியாத அன்புடனும், பரிதாபத்துடனும் செய்னம்பு யம்னாவின் முகத்தை நிமிர்த்தினாள். ‘இல்ல . . . லாத்தா!’ என்று விம்மிக் குமைந்தாள். சட்டெனச் சுதாரித்துக்கொண்ட யம்னா எழுந் தாள். செய்னம்புவைத் தீர்க்கமாகப் பார்த்தாள். பின் நிதான மாகச் சொன்னாள்.

என்ட கண்ணுல ஒரு சின்னத் தூசி உளுந்தாலே பொறுக் காத என்ட புரிசன் இப்பிடி ஒரு கறுமத்த எனக்கிச் செஞ்சவன சும்மா உடுவாரா?’

ஒண்டுஞ் செய்ய மாட்டன் எண்டு சென்னாரே?’

அது சும்மா. என்னத் தாளிக்கிறத்துக்காகச் சென்ன. ஆனா உள்ளுக்க வெஞ்சம் வெச்சிட்டாருகா.’

அப்பிடிண்டால்?’

பொல்லடி நடந்த அண்டு, தந்திரமா அவன கூழாவடிச் சந்திக்கி கூட்டிட்டுப் போய் சந்தியில் வெச்சி வெசயத்த அவனுட்டச் செல்லி வேய், சின்னப் போடி! நீ செஞ்ச நம்பிக்கத் தொரோகம் செரிதானாடா எண்டு கேட்டிருக்காரு.

 அவன் பயந்து போய் மம்மலிர கால்ல உளுந்து கெஞ்சிக் கொளறினானாம். ஆனா அவர்ர மனம் எரங்கல்ல. முன்னப் பின்ன ஒன்டயும் யோசிக்கயுல்ல. . . திடிருண்டு, ஏறுக்குமாறாக் கிறிஸிக் கத்தியால குத்திட்டாரு.’

ஆ... அல்... லா... வே!’

குத்தின ஒடனே அவன் எரத்தம் கக்கித் துடிச்சித் துடிச்சி சாகிறத்தப் பாத்துட்டே இருந்துட்டு, இனி இந்த அகுமானத் தோட பொண்டாட்டியோட எப்பிடி வாள்றண்டு அவடத்தயே அவரும், அலரிக்காய்ச் சப்பி விழுங்கிட்டாருகா புள்ளே...ய்...எ...ன்ட...ழ்ழோ...வ்.’

எ. . . ன்ட. . . ம்மோ. . . வ்! இதெல்லாம் ஒனக்கு எப்பிடி ல . . .லாத்தா?’

புளியந்தீவு பெரியாஸ்பத்திரியில நான் அவர வெச்சிரிந்த ல்லா? அப்ப ஒருநாள் ராவுல திடிருண்டு கண்ணு முழிச்சாரு என்ட ராசா . . . யம்முன்னா. . . யம்முனா. . . எரத்தம் குடிச் சிட்டன்டா என்ட கிளியாரே. ஒனக்கு மானவங்கப் படுத்தின வண்ட குஞ்சில குத்தி உசிர எடுத்துண்டன்டா புள்ளேய். இனி நான் செத்தாலும் பரவாயில்லண்டு செல்லிச் சிரிச்சாருகா என்ட தங்கக் கொடம்.’

‘... ... ...’

என்ட கண்டு மயிலாரு . . . என்ட எதயத்து ராசா அவரு. எனக்காக ஒரு கொல செஞ்சி . . . எனக்காக நஞ்சி திண்டு போய்ச் சேந்துட்டாரு. என்ட மடியில அவர்ர சீவன் ரோஹ§ போகக்க என்ட கையப் புடிச்சி சிரிச்சிட்டு, யம்முனா. . . நான் ஒன்ன மன்னிச்சிட்டன். நான் முந்திப் போறன். நீ பிந்தி வா ண்டாரு.’

பொறகு?’

ஒன்ட வவுத்துல இரிக்கிற நம்முட புள்ளய மட்டும் கவனமா வள. ஒமறுலெவ்வட்டக் குடுத்து அவன படிப்பிண்டு செல்லக்குள்ளயே அவர்ர சீவன் பெய்த்துகா செய்னம்போ. . .வ்        . . . இனி நான் இருந்து ஒரு பண்டமுமில்லகோ. . . வ். . .என். . . ட. . . ல்லோ. . . வ் என்ட சீவனாச்சிம் போகுதில்லியே.’

என்டம்மோ . . . வ் . .!’

உச்சக்கட்ட உணர்வழுத்தத்தில், இரு பெண்களும் வீறிட்டழுது ஒப்பாரி வைத்தனர். ஒப்பாரியால், திடுக்கிட் டெழுந்த குழந்தை வீறுட்டுக் கத்தியது. சடசடவெனச் சிற கடித்துப் பறந்தது ஒரு மாஞ்சான் குருவி. இருள் வேகமாகப்பரவிக்கொண்டிருந்தது. தேறுதல் சொல்ல ஆளின்றி இருவரி னதும் அழுகை உச்சத்தில் போன சமயத்தில் படலையைத் திறந்து உள்ளே வந்த மீராவட்டானை திடுக்கிட்டார்.

என்னடிது. .? மாலமசக்க நேரம். . . பண்டிகாள். . . பொத்துங் கடி வாய’ என அதட்டினார்.

ஆனால், அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. செயலற்று ஒன்றும் புரியாமல், திண்ணையில் அமர்ந்தார். இடுப்பு நிறைய நெற்கதிர்களைத் திருடிக்கொண்டு சந்தோஷ மாக வந்த முக்குலத்துக் கிழவி இந்தக் காட்சியைக் கண்டு, உடனடியாகத் தன் நிலை மாற்றி அச்சோகத்தில், அக்கணமே பங்கெடுத்து, அவர்களினருகில் குந்தி,

என்ட தங்கக் கொடமோ! தங்கக் கைக்குக் காப்புப் போட்டவரே! ப்ப தங்க எடம் தேடிப் போனவரே . . .’ என்று உரத்த ஒப்பாரியிட்டு ஊரைக் கூட்டிக் கத்தியதை விடவும் படுபயங்கரமாக-

அடுத்த நாள் அதிகாலையில் ஊரில் வேகமாகப் பரவிய ஒரு கதை கேள்விப்பட்டவர்களின் இதயத் துடிப்பை ஒரு கணம் நிறுத்திவிட்டது.

அந்த அதிகாலை இருட்டில், ‘பயனியன் கட்டு’ எனப்படும் பாரிய நீர் அணைக்கட்டின் ஆழமற்ற தண்ணீர் பரப்பில், தாழைமடல் பற்றைகளில் சிக்கியபடி, யம்னாவின் உயிரற்ற உடல் மிதந்து ஆடிக்கொண்டிருந்தது.

ϖ

போகம் 14

சூ டு

 

யம்னா காலமாகி இன்றோடு நாற்பது நாட்களாகி விட்டிருந்தன. மீராவட்டானையின் வீட்டில் அவளது ஆத்ம சாந்திக்காக வேண்டி சமயக் கிரியைகள் நடந்து கொண்டிருந்தன. பெரிய போடியார் தனது சவளக் கடை மாட்டுப் பட்டியிலிருந்து நாம்பன் குளுமாடு ஒன்றைத் தானமாக வழங்கியிருந்தார். அதிகாலைத் தொழுகையின் பின் அது அறுக்கப்பட்டு இறைச்சி பகிரப்பட்டது. மார்க்கக் கிரியை செய்வோருக்காகப் பகல் விருந்துபசாரமும் அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட சிலரே அழைக்கப்பட்டிருந்தனர்.

விஷேட அழைப்பின் பேரில் எந்தக் கத்த வீட்டுக்கும் செல்லாத பெரிய போடியாரே வந்திருந்தார். தன் ஒரே மகனின் பிரிவால் தொய்வுற்றிருப்பினும், மிடுக்கு குறையாமல் இருந்தார். சாப்பிட்டுவிட்டு வாசலில் போடப்பட்டிருந்த வெள்ளைப் பந்தலின் கீழ் பெரிய புட்டுவத்தில் பாய்விரிக்கப்பட்டு அமர்ந்திருந்தார்.

அடுக்களையின் பின்புறமாகப் பெண்கள் சளசளத்த படி கவலையேதுமின்றிச் சாப்பிட்டுவிட்டு சாப்பாட்டுக் களரியைத் துப்பரவு செய்து கொண்டிருந்தனர். முக் குலத்துக் கிழவி நிகழ்வுகளுக்குத் தானாகத் தலைமை தாங்கி செய்திகள் அள்ளுவதும் விள்ளுவதுமாக ஆண்கள் பக்கத்திலும் பெண்கள் பக்கத்திலும் தயக்கமின்றி ஓடி யாடித் திரிந்து கொண்டிருந்தாள். பதினாலாயிரத்து நானூற்றி எழுபது தடவையாக மம்மலி பேயாக வந்து அன்றிரவு யம்னாவைக் கூட்டிப் போய் கழுத்தை முறித்து பயனியன் கட்டில் தள்ளிவிட்ட தனது திகில் வர்ணனை யை மறுபடியும் பகுதிபகுதியாக மீள் ஒலிபரப்புச் செய்து கொண்டுமிருந்தாள்.

 செய்னம்பு பெரும்பாலும் ஆலவீட்டுக்குள்ளேயே இருந்த£லும் சமையல் எடுபிடிகளை மேற்பார்வை செய்து கொண்டு, யம்னாவின் குழந்தையைக் கவனிப்பதிலும் ஈடு பட்டிருந்தாள். பெண்களின் வம்பளப்புகளுக்கு இடம் கொடுக் காது பிள்ளையை ஆல வீட்டுக்குள்ளேயே உறங்க வைத்திருந் தாள். தந்தையும் தாயுமற்ற குழந்தை சீலைத் தொட்டிலுக்குள் பூ பார்த்துப் புன்னகையுடன் உறங்கிக் கொண்டிருந்தது. ஆலவீட்டுக்குள்ளிருந்தபடியே செய்னம்பு இரட்டைக் கதவின் இடுக்கு வழியாக வாசலை நோக்கினாள். வாசலின் பின்பக்க மாகப் பல சிறுமிகளின் விளையாட்டுப் பாடல்கள் கேட்டன. விழிகள் உமறுலெவ்வையைத் தேடின; காணமுடியவில்லை. ஆனால், அவனது குரல் முற்றத்தின் மறுபக்கம் இருந்து சிலவேளைகளில் கேட்டது. அப்பக்கம் பார்க்கக் கதவிடுக்கு இடமளிக்கவில்லை. சாப்பிட்டாரோ என்னவோ . . . இந்த நினைவு வந்ததும் சட்டென எழுந்தாள். சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்த பக்கமாக வந்தாள்.

சாந்த மாமா

எங்க போறாய்?

சோலைக்குப் போறேன்

என்ன சோலை?

மாஞ்சோலை என்ன மா? அரிசி மா என்ன அரிசி? பச்ச அரிசி என்ன பச்ச? குத்துப் பச்ச என்ன குத்து? இப்படிக் குத்து . . .

டியெ . . . கத்ஸா. .! ஏய் . . . கத்ஸா! இஞ்ச வாடியேய். . .’

‘என்ன செய்னம்பு லாத்தா?’

அங்கால உமறுலெவ்வக் காக்கா இரிப்பாரு. நி போய் அவரு சோறு திண்டுட்டாராண்டு கேட்டுட்டு வாடி ஆரு. கேக்கச் சென்னண்டு கேட்டா, ஒங்கட ‘ஆக்கள்’ தான் எண்டு செல்லு. செரிய . .? ஓடு.’

செரி லாத்தா. .!’ என்று புயல் வேகத்தில் பறந்தாள் சிறுமி. பதில் பத்தே நிமிடத்தில் வந்து சேர்ந்தது.

