Saturday, June 27, 2015

ஷோபா ஷக்தி

ஷோபா ஷக்தி

கசகறணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அடுத்த கேள்விக்கான பதிலில் எனக்குப் பிடித்த பத்து ஈழத்து நாவல்களைக் குறிப்பிட்டிருப்பேன். அதிலொன்று ஆர்.எம்.நெளசாத் எழுதிய ‘நட்டுமை’ (காலச்சுவடு வெளியீடு). நௌசாத்தின் நாவலின் தலைப்பும் ‘கசகறணம்’ போல வட்டார வழக்குத்தான். நட்டுமையிலும் பின்னிணைப்பாக சொல் அகராதி உள்ளது. நட்டுமையின் கதை மாந்தர்கள் முழுக்க முழக்க கிழக்கின் இஸ்லாமியத் தமிழ் வட்டார வழக்கையே பேசுகிறார்கள். அதுவும் 50 வருடங்களுக்கு முந்தைய மொழி வழக்கு. ஆக எனக்கு மட்டக்களப்பு வட்டார வழக்குத்தான் பிரச்சினையெனில் ‘நட்டுமை’ நாவலை எனக்குப் பிடித்த 10 நாவல்களில் ஒன்றாகக் குறிப்பிட்டிருக்கமாட்டேன் அல்லவா. பிரச்சினை குறிப்பான மட்டக்களப்பு வட்டார வழக்கல்ல

No comments:

Post a Comment