லாத்தா . . . லாத்தோவ்! கேட்டன். அவரு கத்த ஊட்டுல திங்கிறல்லியாம் . . . ஒருமிக்க அடுத்த மொற கலியாண ஊட்டு ‘ஆக்கள்’ ஆக்கித் தாறதத்தான் திம்பாராம்.’

அ. . .சி. . .லே. . .ய். .!’ என நாணமுற்றாள் செய்னம்பு.

முற்றத்தில் ஆண்கள் வேலையேதுமின்றி பெரிய போடியா ருடன் பழங்கதைகள் பேசிக்கொண்டு புதிதாக அறிமுகமாகிய த.பி. சொக்கலால் ராம் சேட் பீடி புகைத்துக்கொண்டிருந்தனர். சமயக் கிரியை காரணமாக ஆண்களில் சிலர் தலையில் தத்தம் சால்வையைக் கட்டிக்கொண்டிருந்தனர். சால்வை இல்லாதோர் தம்மிரு காதுகளின் மேலிடுக்கில் இரு குச்சி களை வைத்திருந்தனர். பெரிய போடியார் இவ்வருட இறுதியில் மக்க மாநகருக்குப் புனித ஹஜ் பயணம் போவதைப் பற்றி அலசிக்கொண்டிருந்தனர்.

மொதல்ல இஞ்சயிரிந்து, கண்டிக்கு ரெண்டு நாள் பயணம், அங்கயிரிந்து கொளும்பு ஒரு நாள் பயணம். கொழும்புலயிரிந்து, கடல் கடந்து இந்தியாக்கு தண்ணிக் கப்பல்ல பம்பாய்க்கிப் போற. அங்கயிரிந்து இனித் ‘துறுவா மைலா’ மக்காதான். ஏழு மாசம் எடுக்கும் . . . எல்லாம் முடிஞ்சி வெர. அல்லா சீவனப் போட்டா.’

பெரிய போடியார் தனது பயண விபரங்களைச் சொல்லிக் கொண்டிருக்க கூடவிருந்த கறுத்த மௌலானா ஹஜ்ஜின் மகத்துவங்களை இடையிடையே சொல்லி ஆத்மீக வியப்பேற்றிக் கொண்டிருந்தார். குந்தியிருந்தோர் அதிசயித்துக் கேட்டுக் கொண்டிருந்தனர். பெரிய போடியார் ஒரு பெரிய மூச்சு விட்டு,

சனம் செல்லுது அச்சிக்குப் போற ஆக்கள் பாவம் கழுவப் போறாகண்டு. அது மெய்யும்தான். என்ட மகன் மம்மனிவா அவண்ட கூட்டாளி மம்மலி. . . அவண்ட பொண் டாட்டி யம்முனா பொட்ட. . . நீங்க. . . நான். . . எல்லாருந்தான். . .அறிஞ்சிம் அறியாமயும் செஞ்ச பாவத்துக்குப் பொழ பொறுக்க அள்ளாட பெரிய பள்ளில நாயகங்கள்ள கால் தூசி பட்ட எடத்துல நிண்டு கேட்டா பலிக்காமயா உடும்?’ என்று திடநம்பிக்கையோடு உரைத்தபடியே எழுந்தார். அனைவரும் எழுந்தனர். பெரிய போடியார் திரும்பி மீராவட்டானையைப் பார்த்து,

வட்டானே.!. எங்க அந்தப் பெறந்த புள்ள? அதான் மம்மலிர புள்ள?’ என்று கேட்டார்.

அன்னா உள்ளுக்க என்ட மகளோட இரிக்கி போடியார்! படுக்குது போல. . .’ என்ற மீராவட்டானை ஆலவீட்டை நோக்கித் திரும்பி,

புள்ளே. . .ய். . .மகேள்! அந்தப் புள்ளயக் கொண்டா ஹோ. . .வ்!’ எனக் குரல் கொடுத்தார்.

சட்டெனச் செய்னம்பு தொட்டிற் குழந்தையைத் தூக்கி அவசரமாகத் துப்புரவு செய்து, புதிய வெள்ளைத் துணிக்குள் வைத்து முக்குலத்துக் கிழவியிடம் ஒப்படைத்தாள். முக்குலத்துக் கிழவி அப்படியே குழந்தையை வாங்கிக் கொண்டு திண்ணைக்கு வந்து,

இண்டைக்கி நாப்பதாம் கத்தம். . . காத்துக் கறுப்பு நிக்கிம். . . புள்ளய வெட்டயால கொண்டர ஏலா. . .’ என்று சொன்னதும் அதை ஏற்றுக்கொண்ட பெரிய போடியார் எழுந்து திண்ணைக்கு வந்தார். முக்குலத்துக் கிழவி திடீரென உற்பவித்த கண்ணீருடன், ‘பாராள வந்த அலிப் புலியே. . . சீராள வந்த தலப் புள்ளயே. . .’ என்று, ஓலப் பாட்டில் இரண்டடி எடுத்து விட்டபடியே பெரிய போடியாரின் கைகளில் குழந்தையைக் கொடுத்தாள். குழந்தை பூரண உறக்கத்தில் இருந்தது.

பெரிய போடியார் முதலில் குழந்தையைச் சாதாரண மாகப் பார்த்தார். பின் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார். சட்டென்று துணுக்குற்றுப் போனவராக மறுபடி மறுபடி குழந்தையின் இடதுகையின் சின்ன விரலை இரகசியமாகத் தொட்டு நீவிப் பார்த்தார். பின் அதன் முகத்தை ஆழமாகப் பார்த்தார். அதே கணத்தில், குழந்தையின் கடைவாய் நெளிந்து நித்திரையின் போதே பூரணமாகப் புன்னகைத்தது. பெரிய போடியாரின் நெஞ்சில் எதுவோ அடைத்தது. சுதாரித்துக் கொண்டு தன் உள்ளுணர்ச்சியை வெளிக்காட்டாமல்,

எங்க வட்டான! ஒங்குட மகள். செயினம்பு?’ என்று கேட்டார்.

லெக்கோ. . .வ். . . புள்ளே. . .ய்! செய்னம்பூவோவ்! இன்னா போடியாரு கூப்பிர்ராக!’ என்று குரல் பெருக்கினாள் முக்குலத்துக் கிழவி. உள்ளிருந்த செய்னம்பு திடுக்கிட்டு, சுதாரித்தபடி தனது ஆடையைச் சரிசெய்து மேலும் ஒரு புடவையால் மேலுக்குப் போர்த்தியபடி மெதுவாக இரட்டைக் கதவு வழியாகக் கூச்சத்துடன் வெளிப்பட்டாள். பெரிய போடியார் செய்னம்புவைப் பார்த்து சற்றுப் புன்னகைத்தபடியே,

நீயாடா புள்ளேய். . . இந்தப் புள்ளய வளக்கிற?’ என்று ஆர்வமாகக் கேட்டார்.

வெட்கத்தில் செய்னம்பு பேசவில்லை. சும்மா தலையாட்டி னாள். ஆனால், முக்குலத்துக் கிழவி இடையிற் புகுந்து,

வேற ஆரு இரிக்கி. . . பொறக்க மின்ன வாப்பாவயும், பொறந்த ஒடனே பெத்தம்மாவயும் திண்ட புள்ளய வேற ஆரு வளக்கப் போறாக? எல்லாம் வேள் செய்னம்புதான். அதோடயே கெடந்து சாகுறாள் இந்தக் கொமரு. பெத்தாக்கள்மண்மறஞ்சிட்டாக. . . கய்ட்டம் இவளுக்கு. . . இந்த ‘முசிவத்துப்’ புடிச்ச புள்ளயால’ என்று ஒரு பாட்டம் அரற்றினாள்.

 

சட்டெனப் பெரிய போடியார் முக்குலத்துக் கிழவியை எச்சரித்துப் பார்த்துவிட்டுக் குழந்தையை நேரடியாக செய்னம்புவிடம் நீட்டினார். செய்னம்பு பயத்துடனும் தயக்கத் துடனும் இரண்டு எட்டுவைத்து வந்து பெரிய போடியாரிட மிருந்து குழந்தையை ஏந்தி வாங்கினாள். போகத் திரும்பி னாள். ‘நில்லு’ என்று கட்டளையிட்ட பெரிய போடியார், வாய்க்குள் புனித குர்ஆன் வசனங்கள் சிலவற்றை முணு முணுத்துப் பின் நன்றாகக் குனிந்து குழந்தையின் நெஞ்சில் ஊதிவிட்டார். அதே கணத்தில், அதே சாக்கில் செய்னம்புவின் காதில்,

புள்ள செய்னம்பு! இது என்ட பேரப்புள்ள மாதிரி நீ வளக்கனும். அல்லாட அமானம். . . ஒனக்கிட்டத் தாரன். செரியா. .?’ என்று கூறியதைக் கிரகிக்க கிட்ட நெருங்கி வந்த முக்குலத்துக் கிழவியைக் கடுமையாகப் பார்த்த பெரிய போடியார்,

டியெ. . . பசளக் கௌவி. . . என்ன சென்ன? இது முசிவத்துப் புடிச்ச புள்ளயா? இந்தா அதப் பாத்திய?’ என்று கடினமாகச் சொன்ன பெரிய போடியார், தனது பெரிய கைபனியனுக்குள் கைவிட்டு உள்ளே துருத்திக் கொண்டிருந்த தனது வல்லுவத்தை வெளியே எடுத்தார். அதன் தங்க நிற ஞானை இழுத்துத் திறந்தார் உள்ளே கைவிட்டார். எதையோ துளாவி எடுத்து உயர்த்தி அங்கிருந்தோரிடம் காட்டினார். அது கண்ட அனை வரும் ஒரே சமயத்தில் வாய் பிளந்து அதிர்ச்சியுற்றனர்.

பளபளவென்ற சுத்த வெள்ளியினாலான ஒரு குஞ்சு பிடிமாங்காய்ச் சதங்கை அது. வெள்ளி மணிகளால் வரிசை யிட்டுக் கோர்த்து மத்தியில் கண்டிப் பேரரசன் இராசசிங்கனின் பட்டத்து யானை உருவம் பதித்து வேலைப்பாடு செய்த கூம்புருவத்தின் மத்தியில், பளீர் நீலநிறத்தில் மாணிக்கக் கல் கதிரொளி வீசிக்கொண்டிருந்தது. அடியில் சிறுசிறு தூய வெண் கல நீளிலை வடிவுருக்கள் நெருக்கமாகக் கோர்க்கப்பட்டு துடிதுடித்து ஆடின. ஆடுகையில் உரத்த சுருதியுடன், ஆனால், இனிமையாக ‘ணிங். . .ணிங். . .ணிங். . .’ஙென்று இன்னிசை எழுப்பின. இது பெரிய போடியார் பிறந்த போது இவரது தந்தைக்கு கண்டி அரசவையில் முஹாந்திரமாகக் கடமை புரிந்த தளபதி ஹச்சி மரிக்கார் காரியப்பேரு அளித்த நன்கொடை. போடிவீட்டாரின் பரம்பரைச் சொத்து. இந்த அநாதைக்கா?

இஞ்சரா. . . குஞ்சுடிச் சலங்க! குஞ்சுடிச் சலங்க!’ என்று பற்பல குரல்கள் ஆச்சரியப்பட பெரிய போடியார் அதனை பெருமிதமாக செய்னம்புவிடம் நீட்டினார்.

இத சின்னப் புள்ளயள்ள எனக்கி எங்கு வாப்பா போட்ட. பொறகு என்ட மகன் சின்னப் போடியாரு மம்மனிவாக்கு நான் போட்டன். இப்ப இந்தப் புள்ளக்கி. . . என்ட நங்கொட.’

பெரிய போடியாரின் பரம்பரைப் பொக்கிசப் பெட்டகத் தில் இத்தனை காலமாக தூங்கிக்கொண்டிருந்த இந்தப் ‘பேர் பெற்ற’ எழுபது பவுண் பெறுமானமிக்க ஆபரணத்தை கண் ணால் காண்பதே பாக்கியம் என்றிருந்த பெண்கள் முழுப் பொறாமையுடன் முண்டியடித்துப் பார்வையிட்டனர். முதற் தடவையாகத் தொட்டுத் தொட்டுப் பார்த்தனர். பெரிய போடியார் மெல்லிய புன்னகையுடன் முக்குலத்துக் கிழவியைப் பார்த்து,

இப்ப செல்லங்கா. . . இது முசிவத்துப் புடிச்ச புள்ளயா?’ என்றதும், முக்குலத்துக் கிழவி வெட்கப்பட்டு, ‘இல்ல. இனி இது சீமான் வறக்கத்துக் குட்டி!’ என்றாள்.

 

சாவீட்டுச் சூழல் மாறி சனங்கள் கலகலத்துப் போய் பெரிய போடியாரின் இந்த அன்பளிப்பைப் பார்த்து ஆளுக்காள் விமர்சனத்தில் இறங்க பெரிய போடியார் மறுபடி அறிவித்த இன்னொரு செய்தியால் அதிர்ச்சியின் உச்சத்தில் உறைந்து போயினர். இருமிக் கனைத்து அமைதியை உண்டாக்கிய பின், கேட்டார்.

புள்ளே. . . செய்னம்பு! இந்தப் புள்ளக்கிப் பேரு வெச்சயா?’

செய்னம்பு பேசாமல், வெட்கத்துடன் இல்லையென்று தலையாட்டினாள்.

செரி செரி. . . புள்ளக்கி முவம்மது அனிவா எண்டு பேரு வெய். செரிய. . . ஏனுண்டால், என்ட மகன் மம்மனிவாட பேருல எளுதின, காலை வயலயும், பெரியவெளி தொண்ணூறு ஏக்கரையும் இந்தப் புள்ளட பேருக்கே எளுதி வெக்கப்போறன்.’

என்னது?’

என்ட. . .ல்லோ. . .வ்!’

என்னகா இது புதினம்?’

ஒரு புதினமுமில்லடி பண்டிகாள்! டியெ, ஓட்ட பெருத் தாளோவ்! இஞ்ச கூடியிரிக்கிற எல்லாரும் நெல்லாக் கேட்டுக் கங்க. எனக்கி இனி ஆம்புளப் புள்ளயள் இல்ல. இருந்த ஒண்டையும் பலி குடுத்திட்டன். இந்த மம்மலிர புள்ளய நான் எடுத்து வளக்கப்போறன். என்ட அடுத்த தலமொறக்கி நான் இந்தப் புள்ளயத்தான் ‘தத்துரித்து’ எடுக்கப் போறன். .வெளங்குதா. இனி இது இஞ்ச கொஞ்ச நாளக்கி இரிக்கட்டும், பொறகு நான் அச்சிக்குப் போய் சீவன் கெடந்து திரும்பி வந்தா இதப் பாரமெடுப்பன். அதுமட்டுக்கும் புள்ள பத்திரம். செய்னம்புட்ட இது அமானம். . .செரியா?’

சனங்களின் அதிர்ச்சி ஒலிகளுக்கு மத்தியில் செய்னம்புவும் திடுக்கிட்டுப் போனாள். மீராவட்டானை நம்ப முடியாத நடுக்கத்துடன் பெரிய போடியாரைப் பார்த்தார். முக்குலத்துக் கிழவி, அதிர்ச்சியுடன் செய்னம்புவைப் பிடித்துக் கொண்டாள். சனங்களிடையே நின்று கொண்டு செய்னம்புவையே வைத்த கண் வாங்காது பார்த்துக்கொண்டிருந்த உமறுலெவ்வை வியப்பு தாளாமல் விறைத்துப் போனான். சனங்கள் உச்சக்கட்ட வியப்புணர்ச்சியில், வாய் பிளந்திருந்தனர். மறுபடி பெரிய போடியார் கூடியிருந்தோர் மத்தியில், யாரையோ கண்களால் தேடினார். பின்,

எங்கடா ஒமறுலேவ்வ?’ என்றார்.

பல குரல்கள், ‘ஒமறுலேவ! ஒமறுலேவ. . .ய்!’ என்று கூப்பிட அதிர்ச்சி மாறாமலேயே உமறுலெவ்வை முன்னால் வந்தான். பெரிய போடியாரைப் பார்க்கத் தைரியமின்றி கீழே பார்த்தான். பெரிய போடியார் அடுத்த அதிர்ச்சி மின்னலை வெட்டினார்.

டெ. . . ஒமறுலேவ்வ! கூழாவடிச் சந்திக் கடைய அப்பிடியே பள்ளிக்குடமா ஆக்கப்போறன். அதுல ஒன்னத்தான் வாத்தி வேலக்கிப் போட்ரிக்கன். போகத்துக்கு ரெண்டர அவணம் நெல்லு சம்பளமா வேறயாத் தாரன். வெள்ளக்கார அரசாங்கத்துரகாசிச் சம்பளத்துக்கும் ஏப்பாடு பண்ணியிரிக்கன். இந்தா கடுதாசி . . . நம்முட ஊர்ப் புள்ளயளுக்கு நாலு எழுத்துச் செல்லிக் குடு. இனி நீ வெள்ளாமச் செய்யாத. செரியா? இனி நீ வாத்தியாரு!’

உமறுலெவ்வை பெருமிதத்தில் கண்ணீர் பனிக்க குறுகிக் போய் நின்றான். செய்னம்பு உமறுலெவ்வையின் நியமனத்தைக் கேட்டு புளகாங்கித்துப்போய், சிலையாகிப் போனாள். தன்னிலை மீண்டு உமறுலெவ்வையை விழிகள் கொள்ளுமட்டும் ஆர்வத்துடன் விழுங்கினாள். அதிரடி அறிவிப்புகளால் சனங் களை அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சியடைய வைத்த பெரிய போடியார் சட்டென வாசலுக்கு இறங்கினார். திகைத்துப் போய் நின்ற முல்லைக்காரன் திடீரென ஓடி வந்து செப்பாணி மிதிவடிகளைப் போடியாரின் கால்களில் மாட்டிவிட்டான். அதை அணிந்த பெரிய போடியார், இரண்டெட்டு வைத்து விற்கரத்தையை நோக்கி நடந்தவர், சட்டென்று திரும்பி வந்து,

வட்டான எங்க?’ என்று கேட்க, அருகிலிருந்த மீரா வட்டானை துரிதமாக, ‘இன்னாதான் இரிக்கன் போடியார்!’ என்று முன்னால் வந்தார்.

வட்டான! இனி கொடியேத்தம் முடிஞ்சி, கத்த ஊட்டு தொடக்கும் கழிஞ்சி, இனி எல்லாத்தையும் உட்டுட்டு உமறு லெவ்வைய செய்னம்புக்கு பண்ணி வெய்ங்க. ரெண்டு பேருமா இந்தப் புள்ளய வளக்கட்டும்.’

செரிசெரி . . . போ . . . டியார்!’ திடுக்கிட்ட குரலில் ஒப்பளித்தார் மீராவட்டானை. பெரிய போடியாரின் இந்த அறிவிப்புக்கும் நின்றுகொண்டிருந்த சனங்கள் அத்தனை பேரும் பரிபூரண ஆமோதிப்புடன், ‘கிளியும் கிளியும் கிண்ணரம் . . . போடியார்’ என்றனர்.

இதைக் காதில் கேட்டதும் செய்னம்பு தாள முடியாத வெட்கத்துடன் துள்ளி ஓடத் திரும்பி முக்குலத்துக் கிழவியுடன் மோதிய அதே கணத்தில் ஒரு தற்செயல் பார்வையில் உமறுலெவ் வையின் விழிகளைச் சந்திக்க, நான்கு விழிகளிலும் ‘எப்போது . .? எப்போது . .?’ என்ற பரவச மின்னல் பளிச்சிட்டு மறைந்தது. செய்னம்பு ஆலவீட்டினுள் மறைந்தாள். பெரிய போடியார் உமறுலெவ்வையின் தோளில் தட்டிவிட்டு தனது விற்கரத்தையில் ஏறியதும் புறப்பட்டுச் சென்றதும் ஒன்றும் தெளிவாகப் புரிய வில்லை.

ϖ

போகம் 15

கூழன்

செய்னம்புவுக்கும் உமறுலெவ்வைக்கும் மிக எளிமை யாகத் திருமணம் நிகழ்ந்தது. மரணத்தின் சோகம் மறைந்து திருமண மகிழ்ச்சி களைகட்டத் தொடங்கி யிருந்தது. மீராவட்டானை தனது குடும்ப உறவினர் களுக்கும் குறிப்பிட்ட சில அயலவருக்கும் மட்டும் மான் இறைச்சிக் கறியுடன் பகலுணவு அளிக்க ஏற்பாடு செய்திருந்தார். மீராவட்டானையின் வீட்டு முற்றத்தில், சிறிய வெண்ணிறப் பந்தல் இழுக்கப்பட்டிருந்தது. பந்தல் முழுவதும் திண்ணைக்குள்ளும் ஆலவீட்டுக் குள்ளும் தென்னங் குருத்தோலைகள் அலங்காரமாகவும் அவசரமாகவும் தொங்கின. பந்தலின் மத்தியில் வாழைமரத் தோரணத்துடன் தென்னம்பாளை ஒன்றும் பூரணமாக விரிந்து செப்புக்குடத்தில் பூவரி சிரித்தது. பந்தலில் தோட்டுப் பாய்கள் விரிக்கப்பட்டு மேலாக சபைப் பாய்களும் விரிக்கப்பட்டிருந்தன.

ஆலவீட்டுக்குள் ஒரு சேவரக்கால் நன்றாக அலங் கரிக்கப்பட்டு மணப்பெண் அமரவும் தாலி கட்டவும் தயார் நிலையில் இருந்தது. அதில் செய்னம்பு அமர்ந்திருந் தாள். அலங்கரிக்கப்பட்டிருந்தாள். சுற்றிலும் பெண்கள், சிறுமிகள் கூட்டம். பெண்கள் குரவை ஒலியெழுப்பி ஆரத்தி எடுத்து மருதோன்றியிட்டுத் தாராளமாக வெற்றிலை, பாக்கு, பழம், கற்கண்டு என்று மென்று கொண்டிருந்தனர்.

இரவுத் தொழுகையின்பின் மாப்பிள்ளை கூட்டிவர நிச்சயிக்கப்பட்டிருந்தது. முக்குலத்துக் கிழவி திருமண வேலைகளை மேற்பார்வையிட்டு கல்யாண வீடெங்கும்ஓடிஓடிச் செய்தி சேகரித்தும், தின்பண்டங்களும் தகவல்களும் பரிமாறிக்கொண்டுமிருந்தாள். மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் முதல் விசேட உணவுத் தயாரிப்பில் சிலர் ஈடுபட்டுக் கொண் டிருந்தனர். முதல் உணவாகக் கூவும் பருவச் சேவல் இறைச்சிக் கறியும் விரால் மீன் பொரியலும் வண்டுப்பிட்டும் அதிமணத் துடன் தயாராகின. முக்குலத்துக் கிழவியும் இதர சில பெண் களும் புதிதாக வாங்கியிருந்த கட்டிலை அலங்கரித்தபடியே ‘வெட்கமின்றிச்’ சொன்ன சில கதைகளால் செய்னம்பு இனம் புரியாத ஆர்வப் பயத்துடன் வியர்த்துப் போயிருந்தாள்.

மேலும், மீள முடியாத கனவுலகில் அடிக்கடி இலயித்திருந் தாள். யம்னாவும் மம்மலிக் காக்காவும் இல்லாததைவிட வேறொரு குறையும் இருக்கவில்லை. ஆனால், அதுவே ஒரு பெரிய குறையாகவும் இருந்தது.

காலையிலிருந்தே குழந்தை முகம்மதனிபா பக்கத்து வீட்டு பசிந்தும்மாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. செய்னம்புவுக்கு ஒரு வேலையுமிருக்கவில்லை. சும்மா சிறுமிகளுடன் பேசிக் கொண்டிருப்பதும் பெண்கள் கூட்டம் குரவையிட்டு வரும் போதெல்லாம் வந்து சேவரக்காலில் அமர்ந்து காட்சியளிப்பதும் ஆரத்தி மருதோன்றிச் சம்பிரதாயங்களை ஏற்று, பின் உள்ள றைக்குப் போவதுமாக இருந்தாள்.

வெளியே பந்தலில் ஆண்கள் சளசளத்தபடி உற்சாகமாகப் பகலுணவு விருந்துபசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மீராவட்டானை மகிழ்ச்சியுடன் புத்தம்புது இரட்டைமூட்டுச் சாரமும் கைபெனியனும் சீனப்பட்டுச் சால்வையும் அணிந்து வருவோரை வரவேற்றுக்கொண்டிருந்தார். பெரிய போடியார் சாப்பாட்டுக்கு வர மாட்டாரெனச் சொல்லியனுப்பியதால், அவருக்கும் கல்வீட்டுக் குடும்பத்தினருக்குமாக விஷேடமாகச் சகல சாப்பாட்டு வகைகளும் பெரிய பன்பெட்டியுள் இட்டு முக்குலத்துக் கிழவிவின் தலைமையில் கரத்தையில் சென்றது.

இரவானதும் வாசலில் இரண்டு பெரிய கடல் லாம்புகள் அதீத வெளிச்சத்தைப் பரப்பின.பந்தலில் ஒரு வாடகைப் ‘பெற்றோல்மக்ஸ்’ விளக்கு பிரகாச மாக ஒளிர்ந்தது. பள்ளித் திடல் ஒழுங்கை நெடுக இடை யிடையே கடல் லாம்புகள் வீதி முழுக்க வெளிச்சம் பரப்பின.

நள்ளிரவு தாண்டியதும் திருமணவீடு அமர்க்களப்பட்டது. செய்னம்பு புத்தம்புதிய கடுகு வண்ணச் சோமன் உடுத்தி அதற்கேற்றாற் போல் கடுகு வண்ணத்திலேயே புதுச்சட்டை அணிந்து பூக்கள்,தலையாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தன் தலையை முக்காடிட்டு மூடி புதிதாகச் செருப்பணிந்துமுழங்கைகள்வரை வெள்ளி தங்கமுலாம் வளைகாப்புகள் அணிந்து, இரண்டு பெரிய ஆரத்திகளுக்கு மத்தியில் தானும் ஒரு வர்ண ஆரத்தியாய், வெட்கத்தில் கூனிக் குறுகி சேவரக் காலில் உட்கார வைக்கப்பட்டிருந்தாள். மாப்பிள்ளை தாலி கட்ட வர வழிவிட்டு திண்ணை ஆலவீடு முழுக்கப் பெண்கள் நிறைந்திருந்தனர்.

வெளிப்பந்தல் ஆண்களால் நிறைந்தது. மீராவட்டானை தலைமையில் முக்கிய சிலரும் பள்ளி ஆட்களும் மாப்பிள்ளை கூட்டிவரப் போய்விட்டனர். உமறுலெவ்வைக்குத் தந்தை தாய் இல்லாதபடியால் ராக்கிளி அலியின் வீட்டிலிருந்தே மாப்பிள்ளை அழைப்பு இடம்பெற ஏற்பாடாகியிருந்தது. சற்றுநேரத்தில் தூரத்தில் பட்டாசுகள் வெடித்து வெடித்து ஓயும் சத்தம் கேட்டது. தொடர்ந்து பறையர் குல மூப்பனாரின் வாத்தியக் கோஷ்டியின் தவில் ஒலியும் நாதஸ்வரமும் நெருங்கி வரும் ஓசை காதுகளில் விழுந்தது. தொடர்ந்து விட்டுவிட்டுப் பெண்களின் குரவை ஒலி கேட்டது. பக்கிர்பாவாக்களின் ‘பைத்து’ ஓதிக்கொண்டு வரும் சத்தம் மிக அருகில் கேட்டது.

மாப்புள்ள வெருது. . . மாப்புள்ள வெருது. . .’ என்று முக்குலத்துக் கிழவி அநாவஸ்யமாக அறிவித்தபடி வாசலுக்கு ஓடிவந்தாள்.

ஊர்வலம் பள்ளித்திடல் ஒழுங்கையில் ஏறி நெருங்கி வந்துகொண்டிருந்தது. முன்னால் வந்த மாப்பிள்ளைத் தரப்புப் பெண்களின் குரவையலி மிக உச்சஸ்தாயியில் வாசலில் ஒலித்தது. கலகலவென பெண்களின் பேச்சுக் குரல்கள். . . சிரிப்புகள். . . சிறுமிகளின் அழைப்போசைகள். . . கேலிகள். . .சந்தன மருதோன்றி வாசனைகள். . . பளபள பட்டுச் சோமன் கள். . . கிலிங்கிலிங்ஙென்ற வெள்ளி நகைச் சிணுங்கல்கள். . .

உள்ளே வந்த பெண்கள் கூட்டம் வந்து பரவ திண்ணை நிறைந்தது.

தொடர்ந்து வாசல் படலையில் பறையர் குல மூப்பனாரின் தவில் ‘தத்தத் தமார். . . தத்தத் தம்மார். . .’ என்று காதுகளைக் கிழிக்குமாறு நாதஸ்வர ஒலியுடன் உச்சத்தில் ஒலித்தது.

         £ப்பிள்ளையை வளவுக்குள் நுழைய விடாது ‘மறிப்பு’ இடம்பெற்றது. சனங்கள் மிக இரஸிப்புடன் அதைக் காணக் குழுமி நின்று சிரித்தனர். பறையர் குல மூப்பனார் தன் பெரு வயிற்றுடனும் மிகப்பெருந் தவிலுடனும் குதித்துப் பாய்ந்து குதித்துப் பாய்ந்து ஆடிக் கொண்டிருந்தார். படலையை மறித்து மறித்து மாப்பிள்ளையை உள்ளே வர விடாமல் தடுத்தார்.

 மூப்பன் மறிக்கான். .! மூப்பன் மறிக்கான். .! எண்டேய். . . மாப்புள்ள வெரமாட்டாருகோ. . .வ். . . செய்னம்புவோவ்!’ என்று தனது அபசகுனப் பகிடியைப் பெரிதாக ஒலிபரப்பி அத்தனை பெண்களையும் சிரிக்க வைத்த முக்குலத்துக் கிழவி வாசலுக்கு ஓடிவந்தாள். படலையருகே மாப்பிள்ளை வழி மறிக்கப்பட்டு நின்றுகொண்டிருக்க படலையை அடைத்தபடி மூப்பனார் குழு உட்புகவிடாது ஆடிக்கொண்டிருந்தது.

         £ப்பிள்ளை உமறுலெவ்வை சிரித்தபடி, படலைக்கு வெளியிலேயே நின்று கொண்டிருந்தான்.

மாப்பிள்ளை உமறுலெவ்வை பச்சைப்பட்டாடிச் சாரம் அணிந்து புத்தம் புதிதான கைபெனியன் அணிந்து உட்செலுத்தி மேலால் மரீனாப் பட்டி அணிந்து தோளில் தங்கமுலாம் கரையிட்ட நீண்ட இந்தியச் சால்வைபோட்டு தலையில் பூக்குஞ்சம் ஆடும் துருக்கித் தொப்பியைத் தரித்திருந்தான். அவனுக்கு முன்னும் பின்னும் இரண்டிரண்டு பேர் நின்று கொண்டு வெண்ணிறத் துணியைக் கம்பில் கட்டி தலைக்கு மேலாகப் பிடித்துக்கொண்டிருந்தனர்.

மாப்பிள்ளையைப் படலைக்குள் நுழையவிடாது தடுத்துக் கொண்டிருந்த பறையர் குல மூப்பனாருக்கு உமறுலெவ்வை சம்பிரதாயப்படி தனது மரீனாப்பட்டடி திறந்து ஐந்து சத நாணயக்குற்றி ஒன்று எடுத்துக் கொடுக்க அது போதாதென்று மூப்பனார் மறுபடி ‘தத்தத்தமார். . . தத்தத்தமார். . .’ எனக் கொட்டி முழக்க நாதஸ்வரம் உச்சஸ்தாயியில் அலற, மாமனார் மீராவட்டானை தம் பங்குக்கு மேலும் ஐந்து சதக் குற்றியைக் கொடுத்த பின்னரே மூப்பனார் குழு வழிவிட்டது. மாப்பிள்ளைத் தரப்பினர் சிரித்தபடியே உள்ளே வந்தனர்.

அனைவரும் பந்தலின் கீழ் சபைப்பாய்களில் அமர்ந்தனர். மாப்பிள்ளை உமறுலெவ்வை மட்டும் புட்டுவத்தில் வெள்ளை விரிக்கப்பட்டு, அதில் அமர வைக்கப்பட்டான். செய்னம்புவின் ஒன்றுவிட்ட தம்பி ஒருத்தன் கிளிக்கால் விசிறியால் மாப்பிள்ளைக்கு விசிறிக்கொண்டிருந்தான். கீழே அமர்ந்திருந்த மாப்பிள்ளை, பெண் தரப்பு ஆண்கள் தமக்குள் வம்பளந்து கொண்டும் மாப்பிள்ளையைக் கேலி செய்துகொண்டுமிருந்தனர். எல்லாவற்றுக்கும் மாப்பிள்ளை மையமாகச் சிரித்துக்கொண்டி ருந்தான். பந்தலில் விசேஷமாகச் சாய்ந்தமருது சானாப் புலவரின் ‘மாப்பிள்ளை வாழ்த்துப் பா’ பாட ஏற்பாடாகியிருந்தது. சானாப் புலவரின் பாடல் கேட்க அனைவரும் பகிரப்பட்ட பலகாரங்கள் சாப்பிட்டு வெற்றிலை பாக்கு மென்று காத்திருந் தனர். பா முடியும் வரைக்கும் தாலி கட்டுதல் நடக்காது.

சற்று நேரத்தில் மாப்பிள்ளை வாழ்த்து ஆரம்பமானது. சாய்ந்தமருது சானாப் புலவர் பட்டுக்கரை இந்தியச் சாரனை அணிந்து இந்தியப் பட்டுச் சால்வையால் தனது வெறும் மேலை மூடிப் போர்த்தியிருந்தார். கையில் வேறாக இந்திய விசிறிச் சால்வை இருந்தது. பலகாரம் சாப்பிட்டு வெற்றிலை பாக்கும் மென்று துப்பிவிட்டுப் பெருமையுடன் எழுந்து நின்றார். சபையை ஒரு தரம் வித்துவச் செருக்குடன் பார்த்தார். மாப்பிள்ளையின் அருகில் சென்றார். கையிலிருந்த விசிறிச் சால்வையால் மாப்பிள்ளைக்கு மேலோட்டமாக விசிறியபடியே தன் பாடலை ஆரம்பித்தார். வீட்டுக்குள்ளிருந்து பெண்கள் சட்டென அமைதியாயினர். குரலைச் செருமிக் கனைத்து ஒரு சிறிய ஆலாபனை செய்து சரிபார்த்த பின் முதலில் இறைகாப்பு எனத் தொடங்கி நபி புகழ் பாடி முடித்தார். பின் உரத்த குரலில் சத்தமாய்த் தொடங்கினார்.

இந்த வண்ணக் களரியில்

தம்பட்ட மேளம் சல்லாரிகள் ஒலிக்க

என் மன்னா . . . சல்லாரிகள் ஒலிக்க

வந்து இந்தப் பந்தலில் தங்கியிருக்கின்ற

மாசபையோர் மகிழ

என் மன்னா . . . மாசபையோர் மகிழ

ஆலிமுலெவ்வை மரைக்கார்மார் மோதினும்

அன்பாய்ப் புடை சூழ

என் மன்னா. . . அன்பாய்ப் புடை சூழ . . .

எனத் தொடங்கி நீட்டிமுழக்கிப் பின்னர், ஊர்ப்பெருமையும் சபைப்பெருமையும் சானாப் புலவரின் குரலில் தேனாய்ப் பாய்ந்தன. தொடர்ந்து மாப்பிள்ளையின் தன்மை . . . பெண் ணின் அழகு. . . மாப்பிள்ளை பெண் கேலிக் குறும்புகள். . .

திருமணத்தின் பின்னரான அறிவுரை. முடிவில், நற்குழந்தைகள் வளர்ப்பு எனச் சுற்றி வந்து பாடல் முடியப் பின்னிரவாகி விட்டிருந்தது. ஒருவழியாக மாப்பிள்ளை எழுந்து புலவருக்கு அன்பளிப்புச் செய்தான். சபையிலிருந்தும் சில அன்பளிப்புக்கள் கிடைத்தன. மாமனார் மீராவட்டானையும் விஷேடமாகச் செம்மஞ்சள் பட்டுப் பொன்னாடையால் சானாப் புலவரைப் போர்த்தியதும்தான் புலவர் திருப்தியுற்று தனது பாடலை நிறுத்தி ஓய்ந்தார். பள்ளி மரைக்காரும், திருமண லெப்பையும் உடனடியாக எழுந்து,

வல்ல பெரியவன் காவலிலே. . . மக்கத்து நபிநாதர் வழியிலே. . . இந்த ‘நிக்காஹ்’வைச் செய்வமா?’

என மும்முறை உரத்துக் கேட்க, சபையும், மும்முறையும் ‘செய்வம். . . செய்வம். . .’ என்று பதிலளித்தது. உடனே, மரைக்காயர் சமிக்ஞை செய்ய, மாப்பிள்ளை எழுந்தான். அங்கிருந்து உள்ளே ஆலவீடு வரை விரிக்கப்பட்டிருந்த வெள்ளைச் சீலையில் நடந்து வந்தான். ஆலவீட்டறையை நெருங்கியதும் செய்னம்புவின் தம்பி மாப்பிள்ளையின் கால்களைத் தேங்காய்ப் பாலும் மஞ்சள் தண்ணீரும் கலந்த திரவத்தால் கழுவினான். உமறுலெவ்வை தனது மரினாப் பட்டியிலிருந்து ஒரு ரூபாய்த் தாள் உருவி அவனுக்கு அன்பளித் தான். பின் உமறுலெவ்வை வலது காலை எடுத்து வைத்து பிஸ்மிச் சொல்லி மணப்பெண்ணிருந்த அறைக்குள் நுழைவது வெட்கத்தில் தாழ்ந்திருந்த செய்னம்புவின் பாதி விழிகளில் தெரிந்ததும் பயத்தில் மருகி ஒடுங்கினாள்.

உள்ளே வந்த உமறுலெவ்வை செய்னம்புவை நெருங்கியதும் தயாராக நின்றிருந்த மீராவட்டானை மரைக்காரின் வழி காட்டலில் செய்னம்புவின் முன்னெற்றி உரோமங்களில் மூன்றினைப் பிடித்து பிஸ்மிச் சொல்லி உமறுலெவ்வையின் வலது கையில் ஒப்படைத்தார். பின்னர் செய்னம்புவின் வலது கையைப் பிடித்து உமறுலெவ்வையின் வலது கையில் கொடுத் தார். உடன் உமறுலெவ்வை தயாராகக் கொணர்ந்திருந்த ‘மஹர்’ப்பணமான ஐந்து ரூபாயை செய்னம்புவின் கையில் கொடுத்தான்.

 

பின், ராக்கிளி அலியின் மனைவியின் உதவியோடு, தனது உரத்த வேலைப்பாடுகளால் நிறைந்திருந்த பொன்தாலியை செய்னம்புவின் கழுத்தில் கட்டினான். பின்னர் பக்கத்தேஉட்கார வைக்கப்பட்டான். உடனிருந்த ஆலிமு லெப்பை உரத்த குரலில், அரபியில், ‘அல்பாத்திஹா. . .’ என உரக்கக் குரல் கொடுத்து புனித குர்ஆன் வசனங்கள் சில ஓதி, தொடர்ந்து இறைகருணை வேண்டி அறபிலும் தமிழிலும் இறைஞ்சுதல் செய்தார். அனைவரும் இரு கைகளேந்தி ஆமோதித்து ‘ஆமீன்’ சொல்லிய பின், முக்குலத்துக் கிழவி சத்தமாக, ‘எல்லாம் வேல செரி! அன்னா செய்னம்பு வாண்டுட்டாள்ளோவ்!’ எனச் சொல்லிப் பாவனை காட்ட அனைவரும் சிரித்தனர்.

சற்று அமைதியாயிருந்த சபை மறுபடி கலகலப்பானது. சேவரக்காலில் உட்கார்ந்திருந்த உமறுலெவ்வை இரகஸியமாக தனது வலது கையை விட்டு செய்னம்புவின் இடதுகையை மெதுவாக அழுத்திச் சற்றுத் திரும்பி செய்னம்புவைக் கடைக் கண்ணால் பார்த்தான். செய்னம்புவும் முகம் முழுவதும் வேர்த்துச் சிவந்து போய் உமறுலெவ்வையைக் கீழ்க்கண்ணால் பார்ப்பது தெரிந்தது. அச்சமயம் உள்வீட்டறைக்குள்ளிருந்து இதுவரையும் அமைதியாகப்படுத்துக் கிடந்த யம்னாவின் குழந்தை வீலிட்டலறியது. உடனே தான் பிடித்திருந்த செய்னம்பு வின் கை நடுங்குவதை உணர்ந்தான் உமறுலெவ்வை.

00

பெரிய கல்வீட்டின் பெட்டக அறையில் தனிமையாகக் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்தார் பெரிய போடியார். எதிரே மீராவட்டானை கீழே பாயில் உட்கார்ந்திருந்தார். சாதாரணமாகப் பெட்டக அறைக்குள் பெரிய போடியார் யாரையும் அனுமதிப்பதில்லை. ஆனால், தம் வீட்டுப் பெண் களையும் இந்தப்பக்கம் வரவிடாது தடுத்துவிட்டு மீரா வட்டானையை மட்டும் தனிமையாக அவசரமாக அழைத்து உட்கார வைத்துவிட்டு வெகு நேரமாகப் பேசமலேயே இருந்தார்.

மீராவட்டானைக்கு மிகுந்த சங்கடமாகவிருந்தது. இன்று வீட்டில் ஏராளம் வேலைகள் இருந்தன. கல்யாணமாகி இன்று ஏழாம் நாள். மணப்பெண் செய்னம்பு இன்று புருஷன் வீட்டுக்குக் கால்மாறிப் போகவிருந்தாள். அநேக ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஆனால், பெரிய போடியாரின் அவசர அழைப்பின் பேரில் புறப்பட்டு வந்திருந்தார். விஷயம் மிக முக்கியமானது என்பது பெட்டக அறைக்குத் தன்னை அழைத்து வந்ததிலிருந்தே புரிந்துகொண்ட மீராவட்டானை வெகு நேரமாகவே அமைதியாயிருக்கும் பெரிய போடியாரையே பார்த்துக் கொண்டிருந்தார். பேச்சை அவரே தொடங்கட்டும் என்று காத்திருந்தார்.

 பெட்டக அறையில் புராதனப் பெட்டகங்கள் சின்னதும் பெரிதுமாக இருபதுக்கும் மேலாக விசாலமாக அடுக்கப் பட்டிருந்தன. சுவர் முழுக்க மான்கொம்புகள். சிறுத்தைப் புலித் தோல். யானைத் தந்தங்கள். கருங்காலிச் செதுக்கல்கள். பெரிய போடியாரின் தந்தையின், பயில்வான் விருதுகள். அவர் அடக்கிய பெரிய குளுமாடுகளின் வளைந்த பெரிய கொம்புகள். அவர் பாவித்த பொருட்கள். கூமுனை வெள்ளைத் துரையுடன் அவர் சேர்ந்திருப்பதை வரைந்திருந்த பிரமாண்ட ஓவியம். மருந்து கிட்டிக்கும் இரும்புக்குழாய்த் துப்பாக்கி. இதுவரையும் காணாத பென்னம்பெரிய திண்டுக்கல் இரும்பு அலுமாரி. அறையெல்லாம் இனம்புரியாத நறுமண வாசம்.

‘. . .ண்ணும் எப்படி இரிக்காஹ? வட்டான காதுல உழுதா?’

திடீரெனக் கேட்ட பெரிய போடியாரின் கேள்வி சரியாகக் காதில் விழவில்லை. இருந்தாலும் சும்மா சமாளித்த மீராட் டானை, ‘பெரச்சின இல்ல போடியார். . .’ என்றார். பெரிய போடியார், புன்னகைத்தபடியே,

ஜர்மன் சுருட்டை மீராவட்டானையிடம் நீட்டினார். பத்திரமாக அதை வாங்கிக் கரிநெருப்பில் பற்றவைத்துக் கொடுத் தார் மீராவட்டானை. புகைத்துக் குப்பெனப் புகைவிட்டு அறையெல்லாம் நிரப்பிய பெரிய போடியார், மீராவட்டானை யைத் தனது பெரிய கண்களைச் சிறிதாக்கிக் கூர்மையாக உற்றுப் பார்த்தார். பின் ஆர்வமாகக் கேட்டார்.

மாப்புள்ளயும் பொண்ணும் எப்பிடி இரிக்காக?’

பெரச்சினல்ல போடியார்! அவகளுக்கென்ன?’

அந்தப்புள்ள. . . அதான் மம்மலிர புள்ள? புதுப் புரிசன் பொண்டாட்டிக்கி புள்ளயக் கவனிக்க நேரம் இரிக்கிமா?’ நகைச்சுவை சொல்லிச் சிரித்தார் பெரிய போடியார்.

இல்ல போடியார்! அவள் பசிந்தும்மாவும், முக்குலத்துக் கௌவியிம் நானும் இருக்கம்தானே. மாறி மாறி வெச்சிருக்கிற. செய்னம்புட்டான் என்நேரமும் இரிக்கான். ஒமறுலெவ்வயும் தூக்கி வெச்சிட்டுக் கொஞ்சுறான். புள்ளயால ஒரு பெரச்சி யையும் இல்ல போடியார்.’

செரி வட்டான. . . நான் அந்தப் புள்ளக்கி மம்மனிவாண்டு பேரும் வெச்சி, காணியையும் எழுதிக் குடுத்துட்டனே. . . அதுக்கு ஊர்ச்சனம் என்ன கதைக்கிது?’

பொகழ்ந்து தள்ளுது சனம். . . போடியார்ர பெரிய மனச.’

சும்மால்ல வட்டான! ஆரோ பெத்த புள்ளக்கி வைரக் குஞ்சிடிச் சலங்கையும், தொண்ணித்திரண்டு ஏக்கர் காணியும், காலை வயலும் எழுதி வெய்க்க எனக்கென்ன பைத்தியமா. வட்டான?’

பெரிய போடியாரின் கேள்வியில் திடுக்கிட்டுப் போன மீராவட்டானை அதற்குப் பதில் தேடித் தவித்துப் போய் அமர்ந்திருந்தார்.

ஞா. .? செல்லுங்களன் வட்டான! அநாதப் புள்ளக்கி சொத்தெளுதி வெய்க்க எனக்கென்ன பேயா புடிச்சிரிக்கி, வட்டான?’

பதில் சொல்லாமல் விடமாட்டார்.

பொ. . . போடியார்! சும்மா செய்யமாட்டீங்க. . . எனக் கிண்டா புடிபடுதில்ல.’ சமார்த்தியமாகப் பதிலிறுத்தார் மீரா வட்டானை. திடீரென இடிக்குரலில் சிரித்த பெரிய போடியார்,

நெல்ல புதினங்கா இது!’ என்றார். பின் மறுபடி மீரா வட்டானையை உறுத்துப் பார்த்தார். சட்டெனச் சொன்னார். ‘வட்டானே, அது அநாதப் புள்ளயும் இல்ல மம்மலிர புள்ளயும் இல்ல.’

எ. . . என்னது?’

அது என்ட மகன் சின்னப் போடிர புள்ள! வ்வ்வாயப் பொளக்காதிங்க வட்டான! நான் செல்றதுதான் மெய் . . .

அல்லா அறிய அது முகம்மதனிபாட புள்ளதான். அதுக்காகத் தான் நான் காணி எளுதித் தந்த . . . புள்ளய பாத்த ஒடன அதுக்கு முகம்மதனிவாண்டு பேரு வெய்க்கச் சென்ன.’

எ. . . எப்ப்பி. . .டி?’ திகிலுணர்வில் பயந்து கேட்டார் மீராவட்டானை.

எப்படியா? நட்டுமை போயிரிக்கி வட்டான!’

ந்ந். . . நட்டுமையா?’ இடிவிழுந்தாற்போல் அதிர்ச்சி யடைந்தார் மீராவட்டானை.

ϖ

போகம் 16

பொலி

நட்டுமைதான். . . இல்லாம? எப்பிடி வட்டான?’ என்ற பெரிய போடியார் தன் முகத்தை அழுந்தத் துடைத்தார். மீராவட்டனையை உற்றுப் பார்த்துவிட்டுத் தன் கண்டுபிடிப்பை வெளியிட ஆரம்பித்தார்.

வட்டானேய். . . என்ட மகனக் குத்திக் கொல செய்யிறளவுக்கு இந்த ஊருல ஆருக்கும் தகிரியம் வெரா. அவன்ட மவ்த்துக்குப் பொறகு, நான் சும்மா இரிக்கல்ல. குத்தினவனக் கண்டு பிடிச்சி அவன்ட கொடல உருவ எத்தினயோ வளிகள்ள போய்ப் பாத்தன். ஒரு வளியாலயும் ஆளக் கண்டுபிடிக்க முடியல்ல. கடைசீல, சாஞ்சமருதுல இரிக்கிற ‘அத்தர்பாவா’ அவங்கட்டயும் போனன். அங்கதான் எனக்கி உண்ம வெளிப்பட்டிச்சி. மம்மலிதான் குத்திரிக்கான் எண்டு. . .’

ம. . .ம் . . . மம்மலி. . .யா. .?’ மீராவட்டானை மாபெரிய அதிர்ச்சியில் பேயறைந்த முகத்துடன் விறைத்தார்.

எனக்கிம் மின்ன இப்பிடித்தான் இருந்திச்சி. ஆனா காரணத்த அறிய மட்டுக்கும்.’

எ. . . என்ன காரண. .? போ. . .டியா. . .ர்?’

அதான் நட்டுமை போயிரிக்கெண்டு சென்னனே. . .நானு. . . கத வெளங்கல்லியா?’

‘. . .ந்நொட்டியாச்சி.’

மம்மலிர பொண்டாட்டி யம்முனாக்கு, என்ட மகன் மம்மனிவா புள்ளயக் குடுத்திரிக்கான்.’

என்டே செல்ல அழ்ளாவ்வ்வே. . . ய்’

யம்முனா, பயனியன்ட கட்டுல இரிந்து உழுந்து மவ்த்தான அண்டு ராவு, கொஞ்சம் முன்ன இஞ்ச வந்தாள். என்னத் தனியச் சந்திச்சி வெசயத்தச் செல்லிட்டாள். ஆனா புள்ள என்ட மகன் சின்னப் போடிர எண்டு புள்ளப் பொறக்கு மட்டுக்கும் அவளுக்கே தெரியாது வட்டான. . .அதான் புதினம்.’

எப்பிடி. . . அவளுக்குத் தெரியாம? என்னண்டு சென்னாள் போடியார்?’

பெரிய போடியார் சட்டென மௌனமானார். அச்சமயம் மிதுஹாம்மா பெரிய போடியாருக்குக் காயகல்ப மருந்தும், மீராவட்டானைக்கு தேநீர்ச் சாயமும் கொணர்ந்தாள். அவள் போன பின், மறுபடி ஜெர்மன் சுருட்டைப் புகைத்த பெரிய போடியார், கட்டிலில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்தபடியே த£ன் துப்பறிந்து கண்டுபிடித்ததும் தன்னை அழுத்திக் கொண்டிருப்பதுமான மர்மத்தை மீராவட்டானையிடம் சொன்னார்.

மம்மலி யம்னாவைத் திருமணம் செய்து மூன்று வருடங் களாகியும் பிள்ளைகள் ஏதும் இல்லாதிருந்ததையும் மம்மலிக்கு ஆண்மைக் குறைபாடு உண்டு என்பதையும், ஆனால், அக் குறைபாடு இருப்பது மம்மலிக்கும் யம்னாவுக்கும் இருவருக்குமே தெரியாதிருந்தது என்பதையும் பின்னர், சின்னப் போடியாரில் சபலப்பட்ட யம்னா மம்மலிக்குத் தெரியாமலேயே அவனுடன் சில தடவைகள் ‘உறவு’ கொண்டு வந்ததையும், அதன் விளை வாகக் கருத்தரித்ததும் அதற்கு தானே காரணம் என மம்மலியே விபரமறியாது அநியாயமாகச் சந்தோஷமாக இருந்ததையும், யம்னாவும் அவ்வாறே நினைத்திருந்தாள் என்றும், பிள்ளை பிறந்த பின்னர்தான் அது சின்னப் போடியாரின் பிள்ளை என்பதைப் புரிந்துகொண்டதாகவும், இதை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்து செய்னம்புவிடம்கூடச் சொல்லாது சாக முன்னர் தன்னிடம் மட்டுமே சொன்னதாகவும் கூறிய பெரிய போடியார் மெல்ல எழுந்து உட்கார்ந்தார்.

திகைத்துப் போய் சிலையாக அமர்ந்திருந்த மீரா வட்டானை, வெகுநேரம் அதிர்ச்சியில் பேசாதிருந்த பின்னர் பெரிய போடியாரிடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்குப் பெரிய போடியார் சிரித்தார். பின், தனது இடதுகையின் சின்னவிரலை மீராவட்டானையிடம் நீட்டிக் காட்டினார். அவரது அந்தச் சின்னவிரல் சற்றே உள்நோக்கி வளைந்து மோதிர விரலுடன் ஒட்டிக்கொண்டிருந்தது. இது ஏற்கனவே வட்டானைக்குத் தெரிந்ததுதான்.

வட்டானே. . . இப்பிடி வளைஞ்சிரிக்கிற சின்னவெரல் எங்கட பெரிய வாப்பாக்கும் என்ட மகன் சின்னப் போடி யாருக்கும் இரிக்கிறத்தப் பாத்திருப்பீங்கல்லா?’

ஓ. . .ம். . . போடியார். . .’ மீராவட்டானை கண்டிருக்கிறார். அதற்கென்ன இப்போது?

யம்முனாட அந்தப் புள்ளட சின்னவெரலையும் போய்ப் பாருங்க வட்டான. . . இப்பிடியே இருக்கு.’

என். . .ன?’

வேறென்ன? புள்ள பொறந்தாப் பொறகு அதுர கையப் பாத்த ஒடன யம்முனாக்கு அது சின்னப்போடிர புள்ளதான் எண்டு வெளங்கிட்டு. ஆனா ஆருட்டயும் செல்லல்ல. புள்ள பெருத்திட்டால், வெசயம் எப்பிடியும் வெளங்கிரும் எண்டு பயந்துட்டாள். அதான், அண்டு எனக்கிட்ட ஓடிவந்து வெசயத்த செல்லிட்டு, செய்னம்புட்ட இரிக்கிற ஒங்கட மகன்ட புள்ளயப் பாரமெடுங்க போடியாருண்டு கடசியாச் செல்லிட்டுப் போனாள். நான் நம்பல்ல. . . ஆனா அண்டே இப்படிச் செய்வாள் எண்டு நான் நெனக்கல்ல. நாப்பதாம் கத்தம் அண்டைக்குத் தான் நான் ஒங்கட ஊட்டுக்கு வந்து நான் அதப் பாத்துட்டன். இப்ப வெளங்கிச்சா வட்டான நான் ஏன் அந்தப் புள்ளக்கி காணிவயல எழுதினதும், மம்மனிவாண்டு பேரு வெய்க்கச் சென்னதும்?’

‘... ... ...’

வட்டான. . . இது மம்மலிர புள்ளயா இரிந்தா யம்முனா இப்பிடி செத்திருக்க மாட்டாள். செரி, நான் இப்ப சென்ன ஒண்டையும் ஆருட்டயும் செல்ல மாட்டன் எண்டு இதுல சத்தியம் பண்ணுங்க’ என்று நடுங்கும் குரலில் கூறிய பெரிய போடியார், பக்கத்தில், பெரிய ‘ரேகாலிப் பலகை’யில் இருந்த புனித திருக்குர்ஆனை எடுத்து மீராவட்டானையிடம் நீட்டினார். செய்வதறியாது திடுக்கிட்டுப் போயிருந்த மீராவட்டானை திகிலுணர்வில் துணுக்குற்று, வேறுவழியேதுமின்றி தனது வலது கையைப் புனித திருக்குர்ஆன் மீது வைத்துச் சத்தியம் செய்தார்.

அல்லா அறிய என்னட சீவன் உள்ளவரைக்கிம் ஆருட்டயும் செல்லமாட்டன் போடியார்.’

அதுமட்டுமில்ல வட்டானே. . . நான் மக்கத்துக்குப் போய் வெருமட்டுக்கு, புள்ளய ஒரு கொறையும் இல்லாம செய்னம்புவும், ஒமறுலேவயும் வளக்கணும். அள்ளா சீவனப்போட்டா, ஹஜ்ஜ முடிச்சிட்டு வந்த பொறகு நான் புள்ளய பாரமெடுப்பன். இதை என்ட அமானமா நீங்கதான் பாரமெடுக்கனும்.’

அ . . . செரி போடியார். நீங்க சென்ன மாதிரியே நடக்கும்.’

என்டம்மாவேய்! அல்லாவே! என்ட மனசில இரிந்த பாரத்த எறக்கிட்டன். . . வட்டானே.’

அந்தப் பாரத்த நான் ஏத்திட்டன் போடியார். . .’ மீரா வட்டானை திடீரெனக் கண்கள் கலங்கி அழுதார்.

ஏ. . . வட்டான! செரி. மொதல்ல கொளர்ரத்த நிப்பாட் டுங்க! இப்ப நீங்க போங்க!’

பெரிய போடியார் மிக அசதியுடன் தனது கயிற்றுக் கட்டிலில் சாய்ந்து படுத்தார். தாமதித்து எழுந்த மீராவட்டானை சால்வையால் முகத்தை அழுத்தித் துடைத்து விட்டு தட்டுத் தடுமாறி வெளியே வந்தார். சற்று நிதானத்தை வலிந்து வரவழைத்துக்கொண்டார். காலாதிகாலமாகப் போடி வீட்டுடனேயே தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்து எத்தனையோ விதமான நன்மைகள் பெற்று, நன்மதிப்புப் பெற்று உமறுலெவ்வையை மன்னித்து, உத்தியோகத்துக்குச் சிபாரிசு செய்து . . . அந்தப் போடியாருக்கு இதுகூடச் செய்யா விட்டால் எப்படி? உள்வாங்கிக்கொண்ட பாரத்துடன், தனது வீடு நோக்கி விரைந்து நடந்தார். திடீரென இதயம் வலித்து வலித்துத் துடித்தது. மூச்சிரைத்தது. காரணம் புரியாமல் பயமாகவிருந்தது. பூஞ்சன மர நிழலில் சற்றுநேரம் இளைப்பாறி நின்றார். . . வீட்டில், காத்திருப்பார்கள். புதுமணப்பெண் கால்மாறிப் போக ஆயிரம் வேலைகள் இருக்கும்.

எப்படி வீடு வந்து சேர்ந்தோம் என்பதே மீரா வட்டானைக்குப் புரியவில்லை. வாசலில் புதுமாப்பிள்ளை உமறுலெவ்வையும் மகள் செய்னம்புவும் குழந்தையோடு சிரித்து விளையாடிக்கொண்டிருப்பதைக் கண்டார். குழந்தையைக் கண்டதும் நெஞ்சம் மறுபடி துணுக்குற்றது. செய்னம்பு இவரைக் கண்டதும்,

வாப்பா. .! இவனக் கொஞ்சம் புடி. செரியான துண்டாக் காரன். எனக்கி உள்ள வேலயிரிக்கி’ என்றவாறே குழந்தையை மீராவட்டானையிடம் நீட்டினாள்.

பொக்குவாய் திறந்து புன்னகைத்தபடியே சின்னஞ்சிறு கைகளை வேகமாக அடித்துத் தன்னை நோக்கித் தாவி வந்த குழந்தையை வாங்கிய மீராவட்டானை அதன் முகத்தையே உற்று நோக்கினார். யம்னாவின் கூர்மூக்கு அப்படியே இருந்தது. ஆனால், கண்களில் நிச்சயம் விஷமம் கலந்திருந்தது. பயத்துடன் குழந்தையின் இடதுகைச் சின்னவிரலை நோக்கினார். . . ஒருசந்தேகமுமில்லை. பெரிய போடியார் சொன்னதுதான் சரி. அந்தச் சின்னவிரல், மோதிர விரலை நோக்கிச் சற்றே வளைந்து, ஒட்டிக்கொண்டிருந்தது.

0

காலப் பறவை தன் சிறகடிப்பை ஒருபோதும் நிறுத்துவ தில்லை. என்ன நடந்தாலும், காலப்பறவையின் நாள் இறகுகள் உதிர்ந்துகொண்டேயிருக்கின்றன. உம்மாந்துறைப் பற்றின் பெரியவெளி வயல் நிலங்கள் உழுவப்பட்டன. விதைக்கப் பட்டன. அறுவடை செய்யப்பட்டன. சின்னப் போடியின் கொலையோடு தொடங்கிய ஆசறாப்பொலி மாதம் கடந்து, நெய்னார் முடை கிடந்த மாதமும் தலைக் கந்தூரி மாதமும் கழிந்தன. பின்னர் வரிசையாக கடைக் கந்தூரி, காதர் கந்தூரி, மீரா கந்தூரி, இறசகு, விராத்து, நோன்பு மாதங்களும் விரைந்து உதிர்ந்தன. அதைத் தொடர்ந்து, நோன்புப் பெருநாள் மாதம் பிறந்த சமயம் பெரிய போடியார் ஏகப்பட்ட சமய ஆசாரங் களுடனும் பிரமாண்டமான வழியனுப்புதலுடனும் புனித மக்கமாநகர் புறப்பட்டுச் சென்றிருந்தார். நோன்புப் பெருநாள் மாதத்தின் பின்னர், இடைவிட்ட மாதமும் ஹச்சி மாதமும் விரைந்து கடந்தன.

இந்த இடைவெளியில் உம்மாந்துறையில் அமைதியாகப் பல மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. புதிதாக முதன்முறையாக ‘மிசன்’ ஆரம்பப் பாடசாலை தொடங்கப்பட்டிருந்தது. அதில் ஒரேஒரு அதிபராகவும் ஆசிரியராகவும் உமறுலெவ்வை நியமிக்கப் பட்டிருந்தார். ஏழு சிறுவர்கள் கல்வி கற்றனர். பயனியன் அணைக்கட்டு திருத்தியமைக்கப்பட்டு பெரிய வெளி மழுவன் கண்டம் இரண்டுக்கும் ஒரே சமயத்தில் நீர்ப்பாய்ச்சல் விடப் பட்டது. யம்னாவின் குழந்தை முகம்மதனிபா மீராவட்டானை வீட்டில் உமறுலெவ்வை வாத்தியார், செய்னம்பு தம்பதிகளின் ஆதரவோடே வளர்ந்து கொண்டிருந்தான். பெரிய போடி யாரைக் குழந்தையுடன் சென்று, வழியனுப்பி விட்டு வந்து தூங்கப்போன மீராவட்டானை திடீரென நெஞ்சுவலி வந்து துடிதுடித்து அதன்பிறகு எழுந்திருக்கவில்லை. சின்னப் போடி யாரின் இரகசியம் அவரோடயே அடக்கம் செய்யப்பட்டு விட்டது. இச்சமயத்தில் பெரிய போடியார் புனித மக்காவில் இருந்தார். யார் இல்லாமற் போனாலும் பெரிய போடியார் ஊரில் இல்லாமல் சாவீடு மாதிரிக் களையிழந்து கிடந்தது. பெரிய போடியார் திரும்பி வரும் நாள் மெதுவாக நெருங்கிக் கொண்டிருந்தது.

கடந்த ஒரு வார காலமாகவே பெரிய போடியாரின் கல்வீடு சற்றுக் கலகலப்புக்கு மாறத் தொடங்கியிருந்தது.சனத்திரளில் நிறைந்திருந்தது. வரப்போகும் பெரிய போடியாரை வரவேற்கும் சகல ஏற்பாடுகளையும் செய்வதில் உமறுலெவ்வை வாத்தியார் தலைமையில் பல இளைஞர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

பெரிய போடியார் இன்று ஏறக்குறைய ஆறு மாதங் களுக்குப் பின்னர் ஊருக்கு வரவிருந்தார். ஊரிலிருந்து புனித மக்கமாநகருக்கும் சென்று புனிதராக ஊரின் முதல் ஹாஜியா ராகத் திரும்பும் அவரை வரவேற்க ஊரே விழாக் கோலம் பூண்டிருந்தது. பயனியன் அணைக்கட்டருகே சனங்கள் திரண் டிருந்தனர். இங்கிருந்து பெரிய கல்வீடு வரைக்கும் வெண்ணிறப் பந்தல் இடப்பட்டுக் குருத்தோலைகள் தொங்கின. வழிநெடுக வெள்ளை விரிக்கப்பட்ருந்தது. பெரிய போடியாரைக் கண்டு ஸலாம் சொல்லி ஆரத்தழுவ பள்ளி தர்மகத்தாக்களும் உறவினர் களும் ஊரவர்களும் மகிழ்ச்சிப் பெருக்குடன் பயனியன் அணைக்கட்டுக் கரையில் வெகு ஆவலாக நின்றுகொண்டிருந் தனர். உமறுலெவ்வை வாத்தியாரும் மற்றும் சில நெருங்கிய உறவினர்கள் இருவரும் பெரிய போடியாரைக் கூட்டி வர அக்கரை கடந்து புளியந்தீவுத் துறைமுகம் போயிருந்தனர்.

சற்று நேரத்தில் ஆத்துமீன் மம்மாக்கனின் தோணியும் இன்னும் சில தோணிகளும் போடியாரின் பயணப் பொதி களைச் சுமந்து கொண்டு பயனியன் ஆற்றில் விரைந்து வந்து கொண்டிருந்தன. வரும்போதே,

அன்னா போடியாரு வந்துட்டாக! வந்துட்டாக!’ என்று கத்திக்கொண்டே வந்தான். தொடர்ந்து, பயனியன் ஆற்றின் மறுகரையில், பாதைப்படகு தென்பட்டது. இக்கரையி லிருந்த சனங்கள் கூவிக் கத்த, பாதை மெதுவாக விரைந்து இக்கரையை வந்தடைந்தது.

தூய வெண்ணிறச் சாரமும் வெண்ணிறத்தில் புது மோஸ் தராக நீண்ட மேலங்கியும் அணிந்து மக்கத்துப் போர்வையால் தோள்களைச் சுற்றிப் போர்த்தி சூறத்துத் தொப்பி, மதினாப் பட்டி, மிதிவடி, சகிதமாகப் பெரிய போடியார் பாதையிலிருந்த படியே தன்னை வரவேற்கத் திரண்டிருந்த சனங்களைப் பார்த்துக் கையசைத்தார். அத்தனை ஜனங்களும் உணர்ச்சிவசப்பட்டு, ‘பெரிய போடியார். . . போடியார். . .’ என்று கத்தியபடி அருகிலோடி வர, போடியாரின் வயற்காரர்கள் நெருக்கித் தள்ளிக்கொண்டு வழி சமைக்க, பெரிய போடியார் மிகக் கம்பீரமாகப் பாதையிலிருந்து உமறுலெவ்வை வாத்தியாரின் கைகளைப் பிடித்தபடி கீழே இறங்கினார்.

பிஸ்மில்லாஹ்!’ என்று வலதுகாலை வைத்து இறங்கி இரண்டடி நடந்து உடன் சனங்களைப் பொதுவாக ஒருதரம்பார்த்து ‘அஸ்ஸலாமு அலைக்கும். .!’ என்றார். சனங்கள் வெட்கப்பட்டுச் சிரிக்க, பள்ளித் தர்மகர்த்தாக்கள் பதில் ஸலாம் கூறியபடியே முண்டியடித்துச் சூழ்ந்தனர். ஆரத்தழுவி னார். சாதாரண சனங்கள் போடியாரின் கை கால் கன்னங் களைத் தொட்டுத் தொட்டுக் கொஞ்சி ஆவல் தீர்ந்தனர். அன்புச் சிறைக்குள் தத்தளித்த பெரிய போடியார், சற்று நிதானப்பட்டதும் அவரது கண்கள் சனக்கூட்டத்தினரிடையே யாரையோ அவசரமாகத் தேடின.

உடனேயே உமறுலெவ்வை வாத்தியார் ஏதோ சைகை செய்ய பெண்கள் கூட்டத்திலிருந்த செய்னம்பு கூட்டத்தை விலக்கிக்கொண்டு பெரிய போடியாரை நெருங்கினாள். அதுவரையும் தோளில் தாங்கிக்கொண்டிருந்த முகம்மது அனிபா வைப் பெரிய போடியாரிடம் நீட்டினாள். உடனே பெரிய போடியார்,

அட செய்னம்பு! நெல்லாத் தெளிஞ்சிரிக்காய். புள்ளேய் . . . வாப்பா காலஞ்சென்ட செய்திய பொலிசான கடுதாசி எழுதி அறிவிச்சாரு . . . நான் வட்டானைக்கி மக்கத்து மண்ணுல வெச்சி தொளுது எரப்புக் கேட்டன் புள்ளே. . .என்ன மம்மனிவா கனாட்டுப் படுத்துறானா?’ என்று புன்னகைத்தபடியே, வெகு ஆவலுடன் கை நீட்டிக் குழந்தையைத் தூக்கித் தன் மார்புடன் அணைத்துக் கொஞ்சி முத்தமிட்டார். தூக்கித் தோளில் வைத்தார். கண்களில் கண்ணீர்த்துளி எட்டிப் பார்த்தது. நாசூக்காக மறைத்துக் கொண்டார். பின் குழந்தையிடம்,

ம்க்கம். .! நான் ஆருடா மகன்? என்னத் தெரியிமாடா?’ என்று கேட்க,

ஏறக்குறைய ஒரு வயதான முகம்மதனிபா பொக்கை வாயால் சிரித்து தனக்கே உரித்தான விஷமக் கண்களால் அவரைப் பார்த்துத் தலைத் தொப்பியை இழுத்தபடியே தனது மழலைக் குரலில், ‘ம்ம் . . . ப்பச்சி . . . அப்பச்சிப் பா’ என்றான். பெரிய போடியார் அகமகிழ்ந்து அவனை ஆரத் தழுவிக் கொண்டு மறுபடியும்,

ஒண்ட பேரென்னடா மஹன்?’ என்று கேட்டார்.

ம்ம்ம்மம்மனியா!’ என்றான் முகம்மதனிபா.

உடனே பெரிய போடியார், திடீரெனக் கண்ணீர்விட் டழுதார். ஈனஸ்வரக் குரலில் ‘என்ட மகனே . . . மம்மனிவா.’ என்று முனகினார். கேட்டுக் கொண்டிருந்த சனங்களும் கலங்கிப் போய், கண்ணீர் விட, சட்டெனச் சுதாரித்துக்கொண்ட பெரிய போடியார், ‘செரி. செரி . . . வாங்க போவம்!’ என்றார்.

 முகம்மதனிபாவை இன்னமும் மார்பில் தாங்கியபடியே வீடு நோக்கிப் புறப்படத் தயாரானார். உமறுலெவ்வை வாத்தி யாரும் செய்னம்புவும் பெரிய போடியாரின் பின்னால் நடந்து வர உடனேயே ஊர்வலம் தொடங்கிவிட்டது.

பள்ளி அதிகாரி வெள்ளைப்புடவை போர்த்திய கறுப்புக் குஞ்சரத்தைப் பெரிய போடியாரின் தலைக்கு மேலாக விரித்து உயர்த்திப் பிடித்தார். உடனே ‘தும் . . .தும் . . . ட்டமப் . . .ட்டம்ப் . . .’ என்று பக்கீர்பாவாக்களின் ரபான் ஒலி காதுகளைப் பிளக்க ‘பைத்து’ ஒலிகளும் உச்சஸ்தாயியில் ஓதப்பட்டன. ஊர்வலத்தின் முன்னிலையில் சிறுவர்கள் திரண்டு வர பின்னால் ஒஸ்தாதுமார்கள் ‘ஷ்ஷ்ஷர்ரக் . . .ஸர்ரக் . . .’கென்று விற்சுருள்வாள் வீசி விளையாடி வந்தனர். தொடர்ந்து ஒஷ்தாது களின் சீடர்கள், ‘தடா தட் . . .தடாதட் . . .தட் . . .’டென்று சீனடி பயின்று கற்பனை எதிரிகளுடன் போரிட்டு வந்துகொண்டிருந் தனர். அதன் பின்னால் நீண்ட கழிக்கம்புகளுடன், ‘விஷ் . . .ஷ¨ . . . ம், விஷ் . . . ஷ¨வ்ம் . . .’என்று சிலம்பம் வீசி வந்தது ஒரு இளைஞர் குழு. அதனைத் தொடர்ந்து, இருவரிசையாக, ஒரே தாள அடியாக ‘டக்கு . . .டக் . . .னிங் . . .னிங் . . .டக் . . .டக்கு’ என்று உள்ளுர்ப் பொல்லடி மல்லர்கள் கோலாட்டமாடியும் ‘வாருமையா . . . வாருமையா . . . எமையாளும் ராசன் நீரே’ எனப் பாடிக்கொண்டும் வந்தனர்.

 

அதன் பின்னர் பறையர் குல மூப்பனார் தம் குழுவின ருடனும் தன் பெருத்த வயிறுடனும் தான் சுமந்திருந்த தவிலில் எசகுத்தப்பாக ‘தம்மத்தமார் . . . தம்மமத்தமார். . .’என அடித்தும் நாதஸ்வரத்தை உரத்து ஆலாபனை செய்தும் தம் கோஷ்டி யுடன் துள்ளித் துள்ளி ஆடி வந்தார்.

பின்னால், பள்ளித் தர்மகர்த்தாக்களும் பெரிய போடி யாரின் உறவினர்களும் சூழ வர, பெரிய போடியார் மிக நிதானமாக முகம்மதனிபாவைச் சுமந்தபடியே நடந்து வந்தார். பின்னால், ஏகப்பட்ட சனங்கள் சளசளத்தபடி ஆர்வத்தில் சத்தமாகப் பேசியபடி வந்தனர். ஊர்வலம் ஊருக்குள் நுழைய சட்டென விரைந்து வந்தது ஒரு பெண்கள் பட்டாளம். ‘லுர்லுர்லுர்லூலூலூவ்வ்’வென உரத்துக் குரவை ஒலிகள் எழுந்தன. ரபான், பறை, நாதஸ்வர ஒலிகள் நிறுத்தப்பட்டு இருபது நிமிடங்கள் வரை குரவை ஒலிக் காலம் நீண்டது.

எதிர்கொண்ட பெண்களுடன் மறுபடி ஊர்வலம் ஆரம்பித்து பள்ளித்திடல் ஒழுங்கை கடந்து காட்டுப்பள்ளியில் இறை இரங்குதல் செய்து, நன்றி தெரிவித்துத் தொழுது பின் ஊரைச் சுற்றிக்கொண்டு வந்து இரும்புக்கடை வழியாக ஏறிப்பெரிய கல்வீட்டை அடைந்தது. சுமார் ஏழு மாதங்களின் பின்னர் தன் வீட்டினுள் நுழைந்த பெரிய போடியாரைக் கண்ட வீட்டுப் பெண்கள் கதறி அழுதபடியே கண்கவர் வர்ண ஆரத்தி சகிதம் முன்விறாந்தைக்கு ஓடிவந்தனர். பால், பழம், வாழையிலை, நெய் திரி கொளுத்தி பெரிய போடி யாருக்குக் கண்ணூறு கழித்துவிட்டு மறுபடி சின்னப் போடி யாரை நினைத்து ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்தனர்.

ஏ. . .ன். . .ஏய். . . மிதுஹாம்மா! ஏன் கொளர்ரீங்ககா? நான்தான் வந்துட்டனே!’

எங்கு வா...ப்போவ்! இதுகளப் பாக்க ந...ம்மட. ..மம்மனிபா.. இப்ப இரிந்திரிந்தா. .? என்டல்லோவ். .! என்டம்மோ. . .வ். .!’ என்று பெரிய போடியாரின் மூத்த மகளும், அவளது பிள்ளை களும், மிதுஹாம்மாவும் ஓலமிட்டுக் கதற கூடவிருந்த மற்றப் பெண்களும் சிறுமிகளும் கூடச்சேர்ந்து அழுதரற்றினர்.

அவர்களைப் பார்த்துக் கண்கலங்கிய பெரிய போடியார் கைகளால் சைகை செய்து அடக்கினார். பின்னர் சட்டெனக் குழந்தை முகம்மதனிபாவை உயரத் தூக்கித் தனது வளைந்திருந்த சின்ன விரலோடு அவனது சின்னவிரலையும் தன் பெண் மக்களிடம் காட்டி,

இதப்பாருங்க! இவன்தான் இனி இந்த ஊட்டுல சின்னப் போடியார்! நம்மட முகம்மதனிவா’ என்றார்.

விஷயம் விளங்காத பெண்கள் விரல் ஒற்றுமை அதிசயத் தில் திகைத்து நிற்க இவை பற்றிக் கவலைப்படாத ‘சின்னப் போடியார் முகம்மதனிபா’ தனது வளைந்து ஒட்டிக்கொண் டிருந்த இடதுகைச் சின்னவிரலைச் சப்பியபடியே பெரிய கல்வீட்டுப் பெண்களைத் தன் விஷமக் கண்களால் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தான். அவனுக்கென்ன?

பச்சைக் கறுப்பை வெட்டிப்

பால் வடியத் தொட்டில் கட்டி

பொட்டியும் பொன்னாலே

தொடுகயிறும் முத்தாலே . . .

முற்றும். (ஆனால், வாழ்வு தொடரும்)

000

நட்டுமை வழக்குச் சொற்கள்

அசை -           துணி காயப்போடும் கொடி

அட்டுவம்     -           நெல்லைச் சேமித்து வைக்கப் பயன்படும் சாதனம்

அத்தராசி    -           ஒருவகைத் தாவணி

அல்லுக்குத்து         -           பெண்கள் அணியும் காதணி

அவுட்டுரா   -           அவிழ்த்துவிடுடா

அறாமியள்  -           வசைச்சொல் (தீணீstணீக்ஷீபீs)

ஆதனம்        -           சொத்து

ஆதன இடாப்பு      -           சொத்து உடைமை பற்றிய அரசாங்கப்பதிவேடு

ஆஜத்து        -           விருப்பம் (அரபுச்சொல்)

உறுதி            -           உரிமைச் சாசனம், பத்திரம், (பீமீமீபீ)

உரித்து         -           உரிமை

உரித்துக் காதல்    -           உரிமையுடைய முறைப் பெண் மீதானகாதல்

ஒழுங்கை    -           சிறிய குறுக்குப்பாதை (றீணீஸீமீ)

கண்ணூறு   -           கண்திருஷ்டி

கதிரை          -           நாற்காலி

கண்டு          -           கன்று

கரும் பொடையன் -         ஒரு வகை விஷப் பாம்பு

காவி  -           காவு (சுமந்து)

கெதியா       -           விரைவாக

கெதியாச் செல்லு -          விரைவாகச் செல்லு

கேத்தல்        -           (ரிமீttறீமீ)

நௌஸாத்               φ157ε

 

கொச்சிக்காய்த்தூள்- மிளகாய்ப் பொடி

 

சவட்டி                      -           வளைத்து

சாரன்                       -           கைலி

சிறுவால்                  -           விவசாயிகள் அணியும் ஒருவகை

                                    கால்சட்டை

சுறுமா                      -           கண்மை

செல்லு                      -           சொல்லு

சொணங்கி             -           தாமதித்து, பிந்தி

சொத்தை                -           முகம்

சோட்டப்பர்ரதும்  -           (சோட்டைப்படுவதும்) - ஆசைப்படுதல்

தேங்காய்ப் பூவுரு -           ஒரு வகை மருத்துவச்செடி (தேங்காய்ப்

                                    பூக் கீரை)

படிக்கம்                   -           எச்சில் துப்புவதற்குரிய பாத்திரம்

பத்திக்கை               -           கிணற்றிலிருந்து நீர் அள்ளுவதற்கா

                                    துலாவுடன் இணைக்கப்பட்ட கம்பு

                                    அல்லது கயிறு

பரிசாரிட்ட             -           வைத்தியரிடம்

பாரிய                       -           பெரிய

புகைச்சான்            (கருவி)-        பக்கீர; பாவாமார; புகைப்பதற்காகப்

                                    பயன்படுத்தும் ஓலையால் சுருட்டப்

                                    பட்ட ஒரு சாதனம்

புட்டுவம்                  -           நாற்காலி (சிங்களம்)

பூவல்             -           நீர் அள்ளுவதற்காகத் தோண்டிய

                                    கிணறுபோனற நீர்குழி

பேட்சசு                    -           நில அளவு (ஜீமீக்ஷீநீலீ)

போத்தல்                 -           கண்ணாடிப் புட்டி (தீஷீttறீமீ)

மாற்றவல்ல                        -           அழிக்கமுடியாத

மொறப்பாடு          -           முறைப்பாடு, குற்றப் பதிவு (நீஷீனீஜீறீணீவீஸீt)

யார்               -           மூன்று அடி நீளம் (ஹ்ணீக்ஷீபீ)

ராக்கிளி                  -           கையில் அணிந்துகொண்டு எதிரியைத்

                                    தாக்குவற்கான ஒரு ஆயுதம்

வங்கிசம்                  -           வம்சம்

வட்டா                       -           வெற்றிலை, பாக்கு வைத்து பரிமாறு

                                    வதற்குப் பயன்படும் பாத்திரம்

 

வட்டை விதானை - வயலில் நெற்செய்கை தொடர்பான அலுவல்களை ஒழுங்கமைக்கும்; அலுவலர்

 

வதுல் - பதில்

 

வல்லுபம்     - ஒருவகைச் சிறு பை

 

வள்ளா          - நாய் (சிங்களம்)

 

விரிபொடையன்   - ஒரு வகை நச்சுப் பாம்பு

 

விற்கரத்தை           - ஒற்றை மாடு பூட்டும் சிறிய அலங்கார வண்டி

 

ஸின்னத்து  - சுன்னத் (நீவீக்ஷீநீuனீநீவீsவீஷீஸீ)

 

 

φ  158  ε          நட்டுமை      நௌஸாத்   φ          159 ε